மாயம் 1

மாயம் 1 

சென்னை  தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.அத்தகைய ஊரில் அமைந்துள்ள சோழிங்கநல்லூரில் மென்பொருள் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கிறது.


சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில், தன் அறையில் அழுதுக்கொண்டு இருந்தாள் திவ்யா. திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டுள்ள திவ்யாவிற்கு அப்பா அம்மா சிறிய வயதிலேயே பிரிந்தனர். 


இருவரும் மனம் வேறுபாட்டால் வெவ்வேறு பாதையில் சென்றனர். அவர்கள் திவ்யாவை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டனர். பதினைந்து வயதான திவ்யா அழுது கெஞ்சியும் அவர்கள் மனது கல்லாகவே இருந்தது. மாதா மாதம் அவளுக்குப் பணம் அனுப்பினார்கள். 


ஆனால் திவ்யாவிற்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது இப்படியே ஏழு வருடங்கள் சென்றது. அப்போது தான் அவள் வாழ்க்கையில் வந்தாள் யமுனா என்னும் தேவதை. 


யமுனாவின் அப்பா அம்மா அவள் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். அப்போது இருந்து அவளுடைய மாமா சேகர் தான் அவளை வளர்த்தார். தன்னுடைய மகன் மேற்படிப்பிற்காக டெல்லி செல்லவிருந்தனர். 


அப்போது சமயம் பார்த்து சேகர் மனைவி விஜயலட்சுமி யமுனாவை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தாள். ஏனென்றால் யமுனா தங்களுடனே இருந்தால் எங்கே தன் மகனை மயக்கி விடுவாளோ என்று பயந்தாள்.


தன் மாமா வளர்ப்பில் வளர்ந்த யமுனா மிகவும் கலகலப்பான பெண் அவளின் துறுதுறுப்பு அனைவரையும் ஈர்க்கும். பதினெட்டு வயதான யமுனா பார்க்க மெழுகு பொம்மை போல் பப்ளியாகவும் லட்சணமாகவும் இருப்பாள். தன் அத்தையின் எண்ணத்தை உணர்ந்த யமுனா தானாகவே வீட்டை விட்டு வெளியேறுகிறேன் என்று கூறினாள். 


சென்னையில் அந்த பிரபலக் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருந்தவள் மாமாவிடம் அடம்பிடித்து விடுதியில் சேர்ந்தாள்.


"மாமா சின்ன வயதிலிருந்து என்ன மகாராணி மாதிரி பார்த்துட்டு இருக்கீங்க எனக்கு தேவையான உணவு, உடை செலவுக்குப் பணம் இப்படி நிறைய நான் கேட்கும் முன்னாடியே தந்திருக்கிறீர்கள் எல்லாத்துக்கும் மேல் தரமான கல்வி கொடுத்திருக்கீங்க இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியவில்லை" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.


"யமூக்குட்டி நீ என்னுடைய பொண்ணுமா உன் அத்தையை நான் பார்த்துப்பேன் அவளுக்காக நீ ஏன் கஷ்டப்படவேண்டும்" என்றார்.


"இல்ல மாமா எனக்கே என் சொந்தக் காலுல நிக்கணும்னு தோணுது. உங்க கூட இருந்தால் நீங்க கொடுக்கிற செல்லத்தில் நல்லா சாப்பிட்டுத் தூங்குவேன். இப்போதே பாருங்கள் பூசணிக்காய் மாதிரி இருக்கேன்" என்று சிரித்தாள்.


"நீங்க கவலைப்படாதீர்கள் இங்க இருக்கிற டெல்லி தான அடிக்கடி போன் பண்ணுங்கள்" என்றாள்.


"உனக்கு என்னடா குறைச்சல் பார்க்க தேவதை மாதிரி இருக்கிற உன்னைக் கல்யாணம் பண்ண கொடுத்து வைத்திருக்கவேண்டும். இதில் ஐந்து லட்சம் வைப்புத்தொகை இருக்கு. என்னுடைய தங்கை மற்றும் மாப்பிள்ளை சேர்த்த பணம் இது இனிமேல் உன்னிடம் தான் இருக்க வேண்டும்.”


“இதனுடைய வட்டிப் பணம் இந்த சேமிப்புக் கணக்கில் விழுகிறது. மாதா மாதம் நான் உனக்கு ஐந்தாயிரம் ரூபாய் அனுப்புவேன் வேண்டாமென்று சொல்லாத இது உன் மாமா மீது சத்தியம்" என்றார்.


சேகர் குடும்பத்தோடு டெல்லி சென்று விட்டார். யமுனா விளையாட்டுத் தனமாய் இருந்தாலும் படிப்பில் கவனம் சிதறாமல் நன்றாகப் படித்தாள். சேகரும் அடிக்கடி போன் பேசுவார். இப்படியே நாட்கள் சென்றது மூன்றாவது ஆண்டு இறுதியிலிருந்தாள்.

 

அப்போது காம்பஸ் நேர்முகத்தேர்வில் தேர்வாகி பெரிய மல்டிநேஷனல் கம்பெனியில் மாதம் முப்பது ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்குத் தேர்வானாள். தன்னுடைய வெற்றியை தன் மாமாவிடமும் பகிர்ந்து சந்தோஷப்பட்டாள். கல்லூரி வாழ்க்கை இனிதே முடிந்த அவளுக்கு வேலைக்குச் செல்ல ஆர்வமும் சந்தோஷமும் இருந்தது.


ஒர்க்கிங் விமன்ஸ்(working women's) விடுதியில் சேர்ந்தாள் யமுனா. அங்கு தான் இவள் திவ்யாவைச் சந்தித்தாள் எப்போதும் சோகமே உருவான முகத்தைக் கண்டதும் இவளுக்கு மனதில் கஷ்டமானது.

திவ்யாவிடம் இவளே பேச்சுக் கொடுத்தாள். 


அவளிடம் எதாவது கதை அடித்துக்கொண்டு இருப்பாள். அவளைச் சிரிக்க வைத்தாள் இப்படியே இருவரும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். திவ்யாவும் ஒரு பெரிய மல்டிநேஷனல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள்.


நாட்கள் சென்றது. திவ்யாவின் முழுக்கதை யமுனாவிற்கு தெரியும் தனக்காவது பாசத்தைக் காட்ட மாமா இருக்கிறார் ஆனால் இவளுக்கு யாரும் இல்லையே என்று ரொம்ப பரிதாபப்பட்டாள். இப்படி இருக்கும் சமயத்தில் தான் ஒரு நாள் திவ்யா யாரிடமும் பேசாமல் அழுதுக் கொண்டே இருந்தாள். 


அவள் யமுனாவிடமும் பேசவில்லை ஏதோ பெரிய பிரச்சனை என்று யூகித்தாள் யமுனா கொஞ்ச நேரம் கழித்து திவ்யாவைச் சாப்பிடக் கூப்பிடுவதற்காக அவள் அறைக்குச் சென்றாள்.


அங்குப் பார்த்த காட்சியைக் கண்டு அதிர்ந்தாள். திவ்யா கையில் வெட்டுப்பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தாள். கத்தி கூச்சலிட்டு அனைவரின் உதவியுடன் மருத்துவமனைக்கு விரைந்தாள். 


திவ்யா எமெர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தாள் அவளுக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். குறித்த நேரத்தில் வந்ததால் திவ்யாவின் உயிரைக் காப்பாற்றினர். 


திவ்யா கண் விழித்ததும் அவளை பளார் என்று அறைந்தாள் யமுனா.


"ஏன்டி இப்படிப் பண்ண? எந்த பிரச்சனையா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லிருக்கலாம்ல... தீர்வு இல்லாத பிரச்சனை வாழ்க்கையில் எதுவும் இல்ல என்ன நடந்துச்சுனு சொல்லு" என்றாள்.


"என் வாழ்க்கையே போச்சு யமுனா நா இனிமேல் உயிரோடு இருப்பது ப்ரோயஜனம் இல்ல" என்றாள்.


"இப்படி பேசாமல் என்ன நடந்திச்சுனு சொல்லு" என்றாள். 


"நான் ஆறு மாசம்முன்னாடி அவுட்டிங் போனேன்ல அலுவலகம் நண்பர்கள் கூட அப்போ எல்லா போர்ட் மெம்பர்ஸும் வந்திருந்தார்கள் ஏன்னா அது ஒரு பெரிய ப்ராஜெக்ட் வெற்றி.”


 “எங்கள் கம்பெனி எம்டி யோட தம்பியும் போர்ட் மெம்பெர்ஸ்ல ஒருத்தர். அவர் அந்த சக்சஸ் மீட்ல பேசும் போது எல்லார் முன்னாடியும் திடீரென்று என்ன ப்ரபோஸ் பண்ணிவிட்டார். எனக்கு என்ன ரியாக்ட் பண்றதுன்னு தெரியலை நான் அதை அப்படியே விட்டுட்டேன்."


"அப்புறம் என்ன துரத்தி துரத்தி லவ் பண்ண ஆரம்பிச்சாரு. அதுல எனக்கும் அவர் மேல் காதல் வந்திருச்சு நாங்கள் இரண்டு பேரும் உயிராகக் காதலித்தோம் அப்போது தான் போன மாசம் என் பிறந்த நாள் வந்த போது அவர் கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டு போனார். எனக்கு நிறையப் பரிசு கொடுத்தார்.”

“அப்படியே நேரம் போக போக கொஞ்சம் கொஞ்சமா என்னை நெருங்கினார். நான் எவ்வளவு தடுத்தும் என்னால் முடியலை நான் என்ன இழந்துட்டேன்" என்று அழுதாள்.


"அதுக்கு அப்புறமும் நல்லா போச்சு எங்கள் வாழ்க்கை என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதாக சொன்னார் ஆனால்..." என்று அழுதாள்.


"ஆனால்... என்ன சொல்லு" என்றாள் யமுனா.


"அது அவரின் அண்ணன் அதாவது நான் வேலை செய்யும் கம்பெனியின் CEO(MD) பத்து நாள் முன்னாடி வந்து விட்டார்.”


“அவர் தான் குணாவிடம் எதாவது சொல்லிருப்பார் அதிலிருந்து தான் குணாவைக் காணவில்லை. அவருடைய எண்ணும் செயலில் இல்லை."


"ஏன்டி உன் குணாக்கு எல்லை மீறத் தைரியம் இருக்கிறது ஆனால் தன்னுடைய அண்ணா கிட்டப் பேசத் தைரியம் இல்லையா? நம்புகிற மாதிரி இல்லடி ஏன் இப்படி அவசரப்பட்ட?" என்றாள் யமுனா.


"நான் இன்னும் சொல்லி முடிக்கலடி போன வாரம் எனக்கு எச்ஆர்டி ல இருந்து கால் பண்ணாங்க சிஇஓ உங்களை இமிடியட்டா பாக்கணும்னு சொன்னார்கள் நானும் பயத்திலேயே தான் போனேன். அவர் என்ன பார்த்த உடனே எவ்வளவு பணம் வேண்டும் உனக்கு என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை."


"பணக்கார பசங்க பின்னாடி இந்த மாதிரி நிறைய பொண்ணுங்க சுற்றுவார்கள். அதுல நீயும் ஒருத்தி. குணாவை இனிமேல் பார்க்க முயற்சி பண்ணாத உனக்கு ஒரு வாரம் டைம் தருகிறேன் அதுக்குள்ள எவ்வளவு பணம் வேண்டுமென்று முடிவு பண்ணு இப்போது நீ கிளம்பலாம்" என்றான்.


"அவனிடம் மறுவார்த்தை பேசப் பயந்து அந்த அறையில் இருந்து வந்துட்டேன்" என்றாள் திவ்யா.


"இப்போதைக்கு இதைப்பத்தி பேசாமல் தூங்கு" என்று யமுனா தங்கள் விடுதி தோழி மீனாவை திவ்யாவோடு தங்க வைத்துவிட்டுக் கிளம்பினாள். ஏனெனில் அடுத்த நாள் அவளுக்கு கான்பரன்ஸ் இருக்கிறது.


சென்னையில் பிரபலமான அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் கான்பரன்ஸ் நடக்கவிருந்தது. யமுனா வேலை செய்யும் ப்ராஜெக்ட் மிகுந்த போட்டியில் இருக்கிறதால் அதையே கான்பரன்ஸில் ப்ரெசென்டேஷன் கொடுக்கலாம் என்று யமுனா மற்றும் அவளுடைய டீம் மொத்தம் ஆறு பேர் வந்தனர். அங்குப் பல நிறுவனங்களின் சிஇஓ வந்திருந்தனர்.


ரெட் கலர் டிசைனர் சாரி அணிந்து புதுப் பூ போல் ஜொலித்துக் கொண்டிருந்த யமுனாவை அங்கு இருக்கும் முக்கால்வாசி ஆண்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 


அங்கு இருந்த அனைவரும் கான்பரன்ஸ் தொடங்கும் முன் சலசலப்பாகப் பேசிக்கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென அனைவரும் அமைதி ஆனார்கள். ஏனென்று பார்த்த யமுனாவின் கண்முன்னே தாண்டிச் சென்றான் அந்த ஆறடி ஆணழகன்.


"யார் இவர்? ஏன் எல்லாரும் இவரைப் பார்த்து அமைதியாக இருக்காங்க?" என்று தன்னோடு வேலை பார்க்கும் பூர்ணாவிடம் கேட்டாள்.


"ஏய், இவர் தான் இந்தியாவிலேயே டாப் பிஸினஸ்மேன் இவர் பண்ணாத தொழிலே இல்ல. அந்த பெரிய எம்என்சி இவரோடது தான்" என்றாள். அவள் சொன்ன கடைசி வாசகத்தை யமுனா கவனிக்கவில்லை.


யமுனா மற்றும் அவளுடைய குழு ப்ரெசென்டேஷன் முடித்து விட்டு அமர்ந்தனர். அப்போது யமுனாவை இரண்டு கண்கள் அலசிக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை.


அந்த இரண்டு கண்ணின் சொந்தக்காரனான சத்யதேவ் யமுனாவை கைக்காட்டி அவனின் பிஏ விடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். காலையில் ஆரம்பித்த கான்பரன்ஸ் இரவு வரை நீடித்தது. இரவு டின்னருக்காக ஒரு மணிநேரம் இடைவெளி விட்டார்கள். அப்போது யமுனா வாஷ்ரூம் சென்று விட்டு வெளியே வரும் போது திவ்யாவிடம் இருந்து போன் வந்தது. 


"சொல்லு திவி என்ன ஆச்சு? இப்போ உடம்பு பரவாயில்லையா?" என்று கேட்டாள்.அவளிடம் இருந்து பதிலே வரவில்லை.


"என்ன ஆச்சு டி? சொல்லு" என்றாள் யமுனா.


"மருத்துவர் வந்து என்னை செக் பண்ணாங்கடி, நான் ப்ரெக்னன்ட்டா இருக்கிறதா சொன்னார்கள்" என்று அழுதாள். "நான் உயிரோடு இருக்கிறது அர்த்தமே இல்லை யமுனா அதற்குச் சாகிறதே மேல்" என்றாள். 


"என்ன இவ்வளவு ஈஸியா சொல்ற நம்ம நியாயம் கேட்கலாம் ஆனால் நீ ஏன் டி இந்த ஆம்பளைங்கள நம்புற ஒரு பெண்ணுக்கு உயிரை விடக் கற்பு தான் முக்கியம் அதையே தொலைச்சுட்டு வந்திருக்க. சரி நான் உன்கிட்ட வந்து பேசுறேன். இங்க கான்பரன்ஸ்ல இருக்கேன்" என்று கால் கட் பண்ணப் போனவளை,


"யமுனா ஒரு நிமிஷம் இன்னொரு விஷயம் சொல்லணும்" என்று இழுத்தாள்.


"என்னடி சீக்கிரம் சொல்லு என்றாள்.


"அது வந்து என் நிறுவனம் சிஇஓ அங்க அந்த உன்னுடைய கான்பரன்ஸ்ல தான் இருக்கிறாராம் உன்ன  பாக்கணும்னு சொல்றாரு டி."


"என்னது! உன்னுடைய சிஇஓ என்ன பார்க்கணுமா எதற்கு?  நான் என் கம்பெனி சிஇஓ வே பார்த்தது இல்ல டி எதற்கு இவரைப் பார்க்கவேண்டும் என்னால் முடியாது" என்றாள்.


 "அவரே என்கிட்ட கால் பண்ணி கேட்டிருக்கிறார் தயவுசெய்து டி எனக்காக" என்று கெஞ்சினாள். 


'ஒரு வேள நம்மளோட ப்ரெசென்டேஷன் பத்தி எதாவது இருக்குமோ?' என்று யோசித்தவள், "சரி அவர் எங்க இருக்கார்னு சொல்லு" என்றாள்.


"அவர் உன்னை இந்த ஹோட்டல் ரிசப்ஷனில் வெயிட் பண்ண சொல்லிருக்காரு தயவுசெய்து எனக்காக பண்ணிரு" என்றாள். 


"சரி" என்று ஹோட்டல் ரிசப்ஷனில் வெயிட் பண்ணிக் கொண்டிருந்த யமுனாவிற்கு மனது ஏதோ படபடவென்று அடித்தது. 'ஏதோ தைரியத்தில் வந்துட்டோம் ஆனால் பயமா இருக்கிறதே!' என்று எண்ணினாள்.


அப்போது, "ஹாய் யமுனா!" என்ற கம்பீரமான ஆண் குரல் அவள் முன்னே அமருவதைக் கண்டவள் அதிர்ந்தாள். ‘இந்த ஆறடி ஆணழகன் தான் திவ்யா ஆபிஸ் சிஇஓ வா?’ என்று யமுனா மனதில் யோசித்து கொண்டு இருக்கும் போதே,


"ஹலோ யமுனா!  ஐ அம் சத்யதேவ்... "சத்யா குரூப் ஆப் கம்பெனீஸ்" எம்டி அன்ட் சிஇஓ" என்றான்.


"ஹலோ சார்" என்றாள் மரியாதைக்காக. 


"நீ திவ்யாவுக்கு  யாரு? உன்னைப் போன வாரம் என் அலுவலகம் கீழப் பார்த்தேன் திவ்யாவை பிக் அப் பண்ண வந்த"


"நான் திவ்யாவுடைய பிரண்ட் சார், நானும் அவளும் ஒரே விடுதியில் தான் இருக்கிறோம் அவள் ரொம்ப நல்ல பொண்ணு அவளையும் அவளுடைய குணாவையும் சேர்த்து வைத்திருங்கள் ப்ளீஸ்" என்றாள்.


"திவாகர் யார் உனக்கு?" என்று கேட்டவனின் குரலில் ஒரு கர்வம் இருந்தது. 


இந்த கேள்வியில் அதிர்ந்த யமுனா, "திவாகர் என்னுடைய மாமா மகன் உங்களுக்கு எப்படித் தெரியும் சார் திவா அத்தான் பத்தி" என்று கேட்டாள்.


"டேம் இட்!" என்று உறுமினான்.


"அப்போ நீ தான் அந்த திவாகரின் காதலி கரெக்ட்" என்று கர்ஜித்தான்.


"என்னது காதலா! எனக்கு  திவா அத்தான் பிடிக்கும் அவ்வளவு தான் காதல்லாம் இல்லை அப்படியே நாங்கள் காதலித்தாலும் உங்களுக்கு என்ன? நீங்க திவ்யா பத்தி யோசித்து பாருங்கள் சார்" என்றாள்.


"லுக் மிஸ் யமுனா நீ திவாகருக்கு காதலியாகவே இருந்தாலும் பரவாயில்லை திவாகர் பிரியாவை தான் கல்யாணம் பண்ணவேண்டும். அப்படி அவன் பண்ணலை நீயும் சரி அந்த திவாகரும் சரி உயிரோட இருக்க மாட்டீங்க" என்று கத்திவிட்டு கிளம்பினான். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 8

மாயம் 2