மாயம் 51

 

மாயம் 51

“உன்னை வலுக்கட்டாயமாக அடைந்து, ஒரு குழந்தையைக் கொடுத்த தேவ் வில்லன் இல்லாமல் பின்ன ஹீரோவா? என்று நக்கலாகக் கேட்ட திவாகரிடம், 

“ஆமாம் அவர் என் ஹீரோ தான்… அவர் ஒன்னும் என்னை வலுக்கட்டாயமாக அடையவில்லை. எங்களுடைய சொல்லாக் காதலுக்கு கிடைத்த பரிசு தான் ஆராதனா என்று பைத்தியம் போல் கத்தியவளிடம்,

“அப்புறம் ஏன் அண்ணி, அன்னிக்கு அமைதியாக இருந்து என் அண்ணாவை அவமானப்படுத்துனீங்க? என்று குறுக்கிட்ட பிரியாவின் கையைப் பிடித்து தடுத்தான் திவாகர். 

“அதைப் பற்றி கேட்க உனக்கு ரைட்ஸ் இல்லை பிரியா, அந்த கேள்வியை யமுனாவிடம் தேவ் மட்டும் தான் கேட்க வேண்டும் என்று கூறிய திவாகர்,

“நானும் உன் மனதில் தேவ் இல்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன் யமுனா. ஆனால் தேவ் இங்கே வந்தபோது உன் மனதில் இருந்த தவிப்பு, உன்னுடைய ஏக்கம், அப்புறம் நாங்கள் திருத்தணி போன சமயம் தேவ் இங்கே வந்ததை மறைத்தது… என்ன அதிர்ச்சியாய் பாக்குற? செக்யூரிட்டி நம்ம பார்க்கிங்கில் ஒரு பிளாக் ஆடி கார் ரொம்ப நேரம் நின்னுதுனு சொன்னார். அப்போதே கண்டுபிடித்துவிட்டேன் தேவ் வந்ததை… அன்று நீயாக சொல்லுவாய் எனக் காத்திருந்தேன். பின் நீயும் சொல்லவில்லை. 

யாராவது வந்தார்களா? என்று நான் கேட்டபோது கூட யாரும் வரவில்லை என்று சொன்ன. அப்போ எனக்கு வந்த சந்தேகம் இப்போது கன்பார்ம் ஆயிடுச்சு… ஆரம்பத்தில் எனக்கு தேவ்வின் மேல் கோபம் இருந்தது உண்மைதான். ஆனால் உனக்கே தேவ்வின் மீது காதல் இருக்கும்போது, கண்டிப்பா அவர் நல்லவராகத் தான் இருக்க முடியும் என்று கணித்தேன். நீ சந்தோஷமா இரு யமுனா, அதான் எங்க எல்லார்க்கும் வேண்டும் என்று முடித்தான் திவாகர். 

“அத்தான், நான் உடனடியாக அவரைப் பார்க்கணும், ஆராதனாவைப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியவள், ஒரு ஆட்டோவைப் பிடித்து தேவ்வின் அலுவலகத்திற்குப் பயணித்தாள். 

மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூரில் பயணித்துக் கொண்டிருந்தவளின் மனதில், ‘எப்படி தேவ் எனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பலாம்? அப்போது அவருக்கு நான் வேண்டாமா? என்று துடித்த மனதை எப்படி சமாதானப்படுத்துவது என்று கூடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது அலுவலகம் வந்தது. 

மடமடவென இறங்கியவள், ரிசப்ஷனில் தன் பெயரைச் சொல்லிவிட்டு, “தேவ்வைப் பார்க்க வேண்டும் என்றாள். 

“சார் இப்போது ஒரு கிளைன்ட் மீட்டிங்கில் இருக்காரு மேடம், ஒரு டென் மினிட்ஸ் காத்திருங்க என்று அந்தப் பெண் கூறிய பின்பு, பத்து நிமிடம் காத்திருப்பதும் பத்து யுகங்கள் போல தோன்றியது.

சிறிது நேரம் கழித்து, அந்தப் பெண் யமுனாவை அழைத்து, “மேடம், அப்பாயின்மெண்ட் போடணும். உங்கள் பெயர் என்ன? என்று கேட்கும்போதே பொறுமை இழந்தாள். 

“நான் அவர் பொண்டாட்டி, எனக்கு எதற்கு அப்பாயின்மெண்ட்?” என்று பதற்றத்தில் கத்தியவளை, “சாரி மேடம்… சிக்ஸ்த் பிளோரில் இருக்கு சாருடைய அறை என்று தன் மன்னிப்பைக் கேட்டு நின்றாள். 

அந்தப் பெண்ணை மன்னிக்கும் அளவிற்கு எல்லாம் யமுனாவிற்கு பொறுமை இல்லை. நேரே லிஃப்ட்டிற்குச் சென்றவள், ஆறாவது தளத்திற்குச் சென்றாள். சத்யதேவ் சிஇஓ அண்ட் சீப் ஓ என்று பொருத்தப்பட்டிருந்த அறைக்குள், அவளே திறந்து கொண்டு உள்ளே சென்றாள். 

லாப்டாப்பில் மூழ்கியிருந்த தேவ், யமுனா வந்ததைக் கவனிக்கவில்லை. நேராக அவன் மேஜை முன்வந்து, அந்த டைவர்ஸ் நோட்டீஸை பேக்கில் இருந்து எடுத்தவளை, அப்போது தான் தேவ் கவனித்தான். 

“இது என்ன? என்று கேட்கும் தொனியே, கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்த்தியது.

யமுனாவிடம் டைவர்ஸ் நோட்டீஸ் தான் இருக்கிறது என்பது புரிந்த தேவ், “முதல்ல உட்காரு யமுனா, பேசலாம் என்று பொறுமையாகக் கூறினான்

“நான் உங்களிடம் உட்கார்ந்து பேச வரவில்லை தேவ், எதற்கு இந்த மியூச்சுவல் கன்சென்ட் டைவர்ஸ் நோட்டீஸ்? சைன் பண்ணி என்னை சைன் பண்ண சொல்லி அனுப்பிருக்கீங்க. இந்தக் காகிதத்திற்குத் தெரியுமா, நான் உங்களை எவ்வளவு விரும்புகிறேன் என்று? என்று தன் கண்களில் கை வைத்து அழுதவள், அப்படியே அந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“யமுனா… நான் உனக்காகத் தான் இதைக் கொடுத்தேன். என்னோடு நீ வாழவில்லை, கஷ்டம் தான் பட்டிருக்க... பட்டிருக்க என்பதை விட நான் உன்னை கஷ்டப்படுத்திருக்கேன். இனியாவது உனக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கை வாழத் தான் இந்த டைவர்ஸ் என்று வெறுமையாகக் கூறி முடித்தவனை முறைத்துப் பார்ததவள், 

“அதனால என்னை விட்டுப் பிரிய நீங்கள் தயார் ஆயிட்டிங்களா? என்று ஆவேசமாகக் கேட்டாள். 

“உன்னை விட்டுப் பிரிய எனக்கு மட்டும் ஆசையா இருக்குன்னு நினைக்குறியா யமுனா... இங்க வலிக்குது டீ என்று தன் நெஞ்சின் மேல் கையை வைத்தவனின் கண்கள் கலங்கியது. 

முதல் முறையாக, திமிர், ஆணவம் கொண்ட சத்யதேவ்வின் கண்கள் கலங்குவதைப் பார்த்த யமுனா, “தேவ், உங்களின் கண்கள்… எனக்காக கலங்குகிறதா?என்று ஆச்சரியமாகக் கேட்டாள்.

“இது முதல் முறை இல்ல, மூன்றாவது முறை! என் கண்கள் உனக்காக மட்டும் தான் கலங்குகிறது! என்றான் வெறுமையாக.

***

“நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேன் யமுனா… நான் பெண்களின் அழகுக்கு மயங்கும் ஆள் இல்லை. அதனால் உன்னை முதலில் கண்டபோதே, உன்னுடைய அழகிய உருவம் என்னை ஆட்கொள்ளவில்லை. உன்னை என் தங்கைக்காகவும் ஆதிராக்காகவும் தான் திருமணம் செய்தேன். 

உன்னுடைய துருதுருப்பு, துடுக்காக பேசுவது, உன்னை அடக்கினாலும் அதையெல்லாம் நான் ரசித்தேன். உன்னுடைய காதல் எனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன்… நீ இரண்டாவது திருமணம் பற்றிப் பேசியபோது இந்த தேவ்வை யமுனாவிற்குப் பிடிக்கவில்லையா என்ற கோபத்தில் உன்னை ரொம்ப காயப்படுத்திருக்கேன். 

உன்னுடைய இடத்தில் இருந்த நியாயங்கள், காயங்கள், கவலைகள் எதுவும் என் கண்ணிற்கும் மனதிற்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று, நீ எனக்கானவளாக ஆகும் தருணம், உன்னுடைய சம்மதத்துடன் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். 

நாம் இருவரும் முதல் முதலாக சேர்ந்த அந்த நொடி, ஒரு அழகிய காதலைப் பார்த்தேன். என்னுடைய காதலை நான் ஆளுமையில் உணர்த்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதுவே உன்னை என்னிடம் இருந்து பிரித்து விட்டது. நீ கூறிய அந்த வார்த்தை… உடலுக்காகத் தான் என்னுடன் இருந்தாய் என்று கூறியது, முதல் முறையாக என்னை மிகவும் காயப்படுத்தியது. 

உனக்கே தெரியும் யமுனா, அந்த வார்த்தையின் வீரியம் என்ன என்பது… அதிலும் உன் நிலையை நான், நீ என்னை பிரிந்து சென்ற பின் உணர்ந்தேன். ஆனால் நான் செய்த தவறு, உன்னை உணராமல் அடக்கி மிரட்டி ஆளுமையாக இருந்தது தான் என்று இப்போது தான் புரிந்து கொண்டேன்.

திவ்யா, மனிஷா, ஏன் பிரியாவை விட, யமுனா சுயநலம் அற்றவள். கஷ்டத்தை அனுபவித்தவள்… அவர்களின் கணவன் அனைவரும் மனைவியை விட்டுக் கொடுக்காமல் தாங்கினர். ஆனால் நான் உன்னை துன்புறுத்தி அவமதித்தேன். நீ ஆராதனா பிறக்கும் போது எவ்வளவு துடிச்சிருப்பனு என்னால் இப்போது உணர முடிகிறது யமுனா... உன்கிட்ட நான் கேட்க வேண்டியது அண்ட் சொல்ல வேண்டியது இரண்டு இருக்கு... 

என்னை மன்னிச்சிடு யமுனா, உண்மையாகவே பூ போல் இருந்த உன்னை நான் கசக்கிவிட்டேன்… அண்ட் ஐ லவ் யூ யமுனா! இந்த உலகத்தில் எனக்கே எனக்காக பிறந்தவள் நீ... நான் ஆராதனாவின் மேல், என் அன்னையின் மேல் வைத்திருக்கும் பாசத்தை விட, உன் மேல் இருக்கும் காதல் அதிகம். 

உனக்குப் பிறகு தான் எனக்கு என்னையே பிடிக்கும்டீ... இந்தத் திடீர் காதல் எப்போது என்று கேட்காத, உன்னை கரம் பிடித்த பின்னரே எனக்குள் உண்டான உணர்வு. அதற்குப் பெயர் காதல் என்று தெரிந்து கொள்ளாமல், உன்னை கோபத்தில் வதைத்தேன் என்று முடித்தவனின் கண்களில் கண்ணீர். 

அவ்வளவு நேரம் தேவ் பேசுவதை கண் இமைக்காமல் கேட்டுக்கொண்டு இருந்தவள், தேவ் கூறிய கடைசி வாக்கியத்தில் உறைந்து நின்றாள். தேவ் கண்களில் வந்த கண்ணீரைப் பார்க்க முடியாமல் அவனிடம், “தேவ், உங்களுடைய ஆளுமையான நடவடிக்கைக்கே நான் உங்களிடம் காதலில் விழுந்தேன். பின் இப்போது இருக்கும் தேவ்விற்காக என் உயிரைக் கூட கொடுப்பேன்! என்று கூறியவளை தன் இடத்தை விட்டு எழுந்து, வேகமாக வந்து யமுனாவைத் தன்னோடு கட்டிக் கொண்டான். 

“போதும் யமுனா, இனி தான் நம்முடைய வாழ்க்கையே தொடங்கப் போகிறது. இனி ஒரு நொடி கூட என்னால் உன்னை விட்டுப் பிரிய முடியாது என்று யமுனாவின் முகத்தைத் தன் கையில் ஏந்தியவன், அவளின் முகத்தைத் தன்னோடு சேர்த்து, நெற்றியில் முத்தமிட்டான்.

“யமுனா, நீ இப்போது கிளம்பு. இன்று இரவு நான் உன்னை வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் என்றவன், “யமுனா நில்லு, நானே உன்னை விடுறேன் என்று யமுனாவின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான். 

காரில் ஏறிய பின், யமுனா முதலில் கேட்ட கேள்வி, “தேவ்… ஆதிரா எங்கே? என்று தான். இதைக்கேட்ட பின் சடன் பிரேக் போட்டவன், “ஆதிரா அவளின் அம்மாவோடு இருக்கிறாள் என்றான் மென் புன்னகையுடன்.

“தேவ், புரியவில்லை எனக்கு என்று தயங்கியவளிடம், “பிரனிதாவின் பொறுப்பில் தான் இனி ஆதிரா. தேவ் இஸ் ஜஸ்ட் அ ஸ்பான்சர் அண்ட் ஆல்சோ, இனி பிரனிதா என் முகத்தில் விழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டேன் என்றவனைப் பார்த்த யமுனா, “ஆதிரா பாவம்ல தேவ் என்று சோகமானாள். 

“ஏய் யமுனா, உன் குட்டி மண்டைக்குள் எவ்வளவு போட்டுக்கொண்டு குழப்பிப்ப... பிரனிதா நல்லவள் ஆயிட்டாள். நியாயப்படி ஆதிரா அவளிடம் தான் இருக்க வேண்டும் என்று காரை எடுத்தான்.

“தேவ், எல்லாம் என்னால தான? என்று வருந்தினாள். 

“யமுனா என்னுடைய உலகமே நீயா இருக்கும்பொழுது, எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்லை. அண்ட் ஆதிரா அவளுடைய தாயிடம் வளர்வது தான் அவளுக்கே நல்லது. இன்ஃபேக்ட் தேவ் என்னும் கதாபாத்திரமே அவளுக்கு மறந்துவிடும் என்று யமுனாவை சமாதானப்படுத்தினான். 

யமுனாவை திவாகரின் பிளாட்டில் இறக்கிவிட்ட பின், அவளிடம் விடைபெற்று, தன் அன்னையிடம் நேரடியாக யமுனா அழைத்துச் சென்று சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று எண்ணியவன், அவனின் அலுவலகத்திற்குச் சென்றான்.

யமுனா உள்ளே நுழையும்போதே, அவளின் இன்முகத்தைப் பார்த்த அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. திவாகர் தான் பிரியாவை சமாதானப்படுத்துவதில் ரொம்பவே சிரமப்பட்டான். அதைக் கண்ட யமுனாவிற்குத் தான் மனது சங்கடம் ஆனது. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2