மாயம் 4

மாயம் 4 


யமுனாவிற்கு சுத்தமாக எதிலுமே விருப்பம் இல்லை அடுத்த நாள் அலுவலகம் சென்ற யமுனாவை எச்ஆர்டியில் இருந்து அழைத்தனர்.


"ஹாய் யமுனா உங்கள் லாஸ்ட் டேட் இந்த வாரம் ஃபிரைடே சத்யதேவ் எங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டாரு. நீங்க ஒரு ரெஸிக்னேஷன் மெயில் மட்டும் அனுப்புங்க. அப்புறம் ஒன் வீக்ல ரிலீவ் ஆகுறதுனால மூன்று மாசம் சம்பளம் கட்டவேண்டும் அதை சத்யதேவ் தரேன்னு சொல்லிட்டாரு யமுனா" என்றான் எச்ஆர் ஹரி.


"அதான் நீங்களே எல்லாம் பண்ணீட்டீங்களே ஹரி அப்போது எதற்கு என்ன கூப்பிட்டீங்க?" என்றாள் கோபத்தோடு.


"எப்படி ஹரி இதெல்லாம் அவன் ஒரு மல்டிமில்லினியராகவே இருக்கட்டும் அதுக்காக ஒரு பொண்ணு லைஃப்ல இப்படி விளையாடக் கூடாது என்னை இப்படி லாக் பண்ணிட்டான் அவன்" என்று ஹரியிடம் கத்தினாள்.


"ஐ அம் சாரி யமுனா உங்கள் பிரச்சனை என்னனு எனக்கு தெரியல இது டாப் மேனேஜ்மென்ட்ல இருந்து பண்ண சொன்னாங்க அவ்வளவு தான் எனக்குத் தெரியும்" என்றான்.


'ச்சே அவன் மேல் இருக்கிற கோபத்தை இவர் கிட்ட காட்டிட்டேனே' என்று நினைத்தவள், "ஐ அம் சாரி ஹரி நான் மெயில் அனுப்பிடுறேன் அவ்வளவு தான கிளம்பலாமா?" என்று கேட்டுவிட்டுச் சென்றாள். 


தன் இருக்கையில் வந்து அமர்ந்த யமுனாவிற்கு ஆத்திரம் பயங்கரமாக வந்தது.


"என்னுடைய நிம்மதி சந்தோஷம் சுதந்திரம் வாழ்க்கை எல்லாமே போச்சு" என்று கோபத்தில் அமைதியாகக் கத்தியவள் அழுகையோடு முடித்தாள். யமுனா பொதுவாகச் சீக்கிரம் அழுகிற பெண் இல்லை தன்னுடைய வாழ்க்கை முடிந்ததே என்று நினைத்து நினைத்து பைத்தியமே பிடிப்பது போல் உணர்ந்தாள். 


திவ்யா யமுனாவிற்கு கால் செய்துக் கொண்டிருந்தாள் அவள் கால்லை எடுத்து பேச இவளுக்கு விருப்பம் இல்லாததால் வேண்டும் என்றே அட்டெண்ட் செய்யாமல் இருந்தாள். இப்படியே இரண்டு மணிநேரம் சென்றது மெயிலை அனுப்பிவிட்டு ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.


யாரிடமும் தான் ரிஸைன் பண்ணுவதைச் சொல்லாமல் வேலைப் பார்த்தாள். ஏனெனில் 'திடீரென்று ஒரு வாரத்தில் திருமணம் என்று எப்படிச் சொல்வது அந்த டெரர் வேற இதைப் பற்றி யார்கிட்டயும் சொல்லக் கூடாதென்று சொல்லிருக்கிறான். இதில் திவா அத்தான் வேற மெசேஜ் செய்துக் கொண்டே இருக்கான் ச்ச எரிச்சலா இருக்கு' என்று நினைத்தவளுக்குத் தலைவலியே வந்துவிட்டது காலையில் வேற எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் கஃபடேரியாவிற்கு காபி குடிக்கச் சென்றாள். 


அப்போது அலைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். திவ்யாவிடம் இருந்து பதினான்கு மிஸ்ஸூடு கால்ஸ் வாட்ஸ் அப் மெசேஜ் உம் அனுப்பியிருந்தாள்.


"ஹாய் யமூ உனக்கு முகூர்த்தப்பட்டு எடுக்கணுமாம் இன்றைக்கு ஈவ்னிங்... எங்க கிட்ட சத்யா அத்தான் பணம் கொடுத்திருக்காரு நீ ஆபிஸ்ல வெயிட் பண்ணு நான் உன்னை கூட்டிட்டு போறேன்" என்று அனுப்பி இருந்தாள்.


"பெரிய அத்தான் ச்ச இவள் எல்லாம் ஒரு பிரண்ட் னு ஹெல்ப் பண்ணிணேன் இப்போது என் வாழ்க்கையே போச்சு இவளுக்கென்ன இவ ரூட் கிளியர் ஆயிடுச்சுல அதான் எனக்காக வருத்தப்படாம சந்தோஷமா இருக்கா அந்த ஆள் அத்தானாம் ஒரு காபி கூட நிம்மதியாகக் குடிக்க முடியவில்லையே" என்று கடுப்பாகி எழுந்தாள். 


மாலை யமுனா வெளியே வரும் போதே திவ்யா அவள் ஸ்கூட்டரில் காத்துக் கொண்டிருந்தாள். தன் வண்டியை எடுத்துட்டு வந்து அவளின் ஸ்கூட்டரின் பக்கத்தில் நிறுத்தினாள் யமுனா. தன்னிடம் இவள் பேசமாட்டாள் என்பதை உணர்ந்த திவ்யா அமைதியாக வண்டியை ஓட்டினாள். அவள் பின்னே இவளும் சென்றாள். தன் பின்னால் யமுனா வருகிறாளா என்று அப்போ அப்போ பார்த்துக் கொண்டே வந்தாள் திவ்யா.


திவ்யாவின் வண்டி டி நகர் உஸ்மான் ரோட்டில் அந்த பிரபல துணிக்கடையில் நின்றது. பின் யமுனாவும் அங்கே வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே வந்தாள் அங்கே குணா அவர்களுக்காக காத்திருந்தான்.


"வாங்க யமுனா" என்றான். அதற்கு அவளிடம் எந்த ஒரு பதிலும் இல்லை பின் பட்டு சாரி பிரிவு சென்று அவளைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். கடமைக்கே என்று ஒரு ஸ்கை ப்ளூ வண்ண பட்டு சாரியை எடுத்து விட்டு அவர்களிடம் சொல்லாமலே கிளம்பினாள். அவள் அப்படிச் சென்றதைப் பார்த்த இருவரும் வருத்தமாக நின்றனர். பின் சத்யதேவ்வின் சொற்படி அவர்களும் புது உடை எடுத்தனர். யமுனாவின் அறையிலிருந்து ஒரு அளவு பிளவுஸை எடுத்து தைய்க்க கொடுக்கலாம் என்று திவ்யா யோசித்தாள்.தன்னுடைய விடுதி வந்தவுடன் இரவு குளித்துவிட்டு இரண்டு இட்லியை விழுங்கிவிட்டுப் படுத்துக் கொண்ட யமுனா அழுதுக் கொண்டே இருந்தாள். 


இப்படியே நான்கு நாட்கள் கடந்தது. யமுனா தன்னுடைய ஐடி கார்டை சரண்டர் செய்து வெளியில் வரும் போது மனது பாரமானது.எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கின வேலை எவனோ ஒருத்தன் தீடிரென்று வந்து என் வாழ்க்கையையே அழிச்சிட்டானே என்று வெளியே வந்தவள் முன்னாடியே தான் கிளம்புகிறேன் என்று மெயில் அனுப்பி வைத்திருந்தாள் தன்னுடைய டீமிற்கு. 


அன்று மாலை விடுதிக்கு வந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் இருந்தாள். அப்போது திவாகரிடம் இருந்து ஃபோன் வந்தது. கடந்த இரு நாட்களாகவே திவாகர் விடாமல் கால் பண்ணிக் கொண்டே இருந்தான். அவனிடம் பேச யமுனாவிற்கு விருப்பம் இல்லை. ஏனெனில் அவனால் தான் இவ்வளவு பிரச்சனையும் முளைத்தது. அதே மாதிரி யமுனா அவனைக் காதலிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது அவளுக்கு எரிச்சலானது. காதல் என்பது யாராலும் திணிக்க முடியாத ஒன்று காதல் என்று ஒன்று மலர்ந்தால் சாதாரணமாக இருக்கும் விஷயங்கள் கூட அழகாக இருக்கும். 


'இதை எல்லாம் யோசித்து நமக்கு என்ன பயன் நம்முடைய வாழ்க்கை தான் முடிந்துவிட்டதே' என்று யோசித்தவள் முடிந்த வரை தன்னை எதாவது வேலை செய்து கொண்டிருக்கும்படி பிஸியாக வைத்தாள்.


திவ்யாவைக் கண்டும் காணாத மாதிரி யமுனா தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். திவ்யாவிற்கு மனசே சரியாக இல்லை உடனே குணாவிற்கு கால் பண்ணி அழத் தொடங்கினாள்.


"ஏன் குணா, யமுனா அத்தான் கல்யாணம் பண்றதுக்கு முக்கியமான காரணம் திவாகர் ஆனால் நம்ம இரண்டு பேர் தான் காரணம் மாதிரி அவள் பண்றது எனக்கு ரொம்ப ஹர்ட்டிங்கா இருக்கு" என்றாள்.


"நீ அவங்க இடத்தில் இருந்து யோசித்து பார் திவ்யா... யாரோ ஒருத்தர் அவங்க குடும்பத்தோடு நலனுக்காக தீடிர்னு மிரட்டி கல்யாணம் பண்ண சொன்னா எப்படி இருக்கும்" என்றான் குணா.


"அதுவும் சத்யா அண்ணா கிட்டப் பேசவே நாங்கள் எல்லாருமே பயப்படுவோம். அப்போ யமுனா சின்ன பொண்ணு தான அவங்களுக்கும் அண்ணாக்கும் எப்படி செட் ஆக போகுதுனு தான் தெரியலை" என்றான். 


"ம்ம், உங்க அண்ணாக்கு வயசு என்ன குணா?" என்று தீடிரென ஒரு படபடப்புடன் கேட்டாள்.


"எனக்கு இருபத்தி ஏழு ஆகிறது அண்ணா என்னை விட இரண்டு வருஷம் பெரியவங்க சோ இருபத்தி ஒன்பது" என்றான்.


"என்னது இருபத்தி ஒன்பதா!" என்று அதிர்ந்தாள்.


"ஏய் திவ்யா, என்ன ஆச்சு? அண்ணா வயசில் என்ன பிரச்சனை உனக்கு?" என்று கேட்டான்.


"எனக்கு பிரச்சனை இல்லை குணா யமுனாவிற்கு தான்" என்று இழுத்தாள்.


"யமுனாக்கு என்ன கொஞ்சம் பதற்றம் ஆக்காமல் சொல்லு தாயே" என்றாள்.


"குணா, என்னை விட யமுனா ஒரு வருஷம் சின்னவள் அவளுக்கு இப்ப தான் வயசு இருபத்தி இரண்டு ஆகுது" என்றாள்.


"ஓ..! சரி இப்போது அதுக்கு என்ன சொல்லவர நீ" என்றான்.


"யமுனா என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கா கல்யாணம் பண்ணா அவளை விட நான்கு வருஷம் இல்லன்னா அதுக்கு கம்மியா இருந்தால் மட்டும் தான் பண்ணுவேன்னு உங்க அண்ணா இவளை விட ஏழு வருஷம் பெரியவங்க இது தெரிந்தால் என்ன ஆட்டம் ஆட போறாளோ எனக்கு இப்பவே பயமா இருக்கு" என்றாள். 


"ஹே ரிலாக்ஸ் திவ்யா யமுனா ஹாஸ் நோ அதர் கோ சோ ஃபிரீயா விடு" என்றான்.


"உங்கள் அண்ணா பார்க்க அவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காரு இன்ஃபாக்ட் நீயே அவர் பக்கத்தில் கம்மியா இருப்ப அப்போது ஏன் அவர் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?" என்று கேட்டாள்.


இதற்குப் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தான் குணா.


"குணா என்ன ஆச்சு? ஏன் அமைதியாகவே இருக்கீங்க எனி ப்ராப்ளம்?" என்று கேட்டாள் திவ்யா.


"திவ்யா சத்யா அண்ணாக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பொண்ணு இருக்கு" என்றான். இதைக் கேட்ட திவ்யாவின் நெஞ்சே ஒரு நிமிஷம் நின்று விட்டது.


"எஸ் திவ்யா அண்ணாக்கு கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது. அவருடைய மனைவி ஐ மீன் முதல் மனைவி பெயர் பிரனிதா... அண்ணாவும் பிரனிதாவும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்தார்கள் பிரனிதாவும் எங்களை மாதிரி வசதி உள்ளவர்கள் தான் கல்யாணம் நடந்தது ஆனா பிரனிதா எங்க யார் கிட்டயும் சரியா மூஞ்ச குடுத்து கூட பேச மாட்டாங்க உண்மையை சொல்லணும்னா நான் சத்யா அண்ணா இல்லாமல் செயல் பட முடியாது ஐடி கம்பெனி ஹாஸ்பிடல் லெதர் பிஸினஸ்னு எல்லாமே அண்ணன் கன்ட்ரோல் தான் அதனால ரொம்பவே கர்வமாக இருப்பாங்க எங்கள் அப்பா அம்மா மற்றும் பிரியா ஒருத்தரையும் மதிக்க மாட்டாங்க அண்ணா கல்யாணம் பண்ண உடனே அமெரிக்கா லண்டன்னு இருந்துட்டே இருப்பாங்க அப்போதுலாம் இவங்களும் அங்க போய்டுவாங்க அண்ணனுக்கு எங்களை மதிக்காத விஷயம் தெரியாது நாங்களும் சொல்லலை அப்புறம் ஆதிரா பாப்பா பிறந்த உடனே அண்ணி எங்கள் வீட்டுக்கு வந்திட்டாங்க அண்ணா அமெரிக்கால இருந்தார்."


"அப்போ அப்போ இங்க வருவாரு பிரனிதா ஆதிராவை கவனிக்கவே மாட்டாங்க. அம்மாவும் பிரியாவும் தான் ஆதிராவ வளர்த்தாங்க தன்னுடைய அழகு போய்டும்னு ஆதிராக்கு தாய்ப்பால் கூட கொடுக்கல அவங்க... இதனால ஆதிரா ரொம்ப வீக் ஆகிட்டா இந்த விஷயம் தெரிந்த உடனே அண்ணா இங்க வந்து பிரனிதாவை பயங்கரமா போட்டு அடிச்சாங்க. அப்போது வேணும்டே பிரனிதா பப்புனு லாம் போக ஆரம்பிச்சா."


"நாங்கள் ரொம்ப வருஷமா டெல்லியில் தான் இருக்கிறோம். ஆனால் நாங்கள் நம்ம தமிழ் கலாச்சாரப்படி தான் வாழ்ந்தோம். பிரனிதா இப்படிப் பண்ண உடனே அண்ணா அவளை வீட்டை விட்டு அனுப்பி நிறையப் பிரச்சனை வந்து இப்போது அவங்களுக்குள்ள டைவர்ஸே ஆகிடுச்சு கேஸ்ல கூட அண்ணா தான் ஜெயிச்சாரு அதனால் ஆதிரா பாப்பா எங்கள் கூடத் தான் இருக்கா. பிரனிதா வீட்டுக்கு மாசம் ஒரு தடவை வரலாம் ஆனால் கடந்த ஒரு வருஷத்தில் இவள் இதுவரைக்குமே இரண்டு தடவை தான் வந்திருக்கா. நீ என்ன நினைப்பனு புரியுது கலாச்சாரமென்று சொல்லும் போது அப்போது நம்ம பண்ணது தப்பு தான அதுவும் கலாச்சாரம் சீர்கேடு தானென்று கேட்க தோணும். ஆமா நம்ம பண்ணது தப்பு தான் ஆனாலும் நம்ம காதல் உண்மை ஆனா பிரனிதா அப்படி இல்லை அவளுக்கு இப்போது பசங்க பழக்கம் கூட இருக்குனு கேள்விப்பட்டோம்" என்றான். 


"ஏய் திவ்யா, என்ன எதுவும் பேச மாட்டுற" என்றான்.


தன்னுடைய குரலில் கரகரப்போடு, "என்னை என்ன பேச சொல்றீங்க? எனக்கு தெரியலை என் மைன்ட்டே பிளான்ங்க்கா இருக்கு யமுனாவிற்கு இது கண்டிப்பா தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அவளுக்கு இது தெரியாமல் எப்படி குணா அது தப்பாச்சே? இப்போ எனக்கே நான் ஏதோ கேட்கப் போய் தான் சொல்றீங்க இல்லன்னா எனக்கும் பின்னாடி தான் தெரிந்திருக்கும் போல" என்று சலிப்போடு சொன்னாள். 


“தேவ் அண்ணாக்கு அவருடைய பெர்ஸ்னல் பத்தி பேசப் பிடிக்காது திவ்யா அதான் நானும் பேசலை" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "ஓ அதுக்காக கல்யாணம் பண்ண போற பொண்ணு கிட்ட கூட சொல்லாமல் இருக்கலாமா?" என்று அதிர்ந்து கேட்டாள்.


"நீ சொல்றது எனக்கு புரியுது திவ்யா... ஆனால் யமுனாக்கு இந்த உண்மை அண்ணா சொல்லித் தான் தெரியவேண்டும் அதான் அண்ணாவும் நினைத்து சொல்லாமல் இருந்திருக்காரு ஆதிராவை இப்போது வளர்க்கிறது பிரியா தான்... ஒரு தாய் போல பார்த்துக்கிறாள் அதனால் ஆதிரா பிரியாவை விட்டு வர மாட்டுறா பிரியமாட்டாள் பிரியா நிச்சயம் முடிந்ததும் வெளிநாட்டில் நம்பகமான ஆள உட்கார வெச்சிட்டு அண்ணா இந்தியாவிலேயே செட்டில் ஆயிட்டாரு. பிரியா ஆதிராவை அப்படி பார்த்துக்கறதுனால அண்ணாக்கு பிரியா மேல் ஒரு மரியாதை கலந்த அன்பு அதனாலேயே அவள் ஆசைப்பட்டுக் கேட்ட திவாகர எப்படியாவது கல்யாணம் பண்ணி வெக்க முடிவு பண்ணிட்டாரு" என்றான். 


"திவாகர் வீட்டுக்கு சத்யா அத்தானுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறது தெரியாதா?" என்று வியப்போடு கேட்டாள்.


"ம்ம், தெரியாது நான் தான் சொன்னேன்ல... சத்யா அண்ணாவோட பெர்ஸ்னல் யாருக்கும் தெரியாமல் தான் இருக்கும் அப்படி அண்ணா கன்ட்ரோல்ல வெச்சிருப்பாரு" என்றான். 


என்னவோ யமுனாவின் நிலைமை கண்டு கண்ணீர் கரை புரண்டு வந்தது திவ்யாவிற்கு. 'அவளுக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும் நான் இங்கே சோகத்தில் மூழ்கிக் கிடந்த போது என்னைச் சிரிக்க வைத்து என் வாழ்க்கைக்குப் பிடிப்பு கொடுத்த அழகிய தேவதை யமுனா தன்னை விட வயதில் சிறியவளாக இருந்தாலும் மனதளவில் ரொம்ப தெளிவானவள் சின்ன வயதில் தாய் தந்தையை இழந்த அப்பெண்ணிற்கு மாமாவின் அன்பு மற்றும் அரவணைப்பில் படித்து இப்போது தனியாய் வளர்ந்து நிற்கும் இந்த அழகிய அறிவுள்ள நல்ல பெண்ணிற்கு ஏன் இந்த நிலைமை?' இதை நினைத்தவள் குணாவுடன் கால்லில் இருக்கும் போதே தேம்பித் தேம்பி அழுதாள்.


"திவ்யா ப்ளீஸ் காம் டவுன் ரிலாக்ஸ்" என்று ஆறுதல் படுத்தினாலும் திவ்யாவால் முடியவில்லை.


"நான் கொஞ்சம் தனியா இருக்கவேண்டும் குணா தொலைப்பேசியை வைக்கிறேன்" என்று சொல்லும் போது, "சரி திவ்யா எக்காரணம் கொண்டும் தேவ் அண்ணாவோட கல்யாணம் குழந்தை பத்தி யமுனாவிற்கு உன்னால் தெரியக்கூடாது" என்றான்.


"சரி" என்று ஃபோனை வைத்த திவ்யா தன்னுடைய கட்டிலில் குப்புற விழுந்து கதறிக் கதறி அழுதாள். 


தன் துணிகளைத் தோய்த்து முடித்துக் கொஞ்ச நேரம் டீவி பார்த்துக் கொண்டிருந்த யமுனாவிற்கு மனதில் வேறு ஏதோ ஓடிக்கொண்டிருந்தது. பின் தன் அறைக்குச் செல்லும் போது அங்கு திவ்யா தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டிருந்தாள்.


"இவள் எதற்கு அழுதுட்டு இருக்கா? இவள் இந்நேரம் சந்தோஷமா தான இருக்கவேண்டும் சரி நமக்கு என்ன?" என்று தூங்கச் சென்று விட்டாள்.ஒரு வாரம் இப்படியே கழிந்தது. அன்று காலை யமுனா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.


"ஏய் யமுனா எழுந்திரு டி இன்றைக்கு உனக்குக் கல்யாணம் ப்ளீஸ் டி எழுந்திரு" என்றாள் திவ்யா. 


நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த யமுனாவிற்கு தன்னை யாரோ உலுக்குவது எரிச்சலாக இருந்தது. அப்போது திவ்யாவிற்கு குணாவிடம் இருந்து கால் வந்தது.


"திவ்யா எப்போது கிளம்பி வரப்போறீங்க? ஆல்ரெடி மணி ஆறரை ஆயிடுச்சு ஒன்பது மணிக்கு முகூர்த்தம் நீங்க இன்னும் கிளம்பலையா? சோழிங்கநல்லூரில் இருந்து வடபழனி வரதுக்குக் கண்டிப்பா ஒன்றரை மணி நேரமாகும் அதுலேயும் சென்னை டிராஃபிக் பத்தி சொல்லவே வேண்டாம் சீக்கிரம் கிளம்புங்க" என்றான்.


"குணா அது வந்து... யமுனா இன்னும் எழுந்திருக்கவே இல்லை" என்று இழுத்தாள்.


"என்ன யமுனா இன்னும் எழுந்திருக்கவில்லையா?" என்று அதிர்ச்சியில் கேட்டான் குணா.


"சரி நீங்க சீக்கிரம் கிளம்புங்க நாங்க கோவிலுக்கு போய்ட்டு இருக்கிறோம் அண்ணா பக்கத்தில் இருக்காரு வைக்கிறேன்" என்று கட் செய்துவிட்டான் குணா. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2