மாயம் 1 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.அத்தகைய ஊரில் அமைந்துள்ள சோழிங்கநல்லூரில் மென்பொருள் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கிறது. சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில், தன் அறையில் அழுதுக்கொண்டு இருந்தாள் திவ்யா. திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டுள்ள திவ்யாவிற்கு அப்பா அம்மா சிறிய வயதிலேயே பிரிந்தனர். இருவரும் மனம் வேறுபாட்டால் வெவ்வேறு பாதையில் சென்றனர். அவர்கள் திவ்யாவை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டனர். பதினைந்து வயதான திவ்யா அழுது கெஞ்சியும் அவர்கள் மனது கல்லாகவே இருந்தது. மாதா மாதம் அவளுக்குப் பணம் அனுப்பினார்கள். ஆனால் திவ்யாவிற்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது இப்படியே ஏழு வருடங்கள் சென்றது. அப்போது தான் அவள் வாழ்க்கையில் வந்தாள் யமுனா என்னும் தேவதை. யமுனாவின் அப்பா அம்மா அவள் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். அப்போது இருந்து அவளுடைய மாமா சேகர் தான் அவளை வளர்த்தார். தன்னுடைய மகன் மேற்படிப்பிற்காக டெல்லி செல்லவிருந்தனர். அப்போது சமயம் பார்த்து சேகர் மனைவி விஜயலட்சுமி யமுனாவை அழைத்துச் செல்ல வேண்டாம்
மாயம் 8 'இருபத்தி இரண்டு வயசான நான் எப்படி ஒரு இரண்டு வயசு குழந்தை அம்மாவா ஆக முடியும்..?' "யமுனா என்ன பண்ணிட்டு வந்திருக்க நீ... ஆதிரா சின்ன குழந்தை உன்னை அம்மாவா நினைக்கிறாள் அவள் கிட்ட ஆன்ட்டினு சொல்லிட்டு வந்திருக்க... இங்க பார் நீ ஆதிராக்கு அம்மாவா மட்டும் தான் இங்க இருக்கணும்" என்றான் தேவ் அதிகாரமாக. "என்னை விட நீங்க ஏழு வயசு பெரியவர் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது...நான் என்னுடைய வாழ்க்கையே இப்போது தான் ஆரம்பிக்கிற வயசு ஆனால் அதுக்குள்ள வாழ்க்கை முடிந்தே போச்சு...அது மட்டுமில்லாமல் உங்களைக் கல்யாணம் பண்ணினால் திவா அத்தான் வேலை இருக்குமென்று சொன்னீங்க... ஆனால் வேலையில இருந்து தூக்கிட்டீங்க பத்திரமும் கொடுக்கல ஒரு வாரத்தில் அவங்களுக்கு சிறையென்று சொல்லிருக்கீங்க கொடுத்த வாக்கு நீங்க காப்பாற்றலை இதான் உங்கள் கொள்கையா?" என்று கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள். மறுபடியும் இம்முறை மர்மமாகக் சத்தமாகச் சிரித்தான் தேவ். இம்முறை அவன் சிரிப்பில் யமுனாவிற்கு எரிச்சல் வந்தது. அதை பொருட்படுத்தாத தேவ் யமுனாவிடம், "என்னுடை
மாயம் 2 யமுனாவிற்கு மண்டையே குழம்பியது. அந்த நிமிடம் உட்கார்ந்து யோசித்தவள் திவாகருக்கு கால் பண்ணினாள். "யமுனா நானே சென்னைக்குத் தான் வந்துக் கொண்டு இருக்கேன். உன் விடுதி முகவரி எஸ்.எம்.எஸ் அனுப்பு" என்று காலை கட் செய்து விட்டான். அவளும் அனுப்பினாள். 'நாம் திவ்யாவைப் பற்றிப் பேச நினைத்தோம் இவர் என்ன புது கதை சொல்கிறார்?' என்று யோசித்துக் கொண்டிருந்தாள் யமுனா. யமுனாவிற்கு யோசித்து யோசித்து தலையே வலித்தது. அடுத்த நாள் திவாகர் யமுனாவின் விடுதியில் வாசல் முன் நின்று யமுனாவை அழைத்தான். "பக்கத்தில் இருக்கிற பீச்சுக்கு போகலாம்" என்றான். "சரி அத்தான் அங்க டெல்லியில் மாமா அத்தை லாம் எப்படி இருக்காங்க? மாமாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையென்று சொன்னாங்க. இப்போது எப்படி இருக்காங்க?" என்று கேட்டாள். "அப்பாக்கு இப்போது பரவாயில்லை யமுனா. எல்லாரும் நல்லா இருக்காங்க ஆனால் நான் தான் நல்லா இல்ல" என்றான். "யார் அத்தான் பிரியா? யார் இந்த சத்யதேவ்? அவன் எதற்கு என்ன மிரட்டுறான்? நான் எதற்கோ அந்த ஆள் பேசக் கூப்பிட்டு இருப்பான்னு நினைத்தால் அவன் ஏதோ கதை சொ
கருத்துகள்
கருத்துரையிடுக