மாயம் 1 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும்.அத்தகைய ஊரில் அமைந்துள்ள சோழிங்கநல்லூரில் மென்பொருள் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கிறது. சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு வொர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டலில், தன் அறையில் அழுதுக்கொண்டு இருந்தாள் திவ்யா. திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டுள்ள திவ்யாவிற்கு அப்பா அம்மா சிறிய வயதிலேயே பிரிந்தனர். இருவரும் மனம் வேறுபாட்டால் வெவ்வேறு பாதையில் சென்றனர். அவர்கள் திவ்யாவை ஒரு அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டனர். பதினைந்து வயதான திவ்யா அழுது கெஞ்சியும் அவர்கள் மனது கல்லாகவே இருந்தது. மாதா மாதம் அவளுக்குப் பணம் அனுப்பினார்கள். ஆனால் திவ்யாவிற்கு வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது இப்படியே ஏழு வருடங்கள் சென்றது. அப்போது தான் அவள் வாழ்க்கையில் வந்தாள் யமுனா என்னும் தேவதை. யமுனாவின் அப்பா அம்மா அவள் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். அப்போது இருந்து அவளுடைய மாமா சேகர் தான் அவளை வளர்த்தார். தன்னுடைய மகன் மேற்படிப்பிற்காக டெல்லி செல்லவிருந்தனர். அப்போது சமயம் பார்த்து சேகர் மனைவி விஜயலட்சுமி யமுன...
மாயம் 52 (இறுதி) “பிரியா, திவாகர் அத்தான் உங்ககிட்ட ஒதுக்கம் காட்டுனது தப்பு தான். ஆனால் யோசிச்சுப் பாருங்க, உங்களுக்காக தேவ் என்னை கல்யாணம் செய்தார். திவா அத்தான் என்னை அவர் தங்கை போல் நினைக்கிறார். அதற்கு உங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் ” என்று யமுனா கூறும் போதே, “ஐய்யயோ அண்ணி! நான் சும்மா திவாகரை வெறுப்பேற்றினேன். தேவ் அண்ணாவிற்கு மட்டும் நீங்கள் என்னிடம் வந்து இப்படி மன்னிப்பு கேட்டீங்க என்று தெரிந்தால், என்னைத் திட்டி தீர்த்திடுவார் ” என்று யமுனாவை கட்டிப்பிடித்து, “நீங்களும் தேவ் அண்ணாவும் மேட் ஃபார் ஈச் அதர் அண்ணி, உங்கள் இருவருக்கும் சுத்தி தான் போடணும் ” என்று யமுனாவின் கன்னத்தில் கைவைத்து கொஞ்சினாள். திவாகரிடம், “பரவாயில்லை திவா, கடைசியா இம்பார்ட்டெண்ட் ரோல் மாதிரி, ஏதோ ஹீரோ மாதிரி பெர்ஃபார்ம் பண்ணிருக்கீங்க. ஆனா அண்ணா வந்த அப்புறம் பேக் டு காமெடியன்… எப்படியோ தேவ் அண்ணா அண்ட் அண்ணி சேர்ந்துட்டாங்க ” என்று மகிழ்ந்தாள். “அடியேய், நான் உனக்கு காமெடியனா? இரு... யமுனா நீ கிளம்பு மா, உன் கணவன் வரத்துக்குள்ள திங்க்ஸை பேக...
மாயம் 50 “தேவ் ப்ளீஸ், உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன் ” என்று கலங்கிய விழிகளுடன் யமுனா கூறும்போது தான் கவனித்த தேவ், “சொல்லு யமுனா, என்ன வேண்டும்? ” என்று கேட்டான். தேவ்வின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் யமுனாவால் கண்டுகொள்ள முடியவில்லை. “எனக்கு மென்சஸ் வந்திருச்சு. சானிடரி நாப்கின் வேண்டும், ப்ளீஸ் வாங்கிட்டு வர முடியுமா? எனக்கு வயிறு வலிக்குது. குழந்தையை வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியலை ” என்று வயிற்றைப் பிடித்து தரையிலேயே அமர்ந்தவளைப் பாவமாகப் பார்த்தான். “சரி யமுனா... ஆராதனாவை நான் கூட கூட்டிட்டுப் போறேன். நீ கதவை மூடாமல் இரு ” என்று மடமடவென கதவருகில் சென்றவன், “என்ன பிராண்ட் வாங்கணும்? ” என்று தயங்கிக் கேட்டான். அவனின் கேள்விக்கு பதில் உரைத்தவளுக்கு, தேவ்வின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தது. தேவ் கூறியது போலவே ஐந்தே நிமிடத்தில் பொருளோடு வந்தவன், அதை யமுனாவிடம் ஒப்படைத்துவிட்டு ஆராதனாவை கையில் ஏந்திக்கொண்டே பால்கனிக்குச் சென்றான். ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வெளியே வந்த யமுனாவின் முன் ஒரு சோடா பாட்டிலைக் கொடுத்தவன், “வயிறு வலிக்கு சோடா குடிச்சா கொஞ்சம் பெட்...
கருத்துகள்
கருத்துரையிடுக