மாயம் 43
தேவ்வின் அறைக்குச் செல்ல நினைக்கும்போதே, கை கால்கள் உதறியது. ‘உனக்கு இருக்குனு சொன்னானே, என்ன பண்ண போறான்?’ என்று பதறியவளின் கால்கள், தேவ்வின் அறைக்கு வெளியே நின்றது.
எப்படி இருந்தாலும் உள்ளே சென்று தான் ஆக வேண்டும் என்பதால் பெருமூச்சுவிட்டு, “உள்ளே வரலாமா?” என்று கேட்டுச் சென்றாள். மானை வேட்டையாட காத்துக் கொண்டிருக்கும் வேங்கை போல், யமுனாவின் மீது அழுத்தமான பார்வை விட்டவன், “கிளம்பு” என்று கூறிவிட்டு தன் கார் கீயை எடுத்தான்.
“எ… எங்க கிளம்பணும்?” என்று தடுமாறினாள்.
“உன்கிட்ட எங்கே போறோம்னு சொல்லிட்டு போற அளவுக்கு நீ தகுதியான ஆள் இல்லை. என்னை அனாவசியமாக கேள்வி கேட்பது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும்” என்று தன் விரலைக் காட்டி மிரட்டியவன்,
“இப்போது வரியா இல்லை தூக்கிட்டு போகணுமா?” என்று நெருங்கியவனைக் கண்டு மிரண்டவள், “வேண்டாம்… நானே வருகிறேன்” என்று பின்னாடி சென்றாள். இவர்கள் இரண்டாம் முறை தனியாக வெளியே செல்வதைக் கவனித்த ஊழியர்கள், புரளி பேச ஆரம்பித்தனர்.
***
தேவ்வின் கார் ஷிரீஜாவின் வீட்டிற்குச் சென்றது. இவர் எதற்கு இங்கு கூட்டிக்கொண்டு வருகிறார் என்று நினைத்தவள் அமைதியாக வந்தாள். வீட்டை அடைந்தவன் யமுனா இறங்கும் முன் வேகமாக இறங்கியவன் கதவை வேகமாக சாற்றினான். “வா…” என்றவனின் தொனியில் அவ்வளவு கோபம்.
மாலை ஐந்து மணி ஆன அந்தச் சமயத்தில் ரேஷ்மி அனைவருக்கும் டீ போட்டுக் கொண்டிருந்த போது தான், புயல் போல யமுனாவின் கையை இழுத்துக்கொண்டு வந்தவனைக் கவனித்தாள் ரேஷ்மி. ஒரு தடவை மட்டுமே தேவ்வை ஃபோட்டோவில் கண்டதால் அவனின் உருவத்தை மறந்தவள், “யார் நீங்க? யமுனாவின் கையை விடுங்க” என்று கத்திய போது குழந்தையோடு விளையாடிக்கொண்டிருந்த சுஜித் மற்றும் ஷிரீஜா என்னவென்று அதிர்ச்சியாகப் பார்த்தனர்.
“தேவ் சார் என்ன...” என்று ஷிரீஜா கூறும் போது, “சொல்லு… நான் யாருன்னு?” என்று தேவ் யமுனாவைப் பிடித்த பிடி இன்னும் இறுகியது.
“இவர்… என் கணவன் சத்யதேவ்!” என்று தேவ்வின் பிடியிலிருந்து விலக முயற்சித்தாள். அனைவருமே வாயடைத்து போனார்கள்.
யமுனாவின் கையை விடுவித்தவன், சுஜித் கையில் இருக்கும் தன் குழந்தையைப் பார்த்து அவனிடம் சென்றான். சுஜித் குழந்தையைத் தன்னுள் சேர்த்தான். இதைக் கண்ட தேவ் அவனை எரிமலை போல் முறைத்துவிட்டு, “நான் ஆராதனாவின் அப்பா” என்று அழுத்தமாகக் கூறும்போது, தானாக பிடியை தளர்த்தினான் சுஜித்.
அவனிடம் இருந்து குழந்தையை வாங்கியவன், “ஆராதனா குட்டியோட அப்பா வந்தாச்சு” என்று கொஞ்சியவனின் சத்தம் மட்டும் தான் அந்த வீட்டில் கேட்டது, அனைவரும் பேயடைந்தார் போல் நின்றனர்.
“சோ, டோட்டல் ஃபேமிலியே பிராடு… ஒரு பொண்ணு அவள் கணவனை விட்டு வந்துட்டானா, அவளுக்கு அறிவுரை கொடுத்துவிட்டு அனுப்பாமல் அவளை உங்க வீட்டிலேயே ஓன்றரை வருஷம் வெச்சிட்டு இருக்கீங்க. அவள் பிரக்னன்ட் ஆன அப்புறமும் புத்தி சொல்லி அனுப்பாமல், அவளையும் என் குழந்தையையும் வெச்சிருக்கீங்க. உங்களை எல்லாம் என்ன பண்றது?” என்று வன்மமாகக் கேட்டான்.
“அவங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்மும் இல்லை. அடைக்கலம் கேட்டு நான் தான் வந்தேன். அவங்களை எதுவும் பண்ணிடாதீங்க” என்று யமுனா பயந்து கூறினாள்.
“நீ பேசாத, உனக்கு இருக்கு. உன்னை எப்படி கவனிக்கணும்னு எனக்குத் தெரியும்” என்றான்.
அனைவரிடமும் திரும்பி, “ஏதோ இவ்வளவு நாள் என் குழந்தையை பத்திரமா பாத்துக்கிட்டதினால் உங்களை சும்மா விடுறேன். இந்த தேவ் பத்தி உங்களுக்கு சரியா தெரியாது போல, இனி யமுனாக்கு ஏதாவது உதவணும்னு என்று நினைச்சா, உங்களை சும்மா விடமாட்டேன்” என்றவன், “இன்னும் ஒன் ஹவரில் உன் திங்க்ஸ் அண்ட் குழந்தை திங்க்ஸை பேக் பண்ணணும்” என்று வெளியே வந்தவன், காரில் மீது சாய்ந்து நின்றான். அவன் சென்ற பின் தான் அனைவரும் மூச்சு விட்டனர்.
“என்னடி யமுனா, இவர் கூட ஒரு நிமிஷம் நிக்கவே எனக்கு நாக்கு தள்ளுது. துருதுருன்னு இருந்த பொண்ணு அமைதியாய் வந்து நிக்குறியேனு நினைச்சேன். ஆனால் இவர் கூட வாழ்ந்தால் கன்பார்ம் வாயை மூடிட்டு தான் இருக்கணும் போல. ஆளு தான் பார்க்க ஹீரோ பார்க்க மாதிரி இருக்காரு, ஆனால் பக்கா டெரர் பார்ட்டி” என்று ரேஷ்மி கூறினாள்.
“வாயை மூடு ரேஷ்மி, யமுனா ஏற்கனவே குழம்பி போயிருக்காள். நீ இன்னும் ஏத்திவிடாத” என்ற சுஜித் யமுனாவிடம் வந்து, “யமுனா எப்படி இருந்தாலும் தேவ்வைத் தாண்டி உன்னால் தனியா வாழ முடியாது. அதுவும் இல்லாமல் உங்களுக்குள் என்ன பிரச்சனை என்று எனக்குத் தெரியல. ஆனால் உன்னை அவரோடு வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தான நினைக்கிறார். அப்போதே உனக்கு தோனவில்லையா, அவர் உன்னை நேசிக்கிறார் என்று” என்று கூறினான்.
“எனக்கும் சுஜித் சொல்வதில் அர்த்தம் இருக்கு என்று தான் தோனுது யமுனா, நீ தைரியமா கிளம்பு” என்று ஷிரீஜா கூறிய பின், யமுனா வேறு வழியின்றி கிளம்ப ஆரம்பித்தாள்.
எப்படி இருந்தாலும் இவள் கிளம்பாமல் தேவ் விட மாட்டான். இப்போது யமுனாவின் தலையில் ஓடிக்கொண்டிருந்தது பிரனிதா மட்டுமே. ஏற்கனவே அந்த பிரச்சனையால் தான் இவர்கள் பிரிந்தார்கள். அதனால் அதைப் பற்றி கேட்கவும் பயந்தவள், பெட்டியில் தன் துணிகளை அடுக்கி குழந்தையை கிளப்பிக்கொண்டு, அனைவரிடமும் கண்ணீருடன் விடைபெற்று தேவ்வின் காரில் ஏறினாள்.
தன் மனதில் இருந்த இறுக்கமும் கோபமும் பயமும் தயக்கமும் தேவ்விடம் பேசலாமா வேண்டாமா என்று ஊசல் ஆடிக்கொண்டிருந்தது. கேரளாவில் இருந்து சென்னைக்கு ஆரம்பித்த அவர்களது பயணம் மௌனமாக இருந்தது. நடுவில் கோயம்புத்தூரில் நிறுத்தியவன், அங்கே ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தி யமுனாவை இறங்கச் சொல்லிவிட்டு, தன் காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு ஒரு அறையை புக் செய்தான்.
யமுனாவும் எதுவும் பேசாமல் அவன் பின்னாடியே சென்றாள். அசதியில் இருந்த குழந்தை பால் குடித்த பின் தூங்கிவிட்டது. குழந்தைக்காக பிரத்யேகமாக ஒரு கார்ட்டை அதிகமாக புக் செய்தவன், சாவியை வாங்கி அறைக்குள் சென்றான். உள்ளே இருந்த அந்த பிரம்மாண்ட அறையில் குழந்தையை யமுனாவிடம் இருந்து வாங்கியவன், கார்ட்டில் மென்மையாக படுக்கவைத்துவிட்டு குழந்தை விழாமல் இருக்க தலையணையைச் சுற்றி வைத்து விட்டான்.
திரும்பிய போது, என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்த யமுனாவை அழுத்தமாகப் பார்த்தவன், எக்ஸ்டன்ஷனிற்கு கால் செய்து இரண்டு சாப்பாட்டைக் கொண்டு வரச் சொன்னான்.
யமுனாவிற்கு பயணத்தின் அசதி மற்றும் குழந்தைக்கு பால் கொடுத்து உடை ஈரமாகியதால், குளித்துவிட்டு ஒரு ஆரன்ஜ் கலர் சல்வாரை அணிந்து வந்தாள். அதுவரை தேவ் தூங்கிக்கொண்டிருந்த தன் குழந்தையையே பார்த்தவன், யமுனா வந்தபின் அவனும் குளித்துவிட்டு வந்தான்.
தேவ் குளித்துவிட்டு வரும்போது யமுனா படுத்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அவர்களுக்கு அனுப்பப்பட்ட சாப்பாடு வந்த போது, நன்கு தூங்கிக்கொண்டிருந்த யமுனாவை தட்டி எழுப்பியவன், “என்ன மகாராணி மாதிரி தூங்கிட்டு இருக்க, எனக்கு சாப்பாடு எடுத்து வை” என்று விட்டு சாப்பாடு இருந்த மேஜையில் அமர்ந்தான்.
தூக்கத்தில் எழுப்பிவிட்டால் யாருக்குத் தான் எரிச்சல் வராது, அதுவும் இன்று காலையிலிருந்து இவன் தன்னைப் படுத்திய பாடு. ‘கடவுளே தேவ் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? நான் அன்று பிரனிதா பற்றிப் அப்படி ஏதோ ஒரு வேகத்தில் கோபத்தில் பேசிவிட்டேன். அது மட்டும் இல்லாமல் அவன் என்றுமே அவன் தப்பை உணர்ந்தது இல்லை. ஆனாலும் இந்த பாழாய் போன காதல், என்னை தேவ்விடம் வெறுப்பைக் கொண்டு வராமல் இருக்கிறதே’ என்று நினைத்தவள், சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
***
சாப்பிட்டு முடிக்கும் வரை யமுனாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த தேவ், “குழந்தை பிறந்தாலும் அழகுல மட்டும் பஞ்சமே இல்லை. ஆனால் இந்த அழகுக்கு எல்லாம் பணியிற ஆள் நான் இல்லை யமுனா. நான் தான் உன்னை வீட்டை விட்டு போகச் சொன்னேன், ஏன்னா நீ பேசுனது அவ்வளவு அசிங்கமான வார்த்தை.
அன்னிக்கு என்ன சொன்ன பிரனிதாவுடன் *** உன்னை என்னப் பண்ணலாம்? சொல்லு என் கூட உடம்புக்காகத் தான் ***னு சொன்ன, என் குழந்தையை என்கிட்ட இருந்து மறைச்சிட்டு இவ்வளவு நாள் தலைமறைவா சுத்திட்டு இருந்திருக்க. இதுக்கெல்லாம் உன்னை என்ன பண்ணலாம்?” என்று வில்லன் மாதிரி பேசியவனை, பேய் அறைந்தது போல் பார்த்தாள் யமுனா.
“உன்னை அடிச்சுலாம் போர் அடிச்சிருச்சு. நீ என்ன பண்ற உன்னை…” என்றவன் தன் கையைக் கழுவி விட்டு, தன் பாக்கெட்டில் இருந்து லைட்டரை எடுத்து சிகரெட்டைப் பற்ற வைத்து யமுனாவிடம் நெருங்கினான்.
பயத்தில் பின்னாடி போன யமுனாவிற்கு இதயம் படபடவென அடித்தது. சிகரெட்டைக் கையில் எடுத்தவன் அதை அவளின் இடுப்பின் அருகே கொண்டு செல்லும் போதே, பயத்தில் யமுனா இறுக கண்களை மூடிக்கொண்டாள். யமுனாவின் இடுப்பில் பற்றிய சிகரெட்டை வைக்கப் போனவனின் மனதில் தன் மகள் ஆராதனா வந்தாள்.
ஆராதனா மனதில் தோன்றியவுடன், பயந்து கண்களை மூடி இருந்த யமுனாவை துன்புறுத்த ஏனோ மனது ஒத்துழைக்கவில்லை என்று நினைத்துக் கொண்டவனுக்குத் தெரியவில்லை, யமுனாவின் மீது கொண்ட காதலின் ஆழத்தால் தான் அவனால் அவளை துன்புறுத்த முடியவில்லை என்று.
யமுனா கண்களை இறுக்கி ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்த தருணத்தில் தனக்கு எதுவும் காயம் படவில்லை என்று உணர்ந்து, மெதுவாக கண்ணைத் திறந்த கண்டது, பெட்டில் படுத்துக்கொண்டு ஃபோனை பார்த்துக்கொண்டிருந்த தேவ்வைத் தான்.
யமுனா கிட்டத்தட்ட அரை மணி நேரமாக கண்களை இறுக மூடி பயத்தில் நின்றிருக்கிறாள். ‘தன்னை எதுவும் பண்ணாமல் இப்படி பயந்து சாவடிப்பது தான் தேவ்வின் புதிய யுக்தியா?’ என்று நினைத்தவள், ‘காதலிக்கும் பெண்ணை இப்படித் தான் யாராவது துன்புறுத்த நினைப்பாங்களா என்ன…? தேவ்விற்கு தன் மேல் அன்பு கூட இல்லை போல, இப்போது நாளைக்கு வீட்டில் ஆதிரா, பிரனிதா எல்லாரும் இருப்பாங்க… எதற்கு என்னை கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும்?’
தேவ் சாப்பிட்டதை கிளின் செய்து கொண்டிருந்தபோது, “உனக்கும் சேர்த்து தான் ஆர்ட்ர் பண்ணுச்சு, சாப்பிட்டு தூங்கு. ஒவ்வொரு வேளைக்கும் உன்னை சாப்பிட சொல்றது என் வேலை இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்று தெரியும்தானே. காலையில் ஆறு மணிக்கு கார் ஸ்டார்ட் ஆயிடும்” என்று கூறிவிட்டு தூங்கிய தேவ்வை ஒரு ஆற்றாமையுடன் பார்த்தவள், பசி இல்லை என்றாலும் குழந்தைக்காக சாப்பிட்டாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக