மாயம் 2


யமுனாவிற்கு மண்டையே குழம்பியது. அந்த நிமிடம் உட்கார்ந்து யோசித்தவள் திவாகருக்கு கால் பண்ணினாள்.


"யமுனா நானே சென்னைக்குத் தான் வந்துக் கொண்டு இருக்கேன். உன் விடுதி முகவரி எஸ்.எம்.எஸ் அனுப்பு" என்று காலை கட் செய்து விட்டான். அவளும் அனுப்பினாள்.


'நாம் திவ்யாவைப் பற்றிப் பேச நினைத்தோம் இவர் என்ன புது கதை சொல்கிறார்?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள் யமுனா. 


யமுனாவிற்கு யோசித்து யோசித்து தலையே வலித்தது. அடுத்த நாள் திவாகர் யமுனாவின் விடுதியில் வாசல் முன் நின்று யமுனாவை அழைத்தான்.


"பக்கத்தில் இருக்கிற பீச்சுக்கு போகலாம்" என்றான். 


"சரி அத்தான் அங்க டெல்லியில் மாமா அத்தை லாம் எப்படி இருக்காங்க? மாமாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையென்று சொன்னாங்க. இப்போது எப்படி இருக்காங்க?" என்று கேட்டாள்.


"அப்பாக்கு இப்போது பரவாயில்லை யமுனா. எல்லாரும் நல்லா இருக்காங்க ஆனால் நான் தான் நல்லா இல்ல" என்றான். 


"யார் அத்தான் பிரியா? யார் இந்த சத்யதேவ்? அவன் எதற்கு என்ன மிரட்டுறான்? நான் எதற்கோ அந்த ஆள் பேசக் கூப்பிட்டு இருப்பான்னு நினைத்தால் அவன் ஏதோ கதை சொல்லி என்ன மிரட்டுறான் ஆனால் எனக்கு ஒன்று மட்டும் தெரிகிறது. உனக்கு அவனைப் பற்றித் தெரியும் நீ எனக்கு ஒரு உதவி பண்ணவேண்டும் அத்தான்" என்று முடித்தாள். 


"பிரியா என்கூட டெல்லி கல்லூரியில் படித்தாள் எனக்கு ப்ரென்ட் இல்லை ஆனால் அவள் என்கிட்ட அடிக்கடி வந்து பேசுவாள். கல்லூரி முடிக்கும் போது என்கிட்ட அவளுடைய காதலைச் சொன்னாள் நான் அவளைப் பிடிக்கலை என்று சொல்லிட்டு போய்ட்டேன். அப்புறம் எனக்கு வேலை கிடைத்து மும்பை வந்தேன் அந்த சமயம் இந்த பிரியா அவள் குடும்பத்தோடு எங்கள் வீட்டுக்குப் போய் மாப்பிள்ளை கேட்டுருக்காங்க. உனக்குத் தான் என் அம்மா பத்தி தெரியுமே கோடீசுவர குடும்பமென்று தெரிந்ததும் சரியென்று சொல்லிவிட்டு நிச்சயதார்த்தம் டேட் முடிவு பண்ணிருக்கிறார்கள். எனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது வா ன்னு சொன்னாங்க."


"நானும் வேற எதாவது இருக்குமோனு நினைத்துப் போனேன் அப்போது தான் விஷயம் தெரிந்த உடனே பிரியாவுடைய  வீட்டுக்குப் போனேன். பிரியா ரொம்ப பெரிய கோடீசுவரக் குடும்பம் யமுனா... அவளுடைய அப்பா இரும்பு தொழில் செய்றாரு அவளுக்கு இரண்டு அண்ணன்கள் பெரிய அண்ணா பேர் தான் சத்யதேவ் இந்தியாவிலேயே நம்பர் 1 பிஸினஸ்மேன் இவன் சொந்தமா ஐடி கம்பெனி வைத்திருக்கிறான். அதுவும் டாப்ல இருக்கிறது அதுபோக லெதர் பிஸினஸ் அப்புறம் குடும்ப தொழில் இப்படி நிறைய பண்றான். இவன் அமேரிக்கால தான் இருந்தான் இப்போது தன்னுடைய தங்கச்சி பிரியாவோட நிச்சயதார்த்திற்காக வந்தான். இவன் தம்பி குணதேவ் தன்னுடைய அண்ணன் நிழல் உள்ளே இருக்கிறவன் அவன் நில்லுனா நிப்பான் உக்காருனா உக்காருவான்." 


"நான் நிச்சயதார்த்தம் வேணானு சொல்லும் போது சத்யதேவ் இருந்தான் என்ன ஏதுனு கூட கேட்காமல் என்ன அடிச்சிட்டான். என் தங்கச்சியை எப்படி வேணானு சொல்லுவனு வெளுத்தான். அப்போது அவன் அடித்த வேகத்தில் என்னுடைய வாலெட் கீழே விழுந்து அதுல இருந்த உன்னுடைய போட்டோ வெளியே விழுந்திருச்சு. அதைப் பார்த்து யார் இவனு கேட்டான் இவள் என் காதலியென்று சொன்னேன்" என்று முடித்தான்.


அவ்வளவு நேரம் கதையைக் கேட்பது போல் கேட்டுக்கொண்டிருந்த யமுனாவிற்கு தன் பெயர் அதுவும் காதலி என்ற பெயரில் கேட்டது தலையே சுற்றியது. 


"அத்தான் என்ன சொல்ற நீ! நான் உன் காதலியா நான் எப்போது உன்ன லவ் பண்றேன்னு சொன்னேன்?" என்று கத்தினாள்.


"ஏன் யமுனா நான் டெல்லி கிளம்புறதுக்கு முன்னாடியே உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணேன். ஆனால் நீ என் காதல ஏத்துக்கல அதுக்கு அப்புறம் என்கிட்ட நல்லா தான பேசுற அதனால் உன் மனசுலயும் நான் இருக்கேன்னு நினைத்தேன். நம்ம முறை பசங்க தான அப்போ என்ன கல்யாணம் பண்றதுல உனக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டான்.


"உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்" என்று கிளம்பினாள். 


"யமுனா நீ தான் என் மனைவி அதுல மாற்றம் இல்லை" என்று அவள் செல்லும் போது கத்திக்கொண்டிருந்த திவாகரை தூரத்திலிருந்து தன்னுடைய காரில் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யதேவ். யமுனாவைச் சென்னையில் பார்த்ததிலிருந்தே அவளைக் கண்காணித்துக் கொண்டிருந்தான் சத்யா. அந்த கான்பரன்ஸிற்கே யமுனா வருவது தெரிந்து தான் வந்தான். அவளிடம் திவாகரைப் பற்றிப் பேச வேண்டும் என்று திவ்யாவை வைத்து அத்தகைய சூழலை உருவாக்கினான். 


இப்போது திவாகர் இப்படி சொன்னவுடன் இவனுக்குக் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.


"அங்கு என் தங்கையோடு நிச்சயத்தை நிறுத்தி விட்டு இங்கு இவளுடன் காதலா??"  என்று கர்ஜித்து காரை வேகமாக எடுத்து யமுனாவினைத் தொடர்ந்தான். 


யமுனா திவ்யாவைக் காண மருத்துவமனைக்குச் சென்றாள். அங்கு திவ்யாவின் அறையில் பக்கத்தில் ஒரு ஆண் இருப்பதைக் கண்டாள்.


"யமூ வந்துட்டியா? இதான் என் குணா" என்று குணதேவ்வை அறிமுகப்படுத்தினாள்.


"ஓ நீங்க தான் அந்த குணாவா? ஏன் சார் காதலித்து கர்ப்பம் ஆக்கிட்டு எப்படி உங்களால் இப்படிலாம் இருக்க முடியுது? உங்கள் அண்ணன் என்னனா இவள் கிட்ட செட்டில் பண்ண ரேட் பேசிருக்காரு.எல்லாம்  இவள் தப்பு ஆம்பளைங்கல நம்புறது எவ்வளவு பெரிய தப்புனு இவளுக்கு தெரியவில்லை" என்று திட்டினாள் யமுனா. 


"சிஸ்டர் ப்ளீஸ் நான் சொல்றதை முதலில் கேட்டுட்டு பேசுங்கள். என் அண்ணா அப்படி பேசினதுக்கு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். என்னால் திவ்யா இல்லாமல் இருக்க முடியாது. என் அண்ணா எங்கள் காதல் விஷயம் தெரிந்த உடனே என்ன லாக் பண்ணிட்டாரு என்ன சிங்கப்பூர் அனுப்பினார்.”


“வேலை விஷயத்திற்காக  திவ்யாகிட்ட பேசகூடாதுனு சொல்லிவிட்டார். நான் அண்ணாவை மதிச்சு பேசாமல் இருந்தேன். நேற்று தான் இந்தியா வந்தேன் அப்புறம் இவள் கிட்ட பேசலாமென்று நினைத்து கால் பண்ணேன்.”


“அவர் இப்படி பேசுவாருனு எனக்கு தெரியும் ஆனா இவள் இப்படி முடிவு பண்ணுவானு நான் எதிர்பார்க்கலை. என் மேல இவளுக்கு இவ்வளவு தான் நம்பிக்கை" என்று சொல்லி முடிக்கும் போதே அவன் கண்களில் கண்ணீர் வந்தது.” 


"சரி விடுங்கள் குணா அதான் இப்போது எல்லாம் சரியாயிடிச்சுல நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றாள் திவ்யா.


"இல்ல திவி வீட்டில் இப்போது தங்கச்சிக்கு நிச்சயம் வைத்திருக்கிறோம் மாப்பிள்ளை வேற ஏதோ பிரச்சனை பண்றாரு. அதனால் இப்போதைக்கு நம்ம கல்யாணம் பத்தி பேச முடியாது அண்ணனை சம்மதிக்க வைக்குறது ரொம்ப கஷ்டம். அவர பொறுத்த வரைக்கும் பொண்ணுங்க மேல ஒரு நல்ல அபிப்ராயம் இல்ல" என்று கூறினான்.


"குணா சார் உங்கள் அண்ணனுக்கு அம்மா தங்கச்சி மனைவிலாம் இருக்கும். அவங்களும் பொண்ணு தான இவர் என்ன ஆகாயத்தில் இருந்தா குதிச்சாரு?" என்று கேட்டாள்.


"ஏய் யமு விடுடி, குணாவே பாவம் அவர் வீட்ல இருக்கிற சூழ்நிலை அப்படி ஆனா குணா நம்ம குழந்தை?" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு அறை வாயிலில் சத்யதேவ் நின்றுக்கொண்டிருந்தான்.


"பேசாமல் நீங்க ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோங்க" என்றாள் யமுனா. இதைக்கேட்டு கோபமடைந்து உள்ளே வந்தான் சத்யதேவ்.


பளார் என்று கன்னத்தில் அறை வாங்கிய யமுனா கீழே விழப் பார்த்தாள். அவளை திவ்யா தாங்கி பிடித்தாள்.


"எவ்வளவு திமிர் டி உனக்கு? இவங்கள ஓடிப்போக சொல்றதுக்கு நீ யார்? நீயெல்லாம் குடும்பத்துப் பெண்ணா என் கண்ணு முன்னாடி நிற்காத வெளியே போ." என்று கத்தினான் சத்யதேவ். 


அவமானத்தில் உடனே வெளியேச் சென்ற யமுனா அவளுடைய விடுதிக்குச் சென்று விட்டாள்.


"இவன் யார் என்னை அடிக்க? என் மாமா கூட என்ன இது வரைக்கும் அடித்தது இல்லை இவனுக்கு லாம் மிளகாய்த் தூள் முழுசா சாப்பாட்டில் கொட்டி சாப்பாடு போடவேண்டும் அவனும் அவன் மூஞ்சும் சிடுமூஞ்சி" என்று தன் அறையில் தானாகவே அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள். 


"அண்ணா, என்ன மன்னிச்சிருங்க" என்று சத்யதேவ்வைப் பார்த்துப் பயந்தான் குணா.


"இதெல்லாம் நீ தப்பு பண்றதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும். நானும் நீ விளையாட்டா நடந்துருக்கனு நினைத்தேன். ஆனால் நீ ரொம்ப சீரியஸா இருக்க இந்த பொண்ணும் பார்க்க நல்ல குணமுள்ள பெண் மாதிரி தான் இருக்கா.”


“உங்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கணுமானு யோசித்து பார்க்குறேன்.அப்படி உங்களுக்குக் கல்யாணம் நடக்கணும்னா உன் தோழி அதான் அந்த திமிரு பிடித்தவள் யமுனா என்னை இன்றைக்கு அதே ஹோட்டலில் வந்து மீட் பண்ணவேண்டும்" என்றான். இதைக் கேட்ட உடனே திவ்யா மற்றும் குணா அதிர்ச்சி அடைந்தனர்.


"யமுனா கிட்ட நான் பேசி வரவைக்கிறேன் நீங்க எங்க கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள் ப்ளீஸ் குணாவோட குழந்தையை என் வயித்துல சுமந்துக் கொண்டு இருக்கேன்" என்று அழுதாள்.


"எல்லாமே உன் தோழி கையில் தான் இருக்கிறது" என்று சென்றுவிட்டான். 


குணா திவ்யாவை அவளுடைய விடுதியில் விட்டுவிட்டு, "நம்ம கல்யாணம் நடக்குறது இப்போது யமுனா சிஸ்டர் கையில் தான் இருக்கிறது ஏன்னா சத்யா அண்ணாவை எதிர்த்து என்னால் எதுவும் பண்ண முடியாது. அவரே இப்படி சொல்றாருனா நமக்கு யமுனா சிஸ்டரின் உதவி கண்டிப்பா வேண்டும்" என்று சென்றுவிட்டான்.


திவ்யாவிற்கு யமுனாவிடம் எப்படி இதைச் சொல்லப் போகிறோம் என்று பதற்றமாக இருந்தது. நேரே யமுனாவின் அறைக்குச் சென்று,


"யமுனா சாரி டி,  நீயும் அப்படி யோசனை கொடுத்தது தப்பு தான குணாவோட அண்ணன் என்னை நல்ல பொண்ணு மாதிரி இருக்கனு சொன்னாரு"  என்று சொல்லி முடிப்பதற்குள் அமைதியாக உட்கார்ந்து இருந்த யமுனா எழுந்தாள்.


"எப்படி எப்படி? தப்பு பண்ண நீங்கள் நல்லவர்கள் அதனால் ஓடிப்போய் கல்யாணம் பண்ணச் சொன்ன நான் கெட்டவளா? அந்த சிடுமூஞ்சி என்ன போட்டு அடிக்கிறான் அவன் தலையில் ஈயத்தை கரைத்து ஊத்தணும்" என்று கொதித்தாள்.


"ஏய் யமுனா, என் கல்யாணம் நடக்கிறது உன் கையில் தான் இருக்கிறது டி. சத்யதேவ் அத்தான் இன்றைக்கு அதே ஹோட்டலில் வந்து பார்க்கச் சொன்னார். தயவுசெய்து டி உன்ன கெஞ்சிக் கேட்கிறேன் எனக்காக போய்ட்டு வா" என்று அழுதாள்.


"என்னது அத்தானா! இப்போதே அந்த ஆள் மேல் உனக்குப் பாசமா?" என்று கேட்டாள். 


"நான் எதுக்கு அவரைப் பார்க்கவேண்டும்? ஏன் எனக்கு கொடுத்த அடி பத்தலையாமா அவருக்கு? எனக்கு அந்த ஆளைப் பார்க்க முடியாது பார்க்கணும்னு அவசியமும் இல்ல" என்று கத்தினாள்.


"யமுனா ப்ளீஸ் டி எனக்காக போய்ட்டு வா என்ன மாதிரியே என் குழந்தையும் பிறக்கும் போதே கஷ்டத்தோடு இருக்கக் கூடாது உனக்கும் தெரியும் குடும்பமா இல்லனா எவ்வளவு கஷ்டமென்று" என்று அழுதாள். 


"அழாத திவ்யா மறுபடியும் முன்னாடி மாதிரி சோகம் திவ்யா ஆகிடாத. நான் போய்ட்டு வரேன் போதுமா?" என்று சமாதானப்படுத்தினாள் யமுனா. அன்று மாலை தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அந்த ஹோட்டலுக்குச் சென்றாள். 


அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்த யமுனாவிற்கு தன் நிலையை நினைத்து அழுகை வந்தது. பொதுவாக யமுனா சீக்கிரம் அழும் பெண் இல்லை எதையும் தைரியமாகச் சமாளிப்பாள்.


ஆனால் எவனோ ஒருவன் தன்னை அடிக்குறான் மிரட்டுறான் தன்னை பொம்மை போல் செயல்படுத்துவதால் தன் நிலையை நினைத்து அழுது வெம்பினாள்.


"என்ன யோசிக்குற யமுனா வா உள்ளே போகலாம்" என்று அவளை அழைத்து சத்யதேவ் ஒரு அறைக்குச் சென்றான்.


'என்ன இவன் பாட்டுக்கு நம்மளை ஏதோ ரூம்குள்ள வர சொல்றான்?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.


"ஏய், உன்னை என்ன உள்ளே வானு தனியா கூப்பிடணுமா?" என்றான்.


'எவ்வளவு திமிர் இவனுக்கு?' என்று நினைத்தவள் அமைதியாக அறையின் உள்ளேச் சென்று அங்கு இருந்த சோபாவில் உட்கார்ந்தாள். அவன் பாத்ரூம் சென்று குளித்துவிட்டு வந்தான். சத்யதேவ்விற்கு எப்போதுமே மாலையில் ஒரு முறை குளிக்கும் பழக்கம் உள்ளது. குளித்து முடித்து விட்டு துண்டோடு வெளியே வந்தான். இதைப் பார்த்த யமுனாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.


'இவனுக்குக் கொஞ்சமாவது வெக்கம் மானம் இருக்கா? ஒரு பொண்ணு முன்னாடி எப்படி வந்து நிற்கிறான்... ஆனாலும் தினமும் உடற்பயிற்சி பண்ணுவான் போல! நல்லா கச்சிதமா உடம்பை வைத்திருக்கிறான்' என்று நினைத்தவள் அவனுடைய பரந்து விரிந்த மார்பைப் பார்த்தாள்.


"என்ன யமுனா, எனக்கு எவ்வளவு மதிப்பெண் போடுவ?" என்று தன் இருகைகளையும் கட்டி அவளை நேராக நோக்கிக் கேட்டான்.


அவன் அப்படிக் கேட்டதில் அதிர்ந்தவள்,  'ச்சே... பட்டிக்காட்டான்  மிட்டாய்க் கடையைப் பார்த்த மாதிரி பார்த்திருக்கிறேனே' என்று தன்னையே மனதில் திட்டி, "பாம்பு கூடத் தான் பார்க்க அழகாக இருக்கிறது ஆனால் வெஷம்" என்று சமாளித்தாள்.


"ஓ ஓ உன் திவா அத்தான் இல்லன்னு ஃபீல் பண்ற போல" என்று நக்கலாகக் கேட்டான்.


'இவன் ஆரம்பிச்சிட்டான்' என்று நினைத்தவள், "நீங்க நினைக்கிற மாதிரி திவா அத்தானை நான் காதலிக்கவில்லை அவர் தான் ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்காரு" என்றாள்.


ஹோட்டல் எக்ஸ்டென்ஷன் நம்பருக்குக் கால் செய்து இரண்டு காபி வேண்டும் என்று சொல்லி கட் பண்ணி விட்டு அவளின் எதிரில் இருக்கும் இன்னொரு சோபாவில் உட்கார்ந்தான். 


"நீ சொல்ற மாதிரியென்றே எடுத்துக்கொள்ளலாம் ஆனால் திவாகர் என் தங்கையைக் கல்யாணம் பண்ணவேண்டுமானால் உன்னை அவன் மறக்கவேண்டும் இல்லை வெறுக்கவேண்டும் இதில் முதல் விஷயம் நடக்காது இரண்டாவது விஷயம் நடக்கணும்னா நீ என்னை கல்யாணம் பண்ணவேண்டும்" என்றான்.


தன் காதில் எதாவது தப்பா விழுந்திருக்கா என்று சந்தேகம் இருந்ததால், "என்ன சொன்னீங்க?" என்று கேட்டாள்.


"நீ யமுனா சத்யதேவ் ஆகணும்னு சொன்னேன் என்னுடைய மனைவி ஆகணும்" என்றான் தெளிவாக. 


"உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிப் பேசுவ" என்று யமுனா கத்தினாள்.


அதைக் கேட்ட சத்யா அவளைப் பார்த்து முறைத்தான். இதைக் கண்ட யமுனா, "உனக்கு இல்லை உங்களுக்கு போதுமா?" என்று அமைதியாகக் கத்தினாள்.


"அப்போது உன் அத்தை பிரியா திவாகர் கல்யாணம் முடிவான சமயத்தில் அவங்க வீட்டை அடமானம்  வைத்து உன் அத்தானைப் படிக்க வைத்ததும் அதை மீட்க அந்த அம்மா என்கிட்ட தான்  50 லட்சம் வாங்குனாங்க.”


“உன் மாமாவுக்கு வேறு போன மாசம் ஹாட்  அட்டாக் வந்திருக்கு அதுக்கு ட்ரீட்மெண்ட் என்னுடைய ஹாஸ்பிடல தான் ஃபிரீயா ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு அதோட செலவே இதுவரைக்கும் 30 லட்சம் ஆயிருக்கு இப்போவரை இதெல்லாம் திவாகர்க்கு தெரிந்தும் அவன் சம்பளத்தில் குடும்பத்துக்கு உதவ முடியல."


"என்கிட்ட பேசவே அவனுக்கு பயம் அன்னிக்கு என் அலுவலகம் வந்து என்கிட்ட காலுல விழுந்து கெஞ்சுறான் உங்கள் பணத்தை நான் திருப்பி கொடுத்திடுறேன் என் அப்பாவை காப்பாத்துங்கனு ஏன்னா இந்தியாவிலேயே டாப் ஹாஸ்பிடல் என்னுடைய  "தேவ் ஹாஸ்பிடல்ஸ்" உன்னுடைய மாமாவுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணிருக்கு அவருக்கு திவாகர் கல்யாணத்துல உடன்பாடு இல்ல... ஆனால் பிரியா அவர ஹாஸ்பிடல்ல போய் நல்லா பாத்துக்கிட்டதுனால அவள் கிட்ட பாசமா தான் இருக்காரு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது யமுனாவைப் பார்த்தவன் அமைதி ஆனான்.


ஏனெனில் தன் மாமாவிற்கு ஹாட் அட்டாக் மற்றும் ஆப்ரேஷன் நடந்திருக்கிறது என்பதைக் கேட்ட உடன் கண்களில் மடமடவென கண்ணீர் மூண்டது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8