இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மாயம் 4

மாயம் 4   யமுனாவிற்கு சுத்தமாக எதிலுமே விருப்பம் இல்லை அடுத்த நாள் அலுவலகம் சென்ற யமுனாவை எச்ஆர்டியில் இருந்து அழைத்தனர். "ஹாய் யமுனா உங்கள் லாஸ்ட் டேட் இந்த வாரம் ஃபிரைடே சத்யதேவ் எங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டாரு. நீங்க ஒரு ரெஸிக்னேஷன் மெயில் மட்டும் அனுப்புங்க. அப்புறம் ஒன் வீக்ல ரிலீவ் ஆகுறதுனால மூன்று மாசம் சம்பளம் கட்டவேண்டும் அதை சத்யதேவ் தரேன்னு சொல்லிட்டாரு யமுனா" என்றான் எச்ஆர் ஹரி. "அதான் நீங்களே எல்லாம் பண்ணீட்டீங்களே ஹரி அப்போது எதற்கு என்ன கூப்பிட்டீங்க?" என்றாள் கோபத்தோடு. "எப்படி ஹரி இதெல்லாம் அவன் ஒரு மல்டிமில்லினியராகவே இருக்கட்டும் அதுக்காக ஒரு பொண்ணு லைஃப்ல இப்படி விளையாடக் கூடாது என்னை இப்படி லாக் பண்ணிட்டான் அவன்" என்று ஹரியிடம் கத்தினாள். "ஐ அம் சாரி யமுனா உங்கள் பிரச்சனை என்னனு எனக்கு தெரியல இது டாப் மேனேஜ்மென்ட்ல இருந்து பண்ண சொன்னாங்க அவ்வளவு தான் எனக்குத் தெரியும்" என்றான். 'ச்சே அவன் மேல் இருக்கிற கோபத்தை இவர் கிட்ட காட்டிட்டேனே' என்று நினைத்தவள், "ஐ அம் சாரி ஹரி நான் மெயில் அனுப்பிடுறேன் அவ்வளவு தான கிளம்பல

மாயம் 3

மாயம் 3   அப்போது அவளுக்கு ஒரு கால் வந்தது அழைப்பைப் பார்த்த யமுனா அதில் தன்னுடைய மாமா கால் செய்வதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள். "யமூ குட்டி எப்படி டா இருக்க?" என்றவரின் குரல் தழுதழுத்தது. சேகருக்கு தற்போது 70 வயது இருக்கும் சிறிய வயதிலேயே தங்கள் அப்பா அம்மாவை இழந்த பதினைந்து வயது சேகர் தன்னுடைய எட்டு வயது தங்கை சாந்தியை ஒரு தந்தை போல் பாதுகாத்தார். அவளை படிக்கவைத்து இவரும் படித்து பகுதி நேரத்தில் வேலைப்பார்த்துப் படித்து முடித்தவுடன் அரசுப் பணியில் சேர்ந்தார். சாந்தியைக் கல்யாணம் பண்ணி வைக்கவே அவருக்கு வயது 35 ஆனது. தன்னுடைய வாழ்க்கையைத் தனியாக வாழலாம் என்று நினைத்த போது சாந்தி தன் கணவன் வழி சொந்தமான விஜயலட்சுமியைப் மணம் முடிக்க கூறினாள்.  விஜயலட்சுமி மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவள் ஆனாலும் அவளுக்குப் பேராசை அதிகம் தங்கை மற்றும் மாப்பிள்ளை சங்கரின் வார்த்தைக்காகக் கல்யாணமும் செய்தார். திவாகர் பிறந்து மூன்று வருடம் கழித்துத் தான் யமுனா பிறந்தாள்.நாட்கள் இப்படியே சென்ற சமயத்தில் தான் ஒரு விபத்தில் யமுனாவின் பெற்றோர் உயிரிழந்தனர். ஐந்து வயதான யமுனாவை தன்னுடைய மக

மாயம் 2

மாயம் 2 யமுனாவிற்கு மண்டையே குழம்பியது. அந்த நிமிடம் உட்கார்ந்து யோசித்தவள் திவாகருக்கு கால் பண்ணினாள். "யமுனா நானே சென்னைக்குத் தான் வந்துக் கொண்டு இருக்கேன். உன் விடுதி முகவரி எஸ்.எம்.எஸ் அனுப்பு" என்று காலை கட் செய்து விட்டான். அவளும் அனுப்பினாள். 'நாம் திவ்யாவைப் பற்றிப் பேச நினைத்தோம் இவர் என்ன புது கதை சொல்கிறார்?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள் யமுனா.  யமுனாவிற்கு யோசித்து யோசித்து தலையே வலித்தது. அடுத்த நாள் திவாகர் யமுனாவின் விடுதியில் வாசல் முன் நின்று யமுனாவை அழைத்தான். "பக்கத்தில் இருக்கிற பீச்சுக்கு போகலாம்" என்றான்.  "சரி அத்தான் அங்க டெல்லியில் மாமா அத்தை லாம் எப்படி இருக்காங்க? மாமாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையென்று சொன்னாங்க. இப்போது எப்படி இருக்காங்க?" என்று கேட்டாள். "அப்பாக்கு இப்போது பரவாயில்லை யமுனா. எல்லாரும் நல்லா இருக்காங்க ஆனால் நான் தான் நல்லா இல்ல" என்றான்.  "யார் அத்தான் பிரியா? யார் இந்த சத்யதேவ்? அவன் எதற்கு என்ன மிரட்டுறான்? நான் எதற்கோ அந்த ஆள் பேசக் கூப்பிட்டு இருப்பான்னு நினைத்தால் அவன் ஏதோ கதை சொ

மாயம் 1

மாயம் 1   சென்னை  தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.அத்தகைய ஊரில் அமைந்துள்ள சோழிங்கநல்லூரில் மென்பொருள் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கிறது. சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில், தன் அறையில் அழுதுக்கொண்டு இருந்தாள் திவ்யா. திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டுள்ள திவ்யாவிற்கு அப்பா அம்மா சிறிய வயதிலேயே பிரிந்தனர்.  இருவரும் மனம் வேறுபாட்டால் வெவ்வேறு பாதையில் சென்றனர். அவர்கள் திவ்யாவை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டனர். பதினைந்து வயதான திவ்யா அழுது கெஞ்சியும் அவர்கள் மனது கல்லாகவே இருந்தது. மாதா மாதம் அவளுக்குப் பணம் அனுப்பினார்கள்.  ஆனால் திவ்யாவிற்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது இப்படியே ஏழு வருடங்கள் சென்றது. அப்போது தான் அவள் வாழ்க்கையில் வந்தாள் யமுனா என்னும் தேவதை.  யமுனாவின் அப்பா அம்மா அவள் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். அப்போது இருந்து அவளுடைய மாமா சேகர் தான் அவளை வளர்த்தார். தன்னுடைய மகன் மேற்படிப்பிற்காக டெல்லி செல்லவிருந்தனர்.  அப்போது சமயம் பார்த்து சேகர் மனைவி விஜயலட்சுமி யமுனாவை அழைத்துச் செல்ல வேண்டாம்