மாயம் 5

மாயம் 5

இவர்கள் பேசிய சலசலப்பிலேயே விழித்த யமுனாவிற்கு அவளுடைய செல்லிற்குக் கால் வந்தது. ஏதோ தெரியாத நம்பர் என்று தூக்க கலக்கத்திலேயே அட்டெண்ட் செய்த யமுனா, "ஹ... லோ!!!" என்று சோம்பல் முறித்தாள்.


"இன்றைக்குக் கல்யாணம் இருக்குனு தெரிந்தும் இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க யூ இடியட் இன்னும் ஒன் ஹவர்ல நீ வடபழனி கோவில்ல இருக்கவேண்டும் இல்லன்னா என்னுடைய இன்னொரு ஃபேஸ் நீ பார்ப்ப உன்னை சும்மா விட மாட்டேன்" என்று கட் செய்து விட்டான். தூக்கக் கலக்கம் போய் யார் இது இவ்வளவு கடுமையாகப் பேசியது என்று ட்ரூகாலரில் பார்த்தாள்.


அதில் "சத்யதேவ்" என்று இருந்தது. அதைப் பார்த்தவுடன் படபடப்பில் தொலைப்பேசியைக் கட்டிலில் போட்டாள்.


"ஏய் இன்றைக்கு உனக்கு கல்யாணமென்று தெரிந்தும் இப்படி தூங்குற" என்றாள் திவ்யா. அவளைக் கோபத்தில் எரிக்கும் பார்வையைப் பார்த்தாள் யமுனா.


"ஆமா இது ஆசைப்பட்டு பண்ணுற கல்யாணம் பாரு அதான் இப்படி தூங்குறேன் நீயெல்லாம் என்னைக் கேள்வி கேட்காத அந்த தகுதி உரிமை உனக்கு இல்லை" என்று மூஞ்சில் அடித்த மாதிரி கூறினாள் யமுனா. 


பின் பல்லைத் தேய்த்துக் குளிக்கச் சென்றவள் ஷவரை ஆன் செய்தாள். "அவன் எவ்வளவு திமிரு பிடித்தவனா இருக்கிறான்... கடவுளே எனக்கு இப்படி ஒரு நிலைமை கொண்டு வந்துட்டீங்களே கண்டவன்லாம் என்னை மிரட்டுறான் என்னை அவன் கீ கொடுத்த பொம்மை போல ஆக்கிட்டான்" என்று ஷவரில் புலம்பிக்கொண்டு இருந்தவள் கடைசியில் அழுது விட்டாள். 


குளித்து விட்டு நேரே கண்ணாடி முன் வந்து,  "இப்போலாம் நீ ரொம்ப அழுகுற யமுனா பீ போல்ட் அன்ட் பீ ஸ்டாங்க்" என்று தன்னையே பார்த்துச் சொல்லிக் கொண்டாள்.


"உனக்குச் சாரி ப்ளவுஸ் நீ போட வேண்டிய நகைகள் எல்லாம் இருக்கு இதில் பூ இருக்கு வெச்சிட்டு கிளம்பு" என்று சொல்லும் போதே திவ்யாவிற்கு மயக்கம் வந்தது. தீடிரென்று திவ்யாவுக்கு இப்படி ஆனவுடன் அவளைத் தாங்கிப்பிடித்தாள் யமுனா.


"என்ன ஆச்சு?" என்று தண்ணீர் தெளித்தாள்.



அதில் முழித்த திவ்யா, "பிரக்னன்சி இயர்லி ஸ்டேஜில் இப்படி தான் இருக்கும்" என்றாள்.


"சாப்பிடாமல் இருந்தால் அப்படி தான் தப்பு பண்ண தெரிது ஆனால் குழந்தைக்காகச் சாப்பிட தெரியவில்லை செல்ஃபிஷ் ஃபெல்லோஸ்" என்று புடவையை அணிந்தாள். "இதெல்லாம் என்ன?" என்று கட்டிலிலிருந்த நகைகளைப் பார்த்துக் கேட்டாள். 


"தேவ் அத்தான் இதைப் போடச் சொல்லி குடுத்திருக்காங்க கண்டிப்பா போடணுமாம்" என்று தலைகுனிந்து சொன்னாள். எல்லாத்தையும் வெறுப்போடு அணிந்துக்கொண்டவள் அந்த பூவை தலையில் வைத்து விட்டு, "கிளம்பலாம்" என்றாள்.


யமுனாவின் முதற்கட்ட நடவடிக்கையே திவ்யாவிற்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.எப்பவும் யமுனா குளித்து முடித்து விட்டு அலுவலகம் அல்லது வெளியே கிளம்பும் போது தினமும் கண்ணாடியைப் பார்த்து, "ஏய் திவி, நான் அழகா இருக்கேன்ல" என்று வழிவாள்.அதை எப்போதும் திவ்யா ரசிப்பாள். ஆனால் இன்று அவள் அப்படி கேட்கவில்லை அது பரவாயில்லை ஆனால் அவள் கிளம்பி கண்ணாடியைக் கூட பார்க்கவில்லை என்றால் அவள் மனதில் எவ்வளவு வலி வெறுப்பு இருக்கிறது என்பதை திவ்யா உணர்ந்தாள். 


இருவரும் கிளம்பி கீழே வந்தனர் யமுனா திவ்யாவிடம் பேசவில்லை பேசவும் விரும்பவில்லை. அங்கு சத்யதேவ் வரவழைத்த கார் இருந்தது அதில் ஏறினர். கார் வடபழனி கோவிலை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது.


"யமுனா நீ பார்க்க ரொம்ப அழகா இருக்க... தேவதை மாதிரி என் கண்ணே பட்டுடும் போல" என்றாள் திவ்யா. இதைக் கேட்டு தன் முகத்தை இன்னொரு பக்கம் திருப்பிக் கொண்டாள் யமுனா. நமுட்டு சிரிப்பு செய்து குணாவிற்கு கால் செய்த திவ்யா தாங்கள் வந்துக் கொண்டிருப்பதாய் கூறினாள். 


வடபழனி கோவிலில் இறங்கிய பின் திவ்யா கோவிலின் உள்ளே நடந்துக் கொண்டிருந்தாள். ஆனால் பின்னாடி யமுனா வராமல் வெளியே நின்றுக்கொண்டிருந்தாள். அவள் மனநிலை இவளுக்குப் புரிந்தது ஆனால் இவளால் அங்கு என்ன செய்ய முடியும். "கடைசி நிமிஷத்தில் இந்த படத்துலலாம் வர மாதிரி வில்லனோடு கல்யாணம் நின்னா நல்லா இருக்கும்ல முருகா" என்று கொடி கம்பத்தைப் பார்த்து சத்தமாக வேண்டினாள் யமுனா.


"நீ வேண்டினா நடக்கிறதுக்கு இது படமும் இல்லை உன்னை காப்பாற்ற இங்க யாரும் இல்லை ஒரு மணி நேரத்தில் இங்க இருக்கணும்னு சொன்னேன். ஆனால் நீ முகூர்த்தத்திற்கு பத்து நிமிஷம் முன்னாடி வர" என்று அவளின் கையை முறுக்கினான் சத்யதேவ் தன் கம்பீரக் குரலில். 


'ஐயோ இவள் ஏன் இப்படி ஆப்பை விலை கொடுத்து வாங்குறாள் கடவுளே' என்று நினைத்த திவ்யா, "ப்ளீஸ் அவளை விடுங்க டிராஃபிக் அதான் தாமதம் ஆயிடுச்சு சாரி" என்றாள்.


"ஆமாம் அண்ணா இந்த தடவை விட்டுருங்க பாவம் அவங்க" என்று தூரத்தில் இருந்தவன் சத்யதேவ் அவள் கையை முறுக்கியதைப் பார்த்து ஓடி வந்தான். பின் அவளின் கையை விடுவித்தவன், "திஸ் ஸ் த லாஸ்ட் வார்னிங் ஃபார் யூ உள்ளே போ" என்றான். 


அவன் முறுக்கிய இடம் பயங்கரமாக வலித்தது யமுனாவிற்கு... அங்கு ஐயர் இரண்டு மாலைகளோடு இவர்களுக்காகக் காத்திருந்ததைப் பார்த்தவளுக்குப் பயத்தில் வயிறு கலக்கியது. சத்யதேவ் மாலையை வாங்கிக் கொண்டு அதை அணிவித்து அமர்ந்தான். பின் யமுனாவை அமரச் சொன்னார் ஐயர். இதெல்லாம் கனவாய் இருக்கக் கூடாதா என்றவளின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கக் காத்துக் கொண்டிருந்தது.


"யமுனா போ உன்னைத் தான் கூப்பிடுகிறார்கள்" என்று அவளை உலுக்கினாள் திவ்யா படபடப்பாக. அதில் நினைவுக்கு வந்தவள் எதிர்கொண்டது சத்யதேவின் அனல் வீசும் பார்வை...


"எதற்கு இப்போது சீன் கிரியேட் பண்ற? இப்போது நீயா வந்து உட்காருறியா இல்லை நான் வந்து உன்னை இழுத்துட்டு வரணுமா?" என்று கர்ஜித்தான். அதில் பயந்தவள் அவளே போய் மணப்பெண் இடத்தில் உட்கார்ந்தாள். அவளுக்கு மாலையைப் போட்டாள் திவ்யா.


யமுனாவின் கழுத்தில் அந்த கனமான மங்கள நாண் சத்யதேவ்வின் கையால் ஏறியது. யமுனாவின் கண்களில் கண்ணீர்த் துளி ஆறாய் வந்தது. திவ்யா தங்கை முறை ஆக முடியாது என்பதால் சத்யதேவ்வே மூன்று முடிச்சையும் போட்டு அவள் நெற்றியில் குங்குமம் வைத்தான். பின் அவளின் கையைப் பிடித்து மூன்று முறை அக்னிக் குண்டத்தைச் சுற்றி வந்தான்.


அடுத்து சாமி கும்பிட அழைத்துச் சென்றான். அனைவரும் கடவுளைக் கும்பிட யமுனா மட்டும் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் அமைதியாக இருந்தாள்.


'உங்கள் கிட்டக் கேட்டேனே! முருகா காப்பாற்றச் சொல்லி இப்படி என்ன கை விட்டுவிட்டீர்களே!' என்று வடபழனி முருகரை வெறித்துப் பார்த்தாள்.


பின் தேவ் யமுனாவை அழைத்துக் கொண்டு ரிஜிஸ்டர் அலுவலகத்திற்குச் சென்றான். திவ்யாவும் குணாவும் அவர்களோடு சென்றனர். காரில் தேவ் வண்டியை ஓட்ட குணாவும் திவ்யாவும் பின்னாடி அமரச் சென்றனர். அப்போது வேகமாக யமுனா பின்னே போய் அமர்ந்தாள் தேவின் பக்கத்தில் உட்கார விருப்பம் இல்லாமல். இதைக் கண்ட குணா மற்றும் திவ்யா திகைத்தனர்.


ஆனால் தேவ் அதை மதிக்கவே இல்லை. "குணா நீ முன்னாடி வா" என்று வண்டியை எடுத்தான். தாலி தன் கழுத்தில் ஏறியதிலிருந்தே யமுனா யாரோடும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவளைப் பொறுத்த வரைக்கும் அந்த மூவருமே அவளுக்கு வேண்டாதவர்கள் தான்.


ரிஜிஸ்டர் அலுவலகம் சென்றதுமே அங்கு வேலை வேகமாக நடந்தது. யமுனாவின் ஃபுரூப்ஸ் கேட்கும் போது திவ்யா அவள் பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.


 'என்னுடைய ப்ளவுஸ் அளவு என்னோட ஃப்ரூப்ஸ் எல்லாத்தையுமே திருடியிருக்கா இவள்... ச்ச தன்னுடைய சுயநலத்திற்காக எந்த எக்ஸ்டென்ட் வேணா போவாள் போல' என்று மனதில் அனலாய் கொதித்தாள். 


ஃபோட்டோ எடுக்க அழைத்தனர் அப்போது திவ்யா யமுனாவை அழைத்தாள். 


"ஏய் திருடி நீ என்கிட்ட பேசாத எனக்கு அப்படியே நெருப்பு மேல் நிற்கிற மாதிரி இருக்கு. நீ எப்படி என்னோட  ஃப்ரூப்ஸ் என் பெர்மிஷன் இல்லாம திருடலாம்?" என்று கொதித்தாள்.


"அவளை இப்படிப் பண்ணச் சொன்னது நான் தான் இப்போ உனக்கு அதனால் என்ன பிரச்சனை?" என்று அதட்டினான் தேவ். இருக்கிற கடுப்பில் இவன் கிட்ட கத்துனோம்னா இவன் நம்மளைச் சும்மா விட மாட்டான் என்று அமைதியாக  ஃபோட்டோ எடுக்கச் சென்றாள் யமுனா. 



'ஷப்பா இப்பயே கண்ண கட்டுதே! இன்னும் ஒரு ஒரு உண்மை தெரிந்தால் நம்ம சோலி முடிஞ்சிரும்னு நினைக்கிறேன்' என்று நினைத்தாள் திவ்யா. அப்போது தேவ், குணா யாரிடமோ அங்குப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.


"ஏம்மா இந்தா உன் கணவருடைய ஆதார் கார்ட் வாங்கிக்கோ" என்று அங்கு பணிபுரியும் ஒரு பெண் யமுனாவை அழைத்து தேவ்வின் ஆதார் கார்டைக் கொடுத்தார். எதேர்ச்சையாக அந்த கார்டைப் பார்த்தவள் அவனுடைய பிறந்த தேதி வருடம் பார்த்தவள் வயதை கணக்குப் பண்ணி அதிர்ந்தாள்.


 'என்னது! இந்த ஆளுக்கு வயசு இருபத்தி ஒன்பதா? கடவுளே என்னை விட ஏழு வயது பெரியவரா!' என்று அதிர்ச்சியில் அங்குப் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். 


'ஒரு வேளை நாம் தவறாகப் பார்த்து விட்டோமா!' என்று மறுபடியும் பார்த்தாள். அவனுக்கு இருபத்தி ஒன்பது வயசு தான் என்பதை உறுதிப்படுத்தியவள் வந்த கோபத்தில் ஆதார் கார்டை தூக்கி எறிந்தாள் அது நேராக தேவ்வின் காலடியில் விழுந்தது. அவனிடம் சண்டை போட வேண்டும் என்று மனது தூண்டியது அவளால் ஏழு வயது பெரியவனை ஏத்துக் கொள்ள முடியவில்லை அதனால் வேண்டும் என்றே அவன் காலடி முன் எறிந்தாள். அதைப் பார்த்த தேவ் அவளை முறைத்தான் இம்முறை இவளும் முறைத்தாள்.


"என்னை விட ஏழு வயது பெரியவர் நீங்க என்னை எப்படி கல்யாணம் பண்ணலாம் எனக்கு வயசு இருபத்தி இரண்டு உங்களுக்கு ஆல்மோஸ்ட் முப்பது" என்று கத்தினாள். 


அவனுக்கு எழுந்த கோபத்தில் அவளின் கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டுச் சென்றான். அவனின் இந்த செயல் அதிர்ச்சி அளித்தாலும் யமுனா சண்டை போட வேண்டும் என்ற நோக்கத்துடனே இருந்தாள். அவளால் ஏழு வயது பெரியவனாக இருக்கும் ஒருவனைக் கணவனாக நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.


அவளை ஒரு இடத்தில் விட்டவன், "உனக்கு மேனர்ஸ்னா என்னனு தெரியுமா? பொது இடத்தில் இப்படி முட்டாள் மாதிரி பிஹேவ் பண்ற அப்போ திவ்யாவை கத்தின அங்கேயே எனக்குப் பொறுமை போச்சு. இப்போ என்னோட ஆதார் கார்ட்டை தூக்கி எறிந்திருக்க திஸ் ஸ் தி லிமிட்" என்று ஒற்றை விரலை அவள் முன் நீட்டி மிரட்டினான்.


"உங்கள் வயசு இருபத்தி ஒன்பது" என்று சொல்லி முடிக்கும் போதே, "என் வயது இருபத்தி ஒன்பதோ இல்லை முப்பத்தி ஒன்பதோ எதுவா இருந்தாலும் உன் விதி இது தான் இதற்கு மேல் ஒரு வார்த்தை பேசாத. நீ தூக்கி எறிந்த ஆதார் கார்ட்டை நீயே எடுத்து என்கிட்ட அப்படி பண்ணதுக்கு மன்னிப்பு கேட்டு கொடு" என்று கர்ஜித்தான். 


திவ்யாவும் குணாவும் பொம்மை மாதிரி நின்றனர். நம்மைச் சுற்றி வில்லன்களாக இருக்கும் போது தன்னால் இதற்கு மேல் என்ன போராட முடியும் என்று உள்ளே வந்து அதை எடுத்து அவனிடம் கொடுத்து மன்னிப்பு கேட்டாள். கையெழுத்து முடிந்தவுடன்,

"இன்றைக்கு ஈவ்னிங் சிக்ஸ்க்கு டெல்லிக்கு விமானம் திவ்யா... யமுனா திங்க்ஸ் வெகேட் பண்ண உதவி பண்ணிடு" என்று சொன்னான்.


"தேவ் அத்தான் யமுனா என்கிட்ட பேச மாட்டா அவளுக்கு என் மேல் கோபம் இருக்கிறது அதனால்..." என்று திவ்யா சொல்லிமுடிப்பதற்குள், "நீ தான் அவளுக்கு உதவி பண்ணவேண்டும் மூன்று மணிக்கு ஏர்ப்போர்ட்ல இருக்கவேண்டும் ஒன் தேர்ட்டிக்கு நான் அவளை பிக் அப் பண்ண வருவேன் அவள் அப்போது கீழே இருக்கவேண்டும்" என்று அழுத்தமாக யமுனாவைப் பார்த்து திவ்யாவிடம் சொன்னான்.


பின் இருவரையும் ஒரு கேப் புக் பண்ணி அனுப்பி வைத்தவன் குணாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய ஆபிஸிற்குச் சென்றான். அங்கு சென்னை ஆபிஸ் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்து விட்டு தான் தங்கி இருக்கும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலிற்குக் கிளம்பினான். 


வழியில் செல்லும் போது யமுனாவிற்கும் திவ்யாவிற்கும் பேச்சுவார்த்தை இல்லை. ஹாஸ்டல் இன்சார்ஜ் யிடம் விஷயத்தைச் சொல்லி அவளுடைய திங்க்ஸை எடுத்து வைத்தாள். யமுனாவிற்கு ஏனோ மூளையே வேலை செய்ய மறுத்தது திவ்யாவிடம் கத்த தோணவில்லை ஏனெனில் அவள் திவ்யாவை அடியோடு வெறுத்து விட்டாள். திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி முடித்து விட்டு மறுபடியும் குளித்தவள்  ஒரு சல்வாரைப் போட்டு கட்டிலில் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.


திவ்யாவுக்கு யமுனாவை இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாட்டத் தாமும் ஒரு காரணம் அத்தோடு தம்மால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்று தன் நிலையை நினைத்து அழுதாள். 


மணி ஒன்று ஆன போது திவ்யா ஹாஸ்டலில் ரெடி ஆன சாப்பாட்டை யமுனா பக்கத்தில் வைத்தாள். இரண்டு பேரும் காலையில் இருந்து எதுவுமே சாப்பிடவில்லை. திவ்யா பாலாவது குடித்தாள் ஆனால் யமுனா விரதம் இருப்பது போல தண்ணீர் கூட குடிக்காமலிருந்தாள். 


அந்த சாப்பாடு அனாதையாக இருந்தது யமுனா அதைத் தொட வில்லை மணி ஒன்று இருபத்தி ஐந்து ஆன போது கால்கள் இரண்டும் தானாக தன் லக்கேஜை எடுத்துக் கொண்டு கீழேச் சென்றது. அவனிடம் போராடும் வலு அவளுக்கு இப்போது இல்லை சாப்பிடாத வயிறும் வாழ்க்கையின் வெறுப்பும் மனதை உலுக்கின. இப்போது தாமாகச் செல்லவில்லை என்றால் அவன் ஹாஸ்டல் என்று கூட பார்க்காமல் உள்ளே வந்து கத்துவான். அதற்குப் பயந்தே கீழேச் சென்றுவிட்டாள் அவள் பின் இன்னொரு லக்கேஜ் எடுத்துக்கொண்டு திவ்யாவும் சென்றாள்.  


ஐந்து நிமிடத்தில் தேவ் ஓட்டுநரோடு காரில் வந்தான். பின்னாடி டிக்கியை திறந்து விட்டான் யமுனாவும் திவ்யாவும் லக்கேஜுகளை வைத்தனர். 'பேக்குகளைக் கூட தூக்க மாட்டானா எனக்கு சாப்பிடாமல் மயக்கம் வர மாதிரி இருக்கிறதே!' என்று நினைத்தவள்,  'இவன் தான் ஈவு இரக்கம் இல்லாதவன் ஆச்சே! அதான் ஹெல்ப் கூட பண்ணாமல் இருக்கான் கல்நெஞ்சக்காரன்' என்று நினைத்தவள் வேறு வழியின்றி பின்னாடி அமர்ந்த தேவ்வின் பக்கத்தில் அமர்ந்தாள்.


"ஓகே திவ்யா கிளம்புறோம் உங்களுக்கும் குணாக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்கும்" என்றான்.


"ம்ம், சரி அத்தான். யமுனா காலையிலிருந்து சாப்பிடலை அத்தான்" என்றாள் சோர்வாக. யமுனாவை அழுத்தமாகப் பார்த்தான். அவளிடம் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் முன்னால் சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


"நான் பார்த்துக்குறேன் திவ்யா" என்று காரை எடுக்கச் சொல்லி கிளம்பினான். 


காரில் செல்லும் போது யமுனாவிடம் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லை அவள் ஒருத்தி இருப்பதையே கருதாத தேவ் அவனின் தந்தைக்கு கால் செய்தான். "அப்பா நான் சென்னையிலிருந்து டெல்லிக்கு வரேன் யமுனாவும் கூட வரா அம்மாவிடம் சொல்லிடுங்க" என்றான்.


'இவன் குடும்பமே இந்த கேவலமான கல்யாணத்துக்குக் கூட்டா' என்று மனதில் நினைத்தாள் யமுனா. 


அடையார் எல்பி சாலையை நெருங்கும் போது பிரபல சைவ உணவகம் இருந்தது. அதை பார்த்து விட்டு,


 "சாப்பிடுறியா?" என்று கேட்டான்.


"வேண்டாம்" என்றாள் ஒற்றை வார்த்தையாக.


"இங்க பார் ஏர்ப்போர்ட்ல மெக்டி கெஃப்சி மாதிரி ஃபுட்ஸ் தான் கிடைக்கும் சிக்ஸ்க்கு பிளைட் டின்னர் கொடுக்க எட்டு ஆகும் அதுவரைக்கும் உன்னுடைய உண்ணாவிரதம் கன்டினியூ பண்ண போறியா? சும்மா தேவை இல்லாமல் சீன் கிரியேட் பண்ணாத. வேண்டுமானால் சொல்லு நிறுத்த சொல்றேன். உன்கிட்ட வந்து என்னால் கெஞ்சிட்டு இருக்க முடியாது" என்றான் தீர்மானமாக.


"வேண்டாம்" என்றாள் அழுத்தமாக. 'இவனா என்னை பிடிக்கலனு சொல்லி துரத்தி விடுற மாதிரி பண்ணனும். ஒரு நாள் பட்டினி கிடந்தால் செத்துப் போக மாட்ட யமுனா சாப்பிடாத' என்று தன் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். 


ஏர்ப்போர்ட் வந்தவுடன் செக் இன்ஸ் பாஸ் வாங்கிய உடன் அனொன்ஸ்மென்ட்டிற்காக அமர்ந்திருந்தனர். தேவ் உட்கார்ந்த பின் வேறு ஒரு லைனில் அமர்ந்தாள் யமுனா. தேவ்வும் அவளைக் கண்டுக் கொள்ளவில்லை.

வாட்ஸ்அப்பில் யமுனாவிற்கு மெசேஜ் அனுப்பலாம் என்று திவ்யா நினைத்தாள். ஆனால் யமுனா அவளை எல்லா அப்ளிகேஷன்லயும் பிளாக் செய்து வைத்திருந்தாள்.


"யமுனா நீ என்ன எப்போ மன்னிக்கப்போற?"  என்று குமுறி அழுதாள். 


விமானம் ஏறிய பின்னர் தேவ் ரெஸ்ட் ரூம் சென்ற சமயத்தில் யாரோ ஒரு பெண் ஓரமாக உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு வயது இருபத்தி ஐந்தை ஒட்டி இருக்கும் தேவ்வின் பக்கத்தில் உட்கார விருப்பம் இல்லாதவள், "ஷேல் வி சேன்ஜ் சீட்ஸ் ஐ அம் நாட் யூசுடு டூ வின்டோ சைட்" என்றாள்.  தேவ்வின் பக்கத்தில் உட்காரக்கூடாது என்று திட்டமிட்டே அப்படிக் கூறினாள். அந்த பெண் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தாள்.


'இவள் பேசுறதுக்குள்ள டெல்லியே வந்துரும் போல' என்று மனதில் கடுப்பாகிக் கொண்டிருக்கும் போதே,

"எக்ஸ்க்யூஸ் மீ ஐ வில் டீல் இட்" என்று அந்த பெண்ணிடம் சொன்ன தேவ் யமுனாவின் பக்கம் திரும்பி அவளை முறைத்தான்.


"இல்லை பரவாயில்லை நான் இங்கேயே உட்கார்ந்துக்குறேன்" என்று தேவ் எதும் திட்டிவிடக்கூடாது என்ற பயத்தில் போலியாகத் தூங்குவது போல் நடித்தாள். 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2