மாயம் 45

 மாயம் 45

யமுனாவும் ஒரு மனுஷி தான், அவள் புரோகிராமிங் செய்த மிஷின் இல்லை என்பதை தேவ் அறிந்தாலும், அவ‍ளை அந்த நொடி காயப்படுத்த வேண்டும் என்றே, “யமுனா… யமுனா… என்று கம்பீரமாகக் கத்தியவன், தன் இரும்பு கைகளை வைத்து கதவைத் தட்டினான்.

படபடத்து எழுந்த யமுனா, தேவ்வின் குரல் கேட்டு தன் முகத்தை சரி செய்து, கதவைத் திறக்கும்போதே, “மணி என்ன ஆச்சு? குழந்தைக்கு பால் கொடுக்குற டைம் போயே அரை மணி நேரம் ஆச்சு. அப்படி என்ன தூக்கம் மகாராணிக்கு? என்று கையைக் கட்டி கடுமையாகக் கேட்டான். 

“ஐய்யோ சாரிங்க! இதோ ஐந்தே நிமிடத்தில் வந்திடறேன் என்று பாத்ரூமில் சென்று முகத்தை கழுவிவிட்டு ஒரு டவலில் துடைத்தவள், தேவ்வைத் தாண்டி குழந்தை சத்தம் கேட்டு கீழே ஓடினாள். 

குறைந்த பட்சம் தனக்கு ஏதாவது பதிலடி கொடுப்பாள் என்று நினைத்திருந்தான் தேவ். இதுவே பழைய யமுனாவாக இருந்திருந்தால் அதுதான் நடந்திருக்கும். ஆனால் இப்போது யமுனா அவனிடம் மன்னிப்பு கேட்டு குழந்தைக்காக ஓடிய விதம், தேவ்வின் கோபத்தையே கைது செய்து விட்டது. 

ரொம்ப நேரம் யமுனாவின் நினைவில் அந்த இடத்திலேயே இருந்த தேவ், திவ்யாவின் குரலில் தான் சுயநிலைக்கு வந்தான். “அத்தான் ஏதாவது வேண்டுமா உங்களுக்கு? என்று தயங்கிக் கொண்டே கேட்டவளிடம், 

“நீயும் குணாவும் சந்தோஷமா வாழணும். அதான் எனக்கு வேண்டும், அதான் யமுனா வந்துட்டாளே திவ்யா என்று கம்பீரமாகக் கூறிய தேவ்விடம் நேருக்கு நேராகப் பேச திவ்யாவிற்கு என்றைக்குமே பயம் தான். ‘இந்த மனுஷன் கூட கொஞ்சம் நேரம் பேசவே நமக்கு மூச்சு முட்டுது, யமுனா எப்படித் தான் இவர் கூட குடும்பம் நடத்துனாளோ? என்று திவ்யா நினைக்காத நாள் இல்லை.

“அத்தான், அது வந்து… எனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று பரிதவிப்பாய்க் கூறியவளிடம், 

“குடும்பம் இருந்தும் நீ அவனை விலக்கி வெச்சதால், நாடோடி மாதிரி ஊர் ஊராக சுத்திட்டு இருக்கான் என் தம்பி என்று அவன் கத்தும்போதே அங்கே பிரியா வந்தாள்.

“அண்ணா ப்ளீஸ், கொஞ்சம் உங்கள் கோபத்தை கண்ட்ரோல் பண்ணுங்க, இன்னிக்கு தான் அண்ணி வந்திருக்காங்க. அவங்க காதுல விழப்போகுது என்றாள் பிரியா.

‘அடியேய், நம்ம கிட்டயே இவர் இவ்வளவு டெரரா இருக்காருனா, யமுனா கிட்ட எவ்வளவு டெரரா இருந்திருப்பார்? இந்த சத்தம் எல்லாம் யமுனாவிற்கு ஜுஜுபி! என்று அப்போதும் மைன்ட்வாய்ஸில் திவ்யாவிற்கு ஓடிக்கொண்டிருந்தது. 

பிரியா வந்த பின், தப்பித்தோம் பிழைத்தோம் என்று, “அத்தான், நிதினுக்கு சாப்பாடு கொடுக்கும் டைம் வந்திருச்சு. நான் அப்புறம் பேசுறேன் உங்களிடம் என்று விலகி கீழே சென்றாள். 

ஆராதனாவிற்கு யமுனா பால் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் கமலாம்மாள் வந்து, “யமுனாம்மா எப்படி இருக்கீங்க? என்று கேட்டார். 

“நான் நல்லா இருக்கேன் அம்மா... நீங்கள் டெல்லியில் தான இருந்தீங்க? என்று கேட்ட யமுனாவிடம்,

“ஆமாம்மா, இப்போது தான் அந்த வீடே பூட்டி கிடக்கே. எப்படி இருந்த குடும்பம், இப்போது இப்படி சிதைஞ்சு கிடக்குது. நல்லவேளை நீங்க வந்துட்டீங்கம்மா, இதான் சின்ன கண்மணியா! என்று பால் குடித்த பின் தூங்கிக்கொண்டிருந்த ஆராதனாவைப் பார்த்து ரசித்தார் கமலாம்மாள். 

ஆனால் யமுனாவிற்குத் தான் கமலாம்மாளின் உரையாடல் ஏதோ மர்மத்தை உணர்த்தியது. வந்ததில் இருந்து ஆதிராவைக் காணவில்லை. பிரனிதா என்ன ஆனாள் என்று தெரியவில்லை. குணா மற்றும் திவாகர் அத்தானைப் பற்றி ஒரு விவரமும் வரவில்லை. இதில் மனிஷா, கிஷோர் கல்யாணம் நடந்ததா? அந்த கதாபாத்திரங்கள் எல்லாம் என்ன ஆச்சு? என்று இவ்வளவு புதிர்கள் யமுனாவின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. 

யாரிடம் இதைப் பற்றிக் கேட்கலாம் என்று நினைத்தவள், முதலில் கமலாம்மாளிடம் தெரிந்து கொள்ளலாம் என்று, “ஆதிரா எங்கே கமலாம்மா? என்று அவள் கேட்கும் போதே அங்கு வந்த தேவ், “ஆராதனாவை என் அம்மாவின் அறையில் படுக்கவைத்து விட்டு, எனக்கு சாப்பாடு எடுத்து வை என்றான். 

கமலாம்மாளிடம் வந்தவன், “கமலாம்மா, உங்களின் வேலை வீட்டின் சமையல் வேலை மட்டுமே. உங்களுக்கு நான் சொன்னது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் என்று அழுத்தமாக யமுனாவைப் பார்த்தான்.

“மன்னிச்சிடுங்க தம்பி, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று சமையலறைக்கு விரைந்தார்.

“கமலாம்மா, எனக்கு யமுனா தான் எப்போதும் சாப்பாடு எடுத்து வைக்க வேண்டும் என்று தீர்மானமாக தேவ் கூறும்போதே, யமுனா மாடிப்படியில் ஏறி கொண்டிருந்தாள். அவள் காதில் தேவ் கூறியது விழாமல் இல்லை. 

தன் மாமியாரின் அறையில் ஆராதனாவைப் படுக்க வைத்தவள், பக்கத்தில் தலையணையைப் பாதுகாப்பிற்கு வைத்து விட்டு, பக்கத்து அறையில் இருந்த திவ்யாவிடம், “குழந்தை தூங்குகிறாள், அப்போ அப்போ பார்த்துக்கொள் என்று கூறிவிட்டு கீழே வரும்போது ஹாலில் தேவ் மட்டும் தான் இருந்தான். 

சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவன், சல்வாரில் இருந்த யமுனாவைப் பார்த்தான். “இனி நான் வீட்டில் இருக்கும் சமயத்தில் நீ சேலை அணிய வேண்டும் என்று அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து கட்டளை இட்டவனிடம், “சரி என்று ஒப்புக்கொண்டவள், சாப்பாடு எடுத்து வைத்து அழைத்தாள்.

தேவ்விற்கு யமுனாவிடம் கேட்க நினைத்த கேள்வி மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. ஆனால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அந்த கேள்வியைக் கேட்பது நன்றாக இருக்காது என்று உணர்ந்தவன், யமுனாவிடம், “நீ சாப்பிட்ட பிறகு என் அறைக்கு வா என்று கட்டளையிட்டான். 

ஏதாவது கேள்வி கேட்பான் என்று நினைத்த யமுனா, “சரி என்று முடித்து, சாப்பாடு பரிமாறுவதில் கவனத்தைச் செலுத்தினாள்.

***

யமுனா இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு, தான் தூங்கிய அறையில் இருந்த பாத்ரூமில் குளித்தவள், ஒரு கருப்பு நிற சேலையைக் கட்டினாள். டிசைன் எதுவுமே இல்லாத அந்த சேலை, பிளைன் சாரி வகையைச் சார்ந்தது. அதை உடுத்தியவளுக்கு அப்போது தான் தேவ் தன்னை அழைத்தது ஞாபகம் வந்தது. 

தன் ஃபோனை சார்ஜ் போடும் போது, மொபைலில் தேவ்விடம் இருந்து மூன்று விடுபட்ட அழைப்புகள் வந்து இருப்பதைக் கவனித்தாள். அன்றும் இன்றும் தேவ்வின் தொலைபேசி எண் மாறவில்லை. தன்னுடைய புது எண்ணை தேவ் கண்டுபிடித்ததில், யமுனாவிற்கு ஆச்சரியம் ஒன்றும் இல்லை. 

தேவ்விடம் இருந்து ஒரு மெசேஜூம் வந்திருந்தது. அதை ஓபன் பண்ணிய யமுனா கண்டது. ‘யூ ஷுட் பி கம் இன் மை ரூம் விதின் டென் மினிட்ஸ் என்று இருந்தது. தன் தலையில் கிளிப் போட்டு, தன் முடியை விரித்து விட்டவள், நெற்றியில் குங்குமம் இட்டு, கல் பொட்டை வைத்தாள். தேவ்வோடு இருந்து அவனிடம் திட்டு வாங்கி வந்த பழக்கம் இது. நெற்றியில் குங்குமம் இல்லை என்றால் தேவ்விற்குப் பிடிக்காது. 

ஆராதனா என்ன செய்கிறாள் என்று பார்க்கச் செல்லும்போதே அவளைத் தடுத்த பிரியா, “அண்ணி, பாப்பாவை நான் பார்த்துக்குறேன். அண்ணா என்னை இன்று பார்த்துக்க சொன்னாரு, நான் அம்மா அறையில் தான் படுத்துக்குறேன் என்றவளிடம், “தர்ஷி எங்கே? என்று கேட்டாள் யமுனா. 

“தர்ஷியை திவ்யா அண்ணி பார்த்துப்பாங்க என்றாள்.

‘தேவ் ஏதோ பேசணும்னு சொல்றான், என்னவா இருக்கும்? என்று யோசித்தவள், முன்னாடி தேவ் இருந்த அறை தான் இப்போது இருக்கும் என்று யூகித்து, சரியாக அவன் இருக்கும் கதவைத் தட்டினாள். யமுனாவாகத் தான் இருக்கும் என்று உணர்ந்த தேவ் கதவைத் திறந்தான். 

இரவு மணி பத்தை நெருங்கும் தருணம் அது. நீண்ட மாதங்கள் மனைவியின் அருகாமை இல்லாதவன் எதிரில், அழகுப் பதுமை போல் சேலையில் சிலையாய் நிற்கும் மனைவியைப் பார்த்தால் யாருக்குத் தான் மனது தடுமாறாமல் இருக்கும்? ஆனால் இவன் தேவ் ஆயிற்றே! தன் மனதையே தன் வசப்படுத்தி கட்டுப்படுத்தும் விஸ்வாமித்திரன் அல்லவா இவன்.

தேவ் தன் அழகைக் கண்டு வியக்காமல், “உள்ளே வா என்று சாதாரணமாகக் கூறி விட்டுச் சென்றது, யமுனாவிற்கும் ஏமாற்றமே. பெண்கள் தன் கணவன் மீது கோபம், வெறுப்பு இருந்தாலும், தன் அழகை கணவன் ரசிக்கவில்லை என்று நேர்ந்தால் ஏமாற்றம் மட்டுமே வரும். அதில் யமுனா மட்டும் விதிவிலக்கா என்ன? 

தேவ்விற்கு மனதில் ஒரு கேள்வி தான் இருந்தது. ஆனால் யமுனாவிற்கு மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தது. ஆதிரா முதல் திவாகர் வரை எல்லாம் புதிர் போல் இருந்தது. மற்றவர்களிடம் கேட்கச் சென்றாலும், யாரும் பிடி கொடுத்து யமுனாவிடம் பேசவில்லை. அவர்களின் செயலுக்குப் பின்னால் தேவ்வின் கட்டளை இருக்கும் என்று அறிந்த யமுனா, சாட்சிகாரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று தேவ்விடம் கேட்க வந்தாள்.

யமுனாவிடம் இருந்த இந்த புது அமைதி தேவ்விற்குப் பிடித்தது. அவனுடைய கேள்வி கண்டிப்பாக சூழ்நிலையைக் குலைக்கும் ஒன்று என்று தெரிந்தவன், அன்று யமுனா கூறியதை மனதில் கொண்டு வந்து, “நீ இந்த வீட்டில் இருந்து கிளம்பும் முன் என்ன சொன்ன…? என்று அவன் கேட்கும்போதே வீட்டில் மின்ஒளி துண்டிக்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத யமுனா இருட்டில் பயந்து விட்டாள். 

தேவ்வின் வீடு பங்களா என்பதால், அவர்கள் பயன்படுத்தும் இன்வெர்ட்டர் நான்கு அறையில் ஓடிக்கொண்டிருந்த ஏசிக்குச் சென்றதால், தேவ்வின் அறையில் மின் ஒளி இல்லாமல் போனது. 

பயந்த யமுனா வெளியே செல்ல எத்தனிக்கும் போது, அவள் அசைவதை உணர்ந்த தேவ் அவளை எட்டிப் பிடித்தான். “யமுனா வெயிட் பண்ணு. இப்போது கரண்ட் வந்திடும். நான் உன்கிட்ட இன்னிக்கு கண்டிப்பா பேசணும் என்று யமுனாவின் கையை இரும்பு பிடியாய் பிடித்தவனிடம் திணறியவள், அமைதியாய் இல்லாமல் அவனிடமிருந்து விலக முற்பட்டாள். 

அந்த இருட்டில் இருவருமே யூகிப்பில் இருந்ததால், யமுனா தேவ்வின் மேல் மோதிக் கொண்டாள். பெண்ணவள் தன்னை இடிக்கும்போது அவளின் ஸ்பரிசம் தேவ்வின் ஆண்மையைத் தூண்டியது. தன் மேல் விழுந்தவளை நிலை நிறுத்த யமுனாவைப் பற்றியவனின் கைகள், அவள் வெற்று இடுப்பில் பதிந்தது. அவளை விலக்க நினைத்த தேவ் யமுனாவை தன்னோடு இணைத்து முத்தமிடத் தொடங்கினான். 

யமுனா தான் தேவ் தொட்டாலே இழைந்து கொடுக்கும் மனநிலைக்கு வருவாளே, அதனால் அவனுள் மூழ்கியவள், அவன் தீண்டலுக்கு சம்மதம் தெரிவிப்பதாய் அவன் முன்னேற அமைதியாய் இருந்தாள். அவர்கள் உணர்ச்சிப் பிடியில் இருக்கும் சமயத்தில் கரண்ட் வந்ததைக் கூட கவனிக்கவில்லை. முதலில் சுதாரித்த தேவ், யமுனாவை விலக்கி தன்னுடைய தோளில் போட்டுக்கொண்டு, அறை கதவை சாத்தி தாளிட்டான். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2