மாயம் 6


மாயம் 6


தேவ் அவளை கண்டுகொள்ளாமல் தன்னுடைய போட் ஹியர்ஃபோன்ஸை எடுத்து போட்டுக் கொண்டவன் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். சாப்பாடு வரும் நேரம் வந்த உடனே, 'உன் நடிப்பு போதும் யமுனா சாப்பாடு வருது எனக்கு மயக்கமே வர மாதிரி இருக்கு மயங்கி விழுந்தாலும் இவன் நம்மளை வெச்சி செஞ்சிருவான் அதனால் சாப்பாட்டைச் சாப்பிடு' என்று நினைத்தவள் தூங்கி எழுந்திருக்கும் மாதிரி நடித்தாள்.




சாப்பிட்டு முடித்து விட்ட பின் அமைதியாக வானத்தை வெறித்தாள். 'இவன் கூட பத்து நிமிஷம் இருக்கிறதே பத்து வருஷம் மாதிரி இருக்கிறது' என்று மனதில் புலம்பியவள் அவனைத் தொடாமல் உட்கார்ந்து இருப்பதில் கவனமாக இருந்தாள்.




விமானம் நியூ டெல்லி வந்த பின்னர் தங்களுடைய பேக்கேஜ் கிடைத்து வெளியே வர மணி ஒன்பதரை ஆனது. பின் தன் ஓட்டுநருக்குக் கால் செய்த தேவ், "அன்குஷ் டிபார்சர் நம்பர் மூன்றுக்கு வா" என்று ஹிந்தியில் பேசினான்.




'ஐய்யோ நமக்கு ஹிந்தி வேற தெரியாதே இதைப் பற்றி நம்ம யோசிக்கவே இல்லையே' என்று நினைத்தவளை, "ஏறு" என்றான் ஒற்றை வார்த்தையில்.




இரவில் வண்ண விளக்குகளைக் கொண்டு நியூ டெல்லி பார்க்கவே அழகாக இருந்தது ஆனால் அதை ரசிக்கத் தான் யமுனாவிற்கு மனசு இல்லை. ஏர்போர்ட்டிலிருந்து இருபது நிமிஷம் பயணித்தவர்களின் கார் லுட்டேன்ஸ் பங்களா ஸ்ஸோன்(Lutyens Bungalow Zone) னில் நின்றது. பெரிய தொழிலதிபர்கள் திரைத்துறையில் இருப்பவர்கள் என்று பலர் வசிக்கும் பாஷ் ஏரியா தான் இது.




தேவ்வின் குடும்பம் இங்குக் குடிபெயர்ந்து ஆறு வருஷம் ஆகிறது என்ன தான் ஜெயக்குமார் பெரிய செல்வந்தராக இருந்தாலும் அதை அடுத்த படிக்கு கொண்டு சென்றது சத்யதேவ் தான் ஹாஸ்பிடலிலும் சரி இன்ஸ்டிடியூஷனாலும் சரி ஐடி கம்பெனி என்றாலும் சரி தேவ் அனைத்தையும் புதிப்பித்தான் சென்ற ஆண்டு இந்தியாவிலேயே பெஸ்ட் பிசினஸ் இன்னோவேட்டர் என்று அவார்ட்டை வாங்கினான்.




கார் நின்ற இடத்தைப் பார்த்த யமுனா ஆச்சயரியப்பட்டாள். ஆச்சயரியப்பட்டாள் என்பதை விட அதிர்ந்தாள் என்று கூட கூறலாம். அந்த இரவிலும் மேலே பொறுத்தப்பட்டிருந்த பல வித வண்ண விளக்குகளின் வெளிச்சத்தில் தேவ்வின் பங்களாவைக் கண்டாள். சுற்றி தோட்டம் ஆள் அரவம் இல்லாத இடம் பார்க்க அழகாக இருந்தாலும் யமுனாவிற்கு ஏதோ சிங்கத்தின் குகைக்குள் செல்வதைப் போல இருந்தது.




அந்த பெரிய பிரம்மாண்ட கேட்டை செக்யூரிட்டி திறந்து விட்ட பின் உள்ளே நுழைந்த அந்த ஜாக்குவார் கார் வீட்டை அடைவதற்கே ஐந்து நிமிடம் ஆனது அதுவரை சுற்றி கார்டன் நீச்சல் குளம் டென்னிஸ் கோட் பார்க் ஏரியா என்று இருந்தது. பக்கத்தில் ஒரு பெரிய கார் ஷெட் அதில் ஐந்து கார்கள் இருந்தது அனைத்தும் உலகத் தரம் வாய்ந்த கார். இது உண்மையா இல்ல கனவா என்று அதிர்ந்தாள் யமுனா.




பணக்காரர்கள் என்று தெரியும் ஆனா இவ்வளவு என்று யமுனா எதிர்பார்க்கவில்லை. 'அய்யோ இந்த பங்களாவை பார்த்தா வயிறே கலக்குதே' என்று பயந்தாள் யமுனா. முதல் முறையாக தன் அத்தை விஜயலட்சுமியை திட்டி தீர்த்தாள் யமுனா மனதில், 'இவங்க அவசரப்பட்டு வாக்கு கொடுத்து வெங்காயம் கொடுத்து இப்போ என் வாழ்க்கையே நரபலி கொடுத்த ஆடு மாதிரி ஆயிடுச்சே' என்று மனதில் புலம்பியவளுக்கு பயத்தில் கையெல்லாம் வேர்த்தது.




அந்த பெரிய வீட்டின் முன் கார் நின்றது யமுனாவின் கை நடுங்க ஆரம்பித்தது. தேவ் காரிலிருந்து காஷூவலாக இறங்கி ஓட்டுநரிடம் காரை பார்க் செய்யச் சொல்லிவிட்டு யமுனாவிடம் திரும்பியவன், "இறங்கு" என்று கம்பீரமாகச் சொன்னான்.




'இவன் பண்ண வேலைக்குக் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் வரான் ஆமா இவனுக்குத் தான் குடும்பமே கூட்டே அப்போது என்ன ஜாலியா தான் இருப்பான் ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையே கெடுத்துட்டு எப்படி இருக்கிறான் பாரு படுபாவி' என்று மனதில் வஞ்சித்துக் கொண்டே கீழே இறங்கினாள்.




இவர்கள் வருகையை எதிர்பார்த்து இருந்ததாலோ என்னவோ வீடே வெளிச்சமாக விழாக்கோலமாகக் காட்சியளித்தது. தேவ் மற்றும் யமுனா வீட்டு வாசலை நெருங்கும் போதே அந்த வீட்டின் மூத்த தலைவி சீதாலட்சுமி தேவ்வின் தாய் மற்றும் பிரியா இவர்களை ஆரத்தி எடுத்தார்கள் பின்னாடி ஜெயப்பிரகாஷ் நின்றுக் கொண்டு இருந்தார். அவர்கள் தேவ்வுடைய தாய் தங்கையாகத் தான் இருக்கும் யூகித்து யமுனா இந்த குடும்பத்தையே மனதில் வஞ்சித்தாள்.




அவர்களை உள்ளே வருமாறு அழைத்தனர். தன்னுடைய லக்கேஜை வேலையாட்கள் மேலே எடுத்துச் சென்றதை யமுனா கண்டாள். அவர்களிடம் இது வரை ஒரு வார்த்தை பேசாத யமுனாவின் மனநிலை அவர்களுக்கே புரிந்தது என்ன இருந்தாலும் தன் மகன் மிரட்டி அல்லவா ஒரு பெண்ணை திருமணம் செய்து வந்திருக்கிறான்.




"ஆதிரா என்ன பண்றா அம்மா?" என்ற தேவ்விடம், "அவ பிரியா அறையில் தூங்குறாப்பா" என்றார் அன்னை... தன்னுடைய மனப் போராட்டத்தில் இவர்கள் பேசியதைத் தவறவிட்ட யமுனாவிடம் வேலையாள், "மேலே உங்கள் அறை தயாரா இருக்குமா வாங்க" என்று அழைத்தாள்.




தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவளோடு மாடிக்குச் சென்றாள் யமுனா. வீட்டில் அனைவருக்கும் ஒரு குழப்பம் இருந்தது யமுனாவிற்கு ஆதிரா பற்றித் தெரியுமா? இல்லையா? என்று... ஆனால் அவனிடம் இதைப் பற்றிக் கேட்கத் தயங்கினர்.




பிரியாவை அழைத்த தேவ், "ஆதிரா ஒரு வாரம் உன் கூடவே இருக்கட்டும் அதுக்கு அப்புறம் அவளை யமுனா தான் பார்க்கணும் ஏனா இன்னும் கண்டிப்பா ஒரு மாசத்துக்குள்ள உனக்கும் திவாகருக்கும் கல்யாணம் நடக்கும். அப்புறம் ஆதிரா உன்னை நினைத்து ஏங்கிடுவாள் அதனால் யமுனா தான் இனிமேல் ஆதிராவை பார்க்கணும்" என்றான் தீர்மானமாக.




சற்று தயங்கிய பிரியா, "அண்ணா அவங்கள பார்த்தா என்னை விட சின்ன பொண்ணு மாதிரி தெரியுது அவங்க எப்படி அண்ணா ஆதிராவை பாரத்துப்பாங்க" என்று அமைதியாகக் கேட்டாள்.




"அது யமுனாவோட தலைவிதி அதைப் பற்றி நீ கவலைப்படாத" என்று சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றுவிட்டான்.




"என்னால் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை போச்சோனு தோணுது மா என்று" தன் தாயிடம் சாய்ந்து அழுதாள் பிரியா.




"தேவ் ரொம்ப நல்லவன் மா கெட்டிக்காரன்" என்றார் சீதா.





"ஏன் சீதா யமுனாக்கு வந்த மாதிரி நிலைமை பிரியாவிற்கு வந்தால் நம்மளால் ஏத்துக்க முடியுமா சொல்லு" என்று கேள்வியாய் கேட்டார் ஜெயப்பிரகாஷ். அதற்கு வாயடைத்துப் போனார் சீதா.




"இன்னும் ஆதிரா பத்தி அந்த பொண்ணுக்கு தெரியாதுனு தான் நான் நினைக்கிறேன்" என்று கூறிவிட்டு உறங்கச் சென்று விட்டார் தேவ்வின் தந்தை.




சீதாலட்சுமியும் பிரியாவை ஆறுதல் படுத்தி விட்டு உள்ளே படுக்கச் சென்று விட்டார். பிரியாவிற்கு ஏனோ மனது சமாதானம் அடையவில்லை நேரே பூஜை அறைக்குச்சென்று கடவுளிடம் மண்டியிட்டு வேண்டினாள். "முருகா நீ தான் இந்த குடும்பத்திற்குச் சந்தோஷத்தைக் கொண்டு வரவேண்டும்" என்று வேண்டினாள்.




வேலைப் பார்க்கும் பெண்மனி காட்டிய அறையில் உள்ளேச் சென்ற யமுனாவிற்கு அப்போது தான் மூச்சே விட முடிந்தது. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் அறை போல இருந்த அந்த அறையை பார்த்த யமுனாவிற்கு வயிறு கலக்கியது. ஏதோ மர்ம குகை போல உணர்ந்தவளுக்கு அந்த அறையின் அழகை அதில் இருந்த அழகிய ஓவியங்களை ரசிக்க மனம் வரவில்லை மாறாக பயந்தாள்.




"பால் எடுத்துட்டு வரவாம்மா நீங்க விமானத்துலயே சாப்பிட்டீங்கனு சின்ன ஐய்யா சொன்னாரு பால் சாப்பிடுறீங்களா?" என்று கேட்டாள் அந்த வேலைக்கார பெண்மணி. ஐம்பதை நெருங்கும் அந்த வேலைக்கார அம்மாவைப் பார்த்த யமுனா முதல் முறையாக தன் தாயை பிரிந்த வலியை உணர்ந்தாள். சாந்தி உயிரோடு இருந்தால் இப்போது அப்பெண்மணியின் வயது தான் ஏறத்தாழ இருக்கும். அவரைப் பார்த்து கண் கலங்கிய யமுனா யாரும் இல்லாத அனாதையாயாக உணர்ந்தாள்.





தனக்கு இப்போது தாய் இருந்தால் கண்டிப்பாக இந்த நிலமை வந்திருக்காது. "எனக்கு எதுவும் வேண்டாம் மா என்னை தனியா விடுங்க" என்று அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்த கமலாம்மா கவலையோடு வெளியேச் சென்றார்.




கமலா மூன்று வருடங்களாக இங்கு வேலை பார்க்கிறார். தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்யும் ஆற்றலைக் கொண்டவர் அவர் செய்யும் சமையல் சத்யதேவ்வின் மொத்த குடும்பத்துக்கும் ரொம்ப பிடிக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்த மாதிரி உணவை தயாரிப்பதில் கமலாம்மாக்கு நிகர் யாரும் இல்லை. யமுனா வேண்டாம் என்று சொன்ன பின் வெளியே வந்த கமலாவை எதிர்கொண்டது தேவ் தான்.




"கமலாம்மா என்ன ஆச்சு கையில பாலோடு திரும்பி வரீங்க" என்று யமுனாவின் மூடிய அறையை ஒரு பார்வை விட்டான்.




"அது வந்து சின்னய்யா யமுனாம்மாக்கு பால் குடுக்க போனேன் வேண்டாம்னு சொல்லிட்டாங்க" என்று தயங்கி கூறினார்.




"சரி நீங்க கீழே போய் படுத்துக்கோங்க" என்று அவரை அனுப்பிய தேவ் நேராக யமுனாவின் மூடிய கதவின் அறையைத் திறந்து உள்ளேச் சென்றான்.அந்த அறையில் இருக்கும் பால்கனியில் வெளியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.





"யமுனா" என்று கணீரென்று அழைத்த தேவ்வின் குரலில் திடுக்கிட்டாள்.




"ஹலோ ரும்க்குள்ள வரதுக்கு முன்னாடி கதவை தட்டிட்டு வாங்க" என்றாள் யமுனா.




"லுக் யமுனா, திஸ் ஸ் மை ஹோம் அன்ட் ஐ ஹேவ் ரைட்ஸ் டு கம் எனிவேர் இன்ஸைடு சோ ஷட் அப்" என்றான் திமிராக.




"உனக்கு வேணும்னா மேல லாக் போட்டுக்கோ நீ அப்படி லாக் போடலனா கதவை தட்டிட்டு வரணும்னு இந்த தேவ்க்கு அவசியம் இல்லை" என்றவன், "நீ எக்காரணம் கொண்டும் இந்த வீட்டுல இருக்கிற யார் கிட்டயும் உன் திமிரு தனத்த காட்டக்கூடாது அப்படி எதாவது நடந்ததுனு தெரிஞ்சா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் நாளைக்கு காலையிலே உன் மாமா வீட்டுக்கு போகணும் ரெடியா இரு" என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேச் சென்றான்.




'இப்போ மட்டும் மனுஷனாவா நடந்துருக்கான் சரியான காட்டுமிராண்டி' என்று தனக்குள் தேவ்வை திட்டியவள் படுக்கச் சென்றாள். அடுத்த நாள் காலை யமுனா எழுந்திருக்க மணி எட்டு ஆனது. 'என்ன செய்ய?' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு டிரெஸ்ஸிங் டேபிளில் ஒரு நீல நிற பட்டுப்புடவை மற்றும் அதற்கேற்ற பிளவுஸ் தங்க நகைகள் இருந்தது. அவள் 'இதெல்லாம் என்ன?' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவளுடைய அறையை யாரோ தட்டினர்.




'நிச்சயமா அவனா இருக்காது அவனா இருந்தால் தட்டாமல் உள்ளே வந்திருப்பான்' என்று நினைத்தவள், "வாங்க" என்று சத்தமாக சொன்னாள். அங்கே ஒரு வேலையாள் போன்ற பெண் முப்பது வயதை ஒட்டி இருக்கும் அவள் உள்ளே வந்து ப்ரேக்பாஸ்டை அந்த ரூமிலியே இருக்கும் குட்டி டைனிங் டேபிளில் வைத்து விட்டு, "அம்மா உங்கள சத்யா சார் குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டவுடன் இந்த நகை புடவை கட்டிட்டு வர சொன்னாரு" என தன் கடமை முடிந்தவளாய் கிளம்பி விட்டாள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2