மாயம் 46
ஏற்கனவே கிறக்கத்தில் இருந்த யமுனா, தேவ்வின் மீது உள்ள காதலால், அவன் ஆட்டிப் படைக்கும் பாவையானாள். யமுனாவை கட்டிலில் போட்டு, அவளிடம் ஒன்றரை வருடங்கள் கழித்து தன் தேடலைத் தொடங்கியவன், இவ்வளவு மாதங்கள் யமுனா இல்லாமல் ஏங்கியதை மஞ்சத்தில் உணர்த்தினான். அவளின் உச்சி முதல் பாதம் வரை முத்தங்களைப் பதித்தவன், மென்மையாகத் தன் தேடலை முடித்துக் கொண்டான்.
தேவ்வின் வெற்று மார்பில் படுத்திருந்த யமுனாவிடம் மறுபடியும் நெருங்கிய தேவ், இம்முறை அவளிடம் முரட்டுத்தனமாக தேடலைத் தொடங்கினான். இதை உணர்ந்த யமுனாவிற்கு ஏதோ வித்தியாசம் தோன்ற, அவனுடைய முரட்டுத்தனம் இன்னும் கூடியது. ஒரு கட்டத்திற்கு மேல் அவன் முரட்டுத்தனத்திலும் தன்னை சந்தோஷமாக இழந்தவள் தூங்கியே விட்டாள்.
நள்ளிரவு இரண்டு மணிக்கு விழித்த யமுனா, பால்கனியில் தனக்கு முதுகு காட்டி சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த தேவ்வைப் பார்த்து வெட்கினாள். அவன் தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்குள், தன் ஆடைகளைத் தேடி அணிந்தவள், தேவ்விடம் பேச பால்கனிக்குச் சென்றாள்.
தேவ்வின் மனது, யமுனாவின் உடல் தனக்குக் கிடைத்தாலும் அவள் மனது தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்கியது. அன்று அவள் ‘ஜஸ்ட் ஃபார் லஸ்ட்’ என்று கூறியது தான் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
“தேவ், ஏன் இவ்வளவு சிகரெட் பிடிக்கிறீங்கள்? உங்கள் உடம்புக்கு இது நல்லதில்லை” என்று உண்மையாக அக்கறையுடன் கூறியவளைத் திரும்பிப் பார்த்தான்.
“ஏன் யமுனா, உனக்குத் தேவையான என் உடல் சிகரெட் பிடிச்சுக் கெட்டு போயிடும் என்று பயமா?” என்று நக்கலாக சிகரெட் பிடித்துக் கொண்டே கூறியவனை அதிர்ந்து பார்த்தாள்.
“தேவ் என்ன பேசுறீங்க?” என்று கலங்கிய யமுனாவை பொருட்படுத்தாமல்,
“ஆமாம் டீ, ஜஸ்ட் ஃபார் லஸ்ட் தான் இப்போது நமக்கு நடந்தது. இரண்டு பேரின் உடல் தேவையைத் தீர்த்துக் கொண்டோம்” என்று அசிங்கமாகப் கூறியவனை அருவருப்பாகப் பார்த்தவள், அங்கேயே நின்றாள்.
ஒரு குழந்தையின் தகப்பன் ஆனப் பின் தேவ்வால் எப்படி தன் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவியிடம் இப்படி பேச முடிகிறது என்று அதிர்ச்சியில் திகைத்து நின்றவளை, மேலும் காயப்படுத்தும் விதமாக, “இன்னும் எதுக்கு இங்க நிக்குற? என் கூட ப*** பணம் வேணுமா?” என்று கேட்டவனை இம்முறை அவன் சட்டையைப் பிடித்தாள்.
“ச்ச நீயெல்லாம் ஒரு மனுசனா? உன் பணம் யாருக்கு வேணும்? பணம் தான் எனக்கு முக்கியம் என்றால், இந்த ஒன்றரை வருடத்தில் நான் நிறைய பேர் கூட ப*** சம்பாதிச்சிட்டு இருப்பேன்” என்று அவன் சட்டையைக் கிழித்தவளை முரட்டுத் தனமாக தள்ளினான்.
தேவ், “இன்னிக்கு உடம்புன்னு நான் சொன்னா கசக்குது, அன்னிக்கு நீ சொல்லும்போது மட்டும் இனிச்சுதா டீ?” என்று கர்ஜித்தவன், “உன் ஆக்டிங் எல்லாம் என்கிட்ட செல்லுபடி ஆகாது, போ உன் அறைக்கு” என்று அவன் கூறும்போதே, யமுனாவும் ஓடி போய் தன் அறைக்குள் சென்று அழுதாள்.
இருவருமே நிதானத்தில் இல்லாமல், தங்களுடைய அழகியக் காதலை புரிந்து கொள்ளாமல், கொச்சைப் படுத்திக் கொண்டு சந்தோஷமாக வாழவேண்டிய வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டிருந்தனர். நாவினால் சுட்ட வடு ஆறுமா? இல்லை ஆறாத் தழும்பாக மாறுமா? என்பது விதி மட்டுமே அறிந்த ஒன்று.
***
“தேவ்விற்குத் தான் இணைந்து கொடுப்பதால் தான் தன்னை இவ்வளவு காயப்படுத்துகிறான். இந்தப் பாழாய்ப்போன காதல் ஏன் என்னை இப்படி வதைக்கிறது?” என்று தன் அறையில் பேசிக்கொண்டு அழுதவள், இனி தான் உண்டு தன் வேலை உண்டு என்று தன் குழந்தை ஆராதனாவுக்காக மட்டும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, மணி நான்கானதைத் தொடர்ந்து தூங்கச் சென்றாள்.
‘நான் யமுனாவிடம் என்ன கேட்க நினைத்தேன், இப்போது என்ன பண்ணி வெச்சிருக்கேன்?’ என்று மனதில் நினைத்த தேவ், “உன்னை ரொம்பவே ஹர்ட் பண்றேன் யமுனா. ஆனால் அன்னிக்கு இதே மாதிரி தான நீ என்னை காயப்படுத்திவிட்டு போன. அதற்கு நீ இன்னும் பதில் சொல்லலையே” என்று வானத்தைப் பார்த்து வெறித்தவன், தூங்கச் சென்றான்.
அடுத்த நாள் காலை யமுனா எழும்போதே ஆராதனா விளையாடிக்கொண்டிருந்தாள். தேவ்வுடன் நேற்று நடந்த சல்லாபத்தை முழுமையாக மறக்க நினைத்தவள், தேவ் என்னும் ஒருவன் அந்த வீட்டில் இல்லாததைப் போல் நடந்து கொண்டாள். அங்கு குழந்தைக்கு ரைம்ஸ் சொல்லிக் கொண்டிருந்தாள் திவ்யா.
பிரியாவைத் தேடிச் சென்ற யமுனா, “பிரியா நான் உங்களிடம் பேச வேண்டும்” என்றாள். தன் அறையில் துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த பிரியா, “சொல்லுங்க யமுனா அண்ணி” என்று அமர்ந்தாள்.
யமுனா, திவ்யா மற்றும் குணாவைப் பற்றி பிரியாவிடம் கேட்பது மேல் என்று நினைத்து, “குணா எங்கே…? திவ்யாவுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை?” என்று கேட்டாள்.
“அண்ணி, அது வந்து…” என்று பிரியா இழுக்கும்போதே, “ப்ளீஸ் பிரியா, நான் உங்களை நம்பி தான் கேட்கிறேன்” என்று யமுனா கெஞ்சியபின், பிரியாவால் மறைக்க முடியவில்லை.
“அண்ணி, நீங்கள் இந்த வீட்டை விட்டுச் சென்றபின், திவ்யாவுக்கும் குணா அண்ணாவிற்கும் நிறைய பிரச்சனைகள் வந்தது… பிரச்சனை என்பதை விட திவ்யா அண்ணி உங்களுக்காக வாதாடினார். சண்டை போட்டார் என்றே சொல்லலாம். அவங்களால் தான் உங்கள் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என்று குணா அண்ணாவிடம், இனி யமுனா கிடைத்த பின் தான் நீயும் நானும் கணவன் மனைவியாய் வாழுவோம் என்று சென்னையிலேயே இருந்துவிட்டார்.
குணா அண்ணா இப்போது கேரளாவில் ஒரு பப்ளிகேஷன் கம்பெனியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று குறிப்பிடும்போதே, பிரியா, ஷிரீஜாவின் முந்தைய கம்பெனியைத் தான் சொல்கிறாள் என்று யமுனா புரிந்து கொண்டாள்.
“குணா அண்ணாவும் திவ்யா அண்ணியும் பார்த்து பேசிக்கொண்டே இத்தோடு ஒரு வருஷம் ஆயிருக்கும்” என்று பெருமூச்சுவிடும் போதே யமுனாவின் கண்கள் கலங்கியது. திவ்யாவால் தான் அவளுக்கு இந்த நிலைமை நேரிட்டது. ஆனால் தனக்காக தன் கணவனை ஒதுக்கி வைத்திருக்கிறாள் என்றால், திவ்யாவை கட்டி அணைக்க வேண்டும் என்று தோன்றியது யமுனாவிற்கு.
“அண்ணி, நான் கேட்கிறேனு தப்பா எடுத்துக்காதீங்க. உங்களுக்கு தேவ் அண்ணவை பிடிக்காதா? நான் கேட்கிறது அதிகப்படியான கேள்வியாக இருக்கும்… அப்படி தேவ் அண்ணாவைப் பிடிக்கவில்லை என்றால் குழந்தை எப்படி…?” என்று தயங்கிக் கேட்ட பிரியா முன் அவமானமாக உணர்ந்தாள் யமுனா.
‘இவளுக்கு என்ன பதில் நான் இப்போது சொல்வது? தேவ்வை விரும்பித் தான் நான் அவனுள் மூழ்கினான் என்று சொல்லவும் தோன்றவில்லையே’ என்று நினைக்கும்போதே, “என்ன கேள்வி இது பிரியா? உன் அண்ணியிடம் இப்படித் தான் கேள்வி கேட்பியா?” என்று உள்ளே வந்த திவ்யா, “உங்கள் அண்ணா தேவ் ஒரு வெஸ்டன் காட்டுமிராண்டி. இவளை விருப்பமில்லாமல் கெடுத்து, இப்படி குழந்தையுடன் நிற்க வெச்சிட்டார்” என்று கோபப்பட்டாள்.
யமுனா எதற்கு வீட்டை விட்டுச் சென்றாள் என்று யாருக்கும் தெரியாது. யமுனா தேவ்விடம் பேசிய விஷயங்கள் சீதாலட்சுமிக்குக் கூடத் தெரியாது. தேவ், யமுனா என்ன பேசி அடி வாங்கி வீட்டை விட்டுச் சென்றாள் என்று யாரிடமும் இதுவரை சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது ஒன்றரை வருடங்கள் கழித்து குழந்தையுடன் வந்த யமுனாவைக் கண்ட அனைவருக்கும் அதிர்ச்சியே. சீதாலட்சுமிக்கு மட்டும் இருவரின் காதலில் நம்பிக்கை இருந்தது.
அப்படி இருக்கும்போது, பிரியாவிற்கு தன்னுடைய அண்ணன் தேவ் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை, மனைவியாகவே இருந்தாலும் விருப்பமில்லாமல் தொடுவது, கற்பழிப்புக்கு சமம் தான் என்று தெரிந்தவளுக்கு, தன் அண்ணன் யமுனாவை விருப்பம் இல்லாமல் தொட்டிருக்கமாட்டான் என்று ஆணித்தனமாக நம்பினாள். அதை உறுதி செய்யவே யமுனாவிடம் கேட்டாள்.
ஆனால் யமுனாவின் மௌனம் எதற்கு என்று அவள் மட்டுமே அறிந்த ஒன்று. அப்போது தான் திவ்யா இப்படிக் கூறினாள். யமுனா என்ன விடை சொல்வது என்று தெரியாமல், அவர்களிடம் எதுவும் சொல்லாமல், அந்த அறையை விட்டு நகர்ந்தாள்.
தேவ் முந்தைய இரவு தாமதமாகத் தூங்கியதால், அன்று காலை தாமதமாக எழுந்திருந்தான். எழுந்தவன் தன் அன்றாட வேலைகளை முடித்து சாப்பிடும் வரை, யமுனா அவன் கண்ணில் படவில்லை. தேவ் சாப்பிட உட்கார்ந்த பின், சீதாலட்சுமி யமுனாவை சாப்பாடு பரிமாறுமாறு அழைத்தார். அழுது கொண்டிருந்த ஆராதனாவை தூக்கிக்கொண்டு வந்த யமுனா, ஒரு கையில் குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டே இன்னொரு கையில் தேவ்விற்கு பரிமாறினாள்.
அதைக் கண்ட தேவ், “அம்மா, யமுனா பிஸியா இருக்கானு தெரியும் தானே. அப்போது நீங்களே சாப்பாடு வைக்க வேண்டியது தான” என்று கடிந்தான்.
“தேவ், நீ தானப்பா யமுனா மட்டும் தான் சாப்பாடு வெக்கணும்னு சொன்ன. உன்னை மீறி இந்த வீட்டில் என்ன நடந்திருக்கு?” என்று சொல்லும் அன்னையை ஆற்றாமையுடன் பார்த்தான்.
“குழந்தையோடு போராடிட்டு இருக்கிறவளை சாப்பாடு வைக்க சொல்ற அளவுக்கு நான் மிருகம் இல்லைம்மா” என்று கையைக் கழுவியவன், “யமுனா குழந்தையைக் கொடு, நான் சமாதானம் படுத்துறேன்” என்றவனிடம், பேசாமல் குழந்தையை மட்டும் கொடுத்தாள்.
“ஆராதனா குட்டி, என்ன ஆச்சு பட்டும்மா…? அழாதீங்க, நீங்கள் அழுதீங்கன்னா, அப்பா எப்படி நிம்மதியாக ஆபிஸ் போக முடியும்?” என்று கொஞ்சியவனிடம் குழந்தையின் அழுகை நின்றே விட்டது.
ஆதிராவைப் பற்றி யாரிடம் கேட்பது என்று நினைத்துக் கொண்டிருந்தவள், தேவ் ஆராதனா மீது காட்டும் பாசத்திற்கும், ஆதிரா மீது இருந்த பாசத்திற்கும், ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தாள். ஆராதனாவிடம் தேவ்வே ஒரு குழந்தையைப் போல் மாறுவதை யமுனா உணர்ந்தாள்.
“அதான் பாப்பா அழுகைய நிறுத்திட்டாளே, நீ சாப்பிடுப்பா” என்று சீதாலட்சுமி கூறும்போதே, வீட்டின் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.
***
கதவைத் திறந்த பிரியா, “திவா வந்துட்டீங்களா?” என்று சந்தோஷத்துடன் கத்தியவள், பின்னாடியே சேகர் மற்றும் விஜயலட்சுமி வருவதைப் பார்த்து, “மாமா… அத்தை… வாங்க” என்று சந்தோஷத்துடன் உள்ளே அழைத்து வந்தாள்.
அவர்களை திவ்யா மற்றும் சீதாலட்சுமியும், “வாங்க” என்று அழைத்தனர். யமுனாவிற்கு அதிர்ச்சியில் என்ன பேசுவது என்று கூடத் தெரியவில்லை. யாரிடமும் எதுவும் பேசாத திவாகரின் குடும்பத்தினர், நேரே சென்றது யமுனாவிடம் தான். அவர்கள் தன்னை நெருங்க நெருங்க யமுனாவின் கண்ணில் இருந்து நீர் சொட்டத் தொடங்கியது. தேவ் இவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் சோஃபாவில் ஆராதனாவுடன் பீக் அ பூ விளையாடிக்கொண்டிருந்தான்.
“யமுனா… எப்போ வீட்டை விட்டு போனாலும் ஏன் உனக்கு எங்களிடம் வரணும் என்றே தோன்றவில்லை? எங்களை அவ்வளவு வெறுக்குறியாம்மா?” என்று கேட்ட சேகரை அணைத்த யமுனா, “மாமா, என்னை மன்னிச்சிருங்க மாமா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல” என்று அழுதாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக