அடுத்த கதையின் முன்னோட்டம் - என் சுவாசம் நீதானே!
அங்கு இவளையே முறைத்துக் கொண்டு பார்த்திருந்தாள் மாளவிகா. தன் சித்தி ஈஸ்வரியிடம் இவளை முறைத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். ஈஸ்வரிக்கு தன் மகன் அரவிந்த் சுபாவுடன் நட்பாக பழகுவது பிடிக்கவில்லை மாளவிகா குடும்பத்தினர்க்கும் சுபாவை சின்ன வயதில் இருந்தே பிடிக்காதே இதில் மாளவிகா மட்டும் விதிவிலக்கா என்ன?
சுபா மாளவிகாவை பார்த்து மெல்லியதாக புன்னகைத்தாள். அதற்கு அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். 'நாம் லஷ்சுமி பாட்டிக்காக வந்துருக்கோம் அதற்காக மற்றவர்களுக்கும் நம் வருகை பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை' என்று நினைத்தாள்.
தன்னுடைய அறைக்கு வந்த அஸ்வினுக்கு கடுப்பாக இருந்தது. 'என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டா அவ. அவ பெயர் என்ன சுபா
இந்த பெயர் நா முன்னாடியே கேள்வி பட்டு இருக்கேனே' என்று யோசித்தவன் நினைவு வந்தவனாய், "ஓ இவ துளசி அத்தையோட கணவரின் முதல் மனைவி பொண்ணு தான இவளுக்கு லாம் இங்கு என்ன வேலை. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் என்ன அடிச்சிட்டா உன்னோட தகுதி என்னனு காட்டறேன்டி" என்று கர்ஜித்தான்.
அங்கு நடந்ததை அரைகுறையாக பார்த்த தீபிகாவிற்கு புரிந்தது என்னமோ சுபாவை வலுக்கட்டாயமாக அஸ்வின் கட்டிப்பிடித்தது. அதைத் தட்டிக் கேட்ட சுபாவை கழுத்தைப் பிடித்து நெறித்தது இதையே நினைத்த தீபிகா பயந்தாள். அஸ்வின் சின்ன வயதில் இருந்தே தனக்கென ஒரு எல்லை வைத்து பழகுபவன் அவனிடம் அனைவரும் பேசவே பயப்படுவார்கள். அதனால் தான் தீபிகாவும் அச்சம்பவம் நடந்த போது தான் இருப்பதே தெரியாமல் நடந்ததைப் பார்த்தாள். அரைகுறையாக பார்த்த அவளுக்கு தெரியாது சுபா தடுக்கி விழும் போது அவளை காப்பாற்ற தான் அப்படி கட்டிபிடித்தான் என்பதை அறியவில்லை.
அவள் நேரே சென்றது தன்னுடைய தாத்தா, பாட்டி அறைக்கு. அங்கு தன் தாத்தா பாட்டியிடம், “அஸ்வின் அத்தான் சுபா அக்காவை கட்டிப்பிடிச்சாங்க சுபா அக்கா அதை தட்டிக்கேட்டதுக்கு அவள் கழுத்தைப் பிடித்து நெறித்தார் சுபா அக்கா ரொம்ப பாவம் அழுதுக்கிட்டே இருந்தாள்” என்று கூறினாள். இதைக் கேட்ட பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாடியில் நிலாவை வெறித்துப் பார்த்தாள் சுபா மனது என்னமோ படபடப்பாக இருந்தது. தன்னிடம் அஸ்வின் நடந்துக் கொண்டதை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் மேல் நல்ல அபிப்பிராயம் அவளுக்கு இல்லை. அப்போது, “என்ன யோசிக்கிற சுபா? இன்னிக்கு நடந்தத யார் கிட்டயும் சொல்லிடாத. அஸ்வின் அப்படி பட்டவன் இல்ல ஆனால் என்ன பிரச்சனை? என்ன நடந்தது சுபா?” என்றான்.
“ஒரு பிரச்சனையும் இல்ல அரவிந்த். கண்டிப்பா சொல்ல மாட்டேன் அரவிந்த் கவலைப்படாதீங்க” என்றாள்.
“நீ ரொம்ப நல்ல பொண்ணு சுபா ஆனா எங்க அம்மா, அப்பா பெரியப்பா, பெரியம்மா யாருக்கும் உன்ன புடிக்கல” என்றான் வருத்தமாக.
அப்போது மாடியில் காயப்போட்டதை எடுக்க வந்தார் ஈஸ்வரி.
"அவங்க கஷ்டப்பட்டு ஆசையாய் வளர்த்த பொண்ணு துளசிம்மா அவங்க இரண்டாம் தாரமாய் அதோட இலவச இணைப்பா இருந்த நா அப்போ அவங்களுக்கு கஷ்டமா தான இருக்கும். எங்க அப்பா எப்படி இருந்தாலும் இந்த வீட்டு மாப்பிள்ளை அதனால அவங்கள ஏத்துகிட்டாங்க. ஆனால் என்ன ஏத்துக்கணும்னு அவசியம் இல்லல. துளசி அம்மா எனக்கு கடவுள் மாதிரி என்ன அவ்வளவு பாசத்தோட பார்த்துக்குறாங்க. எனக்கு அந்த குடுப்பினை இருக்கு இந்த உலகத்துல இருக்கிற எல்லா தாயை இழந்த பிள்ளைகளுக்கு துளசி அம்மா மாதிரி கிடைக்கணும்னு நா தினமும் முருகரை வேண்டிக்கிறேன். அவங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன் இதெல்லாம் எனக்கு பிரச்சனை இல்லை அரவிந்த்” என்றாள்.
இதைக் கேட்ட ஈஸ்வரிக்கு கண்ணில் தண்ணீர் வந்தது. சுபா மீது பெரிய மரியாதை வந்தது அந்த நிமிடத்தில் இருந்து சுபாவை அவருக்கு பிடித்தது.
அஸ்வின் தன்னுடைய அறையில் தன் கம்பியூட்டரில் ப்ரோகிராமிங் பண்ணிக்கொண்டு இருந்தான். அப்போது அவன் அறைக்கு கோபமாக வந்தனர் அவனுடைய பாட்டி, தாத்தா. வீட்டின் முதல் பேரக்குழந்தை அஷ்வின் என்பதால் அவன் ரொம்ப ஸ்பெஷல் அவனுக்கு செல்லமும் அதிகம் அதனால் அவன் பிறந்ததிலிருந்து அவனை கடிந்து கூட பேசியதில்லை அவனுடைய தாத்தா, பாட்டி.அவர்கள் இப்போது தன் அறைக்கு வந்து கோபமாக பார்ப்பது அவனுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.
அஸ்வின் வாசுதேவனின் புதல்வன் சென்னையில் அவர் ஒரு பெரிய தொழில் அதிபர் பின்னாளில் தன் தந்தையைப் போல் தானும் தொழில் அதிபராகவே ஆக வேண்டும் என்று தன் மனதை அதனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறான். பதினாறு வயது முடிந்த அஸ்வின் இப்போது சென்னையில் DAV பாய்ஸ் சீனியர் பள்ளியில் பதினொன்று முடிந்து பன்னிரெண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைக்கிறான் பத்து நாள் விடுமுறை இருந்ததால் தன் பாட்டி தாத்தாவைக் காண தன் தங்கை மாளவிகாவோடு தன்னுடைய காரில் மதுரை வந்தான்.
அவன் இவ்வுலகிலேயே இரண்டு பேருக்கு தான் பணிவாக இருப்பான் அது சுப்பிரமணியன், லஷ்சுமி ஆவர். அவர்கள் தான் இவன் பதினான்கு வயது வரை வளர்த்தனர். இப்போது இரண்டு வருடங்களாக வாசுதேவன் குடும்பத்தோடு சென்னை சென்றார். தன் தாத்தா பாட்டியால் தன்னைக் காணாமல் இருக்க முடியாது என்பதாலேயே படிக்க நிறைய இருந்தாலும் அவங்களை காண வந்தான். ஆனால் அவர்கள் இருவரும் தன் அறையில் கோபத்தோடு நிற்பது ஏனென்று தெரியாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“எவ்வளவு திமிர்டா உனக்கு துளசி அத்தையோட மகள் சுபாவை சொல்லவே அசிங்கமா இருக்கு. அவள கட்டிப் பிடிச்சிருக்க அவ அத தட்டிக் கேட்டதற்கு அவளோட கழுத்தை நெறிச்சிருக்க. என்ன தைரியம் உனக்கு” என்று பளார் என்று அறைந்தார் சுப்பிரமணியன்.
“நாங்க வளர்த்த வரைக்கும் நல்லா தானடா இருந்த இப்போ ஏன் பொறுக்கியாகிட்ட துளசி மாப்பிள்ளை என் வார்த்தைக்காக சுபாவ நம்பி அனுப்பினார். நீ இந்த வயசுலேயே இப்படி இருக்கியே இன்னும் பெரியவன் ஆகும் போது எவ்வளவு பெண்ணோட வாழ்க்கையை கெடுப்பியோ இனி இந்த வீட்டில் உனக்கு இடம் இல்ல கிளம்பு” என்றார் லட்சுமி.
கருத்துகள்
கருத்துரையிடுக