மாயம் 52

 

மாயம் 52 (இறுதி)

“பிரியா, திவாகர் அத்தான் உங்ககிட்ட ஒதுக்கம் காட்டுனது தப்பு தான். ஆனால் யோசிச்சுப் பாருங்க, உங்களுக்காக தேவ் என்னை கல்யாணம் செய்தார். திவா அத்தான் என்னை அவர் தங்கை போல் நினைக்கிறார். அதற்கு உங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று யமுனா கூறும் போதே,

“ஐய்யயோ அண்ணி! நான் சும்மா திவாகரை வெறுப்பேற்றினேன். தேவ் அண்ணாவிற்கு மட்டும் நீங்கள் என்னிடம் வந்து இப்படி மன்னிப்பு கேட்டீங்க என்று தெரிந்தால், என்னைத் திட்டி தீர்த்திடுவார் என்று யமுனாவை கட்டிப்பிடித்து,

“நீங்களும் தேவ் அண்ணாவும் மேட் ஃபார் ஈச் அதர் அண்ணி, உங்கள் இருவருக்கும் சுத்தி தான் போடணும் என்று யமுனாவின் கன்னத்தில் கைவைத்து கொஞ்சினாள். 

திவாகரிடம், “பரவாயில்லை திவா, கடைசியா இம்பார்ட்டெண்ட் ரோல் மாதிரி, ஏதோ ஹீரோ மாதிரி பெர்ஃபார்ம் பண்ணிருக்கீங்க. ஆனா அண்ணா வந்த அப்புறம் பேக் டு காமெடியன்… எப்படியோ தேவ் அண்ணா அண்ட் அண்ணி சேர்ந்துட்டாங்க என்று மகிழ்ந்தாள்.

“அடியேய், நான் உனக்கு காமெடியனா? இரு... யமுனா நீ கிளம்பு மா, உன் கணவன் வரத்துக்குள்ள திங்க்ஸை பேக் பண்ணு. நான் மேடம்கிட்ட தனியா டீல் பண்ணணும் என்றவன் பிரியாவிடம் நெருங்கினான். 

“ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ! டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுங்க மிஸ்டர் என்று கூறியவளிடம், 

“என்னடீ சீன் போடுற? இப்போது நீ என் பக்கத்தில் வரலை, நான் கோச்சிகிட்டு போய்டுவேன் என்று பொய்யாக செய்கை செய்தவனை,

“திவா இனி கோவிச்சுப்பேனு சொல்லாத, ஒரு பிரிவையே என்னால் தாங்க முடியல. நீ என்னை மிஸ் பண்ணவே இல்லைல? என்று கலங்கினாள்.

“ரொம்ப மிஸ் பண்ணேன்டீ, ஆனால் அதையும் மீறி என் கண் முன்னாடி யமுனா வந்துட்டு போனா, மனசாட்சி உள்ளவன் அப்படி தான் பண்ணுவான் பிரியா என்று வருந்தினான்.

“சரி சரி, நீ என் செல்லம்ல! நாளைக்கு என்னை கொடைக்கானல் கூட்டிட்டுப் போ. தர்ஷியை அத்தை, மாமா பார்த்துப்பாங்க. ப்ளீஸ் திவா, உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும் என்று கெஞ்சிக் கேட்ட மனைவியிடம்,

“கண்டிப்பா போலாம் பிரியா, பட் அதற்கு முன்னாடி… என்று விஷமமாக பிரியாவை நெருங்கினான் அவள் கணவன்.

*** 

இரவில் யமுனாவை அழைத்துச் செல்ல தேவ், திவாகரின் வீட்டிற்குள் நுழையும்போதே, “வாங்க அத்தான் என்று வரவேற்ற திவாகரை, “என்ன மரியாதை பலமா இருக்கு என்று கிண்டலடிக்கும் தொனியில் கேட்டான் தேவ்.

“அத்தான்… அது வந்து, சாரி! நான் கொஞ்சம் ஓவரா நடந்துக்கிட்டேன் என்று தயங்கியவனின் தோள்களில் கை போட்ட தேவ், 

“ச்ச ச்ச இன்ஃபேக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது, யமுனாவிற்காக குரல் கொடுக்க நீங்க இருக்கீங்கனு. சரி அதை விடுங்க, நான் யமுனாவை அழைத்துச் செல்கிறேன். ஒரு நாள் எல்லாரும் வீட்டிற்கு வாருங்கள் என்று கூறும்போதே அங்கு வந்த பிரியா, தன் அண்ணனை அணைத்து, “ஹாப்பியா அண்ணா? என்று கேட்டாள். 

“ரொம்ப ரொம்ப என்று தேவ் சிரிக்கும்போதே, ஓபன் ஹேர் விட்டு தலையில் மல்லிகை பூ சூடி, பச்சை வண்ண சீனா சில்க் சேலையில் வந்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் தேவ். 

“அஹெம் அஹெம்… என்று வேண்டும் என்றே திவாகர் இருமுவது போல் கிண்டல் அடித்ததில் தன் நிலைக்கு வந்தான். யமுனாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, சேகர் மற்றும் விஜயலட்சுமியிடம், “இனி யமுனாவின் கண்ணில் இருந்து எனக்காக வரும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராகத் தான் இருக்கும். உங்கள் மகளை ராணி போல் பார்த்துக் கொள்வேன். என்னை நம்பி அனுப்புங்கள் என்று தேவ் கூறியதைக் கேட்ட யமுனாவிற்கு, தன் கணவனை நினைத்து சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. 

“என்ன பிரியா, உங்கள் அண்ணன் கல்யாணம் பண்ணி ஒரு குட்டியே போட்டாச்சு. இப்போது என்னமோ புதுசா கல்யாணம் பண்ணிட்டு போற மாதிரி பேசுறாரு? என்று பிரியாவின் காதில் கூறுவது, யமுனாவின் காதுகளில் விழுந்தது. 

“ஆமாம், இவர் புது தேவ் தான் என்று கூறும்போது, தேவ்வின் புன்னகை யமுனாவின் இதயம் வரை தொட்டது. 

அனைவரிடமும் விடைபெற்று, ஆராதனாவோடு கிளம்பினர் இருவரும். காரில் வரும்போதும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருந்தனர். ஆனால் யமுனாவிற்கு ஆதிராவை நினைத்து கவலை இருந்து கொண்டே இருந்தது. தேவ், யமுனாவிற்காக ஆதிரா விட்டுச் சென்ற தாக்கத்தை மறைத்தான். 

இருவரும் வீட்டை அடைந்த பின், கதவைத் திறந்து உள்ளே போகும் போதே, “சர்ப்ரைஸ்…! என்று கரகோசமிட்டு வந்தனர், குணா மற்றும் திவ்யா. அங்கே அவர்களுக்காக வாங்கிய கேக்கை கட் பண்ண கூறும்போதே, சீதாலட்சுமி சந்தோஷத்துடன் வரவேற்றார். 

“என்னப்பா தேவ், எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து, இப்போது நீ அதிர்ச்சியாய் நிக்குறியா? எங்களுக்கு எல்லாமே பிரியா சொல்லிட்டா என்று யமுனாவிடம் வந்தார். 

“உன் மனம் போல் வாழ்க்கை யமுனா என்று யமுனாவின் தலையைக் கோதியவரிடம், “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அத்தை என்று காலில் விழுந்தவள், “இனி தேவ்விற்கு பக்க பலமாய் நான் இருப்பேன் என்று கையைப் பிடித்து வாக்கு கொடுத்தாள். 

பின் அனைவரும் இரவு உணவு அருந்திய பின், குணா, “அண்ணா, நாளைக்கு நான், பிரியா, திவாகர் மற்றும் திவ்யா குழந்தைகளை இங்கே விட்டுட்டு, இரண்டு நாட்கள் கொடைக்கானலுக்கு போகலாம் என்று இருக்கிறோம். நீங்களும் அண்ணியும் வரீங்களா? என்று கேட்டவனிடம்,

“வேண்டாம் குணா, நீங்கள் எல்லாரும் போயிட்டு வாங்க என்று கூறியவனை நினைத்து, ‘இவருக்கு சுட்டுப் போட்டாலும் ரொமான்ஸ் வராது போல என்று நினைத்தாள். 

ஆராதனாவைத் தன்னோடு படுக்க வைத்த சீதாலட்சுமி, யமுனா மற்றும் தேவ்விற்கு தனிமை கொடுக்க நினைத்தார். யமுனா தேவ்வின் அறைக்குள் செல்லும்போதே, லாப்டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தவனை முறைத்தாள். 

“இங்கே எவ்வளவு அழகா உங்களுக்கு பிடித்த மாதிரி சேலையில் வந்திருக்கேன். நீங்கள் என்னடானா... சரியான தத்தி என்று கூறியவளின் கையை பின்னால் இழுத்து, யமுனாவின் இடுப்பில் தன் கையை அழுத்தியவன், அவ‍ளைத் தன்னோடு சேர்த்தான். அவள் இதழில் தன் இதழைப் பதித்தவன், நீண்ட நேரம் அவளின் இதழ் தரும் சுவையை ரசித்துக் கொண்டிருந்தான். 

பின் அவளை விடுவித்தவன், “நானாடீ தத்தி? இங்க பாரு என்று தன் போனில் புக் செய்திருந்த ஹினிமூன் டிக்கெட்டைக் காட்டினான். 

“வாவ் சிம்லா குளுமணாலியா! என்று ஆச்சரியப்பட்டவளிடம், “ஆமாம், எனக்கு இந்த கும்பலோட கோவிந்தா போடுவதெல்லாம் பிடிக்காது. உன் கூட நாலு நாட்கள் தனியா நான் படுத்துற பாட்டுல, உங்கள் ரொமான்ஸ் ஓவரா இருக்குன்னு நீயே சொல்லப் போற பாரு என்று அவளை சீண்டியவன்

“யமுனா, உன்னுடைய முதல் டெலிவரியில் தான் நீ சந்தோஷமா இல்லை. இரண்டாம் டெலிவரியில் நீ விட்ட சந்தோஷங்கள் எல்லாம் திருப்பி கொடுக்கணும் என்று என் மனது ஏங்குதுடீ என்று தன் மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“தேவ், இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் ஹனிமூனா? அப்போ அதுவரைக்கும் ஒன்னும் இல்லயா? என்று அப்பாவி மாதிரி கேட்ட மனைவியை, எப்படி தேவ்வால் சும்மா விட்டு வைக்க முடியும்? யமுனாவை தன்னுள் வைத்துக்கொண்டு, தன்னுடைய சில்மிஷங்களை ஆரம்பித்தவனைப் பற்றி, முதல் முறை அவளாக தேவ்விற்கு இதழ் முத்தத்தைக் கொடுத்தாள். 

பின் வேகமாக முன்னேறிய தேவ், “நல்லா புசுபுசுன்னு டெடி பியர் மாதிரி இருக்குற உன்னை பக்கத்துல வெச்சிட்டு, தொடாமல் இருக்க ரொம்ப கஷ்டப்பட்டேன் டீ. இப்போது எனக்கே எனக்குன்னு நான் எப்போது நினைச்சாலும் நீ எனக்கு கிடைப்ப என்று அவளுள் தன்னை மூழ்கினான். 

அன்று இரவு இருவரும் எவ்வளவு நேரம், எவ்வளவு முறை, தனிமையில் இப்படி இருந்தார்கள் என்று இருவருக்குமே தெரியவில்லை. ஆனால் யமுனாவிற்கு தூக்கம் வந்ததால் தேவ் அவளை விடுவித்து, அவளை தூங்க வைத்தான். 

தன் மனைவி தூங்கும் அழகை ரசித்தவன், “நீ நிம்மதியாக தூங்கி எவ்வளவு வருஷங்கள் ஆயிருக்கும்? என்று யமுனாவிற்காக வருந்தியவன், “இனி தினமும் நீ சந்தோஷமாகத் தான் தூங்கணும் என்று தூங்கிக்கொண்டிருந்தவளின் நெற்றியில் இதழ் பதித்த பின் அவனும் தூங்கி விட்டான். 

அடுத்த நாள் காலை யமுனா விழிக்கும்போதே, தன் கால்களில் இருந்த நகத்தை கட் பண்ணிக்கொண்டிருந்த தேவ்வை அதிர்ச்சியாகப் பார்த்த யமுனா, “தேவ், இதெல்லாம் எதற்கு நீங்க பண்றீங்க? என்று கேட்டாள். 

“பரவாயில்லை யமுனா, நம்ம இரண்டு பேர்க்குள்ள இந்த மாதிரி வேறுபாடு பார்க்க வேண்டாம். கடைசி காலத்தில் நமக்கு வயசு ஆகும் போது, ஆராதனா கல்யாணம் பண்ணிட்டு போன அப்புறம், உனக்கு நான் எனக்கு நீ மட்டும் தான் என்று எமோஷனலாகப் பேசிய கணவனை ரசித்துப் பார்த்தாள் யமுனா. 

“நான் பாட்டி, நீங்கள் தாத்தாவாக எல்லாம், வருஷங்கள் நிறைய இருக்கு என்று கூறிக்கொண்டிருக்கும்போதே யமுனாவின் ஃபோன் சிணுங்கியது.

“ஆ… சொல்லு ரேஷ், கல்யாணமா? வாவ் சூப்பர்! வந்துடறோம் என்று காலை கட் செய்தவள், “ரேஷ்மிக்கும் சுஜித்துக்கும் அடுத்த மாசம் கல்யாணமாம் என்று சந்தோஷத்துடன் கூறினாள்.

“கண்டிப்பா போகலாம், ஆனால் நான் அவங்களை கொஞ்சம் ஓவரா பேசிட்டேன் என்று தன் தப்பை உணர்ந்த கணவனை, “தேவ் நீங்க ரொம்ப மாறிட்டீங்க, ஐ லவ் யூ சோ மச்! என்று அவனைக் கட்டிக் கொண்டாள். 

சீதாலட்சுமிக்கு ஆராதனா உடனே பொழுது சரியாக இருந்தது. அவருக்கு தன் பேத்தியுடன் பொழுதைக் கழிப்பது சந்தோஷமாக இருந்தது. யமுனாவும் தேவ்வும் சந்தோஷத்துடன் சில்மிஷத்துடன் தங்களுடைய காதலை வாழ்ந்து கொண்டிருந்தனர். இப்படியே ஒரு மாதம் சென்றது. 

இரண்டாம் முறை கருவுற்ற பிரியா, வெட்கத்தில் யாரிடமும் பேசவில்லை. பிரியா கருவுற்ற பின் அடுத்த மூன்று மாதத்தில் திவ்யாவும் கருவுற்றாள். 

“என்ன யமுனா, எல்லாரும் நம்மளை விட ஃபாஸ்டா இருக்காங்க என்று கூறிய கணவனிடம், 

“அவங்க பசங்கலாம் நம்ம ஆராதனாவை விட பெரிய பசங்க. ஆனா நம்ம ஆராக்கு இன்னும் ஒரு வயசு ஆகலை, அவளுக்கு மூன்று வயசு ஆகும்போது இன்னொரு குழந்தையைப் பற்றி யோசிப்போம் என்றாள்.

“செம ஐடியா டீ என்று அவளைத் தூக்கி தங்கள் அறையிலேயே சுற்றியவன், “என்ன மாயம் செய்தாயோ? இந்த தேவ் இப்போது யமுனாவின் பிடியில்! என்று தன்னைக் கட்டிக் கொண்டிருந்த மனைவியிடம் கூறியவனை, மேலும் தன்னோடு இறுக்கினாள்.

மாயம் செய்தாயோ யமுனா!

***முற்றும்***


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 2

மாயம் 8