மாயம் 8
'இருபத்தி இரண்டு வயசான நான் எப்படி ஒரு இரண்டு வயசு குழந்தை அம்மாவா ஆக முடியும்..?'
"யமுனா என்ன பண்ணிட்டு வந்திருக்க நீ... ஆதிரா சின்ன குழந்தை உன்னை அம்மாவா நினைக்கிறாள் அவள் கிட்ட ஆன்ட்டினு சொல்லிட்டு வந்திருக்க... இங்க பார் நீ ஆதிராக்கு அம்மாவா மட்டும் தான் இங்க இருக்கணும்" என்றான் தேவ் அதிகாரமாக.
"என்னை விட நீங்க ஏழு வயசு பெரியவர் உங்களுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது...நான் என்னுடைய வாழ்க்கையே இப்போது தான் ஆரம்பிக்கிற வயசு ஆனால் அதுக்குள்ள வாழ்க்கை முடிந்தே போச்சு...அது மட்டுமில்லாமல் உங்களைக் கல்யாணம் பண்ணினால் திவா அத்தான் வேலை இருக்குமென்று சொன்னீங்க... ஆனால் வேலையில இருந்து தூக்கிட்டீங்க பத்திரமும் கொடுக்கல ஒரு வாரத்தில் அவங்களுக்கு சிறையென்று சொல்லிருக்கீங்க கொடுத்த வாக்கு நீங்க காப்பாற்றலை இதான் உங்கள் கொள்கையா?" என்று கஷ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.
மறுபடியும் இம்முறை மர்மமாகக் சத்தமாகச் சிரித்தான் தேவ். இம்முறை அவன் சிரிப்பில் யமுனாவிற்கு எரிச்சல் வந்தது. அதை பொருட்படுத்தாத தேவ் யமுனாவிடம், "என்னுடைய கொள்கை வெரி சிம்பிள் நான் நினைத்தது நடக்கவேண்டும் அவ்வளவு தான் அதுக்காக நான் பொய் கூட சொல்லுவேன் இவ்வளவு எதற்கு உனக்கு எக்ஸ்பிளைன் பண்றேன்னா உன் மாமா வீட்டில் எல்லாருக்கும் டெட் லைன் கொடுத்திருக்கிறேன் ஆக்சுவலி இது எல்லாமே உனக்கான டெட் லைன் நீ திவாகரைச் சீக்கிரம் ஒத்துக்க வெச்சு அடுத்த வாரத்தில் பிரியாவுடன் கல்யாணம் நடக்கவேண்டும்" என்றான்.
"உங்களுக்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது என்கிட்ட நீங்க முன்னாடி சொல்லாமல் ஏமாற்றி கல்யாணம் பண்ணிருகீங்க... என் வாழ்க்கையே போச்சு நான் என்னுடைய ஹஸ்பண்ட் என்னை விட இரண்டு வயசு இல்லனா மூன்று வயசு பெரியவனா இருக்கணும்னு நினைச்சேன்... நீங்க என்னை விட ஏழு வருஷம் பெரியவங்க அன்ட் நீங்க ஆல்ரெடி ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி அவர்கள் கூட குடும்பம் நடத்தி ஒரு குழந்தை இருக்கு என்னால் எப்படி உங்களை ஹஸ்பண்டா ஏத்துக்க முடியும்" என்று பேசிவிட்டு அவனைப் பார்க்கப் பயந்தாள்.
"ஹா ஹா உன் வாழ்க்கையைப் பத்தி ரொம்ப கற்பனை பண்ணி வைத்திருப்ப போல... பட் வாட் எவர் உன்னை நான் கல்யாணம் பண்ணதுக்கு இரண்டு காரணம் இருக்கு ஒன்று உன் மாமா குடும்பத்தை என்கிட்ட இருந்து காப்பாத்த அன்ட் திவாகர் பிரியாவ கல்யாணம் பண்ணனும்... இதுக்கு மட்டும் தான கல்யாணம் பண்ணிருக்கேன்னு நினைச்ச... உனக்கு தெரியாத இன்னொரு ரீசன் என்னோட பொண்ணு ஆதிராவ பாத்துக்குறதுக்கும் தான்... நீ இங்க தான் இருக்கணும் ஆதிரா உன்னை இனிமேல் அம்மான்னு தான் கூப்பிடுவாள் சோ அடக்கமா அமைதியா இருக்கப் பழகிக்கோ" என்று சென்றுவிட்டான் தேவ்.
"இவன் கிட்ட நம்ம இப்போதைக்குத் தப்பிக்க முடியாது நம்ம விதி அப்படி இருக்கு" என்று உள்ளேச் சென்றாள்.
"யமுனா அண்ணி ஒரு நிமிஷம்" என்று அழைத்தாள்.
பிரியாவிடம் திரும்பினாள்.
"அது வந்து சாரி என்னால் தான் உங்கள் வாழ்க்கை இப்படி ஆச்சு ஆனால் ஒன்னு அண்ணி எங்க அண்ணா ரொம்ப நல்லவர்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
"பிரியா ப்ளீஸ் அவரைத் தவிர வேற எதைப் பத்தியாவது பேசுங்கள்" என்றாள் மிடுக்காக.
"சாரி அண்ணி, ஆதிராவை நான் தான் வளர்த்தேன் ரொம்ப பாசமான சமத்துப் பொண்ணு... நான் கல்யாணம் பண்ணிட்டு போன அப்புறம் அவள் ரொம்ப ஏங்குவாள் நீங்க தான் அவளை பார்த்துக்கணும்" என்றாள்.
"சரி பிரியா, நீங்க என்ன யமுனான்னே கூப்பிடுங்கள் நான் உங்களை விடச் சின்ன பொண்ணு தான்" என்றாள்.
"அய்யோ அண்ணி வேண்டாம் நான் உங்கள் அண்ணினே கூப்பிடுறேன்" என்றாள்.
"அப்புறம் உங்கள் இஷ்டம். நீங்க திவாகர் அத்தானை உயிருக்கு உயிரா காதலிக்கிறீங்களா?" என்று சந்தேகமாக க் கேட்டாள்.
"ஆமாம் அண்ணி ஏன் இப்படி கேட்குறீங்க?" என்று புரியாமல் கேட்டாள்.
"உங்க அண்ணா அங்க திவாகரையும் அவங்க வீட்டுல இருக்கிற எல்லாரையும் மிரட்டிட்டு வந்திருக்காரு. நீங்க உண்மையா காதலிக்குறீங்கனா நீங்க திவா அத்தான் கிட்ட பேசி இந்த கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குங்க" என்றாள்.
"அது அண்ணி அண்ணாக்கு தெரியாமல் இந்த மாதிரி வீட்டுக்குலாம் போனதில்லை" என்று இழுத்தாள் பிரியா.
இம்முறை கோபம் அடைந்த யமுனா, "உங்கள் அண்ணா கிட்ட கேட்டா லவ் பண்ணீங்க? இந்த ஒரு வாரத்தில் நீங்கள் திவாகரை சம்மதம் சொல்ல வைக்கலைனா அப்புறம் அவர்கள் எல்லாரும் சிறைக்கு போய்டுவாங்க அப்புறம் உங்கள் இஷ்டம்" என்று ஆதிராவுடன் விளையாடச் சென்றாள்.
யமுனாவிற்கு தான் ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்க வேண்டும் என்று எண்ணும் போது எரிச்சலாக இருந்தது. ஆனால் அவளுக்கு இங்குப் பேசக் கூட யாரும் இல்லை எனப்படும் நிலையில் ஆதிராவைப் பார்க்கும் போது மனது நிம்மதியாக இருந்ததால் அவளுடன் நேரம் செலவிட நினைத்தாள்.
இங்கு சேகர் வீட்டில் விஜயலட்சுமி திவாகரிடம், "தயவு செய்து பிரியாவை கல்யாணம் பண்ணிக்கோ திவாகர் உன்னை கெஞ்சி கேட்கிறேன்" என்றார்.
அப்போது பிரியா அவர்கள் வீட்டினுள் வந்தாள். "திவாகர் அது வந்து..." என்று அவள் கூறுவதைக் கணித்த திவாகர், "உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் பிரியா... அதான் உனக்கு வேணும் கிளம்பு உன் அண்ணா கிட்டயும் இதை சொல்லிடு அப்படியே இனிமேல் உன் வாழ்க்கை நரகம் ஆகப் போகுதுனும் சொல்லிடு" என்று அவளை வெளியே போகச் சொல்லி கதவைச் சாற்றினான்.
பிரியா சத்யதேவ்விடம் திவாகர் அவளிடம் சொல்லிய கடைசி வாக்கியத்தை மட்டும் கூறாமல் அவன் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டதைக் மட்டும் கூறினாள்.
அவளின் தலையைக் கோதியவன், "இப்போ உனக்கு சந்தோஷமா பிரியா?" என்று கேட்டான்.
"சந்தோஷம் அண்ணா, ஆனால் குணா அண்ணா நேற்று பேசினாரு" என்று இழுத்தாள்.
"ம்ம்... உனக்கும் குணாக்கும் ஒரே மேடையில கல்யாணம் நடக்கும் அடுத்த வாரம் கல்யாணம்... அந்த பொண்ணு திவ்யாவை உடனே கூட்டிட்டு வரச் சொல்லு... அப்படியே அம்மா அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லிடு நான் இன்னிக்கு இரவு வீட்டில் இதை பத்தி வந்து பேசுறேன்" என்று பிரியாவை வீட்டிற்கு அனுப்பினான்.
ஆதிராவுடன் விளையாடி பொழுதைக் கழித்த யமுனா அவள் அம்மா என்று ஒவ்வொரு முறை கூறும் போதும் காதை மூடிக்கொண்டாள்.
"ஆதிராம்மா சாப்பிட வா" என்று சீதாலட்சுமி அவளைக் கூப்பிட வந்தார்.
"உள்ளே வாங்க ஆன்ட்டி... ஆதிரா சாப்பிட கூப்பிடுறாங்க போய்ட்டு வாங்க" என்றாள்.
"நீயும் சாப்பிட வாம்மா யமுனா" என்றார் சீதா.
"சரி ஆன்ட்டி, ஆதி குட்டி வாங்க இரண்டு பேரும் சேர்ந்து சாப்பிட்டு வந்து விளையாடலாம்" என்றாள்.
"யமுனா, அது வந்து... எங்கள் மேல் உனக்குக் கோபம் போய்டுச்சா மா" என்று தயக்கமாய் கேட்டார்.
"கண்டிப்பா ஒரு இன்ச் கோபம் கூடப் போகலை ஆன்ட்டி, ஆனால் என்னால் யார் கிட்டயும் பேசாமல் இருக்க முடியாது. அப்படி இருந்தால் என் தலை வெடிச்சுடும் ஒரு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற ஆம்பளை இன்னொரு பெண்ணை மிரட்டி கல்யாணம் பண்ணிருக்காரு. அதுவும் உங்கள் மகனுக்கு கல்யாணம் ஆன விஷயம் எனக்கு நேற்று தான் தெரியும் இதற்கு ஒட்டு மொத்த குடும்பமே உடந்தை... ஏன்னா உங்களுக்கு உங்களுடைய பிரியா கல்யாணம் நடக்கவேண்டும் அதனால் நான் யாரோ ஒரு வீட்டோட பொண்ணு தான இன்பாக்ட் நான் ஒரு அப்பா அம்மா இல்லாத அனாதை தான அதனால் டேக் இட் ஃபார் கிரான்டட்னு எடுத்துக்கிட்டீங்க" என்று முடிக்கும் போது அவளுக்கு அழுகை வந்தது.
"நான் லாம் எதற்குமே அழுகுற வகை கிடையாது உங்கள் மகன் எப்போது என் லைஃப்ல வந்தாரோ அப்போது இருந்து சனி சுக்கிர திசை ஆட ஆரம்பிடுச்சு" என்று புலம்பித் தள்ளினாள்.
ஒரு பக்கம் யமுனாவைப் பார்க்கப் பாவமாய் இருந்தாலும் தேவ்விற்கும் ஒரு வாழ்க்கை அமைக்க குடும்பத்தில் நினைத்தனர். ஆனால் இந்த சின்னப்பெண் வாழ்க்கையைச் சிதைக்காமல் இருந்திருக்கலாம் என்று சீதாலட்சுமியே நினைக்கத் தொடங்கினார்.
"என்னை உன்னுடைய அம்மா மாதிரி நினைச்சுக்கோமா இப்போது சாப்பிட வர்றீங்களா இரண்டு பேரும்" என்று அழைத்துச் சென்றார்.
அன்று இரவு வீட்டிற்கு வந்த தேவ் தன் தாய் தந்தையிடம் சென்று குணாவைப் பற்றிக் கூறினான்.
"எப்படிப்பா நம்ம வீட்டுல பிறந்துவிட்டு குணாவால இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிருக்க முடியுது... அந்தப் பெண்ணிற்கும் அறிவு இல்லையா? என்னால் இதை ஏத்துக்க முடியலை மனசு கஷ்டமா இருக்குபா, உன்னை மாதிரி தான அவனையும் வளர்த்தேன் அவன் எப்படி இப்படி ஒழுக்கத்தைத் தவறினான் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் உரியது இல்லை ஆண்களுக்கும் உரியது" என்று சீதாலட்சுமி கூறுகையில்,
"அந்தப் பெண்ணிற்கு இப்போது இரண்டாவது மாதம் தொடக்கமாம் இப்போது கல்யாணம் செய்து வைத்தால் தான் ஊர் வாயைத் திறக்காது இல்லையெனில் பிரச்சனை நமக்கு தான்" என்றார் ஜெயக்குமார்.
"சரிப்பா பிரியா திருமணம் கூடவே இதையும் நடத்திடலாம் நீ எடுத்த முடிவே நல்லது தான்" என்ற அன்னையிடம்,
"அந்தப் பெண் திவ்யா நாளை இங்கு வருகிறாள் மா அவள் யமுனாவின் தோழி தான்" என்று கூறிவிட்டு தன் அறைக்குச் சென்றவன் ஆதிரா அங்கு இல்லை என்று தேடினான். பிரியாவிடம் குழந்தை எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் இரவானால் தன் தந்தை சத்யதேவ்விடம் மட்டுமே தூங்குவாள் ஆதிரா. முதலில் அவன் சென்றது பிரியாவின் அறைக்குத் தான். அங்கு அவள் இல்லை என்று அறிந்தவன் அடுத்துச் சென்றது யமுனாவின் அறை அங்கு ஆதிரா யமுனாவைக் கட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்.
ஒருமுறை தன்னை மறந்து ஒரு நாள் பிரியாவின் அறையில் தூங்கிய ஆதிரா திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்துக் கத்த ஆரம்பித்தாள். பின் தேவ் அவளைச் சமாதானம் செய்து தன்னுடன் படுக்க வைத்த பின்னரே அமைதியாய் தூங்கினாள். அதே போல் இன்றும் ஆகக் கூடாது என நினைத்த தேவ் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை அப்படியே தூக்கிட்டு போய் விடலாம் என்று குனிந்தவன் யமுனாவின் மேல் படர்ந்திருந்த ஆதிராவின் கையை எடுத்தான்.
ஏதோ தன் மீது உரசுவது போல் உணர்ந்த யமுனாவிற்கு டக்கென்று முழிப்பு வந்தது. அங்குத் தேவ்வை எதிர்ப்பார்க்காதவள் பதற்றத்தில் எழ அதை உணர்ந்த தேவ்,
"ஆதிரா தினமும் இரவு என்னோடு தான் படுப்பாள்" என்று ஆதிராவை ஏந்தியவன் அவளை எடுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்றான். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு யமுனா தூங்கினாள்.
அடுத்த நாள் காலை விடிந்தபின் யமுனாவை எழுப்ப வந்தாள் ஆதிரா. அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்ததை அறியாத ஆதிரா அவளை எழுப்பிக்கொண்டே இருந்தாள். பொதுவாக யமுனாவை தூக்கத்தில் எழுப்பினால் அவளுக்குக் கோபம் வரும். அவள் ஹாஸ்டலில் இருக்கும் பொழுதே திவ்யா இரண்டு மூன்று முறை இப்படி செய்து திட்டுவாங்கிருக்காள். அதற்குப் பயந்தே அதன்பின் என்ன நடந்தாலும் யமுனாவை எழுப்புவதை நிறுத்தினாள். இப்போது ஆதிரா தன்னை எழுப்புகிறாள் என்று உணராத யமுனா யாரோ தன் தூக்கத்தை கலைக்கின்றனர் என்பதை உணர்ந்தாள்.
Very nice story excellent யமுனா ரொம்ப pavam, sekkrama dev உடன் சேர்த்து vainkaKindly send the next episode
பதிலளிநீக்குthank u ma
நீக்குVery industring poguthu கதை next ud போடுங்க அக்கா
பதிலளிநீக்குthank u ma
நீக்கு