மாயம் 36
மாயம் 36
“ஏங்க?” என்று அமைதியாக அழைத்தவளை ஒரு பார்வை பார்த்த தேவ், “காலையில் ஒரு ஆயிரம் தேவ் போட்டு பேசுன, இப்போது என்ன செலக்டிவ் அம்னீஷியாவா?” என்று நக்கலாகக் கேட்டான்.
“அம் சாரி… நான் அப்போது இருந்த நிலைமையில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன். உங்களை வேற தவறா பேசிட்டேன். நீங்கள் சொன்ன அப்புறம்தான் எனக்கு புரிஞ்சிது” என்று தயங்கினாள்.
‘நீ என்னை எப்போது தான் சரியா புரிஞ்சிருக்க யமுனா?’ என்று மனதில் நினைத்தவன், யமுனாவிடம் எதுவும் கூறாமல் மறுபடியும் வேலையில் இறங்கினான்.
“ஏங்க பசிக்குது” என்று இழுத்தாள். “நானும் மதியத்தில் இருந்து சாப்பிடவில்லை, வா போலாம்” என்று எழுந்தவன், அறையை ஆக்செஸ் கார்ட் மூலம் பூட்டிவிட்டு, யமுனாவை ரூஃப் டாப்பிற்கு அழைத்துச் சென்றான்.
ஏழு மாடிகளைக் கொண்ட அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மாடியில் உள்ள ரூஃப் டாப் ரெஸ்டாரென்ட், இரவின் அழகில் வண்ண விளக்குகளுடன் பார்க்கவே அழகாக இருந்தது. அங்கே ஓர் இருக்கையில் தேவ் அமர்ந்த பின், அவனுக்கு எதிரில் அமர்ந்தாள் யமுனா.
“உன்னை இங்கு தான் இன்று இரவு அழைத்துக்கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன்” என்றான் தேவ்.
ஒரு ஆர்வத்தில், “ஏன்?” என்று கேட்டாள் யமுனா.
“நீ ஆதிராவை அவ்வளவு பொறுப்பாக கவனிக்குற, அதனால் உனக்கு சின்ன கிஃப்ட் அவ்வளவு தான்” என்று மெனு கார்ட்டில் கண்களை செலுத்தினான். யமுனாவிற்குத் தான் அவன் பதில் ஏமாற்றமாக இருந்தது. ‘அப்போது தன்னோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்று தேவ் நினைக்கவில்லையா?’ என்று மனதில் ஏங்கினாள்.
சாப்பாடு வந்த பின்னும் யமுனா சாப்பிடாமல் சாப்பாட்டில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அதை கவனித்த தேவ், “என்ன ஆச்சு, ஏன் சாப்பிடாமல் இருக்க யமுனா? ஆதிராவுடன் பேசணுமா?” என்று கேட்டான்.
‘இவன் காலையில் என்னைவிட்டு பிரிய கூடாது என்று கூறினான். ஆனால் அதற்குப் பின் தன்னிடம் தங்களைப் பற்றி எதுவும் பேசவில்லையே’ என்ற மன ஓட்டத்திலேயே இருந்தவளிடம்,
“ஏய் யமுனா, வேணும்னா பிரனிதா கோர்ட்டில் கேஸ் போடட்டும். ஆதிரா நம்முடன் தான் இருக்கிற மாதிரி கேஸை மூவ் பண்ண டிரை பண்றேன். பட் அது நாட் அட் ஆல் பாசிபிள். எனிவேஸ் டிரை பண்றேன். நீ இப்போது சாப்பிடு” என்றான்.
“ஏங்க, சப்போஸ் கோர்ட்டில் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் குழந்தைக்காக என்று தீர்ப்பு வந்திருச்சுனா?” என்று பயமாக பதற்றமாகக் கேட்டாள் யமுனா.
“அதான் எப்படி இருந்தாலும் உனக்கு நான் வேண்டாம். சரி ஆதிராவிற்காக அந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்” என்று விளையாட்டாக தேவ் கூறியதும், யமுனாவிற்கு அங்கேயே பயங்கரமாக அழுகை வந்தது.
யமுனா அவ்வாறு அழுதுகொண்டு இருப்பது, தேவ்விற்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது. “வாட் ஹேப்பெண்ட் யமுனா?” என்று தேவ் கூறும் போது, யமுனா அழுதுகொண்டே இருக்கையை விட்டு எழுந்து, “நத்திங்” என்று கூறிவிட்டு ருஃப் டாப்பில் இருந்து வெளியே ஓடினாள்.
***
யமுனா ஏன் அழுதுகொண்டு ஓடுகிறாள் என்று புரியாமல், தேவ்வும் பின்னாடி, “யமுனா… யமுனா…” என்று சத்தமாக கத்திக்கொண்டே ஓடினான். ஆனால் யமுனா நேராக அவர்களுக்கு புக் செய்த அறையின் பக்கத்தில் நின்றாள்.
“எப்படியோ நான் வந்தால் தான் இதை ஓபன் பண்ண முடியும். என்ன ஆச்சு யமுனா?” என்று ஆக்செஸ் கார்டை வைத்து கதவைத் திறந்தான்.
தேவ் இன்று யமுனாவிற்காக டின்னர் கிஃப்ட் வைத்திருந்ததால் அவளைத் திட்ட கூடாது என்று முடிவு எடுத்திருந்தவன், அமைதியாக உள்ளே வந்து, “உள்ளே வா” என்று மட்டும் கூறிவிட்டு வாசலின் பக்கம் நின்றிருந்தான்.
யமுனா அழுதுக்கொண்டே உள்ளே வந்ததம் கதவைச் சாற்றி விட்டு, “என்ன ஆச்சு யமுனா? நான் எப்போதும் போல இப்போது உன்னிடம் கடுமையாகக் கூட நடந்து கொள்ளவில்லை” என்று முடித்தான்.
“உங்களுடைய கடுமையைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் உங்களின் பிரிவு எனக்கு இங்கே வலிக்கிறது” என்று தனது இதயத்தில் கை வைத்து காட்டிய யமுனாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் தேவ்.
“தேவ், எனக்கு ஆதிரா முக்கியம் தான். ஆனால் அதற்காக என்னால் உங்களை பிரனிதாவிற்கு விட்டுக்கொடுக்க முடியாது. பிரனிதாவிற்கு நீங்கள் முன்னாள் கணவன் என்றால், இப்போது இனி எப்போதுமே நீங்கள் எனக்கு மட்டும் தான் கணவன்!” என்று அழுத கண்களோடு தேவ்வைப் பார்த்தாள்.
தேவ்விற்கு யமுனாவின் கூற்றை நம்பவே முடியவில்லை. ஒருவேளை ஏதோ வேகத்தில் பேசுகிறாளோ? என்று நினைத்தவன், அவளை அணைக்கத் துடித்த கையைக் கட்டுப்படுத்தி, “ஒகே யமுனா, நான் பிரனிதாவுடன் சேர மாட்டேன். நீ கவலைப்படாமல் இப்போது சாப்பிட வா” என்று அழைத்தான். தேவ் அப்படிக் கூறிய பின் தான் நிதானத்திற்கு வந்த யமுனா, “எனக்கு ஃபைவ் மினிட்ஸ் டைம் தாங்க, ஃபிரஸ்அப் பண்ணிட்டு வந்திடுறேன்” என ரெஸ்ட் ரூமிற்குச் சென்றாள்.
தேவ்விற்கு, யமுனா கூறுவதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ‘ஒருவேளை மஞ்சள் கயிறைத் தான் கட்டியதால், தன்னை பிடிக்காவிட்டாலும் இன்னொருவளுக்கு விட்டுக்கொடுக்க முடியவில்லையா?’ என்று யோசித்தவன் யமுனாவிற்கு நேரம் கொடுக்கவே யோசித்தான். ஏனெனில் அவன் பிரனிதாவுடன் சேரமாட்டான் என்று அவனுக்கே தெரிந்திருந்தாலும், விளையாட்டாக பேசியது யமுனாவை காயப்படுத்தி விட்டதோ என்று யோசித்து கவலைக்குள்ளானான்.
யமுனா வெளியே வந்தவுடன் அவளின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. “வா போலாம்” என்று யமுனாவை அழைத்துச் சென்ற தேவ், சாப்பிட்டு முடிக்கும் வரை எதுவும் பேசவில்லை. யமுனா சாப்பிட்டு முடித்தவுடன், “இங்கே ஒரு ஹாலில் இரவு பத்து மணிக்கு லைட் மியூசிக் கான்சர்ட் நடக்கிறது போலாமா?” என்று கேட்டான். “சரிங்க போலாம்” என்றாள்.
தேவ்விற்கு யமுனாவின் வார்த்தைகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. தன்னை விட்டுக்கொடுக்க முடியாது என்றால், தன்னை அவள் விரும்புகிறாள் என்று தானே அர்த்தம் என்று யோசித்து முடிவுக்கு வந்தவன், யமுனாவின் மீது வைத்த காதல் இப்போது காமத்தில் தொடர வேண்டுமென நினைத்தான். தான் அவசரப்பட்டு அவளைத் தொடக்கூடாது என்றே யோசிப்பதற்காக கான்சர்ட்டிற்கு அவளுடன் வந்தவன், யமுனாவிற்குத் தான் வேண்டுமென முடிவுக்கே வந்துவிட்டான்.
கான்சர்ட்டை பார்த்துக் கொண்டிருந்த யமுனாவின் மனதில், ‘என்னால் உங்களை விட்டுக்கொடுக்க முடியாது தேவ், அதைப் போல் என்னால் நீங்கள் செய்த தவறை மன்னிக்கவும் முடியாது. நீங்கள் எப்போது நீங்கள் செய்த தவறை உணருவீங்களோ, அப்போதே நம்முடைய இல்லறம் ஆரம்பம் ஆகும்’ என்று நினைத்தவள், லைவ் கான்சர்ட்டைப் பார்த்தாள்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்தவள், நேரம் ஆக ஆக தனக்கே தெரியாமல் கண்ணயர்ந்து தூங்கி தேவ்வின் தோளில் மேல் சாய்ந்துவிட்டாள். தேவ் இப்போது காதல் மனநிலையில் இருந்ததால், யமுனா தன் தோள்களில் மீது சாய்ந்து தூங்கியது மென் முறுவலை ஏற்படுத்தியது.
கான்சர்ட் முடியும் வரை தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத தேவ், தூங்கிய யமுனாவை தூக்கி தன் தோள்களில் ஏந்தியவன், தங்களுடைய அறைக்கு விரைந்தான். தன்னுடைய ஒரு தோளில் அவளை போட்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே செல்லும் போதே, யமுனா விழித்துக்கொண்டாள்.
“தேவ் என்ன பண்றீங்க?” என்று பதறினாள்.
அவளை கீழே இறக்கி விட்டவன், “என்னை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு நீ சொன்ன அப்புறம், என்னால் எப்படி உன்னை என்னுடையவளாக ஆக்காமல் இருக்க முடியும்?” என்று யமுனாவின் கண்களைப் பார்த்து வசீகரமாகக் கூறியவன், அவளை நெருங்கினான்.
தேவ்வின் இந்தச் செயலை எதிர்பார்க்காத யமுனா திகைத்தாள். “தேவ்… அது வந்து… நீங்கள் இன்னும் உங்களின் தப்பு…” என்று கூறிக்கொண்டிருந்த போதே தேவ் யமுனாவின் இதழ்களைச் சிறை செய்தான். தேவ்விடம் இருந்து விலகி இருந்தவரை தன்னிடம் அவனை நெருங்க விடக் கூடாது என்று தீர்மானமாக இருந்தவள், அவனின் ஒற்றை இதழொற்றலில் தன்னை மறந்தாள்.
இதுவரை யமுனாவிடம் முத்தமிட்ட தருணங்களில் முரட்டுத்தனமாக இருந்தவன், இன்று அவளை மென்மையாக கையாண்டான். நீண்ட நேரம் தொடர்ந்த இவர்களின் இதழ் யுத்தத்தில், முதலில் விடுபட நினைத்து தேவ்வை மென்மையாக தள்ளிவிட நினைத்தவளை, தன் கைகள் கொண்டு அவளின் இடையைத் தன் பக்கம் இழுத்தான்.
யமுனாவை தூக்கி தன் கைகளில் ஏந்தி அவளை கட்டிலில் போட்டவன், தன் சட்டையைக் களைய தொடங்கினான். அன்று யமுனா அணிந்திருந்த சிவப்பு வண்ண சேலை அவளின் அழகுக்கு மேலும் அழகூட்டுவது போல் இருந்தது. தேவ்வின் செயல் யமுனாவிற்கு வெட்கத்தைக் கொண்டு வந்தது. கீழே வெட்கத்தில் குனிந்திருந்தவளின் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன், “இன்னும் என்னடி வெட்கம்?” என்று யமுனாவின் ஆடைகளையும் விடுவித்தான்.
அந்த நிமிடம் தேவ் செய்த அனைத்தையும், அவன் கூறிய அனைத்தையும் மறந்த யமுனா, அவனிடம் தலையாட்டி பொம்மையாய் ஆனாள். இருவரின் காதல் நேரடியாக சொல்லாவிட்டாலும், அவர்களின் காம உணர்ச்சியின் பெருக்கம் காதலின் அளவைக் காட்டியது. இருவரும் மஞ்சத்தில் மகிழ்ந்த பின்னரும் தேவ் யமுனாவை விடவில்லை. மூன்று வருடங்களாக யமுனா மேல் வைத்த காதல், மோகம், காமம், ஆசை அனைத்துமே அணையைத் திறந்துவிட்டு ஓடும் தண்ணீர் போல பொங்கி எழுந்தது.
தேவ்வின் சேட்டைகள் விடுவதாக இல்லை என்று உணர்ந்த யமுனா, “தேவ்… ப்ளீஸ்ரொம்ப டயர்டா இருக்கு” என்று தூங்கியே விட்டாள். தேவ்வும் அதற்குப் பிறகு யமுனாவைத் தொந்தரவு செய்யாமல், அவளின் நெற்றியில் முத்தமிட்டு விடுவித்தான்.
***
களைப்பில் தூங்கிய யமுனா, திடீரென்று ஏதோ கனவு கண்டது போல் காலை ஐந்து மணிக்கு விழித்தாள். அப்போது தான் தேவ்வுடன் எப்படி மஞ்சத்தில் குழைந்திருக்கிறோம் என்று தன்னையே நினைத்து அருவருப்பாக உணர்ந்தவள், தன் கையை வைத்து தலையில் அடித்தாள்.
பக்கத்தில் துயிலில் இருந்த தேவ்விற்கு கேட்காதவாறு வாயைப் பொத்தி அமைதியாய் அழுதவள், ‘தான் ஏன் இப்படி தேவ்வுடன் உடலுறவில் ஈடுபட்டு விட்டோம்? ச்ச என்ன மாதிரி பெண் நான்? தேவ்வின் மேல் காதல் இருந்தாலும் அவரின் தப்பை அவர் உணராமல் நான் எப்படி தொடவிட்டேன்? கடவுளே எனக்கு உடம்பெல்லாம் எரிகிறதே!’ என்று மனதில் அழுது புலம்பினாள்.
உடனே போர்வையை வைத்து தன்னைப் போர்த்திக்கொண்டே குளியலயறைக்குள் சென்று, வெதுவெதுப்பான ஷவரில் நின்றவளுக்கு, மனது கொழுந்துவிட்டு எரிந்தது. தேவ்வுடன் மணிக்கணக்காக உறவில் இருந்ததால், மனதும் உடம்பும் இப்போது பலவீனமாக ஆனது. அப்படியே அங்கேயே அமர்ந்தவள், தன் கைகளை முகத்தோடு கட்டிக்கொண்டு அழுதாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக