மாயம் 38
தன் அம்மாவை அழைத்து, ஆதிராவை வெளியே எடுத்துச் செல்லுமாறு கூறிவிட்டு, “வேற என்ன சொல்ல சொல்ற? எனக்கு நீ பிறக்கவில்லை என்று என்னால் கூற முடியாது. அதற்காக உன்னையும் விட்டுக் கொடுக்க முடியாது. பிரனிதா ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறாள், நான் அவளுக்கு பணத்தைக் கூட கொடுக்கத் தயார்.
ஆனால், அவள் வாங்கத் தயாரில்லை. அவளுக்கு குழந்தை வேண்டுமென தீர்மானமாக இருக்கின்றாள். இந்த விஷயத்தில் நான் ஒரு அந்நியன் ஆகிட்டேன் யமுனா. ஆதிராவின் அப்பா நான் இல்லாமல், என்னால் எப்படி ஆதிராவை பிரனிதாவிடம் இருந்து பிரிக்க முடியும்? டாம் இட்” என்று தன் கையைக் கோபத்தில் சுவற்றில் குத்தியவனுக்கு, கோபம் அளவுக்கு அதிகமாக இருந்தது.
“தேவ் ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க” என்று கூறும்போது, “விடு யமுனா, உனக்கு என்னுடைய வலி புரியாது” என்று தன் கார் கீயை எடுத்துக்கொண்டு ஆபிஸிற்குச் சென்றான்.
ஆபிஸிற்குச் சென்ற தேவ், பிரனிதாவின் அடுத்த படி எப்படி இருக்கும், நேற்று மாலை வந்தவள் இன்றும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று யோசித்தவன், இன்று மாலை உள்ள மீட்டிங்கை இன்னொரு நாளைக்கு ஸ்கெடியூல் பண்ணிவிட்டான். அவன் நினைத்தது போலவே அன்று மாலையும் பிரனிதா தேவ்வின் வீட்டு வாசலின் வெளியே நின்று கொண்டிருந்தாள்.
செக்யூரிட்டி சீதாலட்சுமியிடம் வந்து கூறும்போது, பக்கத்தில் இருந்த யமுனாவிற்கு இதயம் படபடவென துடித்தது. எப்படி இருந்தாலும், பிரனிதா தேவ்வின் முதல் மனைவி அல்லவா!
“விட்டுப்போன சனியன் ஏன் தான் மறுபடியும் வந்து நம்ம உயிரை வாங்குதோ?” என்று புலம்பிய சீதாலட்சுமி, குழப்பத்தில் இருந்த யமுனாவைப் பார்த்து, “யமுனா நீ பயப்படாத மா, தேவ் உன்னை விட மாட்டான்” என்றார்.
இதைக் கேட்ட பின் தான் யமுனாவிற்கு பயப்பந்து உருண்டது. ஒருவேளை தேவ் தன்னை விட்டே போயிடுவானோ என்று நினைத்தவளின் மனம், ‘இப்படி நினைத்துத் தான் நேற்றும் என்னை மீறி நான் என்னை இழந்திருக்கிறேன்’ என்று தன்னையே நொந்தவள், பிரனிதாவைப் பார்க்கத் தன் மாமியாருடன் சென்றாள்.
ஆதிரா தூங்கிக் கோண்டிருந்ததால் நிம்மதியாக சென்றார் சீதாலட்சுமி. ஆனால் அவர்கள் வெளியே செல்லும்போதே, தேவ் பிரனிதாவிடம் கத்திக்கொண்டிருந்த சத்தம் கேட்டு வேகமாக விரைந்தனர்.
“ஜஸ்ட் ஸ்டாப் யூவர் நான்சென்ஸ் பிரனிதா” என்று கூறியவனிடம்,
“தேவ் ப்ளீஸ் டரஸ்ட் மீ. நான் இப்போது திருந்திட்டேன். பாருங்க இப்போது எல்லாம் நான் அடக்கமா சுடிதார் தான் உடுத்துறேன். என் குழந்தையை மட்டும் என்கிட்ட கொடுத்துருங்க” என்று கெஞ்சியவளைப் பார்த்த யமுனா, ‘ப்பா செம அழகா இருக்காளே! இந்த டெல்லி கேள்’ என்று நினைத்தவள், தேவ்வைப் பார்த்தாள்.
“பிரனிதா நீ ஆடையில் ஒழுக்கமாக மாறினாலும், உன் நடத்தை சரியில்லை. இப்போது நான் உன்னை அடிக்காமல் பேசிக்கொண்டு இருப்பதற்குக் காரணம் உனக்கும் எனக்கும் டைவர்ஸ் ஆகிருச்சு. குழந்தை வேண்டாமென்று சுத்துனவ தான் நீ. அண்ட் இங்க நிக்குறா பாரு…” என்று ப்ளு சல்வார் அணிந்து நின்று கொண்டிருந்த யமுனாவைக் காட்டி,
“இவள் தான் என் மனைவி யமுனா, இவள் ஆதிராவை தன்னுடைய குழந்தைப் போல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். இவளிடம் இருந்து எப்படி ஆதிராவை என்னால் பிரிக்க முடியும்? ஏன் ஆதிராவே உன்கூட வரமாட்டாள்” என்று கடுப்பாகப் பேசினான்.
“தேவ் நீங்கள் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டீங்க, நாளைக்கே உங்கள் இருவருக்கும் குழந்தை பிறந்தால், ஆதிராவிடம் இதே பாசத்தோடு உங்கள் மனைவி இருப்பாள் என்று என்ன நிச்சயம்? ஏன் நீங்களே மாறலாம். ஏனெனில், ஆதிரா உங்கள் குழந்தை இல்லையே!
நான் சத்தியமாக ஆதிராவை நன்றாக வளர்ப்பேன். உங்கள் பணம் எனக்கு வேண்டாம். என்னுடைய பெண் மட்டும் தான் எனக்கு வேண்டும்” என்று இந்த முறை தேவ்வின் காலிலேயே விழுந்தாள். தேவ் கண்டு கொள்ளவில்லை என்றதும் எழுந்தவள், அங்கேயே மயங்கி விழுந்தாள். இதைக் கண்ட அனைவரும் திகைத்தனர்.
தேவ் மயங்கிய பிரனிதாவை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் சென்றான். அந்த நிமிடம் தேவ்விற்கு வேறு வழி தெரியவில்லை. ஆனால் யமுனாவிற்கு மட்டும் இது தப்பாகவே தோன்றியது. அவளால் தேவ் பிரனிதாவைத் தூக்குவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
***
பிரனிதாவை சோஃபாவில் போட்டவன், அவளின் மேல் தண்ணீரைத் தெளித்து அவளின் கன்னத்தில் தட்டினான். அவள் அதற்குப் பிறகும் கண் விழிக்கவில்லை என்றவுடன், டாக்டருக்கு கால் செய்து வரச் சொன்னான். டாக்டர் வரும் வரை தேவ் யாரிடமும் பேசவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். யமுனாவிற்குத் தான் இப்போது வயிறு எரிந்து கொண்டு இருந்தது.
டாக்டர் வந்து பிரனிதாவை சோதனை செய்த பின்னர், “ஷி இஸ் வீக் தேவ், சரியாக சாப்பிட மாட்டாங்க போல, அண்ட் ஆல்சோ பிரஷர் கொஞ்சம் ஹையில் இருக்கு. அதனால் அவங்களை கேர்ஃபுல்லா பார்த்துக்கோங்க. அவங்களுடைய மயக்கம் தெளிய கொஞ்சம் நேரம் ஆகும். பயப்பட ஒன்னும் இல்லை” என்று கூறிவிட்டு சென்றார்.
சீதாலட்சுமியிடம் வந்த தேவ், “அம்மா, உங்களுக்கு பிரனிதாவைப் பிடிக்காது என்று தெரியும். ஆனால் அவள் இப்போது திருந்திவிட்டாள். அவளின் அம்மா, அப்பாவே அவளைத் துரத்தி விட்டனர். நான் பிரனிதாவின் தற்போதைய நிலை பற்றி விசாரித்து விட்டேன். இங்கே ஒரு ஹாஸ்டலில் தங்கி தான் வாழ்க்கையை ஓட்டுகிறாள்.
நான் பிரனிதாவை இன்னும் முழுமையாக நம்பவில்லை அம்மா. அவளிடம் ஆதிரா வளர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை நான் கவனிக்க வேண்டும். அதனால் இனி பிரனிதா இங்கேயே இருக்கட்டும். அவளை புண்படுத்தும் படி யாரும் பேசக்கூடாது” என்றவன், “குணா, திவ்யாவுக்கும் இதை தெளிவுபடுத்தி விடுங்கள்” என்றான்.
“தேவ், யமுனா பாவம் இல்லையாப்பா?” என்று கூறியவரை, “அம்மா, நான் யமுனாவிற்காக மட்டும் தான் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறேன்…” என்று இடைவேளி விட்டவன், “யமுனாவிடம் நான் பேசிக் கொள்கிறேன் அம்மா. நீங்களும் பிரனிதாவின் நடவடிக்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று வெளியே வந்து யமுனாவைத் தேடினான்.
யமுனாவிற்கு மனதில் சொல்ல முடியாத வெறுமை குடிகொண்டது. ‘அந்த வெறுப்பை பகிர்வதற்கு கூட யாரும் இல்லையே தனக்கு’ என்று மாடியில் நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவளை, “யமுனா, எல்லாரும் கீழே இருக்காங்க, நீ இங்க என்ன பண்ற?” என்று கம்பீரமான தேவ்வின் குரலைக் கேட்டு திரும்பினாள்.
“ஒன்னும் இல்லை, சும்மா வந்தேன்” என்று அவள் கூற, யமுனாவின் முகவாட்டம் தேவிற்கு பறைசாற்றியது, அவள் ஏதோ சிந்தனையில் இருக்கிறாள் என்று.
யமுனாவின் கையைப் பிடித்தவன், “என்ன ஆச்சு யமுனா? உன் முகம் சரியில்லை” என்ற தேவ்வின் குரலில் கோபம் கலந்த வருத்தம் இருந்தது.
அவ்வளவு தான் யமுனா அழத் தொடங்கினாள். “தேவ் ப்ளீஸ்… எனக்கு இந்த வாழ்க்கை சுத்தமாக பிடிக்கவில்லை. எவ்வளவு முடிச்சுகள் இருக்கு! இது நான் எதிர்பார்த்த வாழ்க்கை இல்லை. திவ்யா, பிரியா எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க. ஏன் எனக்கு மட்டும் இப்படி ஒரு வாழ்க்கை?” என்று கூறியவளை, எப்போதும் கோபமாக கையாளுபவன் இன்று அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“எல்லாப் பிரச்சனையும் சரி ஆயிடும் யமுனா… என்னை நம்பு. பிரனிதாவை நினைச்சு நீ பயப்படாத, அவள் இனி இங்கே தான் இருப்பாள். நீ என்னை மட்டும் நம்பு” என்று அவளின் முகத்தை ஏந்தி கண்ணீரைத் துடைத்தான்.
இதைக் கேட்ட யமுனாவிற்கு கோபம் பொங்கியது. “நான் ஏன் உங்களை நம்ப வேண்டும்…? நீங்கள் மட்டும் என்ன நம்புனீங்களா தேவ்…? எனக்கு இன்னொரு ஆம்பளை தேவைப்படுகிறது என்று கொச்சையாக கூறிவிட்டு சென்னையில் விட்டுவிட்டு போனீங்க…
ஒரு தடவையாவது நீங்கள் என் கேரக்டரை கேவலப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டீங்களா? இல்லை... ச்ச என்னையே தொலைச்சிட்டு இப்போது உங்ககிட்ட வந்து பேசுறேனே, உங்களுக்கு இப்போது என்னை பார்க்கவே டேக் இட் ஃபார் கேரக்டர் மாதிரி இருக்கும்ல” என்று தன் கோபத்தில் வார்த்தையைக் கொட்டினாள்.
“என்ன வார்த்தை பேசுற டி நீ…” என்று யமுனாவின் கையை முறுக்கியவன், அவளை அடிக்க கையை ஓங்கிவிட்டு, அடிக்காமல் கீழே இறக்கினான்.
“ஏன் அடிக்காமல் நிறுத்திட்டீங்க? நல்லா அடிங்க, அடிச்சே சாகடிச்சிடுங்க… நீங்கள் ஒரு காட்டுமிராண்டி தான, நீங்கள் பண்ண தப்பை உணராமல் என்னை யூஸ் பண்ணிட்டு, இப்போது உங்கள் முதல் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வந்து வெச்சிருக்கீங்க. இன்னிக்கு இரவு என்கிட்ட வராதீங்க. அதான் உங்கள் மனைவி பிரனிதா வந்துட்டாங்களே, அங்கே போங்க” என்று சொல்லி முடிக்கும் முன், தேவ் யமுனாவை அடித்தே விட்டான், அதுவும் ஒருமுறை இல்லை நான்கு முறை.
“நானும் உன்னை அடிக்கக் கூடாதுன்னு கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன், நீ அடங்கமாட்டல? எதை எதை கூட முடிச்சு போடுற? உன்னை கல்யாணம் பண்ணினதுல இருந்து, வேற ஒருவரை கல்யாணம் பண்ணிக்க நீ ஆசைப்பட்ட மாதிரி தான் நடந்துக்கிட்ட. என்னுடைய சின்ன தொடுகைக்கும் நீ அருவருப்பாக தான் உணர்ந்த, அப்படி இருக்கும் போது யூ பிளடி*** எப்படி நான் தப்பை உணர முடியும்…? அக்ஃசுவலி நீ தான் உன் தப்பை உணர்ந்து என்னைப் பிடித்து, என்னுடன் நேற்று இருந்த என்று நினைச்சேன். எப்படிடீ உன்னால் என்மேல் நம்பிக்கையே இல்லாமல் என்கூட நேற்று*** முடியும் சொல்லு?” என்று அடிவாங்கி நின்று கொண்டிருந்த யமுனாவை உலுக்கினான்.
தேவ்வின் மீது இருக்கும் காதலை விட, தேவ்வின் மேல் இருக்கும் கோபமே அதிகம் என்பதால், “ஜஸ்ட் ஃபார் லஸ்ட்” என்ற யமுனாவை அதிர்ச்சியாய்ப் பார்த்தான் தேவ்.
“வாட்? கம் அகைன்” என்று கோபமாக கேட்டவனிடம், “ஆமாம்… உடல் தேவைக்குத் தான் நானும் நேற்று உங்களோடு இருந்தேன்!” என்றாள் இம்முறை கத்திக்கொண்டே.
யமுனாவின் வார்த்தைகளில் வெறுப்பின் உச்சிக்கே சென்றவன், “இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யூ ஆர் நாட் யமுனா சத்யதேவ் எனிமோர்” என்று அவளின் முகத்தை அருவருப்பாக பார்த்துவிட்டு கீழே சென்றான்.
இப்போது யமுனாவிற்குமே இங்கு இருப்பது நெருப்பின் மேல் நிற்பது போல் தோன்றியது. இங்கு இருந்து சென்றிட வேண்டும் என்று நினைத்தாள். மடமடவென தன் உடைமைகளையும், தன் மொபைலையும் எடுத்துக்கொண்டு, வெளியே வரும் போது ஹாலில் அமர்ந்திருந்த தேவ்வை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தவள், கோபத்தில் சீதாலட்சுமியிடம் கூட கூறாமல் கிளம்பினாள். சீதாலட்சுமி பிரனிதாவுடன் அறையில் இருந்ததால், அவருக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக