மாயம் 9

 மாயம் 9

கண்ணை முழுதாகக் கூடத் திறக்காமல், "உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா?" என்று நன்றாகக் கண்ணை விழித்தாள். அவள் கத்தியதில் ஆதிரா பயந்து அழுதவள் பின் தந்தையின் அறைக்கு ஓடினாள். ஆதிரா என்று தெரியாமல் இப்படி பண்ணிட்டோமே பாவம் சின்னக் குழந்தை என்று உண்மையாக அவளுக்காக வருந்தியவள் அவள் பின்னே ஓடினாள்.



"அப்பா... அம்மா கத்து" என்று அவனிடம் அழுதாள். ஆதிராவோடு பழகியவர்கள் எளிதில் அவளுடைய மழலை பாஷையை புரிந்துக்கொள்வர். அப்போது தான் யமுனா ஒடி வந்து, "சாரி ஆதிரா, நான் நீயென்று தெரியாமல் அப்படி கத்திட்டேன்" என்றாள். 


"ஆதிரா அழுகுற அளவுக்கு என்ன நடந்தது" என்று அமர்த்தலான கோபத்துடன் கேட்டான். நடந்ததை கூறி முடிக்கும்போது, "ஆதிரானு இல்லை யார் வந்து உன்னை எழுப்புனாலும் இனிமேல் பொறுமையா இருக்கணும்…எதாவது எமர்ஜென்சினு உன்னை எழுப்பினா கூட இப்படி தான் தூங்குவியா?" என்று சலிப்பாகக் கேட்டான்.


"முதல்ல உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்ற நினைப்பு உனக்கு இருக்கா இல்லையா? நீ ஏதோ பிக்னிக் வந்த மாதிரி ஜாலியா சுத்திட்டு இருக்க இனிமேல் கொஞ்சம் சீக்கிரம் எழுந்திருக்கப் பழகு" என்று அவன் ஆதிராவை சமானப்படுத்தி பிரியாவிடம் கொடுத்து விட்டு வந்தான்.


"இன்னிக்கு உன் பிரண்ட் திவ்யா இங்க வர்றா அப்புறம் உன் மாமன் மகன் திவாகர் கல்யாணத்திற்கு ஓகே சொல்லிவிட்டான் அடுத்த வெள்ளிக்கிழமை கல்யாணம் அதே மேடையில் குணாக்கும் திவ்யாக்கும் கல்யாணம்" என்றான். தெரிந்த விஷயமே என்றாலும் யமுனாவிற்கு இதைக் கேட்டவுடன் மனது கடுப்பானது.


தன் நாவை அடக்க நினைத்தும் அவளால் முடியவில்லை. "அவங்க நாலு பேர் வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். ஆனா இதில் சம்மந்தமே இல்லாமல் என்னோட வாழ்க்கை போச்சு... இவர்களுக்குத் தான் கல்யாணம் ஆகப் போகுதுல கொஞ்ச நாளில் எனக்கு டைவர்ஸ் கொடுத்துருங்க என் மனசுக்கு பிடித்த மாதிரி ஒருத்தன நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்... நீங்க உங்களுக்குச் செட் ஆகுற மாதிரி ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்க... எப்படி இருந்தாலும் என்னால் உங்களைக் கணவனா ஏத்துக்க முடியாது. உங்களோட பணத்துக்காகவே உங்களுக்கு நிறைய பொண்ணுங்க வருவாங்க" என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் கன்னம் பழுத்தது.


"நீ சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணுனு சொல்லிட்டு இருக்கியே… முதலில் ஒரு பொண்ணு மாதிரி நடந்துக்கோ என்னைப் பத்தி பேசுற ரைட்ஸ் உனக்குக் கிடையாது… உனக்கு என்ன இன்னொரு ஆம்பளை தான வேணும் இன்னும் ஒரு வருஷத்தில் உனக்கு டைவர்ஸ் நோட்டீஸ் வரும் அதுவும் எதுக்கு இந்த ஒரு வருஷம்னா திவாகரும் பிரியாவும் கணவன் மனைவியா வாழ்ந்துருவாங்க... அப்புறம் உன் மேல இருக்கிற இந்தப் பைத்தியக்காரதனமான மோகம் அவனுக்கு போய்விடும்" என்று கூறி விட்டு கோபமாக கீழேச் சென்றான்.


யமுனாவிற்கு தான் அவன் அடித்த அடியைவிட அவன் சொன்ன வார்த்தையைத் தாங்கமுடியவில்லை தான் கல்யாணம் செய்ய நினைத்ததை அவன் அசிங்கமாகக் கூறிவிட்டதை அவளால் ஏத்துக்க முடியவில்லை. அவன் முகத்திலேயே முழிக்கக் கூடாது என்று முடிவு செய்தாள் யமுனா.


அவள் குளித்து முடித்து விட்டுக் கீழே சாப்பிடச் செல்லும்போது, "யமுனா" என்று கணீரென்று அழைத்தான் தேவ்.


'உன்கிட்ட மன்னிப்பு கேட்க முயற்சி செய்றான் போல யமுனா கெத்தா இருந்துக்கோ' என்று அவள் மனசாட்சி கூறியது.



"அவங்க கல்யாணம் அன்னிக்கு நம்ம இரண்டு பேருக்கும் கூடக் கல்யாணம் பண்ணனுமாம் இது என் முடிவு இல்லை என் அம்மா அப்பா முடிவு... சோ மேரேஜ்க்கு பர்சேஸ் பண்ண வெச்சிக்கோ" என்று அவள் கையில் கார்ட்டை கொடுத்தான். "அதோட கடவுச்சொல் உனக்கு நான் மெசேஜ் பண்றேன்" என்று அலுவலகத்திற்கு கிளம்பி விட்டான்.


இவன் ஆட்டம் தான் தாங்கல இதுல இந்த வீட்டுல இருக்கிறவங்க அதுக்கும் மேல என்று கடுப்பானவள் இவன் பிடியில் இருக்கும் வரை எதையும் எதிர்க்க முடியாது என்று அமைதியாகச் சாப்பிடச் சென்றாள்.


"யமுனாம்மா வந்துட்டியா நான் தான் உனக்கும் தேவ்க்கும் கல்யாணம் பண்ணிடலாம் னு சொன்னேன். அப்போதான் பிரனிதா அடங்குவாள்" என்றார் சீதாலட்சுமி.


கடுப்பில் சாப்பிட்டுக்கொண்டே இருந்த யமுனா, "யார் அந்தப் பிரனிதா?" என்று புரியாமல் கேட்டாள்.


"அதான் மா தேவ்வுடைய முதல் மனைவி" என்றார்.


"அப்போ அவங்க உயிரோட தான் இருக்காங்களா?" என்று அதிர்வாகக் கேட்டாள்.


"ஆமாம்மா என் மகன் தேவ்வை மாதிரி ஒருத்தனை எப்படி இப்படி பண்ண அவளுக்கு மனசு வந்ததோ!" என்று நடந்த அனைத்தையும் கூறினார் சீதாலட்சுமி. 


சத்யதேவ்வும் பிரனிதாவும் ஒரே கல்லூரியில் படித்தனர். முதலில் நண்பர்களாக மட்டும் தான் இருந்தனர். ஆனால்

பிரனிதாவிற்கு சத்யதேவ்வின் மீது முதலில் இருந்தே ஈர்ப்பு இருந்தது. கல்லுரி முடியும்போது கூட அவன் அவளைத் தோழியாய் மட்டுமே பார்த்தான். அதன் பின் மூன்று வருடங்கள் கழித்து பிரனிதாவின் தந்தை மற்றும் தாய் தேவ்வின் வீட்டிற்கு வந்து தேவ்வை

பிரனிதாவிற்காகக் கேட்டனர். அச்சமயம் அவன் லண்டனில் இருந்தான். அவனுக்கு இதில் விருப்பம் இல்லை.


ஆனால் முதலில் பிரியாவிற்கு தான் பிரனிதாவை பிடித்தது பார்க்க அழகாக இருக்கிறார் நம்முடைய அண்ணனுக்குப் பொருத்தமாக இருப்பார் என்று வீட்டில் அனைவரிடமும் சொன்னாள். ஆனால்

குணாவிற்கு ஏனோ முதலில் இருந்தே பிரனிதாவை பிடிக்கவில்லை. சத்யதேவ் கடைசி வரை இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அப்போது தான் ஒரு நாள் சத்யா அவனுடைய நண்பனுடைய கல்யாண வரவேற்புக்கு சென்றிருந்தான்.


டெல்லியில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு அது. வட இந்தியர்களின் கல்யாணம் என்பதால் பிரம்மாண்டமாக இருந்தது.அதற்குப்

பிரனிதாவும் வந்திருந்தாள் தேவ்வினால் இதற்கு மேல் பிரனிதாவிடம் ஒரு தோழனாக கூடப் பழகப் பிடிக்கவில்லை அதனால் அவளிடம் பேசாமல் தவிர்த்தான். தேவ்வை எப்படியாவது அடைய வேண்டும் என்று அங்குப் பழச்சாறு கொடுக்கும் ஆளிடம் ஏராளமாகப் பணத்தை கொடுத்து மயக்க மருந்தை வாங்கி ஜூஸில் கலந்து

தேவ்விற்கு கொடுக்க வைத்தாள்.


பின் மணமகன் புக் செய்த அறையினுள் தேவ்வை வர வைக்க இன்னொரு ஆண் தோழன் மூலம் அந்த அறைக்கு வரவழைத்து அவனிடம் பேசிக்கொண்டே இருக்க வைத்தாள். மருந்தின் வீரியத்தால் தேவ் பேசிக்கொண்டு இருக்கும் போதே தலை சுற்ற ஆரம்பித்தது பின் அவன் எழுந்தபோது அவனின் தலை பாரமாக இருந்தது. அப்போது பக்கத்தில் பிரனிதா அழுவது போல் நடித்துக்கொண்டிருந்தாள்.

 

"ஏன் தேவ் கல்யாணம் பண்ண மாட்டீங்க ஆனா என் கூடத் தப்பு பண்ணிருக்கீங்க" என்று நடித்தாள். தனக்கு என்ன நடந்தது என்று யோசித்துக் கொண்டிருந்த தேவ்விற்கு பிரனிதாவின் மீது சந்தேகம் இருந்தது. ஆனால் அவனை யோசிக்க விடாமல் அங்கு இருந்த அனைவரையும் கூப்பிட்டு தேவ் தன்னை கெடுத்து விட்டான் தன் வாழ்க்கை போனது என்று அழத் தொடங்கினாள்.


தேவ் பெரிய வீட்டு பையன் என்பதால் அந்தச் சம்பவத்தை மீடியா பிரெஸ் கவர் செய்தது. இது அனைத்துமே தேவ்வின் வீட்டிற்கு தெரிந்தது.

 

அந்த ஜூஸ் குடித்த பின் தான் தன்னுள் மாற்றம் வந்தது என உணர்ந்த தேவ் கொடுத்தவனைத் தேடினான். ஆனால் அவன் அங்கு இல்லை அடுத்து தேடியது அந்த ஆண் நண்பனை அவனும் அங்கு இல்லை அந்நேரத்தில் என்ன செய்வது என்று குழம்பிய

தேவ்விற்கு அவன் தந்தை கால் செய்தார்.


"தேவ் உன்னால அந்தப் பெண்ணிற்கு களங்கம் ஏற்பட்டு விட்டது அதனால நீ தான் அவளைத் திருமணம் செய்யணும்" என்றார். முதலில் இதை மறுத்த தேவ் பின் தன் தந்தை இவன் இவளைத் திருமணம் செய்யவில்லை என்றால் உயிரோடு இருக்கமாட்டேன் என்று மிரட்டினார்.


இதனால் வேறு வழியின்றி அனைவரும் அங்குக் கூடியிருந்த இடத்தில்,

"எல்லாரும் வாய மூடுங்க… நான் இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று பிரனிதாவின் முகத்தைக் கூடப் பாராமல் வந்துவிட்டான்.

 

அதற்கு அடுத்த நாளிலிலேயே தேவ்விற்கும் பிரனிதாவிற்கும் திருமணம் நடந்தது. ஆனால் தேவ் பிரனிதாவிடம் முகம் கொடுத்துக் கூடப் பேசவில்லை. தேவ்விற்கு நன்றாகத் தெரியும் பிரனிதா தான் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கிறாள் என்று ஆனால் அவனால் அவளுடன் உறவு கொண்டான் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு மாதம் சென்றபின் பிரனிதா கருவுற்றாள்.


அப்போது தேவ் தான் உண்மையாகவே பிரனிதாவின் வாழ்க்கையை கெடுத்து விட்டோம் என்று வருந்தியவனுக்கு அப்போது அமெரிக்கா செல்லும்படி நிலைமை இருந்தது. அப்போது தான் பிரனிதா தானும் வருவேன் என்று தேவ்வோடு செல்ல நினைத்தாள். பிரனிதாவை பிடிக்கவில்லை என்றாலும் தன் குழந்தை அவள் வயிற்றில் இருப்பதால் அவனும் அவளை அமெரிக்காவிற்கு கூட்டிக்கொண்டுச் சென்றான்.

 

பிரனிதாவிற்கு குழந்தை பிறக்கும் சமயம் அவள் மட்டும் இந்தியா வந்தாள். குழந்தை பிறந்தவுடன் அதைப் பார்த்து விட்டு மறுபடியும் அமெரிக்கா சென்றான் தேவ். அப்போது தான் பிரனிதாவின் ஆட்டம் தொடங்கியது. அவளுக்கென்று பிறந்த அந்தப் பெண்

குழந்தைக்கு பால் கூடக் கொடுக்காமல் இரவு நேர பார்ட்டி கிளப் என்று சுத்திக் கொண்டு இருந்தாள்.


குழந்தையைப் பிரியா தான் தாயைப் போல் பார்த்தாள் வேலை தவறாமல் பால் எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பாள். தேவ்விடம் பிரனிதாவின் செயல்களை வீட்டில் இருந்த அனைவரும் மறைத்தனர். ஏனெனில் அவர்களுக்கே இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழவில்லை என்பது யூகிக்கும் படியாக இருந்தது.

 

இரு மாதங்கள் கழித்து தேவ் அமெரிக்காவிலிருந்து வரும் போதே அந்த இரவு நேரத்தில் பிரனிதா இல்லை அவள் வரட்டும் பேசிக்கொள்ளலாம் என்று காத்திருந்தான். பிரனிதா ஒரு ஆணுடன் வந்து காரில் இறங்கியதை தங்கள் வீட்டு பால்கனியில் இருந்தே பார்த்த தேவ் அவளை உள்ளேச் செல்ல விடாமல், "இவ்வளவு நேரம் எங்கே போய்ட்டு வந்த? ஆறு மாச குழந்தை வீட்டுல இருக்கு அதுக்கு பால் குடுக்காமல் குழந்தையைப் பார்த்துக்காம உனக்கு என்ன ஆட்டம்?" என்று கோபமாகக் கேட்டான்.


"நீங்க வரணும்னு நான் வெயிட் பண்ணிட்டிருந்தேன் தேவ்… முதல்ல குழந்தை குழந்தைன்னு சொல்றீங்களே... இது உங்களோட குழந்தையே இல்லை எஸ் இது எனக்கும் வினய்க்கும் பிறந்த குழந்தை... இதுக்குமேல உங்ககிட்ட மறைக்க விரும்பல. நான் தான் உங்களைப் பிளான் பண்ணி கல்யாணம் பண்ணேன் எதுக்கு தெரியுமா? உங்க அழகு மேல இருந்த கிரேஸ்… நீங்க குடிச்ச ஜூஸ்ல மயக்க மருந்து கலக்க வெச்சேன். வினயை வெச்சு உங்க கிட்ட ரூம்ல பேச வெச்சி மயக்கமானீங்க அப்போ கூட நமக்குள்ள எதுவும் நடக்கல... நீங்கக் கெடுத்தீங்கனு உங்களைப் பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்."


"கல்யாணம் பண்ண அப்புறமும் கூட உங்க விரல் கூட என்னைத் தொடலை... லுக் சத்யா, நீங்கப் பயங்கர ஸ்மார்ட் கல்லூரியில் படிக்கும் போதே எல்லா பெண்களும் உங்களை கரெக்ட் பண்றது தான் பெரிய வெற்றின்னு நினைச்சாங்க... சோ நான் முயற்சி பண்ணேன். நீங்கக் கிடைக்கல அதனால தப்பான ரூட் எடுத்தேன். யா வினய் கூடயும் ரிலேசன்ஷிப்ல்ல இருந்தேன். எங்க இரண்டு பேருக்கும் பிறந்த குழந்தை தான் ஆதிரா இப்போ ஏன் இதெல்லாம் சொல்றேன்னா நீங்க எப்படி இருந்தாலும் என்ன தொட மாட்டீங்க... சோ நான் லூசு மாதிரி குழந்தைக்குப் பணிவிடை செஞ்சிட்டு என் இளமைய வேஸ்ட் பண்ண விரும்பல..."


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 2

மாயம் 8