மாயம் 39

மாயம் 39

 யமுனா சென்றபின் தேவ், ‘போய்டுடீ என்னை விட்டு… என் கூட காதலில் சேராமல் உடம்பிற்காகச் சேர்ந்தேன் என்று சொல்லிட்டு, என்னை கொன்னுட்ட! என்று வெறுமையாக நினைத்தான். ஆனால் யமுனா தேவ்வின் மேல் கொண்ட காதலால் தான், தேவ்வோடு சங்கமித்தாள் என்பதை யமுனா சொல்லாமல் தேவ் எப்படி அறிவான். 

சீதாலட்சுமி வெளியே வந்து யமுனாவைத் தேடிக்கொண்டிருந்தபோது, “அம்மா, யமுனா போய்ட்டா… இனி இங்கு வர மாட்டாள். அவளைப் பற்றி இனி என்னிடம் பேசாதீர்கள் என்று கூறிவிட்டு வெளியே சென்ற மகனை, அதிர்ச்சியாகப் பார்த்தார் சீதாலட்சுமி. 


***

ஒன்றரை வருடங்கள் கழிந்தது. 

கேரளாவில் உள்ள அழகிய ஊரான திருச்சூரில், ஒரு பெரிய வீட்டில் தனது ஒன்பது மாதம் முடிந்த குழந்தை ஆராதனாவுடன் வசித்து வந்தாள் யமுனா. அன்று தேவ்வின் வீட்டில் இருந்து கிளம்பியவள், தன் மொபைலில் தன்னுடன் கல்லூரியில் படித்த நெருங்கிய தோழி ரேஷ்மிக்கு கால் செய்தாள். 

“ஹாய் ரேஷ், நான் யமுனா பேசுறேன். நான் உன் வீட்டிற்கு வரேன், ப்ளீஸ் அட்ரஸ் மட்டும் அனுப்பு என்று கேட்டுவிட்டு கேரளாவிற்கு ரயிலில் சென்றாள் யமுனா.

திருச்சூர் வந்தடைந்த யமுனாவை, ரேஷ்மி அழைக்க ரயில் நிலையத்திற்கு வந்திருந்தாள். “என்ன யமுனா குட்டி, இவ்வளவு நாள் ஒரு வார்த்தை பறையில்லா? இப்போது திடுமென கால் செய்துருக்கு என்றவளிடம் உண்மையை உளறி கொட்டிய யமுனா, ஆட்டோவில் ரேஷ்மி வீட்டை வந்தடைந்தனர். 

ரேஷ்மி தன்னுடைய அத்தையோடு வசித்து வந்தாள். இன்முகத்தோடு வரவேற்ற அத்தை, யமுனாவிற்கு குடிக்க இளநீர் கொடுத்தார்.

“அத்தை, நான் பறைஞ்சேன்ல யமுனான்ற சுந்தரி பெண், என் பெஸ்ட் பிரண்ட் இவள் தான் என்று பாதி மலையாளம் கலந்த தமிழ் பேசினாள். 

“ஆமாம் ரேஷ்மி இந்தப் பெண் மிகவும் அழகாக இருக்கிறாள். எப்படி இருக்க யமுனா? என்று மலையாளத்தில் கேட்டார்.

யமுனாவிற்கு மலையாளம் புரியாமல் விழித்த போது, ரேஷ்மி மொழிபெயர்த்துக் கூறினாள். யமுனாவின் கதையைக் கேட்ட ரேஷ்மிக்கு யமுனாவைப் பார்க்க பாவமாக இருந்தது. ‘பாவம் அப்பா, அம்மா இல்லாத பெண் என்ன தான் பண்ணுவாள்?

“யமுனா, அச்சா, அம்மா துபாயில் இருக்காங்க. நானும் அடுத்த வாரம் அங்கே போறேன். ஆனால் அத்தை இங்கே தான் இருப்பாங்க. நீயும் இங்கேயே இருந்துக்கோ என்றவளிடம், 

“ரேஷ், எனக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடு, அது போதும். அத்தைக்கு ஏன் தேவை இல்லாத சிரமம் என்றாள். 

“அடிபோடி… ஒரு சிரமமும் இல்லா. அத்தை மகன் சுஜித் வெளிநாட்டில் இருக்கின்றான். என் மாமா இரண்டு வருடம் முன்னாடி இறந்துட்டார். அதனால் அத்தை தான் பிசினஸ் பார்க்கிறார். அங்கே அத்தைக்கு துணைக்கும் யாரும் இல்லை, நீ இங்கேயே இரு… வேலை, இந்த வீட்டை பார்த்துக்கோ, அப்புறம் அக்கவுண்டஸ் பார்த்துக்கோ, மாசம் சம்பளம் பதினைந்து ஆயிரம் என்றாள். 

“ஆமாம் மோலே... நீ அக்கவுண்ட்ஸ் வீட்டிலேயே பார்த்துக்கலாம். எனக்கும் துணை என்று ஆச்சு என்று கூறினார் ரேஷ்மியின் அத்தை ஷிரீஜா.

“ரேஷ்மி என்னிடம் எல்லாம் பறைஞ்சிட்டா, எனக்கும் மகள் இல்லா. நீ என் மகள் போலத் தான் என்று கூறியவரை, நன்றியாக கையெடுத்து வணங்கினாள் யமுனா.

அன்று இரவு தங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்த ரேஷ்மியிடம், தன் சோகத்தை மறைத்து ரேஷ்மியின் கதையைக் கேட்டு கொண்டிருந்தாள். “அம்மா, அப்பா, நானும் போன வருஷம் துபாய் போயிட்டோம். எனக்கு அங்க வேலை கிடைச்சிருச்சு. அத்தையைப் பார்க்க வருஷத்திற்கு ஒரு முறை கேரளா வருவேன். 

அம்மா, அப்பா போன மாசமே வந்திட்டு போயிட்டாங்க. எனக்கு போன மாசம் வேலை அதிகம், அதான் இப்போது வந்தேன். நல்லவேளை நீ நான் இருக்கும் போதே வந்துட்ட, இல்லன்னா என்ன பண்ணிருப்ப… சரி அவர் பெரிய பிசினஸ் மேக்கர்னு சொன்னியே, நேம் சொல்லு விக்கிபீடியாவில் பார்ப்போம் என்றாள் ரேஷ்மி.

“வேண்டாம்டீ எதுக்கு? என்று கூறியவளை, “ஏய் சொல்லுடீ என்று கெஞ்சியவளிடம், “சத்யதேவ் என்றாள்.

“ஏய் யமுனா… இவரா உன் கணவன்? இவர் தானா… என்று விக்கிபீடியாவில் பிளாக் கோர்ட் அண்ட் வொயிட் சர்ட் அணிந்திருந்த சத்யதேவைக் காட்டினாள். 

“ஆமாம்டீ என்றவளிடம், “அடியேய் ஆளு பயங்கர ஸ்மார்ட் டீ, வாவ் ஹி லுக்ஸ் வெரி ஹான்ட்சம் என்ற ரேஷ்மியை முறைத்தாள் யமுனா.

“மேடம் உன்னைப் பார்த்தால் அவரைப் பிடிக்காமல் வந்தது மாதிரி இல்லையே என்றாள். 

“ரேஷ், நான் தேவ்வை ரொம்ப விரும்புறேன். ஆனால் எங்கள் இருவருக்குமே செட் ஆகாது. தயவுசெய்து இதைப் பற்றி பேசாதே இனி என்று கூறியவளை, “சரி விடு மச்சி என்று தேற்றினாள் ரேஷ்மி. 

ரேஷ்மி சென்ற பின், ஷீரிஜா யமுனாவை தன் மகள் போல் பார்த்துக் கொண்டாள். அப்போது தான் யமுனாவிற்கு நாள் தள்ளிப்போனது நினைவிற்கு வந்தது. பயத்திலேயே பிரக்னென்சி கிட்டை வாங்கிப் பார்த்தவளுக்கு, இரு கோடுகளைக் கண்ட பின் மயக்கமே வந்து விட்டது. 

யமுனா திடீரென்று மயங்கியதைப் பார்த்த ஷீரிஜா, அவள் கையில் இருந்த பிரக்னென்சி கிட்டைக் கண்டார். பின் தண்ணீர் தெளித்து எழுப்பினார். விழித்த யமுனா தன் கண்களை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள். 

அவளை நிதானப்படுத்திய ஷீரிஜா, ரேஷ்மிக்கு கால் செய்து விஷயத்தைச் சொன்னார். யமுனா, தான் தேவ்வின் குழந்தையை சுமக்கிறோம் என்று தெரிந்தவுடன் மனதில் இனம் புரியாத சந்தோஷம் கலந்த வருத்தம் இருந்தது. 

ஷீரிஜா யமுனாவின் தோளில் கைவைத்த போது, “அம்மா எனக்கு இந்த குழந்தை வேணும், இந்த உலகத்தில் எனக்கென்று கொடுத்த ஒரே சொந்தம் இந்தக் குழந்தை தான். என் கழுத்தில் தான் தேவ் கட்டிய தாலி இருக்கிறதே அம்மா. அதனால் யாராவது கேட்டால் வெளிநாட்டில் இருக்கிறார் என்று சொல்ல வேண்டியது தான் என்று எல்லாவற்றிற்கும் அவளே தீர்வு சொல்லிவிட்டதால் ஷீரிஜாவும் யமுனாவின் முடிவில் சந்தோஷப்பட்டார். 

அடுத்த பத்தாவது மாதத்தில் சுக பிரசவத்தில் அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இப்படியே தேவ்வைப் பிரிந்து யமுனாவிற்கு ஒன்றரை வருடம் சென்றது.

***

யமுனா வீட்டை விட்டுச் சென்ற பின் தேவ், யாரிடமும் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான். தூங்கி எழுந்த ஆதிரா, யமுனாவைத் தேடுகையில் மயக்கம் தெளிந்த பிரனிதா வெளியே வந்தாள். 

யமுனா சென்றுவிட்டாள் என்ற கவலையில் சீதாலட்சுமி தன்னுடைய அறைக்குள் சென்று கதவைச் சாற்றி அழுது கொண்டிருந்தார். தன் கணவன் இறக்கும் போது கதறி கதறி அழுதவர், இப்போது யமுனா சென்ற பின் தான் அவ்வாறு அழுகிறார். 

“ஆதிரா செல்லம், அம்மா வந்துட்டேன்டா என்ற பிரனிதா ஓடிப்போய் ஆதிராவைத் தூக்கினாள். 

“நீங்கள் தான் என் அம்மானா, அப்போது யமுனாம்மா யாரு? என்று கேட்ட குழந்தையிடம், என்ன பதில் சொல்வது என்பதைத் தெரியாமல் விழித்தவள், அங்கே சோஃபாவில் சோர்வாக அமர்ந்திருந்த தேவ்வைக் கண்டாள். 

இவர்களின் உரையாடல் காதில் விழுந்தாலுமே அதைக் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லாத தேவ் உணர்ந்தது, அவனுக்கு ஆதிராவை விட யமுனா தான் முக்கியம். அதற்காக இப்போது அவன் ஆதிராவை இழக்கவே தயாராக இருந்தான்.

தன் இடத்தில் இருந்து எழுந்த தேவ், ஆதிராவை நெருங்கி அவளின் பக்கம் மண்டியிட்டு, “உன்னுடைய அம்மா பிரனிதா தான் செல்லம். உன் அப்பாவை நான் பார்த்தது இல்லை. நீ பிறந்தவுடன் உன் அம்மா பிரனிதா வேலை விஷயமாக வெளிநாடு செல்ல நேரிட்டதால், ஆது பாப்பாவை என்கிட்ட கொடுத்துட்டு போய்ட்டாங்க என்றவன், 

பிரனிதாவிடம் வந்து, “ஆதிராவை எடுத்துக்கோ, அவளின் அப்பா யாரென்று உனக்குத் தான் தெரியும். அவன் கூட சேர்ந்து குழந்தையை வளர்க்குற வழியைப் பாரு. ஆதிராவை உன்னிடம் கொடுத்துவிட்டேன் என்று உன் இஷ்டத்திற்கு ஆட முடியாது பிரனிதா, நான் எப்போதும் உன்னைக் கண்காணித்துக் கொண்டுதான் இருப்பேன். ஜாக்கிரதை என்று அதட்டலாகக் கூறியவன், சீதாலட்சுமியைத் தேடி அவரின் அறைக்குச் சென்றான்.

தேவ் கதவைத் தட்டியதும், தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்த சீதாலட்சுமி கதவைத் திறந்து, “சொல்லுப்பா என்றார் தான் அழுததை மறைத்துக் கொண்டு. அவர் மறைத்தாலும் அவரின் அழுது வீங்கிய கண்களே மகனுக்கு பறைசாற்றியது. 

“அம்மா, ஆதிரா பிரனிதாவிடம் செல்லட்டும். பிரனிதாவிடம் இந்த செக்கை கொடுத்து விடுங்கள். இது இருபது லட்சம் காசோலை. இனி ஆதிரா பிரனிதாவின் மகள் மட்டுமே! என்று சொல்லும் போது தேவ்வின் கண்கள் கலங்கியது. 

கலங்கிய மகனைக் கண்ட தாய், “தேவ், இந்த முடிவு உனக்கு கஷ்டமாக இருக்கே பா அப்போ எதுக்கு… என்று சொல்லும்போதே, “கஷ்டமாகத் தான் இருக்கும்மா, மனசு வலிக்குது. ஆனால் என் மனசையே தூக்கிட்டு யமுனா போய்ட்டாம்மா, அப்போ நான் என்ன பண்றது? என்ற தேவ் முதல் முதலாக அழுததைப் பார்த்த சீதாலட்சுமி, சோர்வாக அமர்ந்தார்.

“தேவ் உன்னை இப்படிப் பார்க்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா என்ற அன்னையிடம், “அம்மா, இந்த தேவ் இரும்பு மாதிரி, எதற்கும் பணிய மாட்டான். சரி ஆயிடுவேன் கவலைப்படாதீங்க என்றவன்,

“நான் ஒரு வாரம் ஊட்டிக்குச் சென்று வருகிறேன், என்னால் ஆதிரா என்னைவிட்டு நிரந்தரமாக பிரியும் தருணத்தைப் பார்க்க முடியாது அம்மா! எனக்கு இப்போது தனிமை தேவை, குணாவும் நாளைக்கு வருகிறான். பிரனிதாவிடம் இந்த செக்கை கொடுத்து விடுங்கள். அப்புறம் மறக்காமல் கிஷோர் மற்றும் மனிஷாவின் கல்யாணத்திற்கு என் சார்பாகச் செல்லுங்கள். 

எல்லாவற்றையும் விட முக்கியமாக நீங்கள் உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் கண்களே எனக்கு காட்டிக்கொடுத்தது நீங்கள் அழுததை, என் அப்பாவைத் தான் தவறவிட்டுட்டேன், என் அம்மா எனக்கு வேண்டும். அதனால் இனி நீங்கள் யமுனாவையோ என் வாழ்க்கையோ பற்றி நினைத்து அழக் கூடாது என்று உறுதி வாங்கிய பின், தேவ் தன் துணிகளை பேக் செய்து கிளம்பினான். 

பிரனிதாவின் மடியில் உட்கார்ந்து அவளின் செயினில் ஆராய்ந்த குழந்தை, “நீங்க மம்மின்னா, டாடி எங்கே? ஏன் இவ்வளவு நாள் இல்லை? தேவ் அப்பா எனக்கு பிடிக்கும் என்று மழலையில் கேட்கும் போதே, சீதாலட்சுமி அங்கு வந்தார். 

‘குழந்தையிடம் உன் அப்பா ஒரு பொறுக்கி என்று எப்படிச் சொல்வது? அவன் இப்போது எங்கே ஊர் மேய்ந்து கொண்டிருக்கிறானோ? என்று தன் தவறை நினைத்து அசிங்கப்பட்டவள், “அப்பா சாமிகிட்ட போய்ட்டாங்க ம்மா, உனக்கு அம்மா மட்டும் தான் என்ற பிரனிதாவை திருப்தியாகப் பார்த்தார் சீதாலட்சுமி. எங்கே மறுபடியும் தேவ்வை கோர்த்து விட்டு விடுவாளோ என்ற பயம் இருந்தது, இப்போது இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 2

மாயம் 8