இடுகைகள்

அடுத்த கதையின் முன்னோட்டம் - என் சுவாசம் நீதானே!

அங்கு இவளையே முறைத்துக் கொண்டு பார்த்திருந்தாள் மாளவிகா. தன் சித்தி ஈஸ்வரியிடம் இவளை முறைத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். ஈஸ்வரிக்கு தன் மகன் அரவிந்த் சுபாவுடன் நட்பாக பழகுவது பிடிக்கவில்லை மாளவிகா குடும்பத்தினர்க்கும் சுபாவை சின்ன வயதில் இருந்தே பிடிக்காதே இதில் மாளவிகா மட்டும் விதிவிலக்கா என்ன?  சுபா மாளவிகாவை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள். அதற்கு அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். 'நாம் லஷ்சுமி பாட்டிக்காக வந்துருக்கோம் அதற்காக மற்றவர்களுக்கும் நம் வருகை பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை' என்று நினைத்தாள்.  தன்னுடைய அறைக்கு வந்த அஸ்வினுக்கு கடுப்பாக இருந்தது. 'என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டா அவ. அவ பெயர் என்ன சுபா   இந்த பெயர் நா முன்னாடியே கேள்வி பட்டு இருக்கேனே' என்று யோசித்தவன் நினைவு வந்தவனாய், "ஓ இவ துளசி அத்தையோட கணவரின் முதல் மனைவி பொண்ணு தான இவளுக்கு லாம் இங்கு என்ன வேலை. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் என்ன அடிச்சிட்டா உன்னோட தகுதி என்னனு காட்டறேன்டி" என்று கர்ஜித்தான்.  அங்கு நடந்ததை அரைகுறையாக பார்த்த தீபிகாவிற்கு புரிந்தது என்னமோ சுபாவை

மாயம் 52

  மாயம் 52 (இறுதி) “பிரியா, திவாகர் அத்தான் உங்ககிட்ட ஒதுக்கம் காட்டுனது தப்பு தான். ஆனால் யோசிச்சுப் பாருங்க, உங்களுக்காக தேவ் என்னை கல்யாணம் செய்தார். திவா அத்தான் என்னை அவர் தங்கை போல் நினைக்கிறார். அதற்கு உங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவர் செய்ததற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் ” என்று யமுனா கூறும் போதே, “ஐய்யயோ அண்ணி! நான் சும்மா திவாகரை வெறுப்பேற்றினேன். தேவ் அண்ணாவிற்கு மட்டும் நீங்கள் என்னிடம் வந்து இப்படி மன்னிப்பு கேட்டீங்க என்று தெரிந்தால், என்னைத் திட்டி தீர்த்திடுவார் ” என்று யமுனாவை கட்டிப்பிடித்து, “நீங்களும் தேவ் அண்ணாவும் மேட் ஃபார் ஈச் அதர் அண்ணி, உங்கள் இருவருக்கும் சுத்தி தான் போடணும் ” என்று யமுனாவின் கன்னத்தில் கைவைத்து கொஞ்சினாள்.  திவாகரிடம், “பரவாயில்லை திவா, கடைசியா இம்பார்ட்டெண்ட் ரோல் மாதிரி, ஏதோ ஹீரோ மாதிரி பெர்ஃபார்ம் பண்ணிருக்கீங்க. ஆனா அண்ணா வந்த அப்புறம் பேக் டு காமெடியன்… எப்படியோ தேவ் அண்ணா அண்ட் அண்ணி சேர்ந்துட்டாங்க ” என்று மகிழ்ந்தாள். “அடியேய், நான் உனக்கு காமெடியனா? இரு... யமுனா நீ கிளம்பு மா, உன் கணவன் வரத்துக்குள்ள திங்க்ஸை பேக் பண்ணு.

மாயம் 51

  மாயம் 51 “உன்னை வலுக்கட்டாயமாக அடைந்து, ஒரு குழந்தையைக் கொடுத்த தேவ் வில்லன் இல்லாமல் பின்ன ஹீரோவா? ” என்று நக்கலாகக் கேட்ட திவாகரிடம்,  “ஆமாம் அவர் என் ஹீரோ தான்… அவர் ஒன்னும் என்னை வலுக்கட்டாயமாக அடையவில்லை. எங்களுடைய சொல்லாக் காதலுக்கு கிடைத்த பரிசு தான் ஆராதனா ” என்று பைத்தியம் போல் கத்தியவளிடம், “அப்புறம் ஏன் அண்ணி, அன்னிக்கு அமைதியாக இருந்து என் அண்ணாவை அவமானப்படுத்துனீங்க? ” என்று குறுக்கிட்ட பிரியாவின் கையைப் பிடித்து தடுத்தான் திவாகர்.  “அதைப் பற்றி கேட்க உனக்கு ரைட்ஸ் இல்லை பிரியா, அந்த கேள்வியை யமுனாவிடம் தேவ் மட்டும் தான் கேட்க வேண்டும் ” என்று கூறிய திவாகர், “நானும் உன் மனதில் தேவ் இல்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் யமுனா. ஆனால் தேவ் இங்கே வந்தபோது உன் மனதில் இருந்த தவிப்பு, உன்னுடைய ஏக்கம், அப்புறம் நாங்கள் திருத்தணி போன சமயம் தேவ் இங்கே வந்ததை மறைத்தது… என்ன அதிர்ச்சியாய் பாக்குற? செக்யூரிட்டி நம்ம பார்க்கிங்கில் ஒரு பிளாக் ஆடி கார் ரொம்ப நேரம் நின்னுதுனு சொன்னார். அப்போதே கண்டுபிடித்துவிட்டேன் தேவ் வந்ததை… அன்று நீயாக சொல்லுவாய் எனக் காத்திருந்தேன். பின் நீ

மாயம் 50

  மாயம் 50 “தேவ் ப்ளீஸ், உங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன் ” என்று கலங்கிய விழிகளுடன் யமுனா கூறும்போது தான் கவனித்த தேவ், “சொல்லு யமுனா, என்ன வேண்டும்? ” என்று கேட்டான். தேவ்வின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் யமுனாவால் கண்டுகொள்ள முடியவில்லை. “எனக்கு மென்சஸ் வந்திருச்சு. சானிடரி நாப்கின் வேண்டும், ப்ளீஸ் வாங்கிட்டு வர முடியுமா? எனக்கு வயிறு வலிக்குது. குழந்தையை வெச்சிட்டு ஒன்னும் பண்ண முடியலை ” என்று வயிற்றைப் பிடித்து தரையிலேயே அமர்ந்தவளைப் பாவமாகப் பார்த்தான்.  “சரி யமுனா... ஆராதனாவை நான் கூட கூட்டிட்டுப் போறேன். நீ கதவை மூடாமல் இரு ” என்று மடமடவென கதவருகில் சென்றவன், “என்ன பிராண்ட் வாங்கணும்? ” என்று தயங்கிக் கேட்டான். அவனின் கேள்விக்கு பதில் உரைத்தவளுக்கு, தேவ்வின் நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தது. தேவ் கூறியது போலவே ஐந்தே நிமிடத்தில் பொருளோடு வந்தவன், அதை யமுனாவிடம் ஒப்படைத்துவிட்டு ஆராதனாவை கையில் ஏந்திக்கொண்டே பால்கனிக்குச் சென்றான்.  ரெஸ்ட் ரூம் சென்று விட்டு வெளியே வந்த யமுனாவின் முன் ஒரு சோடா பாட்டிலைக் கொடுத்தவன், “வயிறு வலிக்கு சோடா குடிச்சா கொஞ்சம் பெட்டரா இருக்கும்