மாயம் 25

 மாயம் 25


“இன்னியோட அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அதற்குக் காரணம் அந்த யமுனா. அவளின் விலாசம் தான் முக்கியமா? என்று கடுப்பானான்.

“அண்ணா, உங்களை எதிர்த்து பேசுறேனு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்கள் தான யமுனாவை வெளியே அனுப்புனீங்க. அதே மாதிரி யமுனா அண்ணி இல்லாமல் வீடே நல்லா இல்லை. அந்த கவலையில் தான் அப்பா இறந்தாங்க என்று கூறி முடித்தாள். 

“என்னிடம் விளக்கம் கூறுகிற அளவிற்கு நீ வளரவில்லை பிரியா… அதான் அவளுடைய செல் நம்பர் இருக்கே, அதற்கு கால் பண்ணி கேட்க வேண்டியது தானே. எதற்கு கண்டவளின் விலாசத்தை நான் சொல்ல வேண்டும்? முதலில் அவள் உனக்கு இப்போது அண்ணி இல்லை. அப்படிக் கூப்பிடாதே என்று இந்த முறை கொதித்தான்.

“அண்ணா, யமுனாவுடைய சிம் கார்டு உபயோகத்தில் இல்லை என்று பிரியா போராட முடியாமல் முடித்தாள். 

‘யமுனா ஏன் சிம் கார்ட்டை மாற்றினாள்? அப்போது தன்னுடைய தொடர்பு அவளுக்கு தேவை இல்லையென்று வெறுத்தவள், தன்னை ஒதுக்கிவிட்டாளா? என்று தேவ்வின் மனதில் அனல் கொதித்தது. 

“அண்ணா இருக்கீங்களா? என்ற பிரியாவின் குரலைக் கேட்டு தன்னிலைக்கு வந்தவன், யமுனாவின் விடுதியின் விலாசத்தை பிரியாவிடம் கொடுத்தான். 

தன் மாமனார், மாமியாரிடம் விலாசத்தைத் தந்து, “எனக்கு யமுனா அண்ணி வேண்டும் மாமா என்று அழுதாள். 

“எங்களுக்கு யமுனா கிடைத்தால் போதும்மா, இனி அவள் உன்னுடைய அண்ணி இல்லை. யமுனாவை கண்டறிந்து அவளுக்கு புது வாழ்க்கை தர வேண்டியே நாங்கள் செல்கிறோம். உன் அண்ணனிடம் அவள் பட்ட துன்பங்கள் போதும் என்று கையெடுத்து கும்பிட்டார்.

பிரியாவிற்கு மனது சங்கடமாக ஆகி விட்டது. அப்போது சரியாக திவாகர் வீட்டிற்கு வந்தான். அவனிடம் ஓடியவள், “திவாகர் ப்ளீஸ், நீங்களாவது அத்தை, மாமா கிட்ட சொல்லுங்க. யமுனா என்னுடைய அண்ணியாக வேண்டும் என்று அழுதாள்.

“அவர்களிடம் அந்த பொறுப்பை கொடுத்ததே நான் தான் பிரியா. உனக்கு உன்னுடைய அண்ணனின் வாழ்க்கை முக்கியம் என்றால், எனக்கு என் அத்தை மகளின் வாழ்க்கை முக்கியம். நீ தேவை இல்லாமல் உன்னைப் போட்டு குழப்பிக்காதே. யமுனாவிற்கு அடுத்து ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து தர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று தீர்மானமாக முடித்தான்.

முதலில் யமுனாவை இவர்கள் கண்டறிய வேண்டும். பின் நாம் பொறுமையாக யமுனாவிடம், தேவ் அண்ணாவைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தாள். அடுத்த நாளே தங்களுடைய பேத்தியைக் கொஞ்சிவிட்டு சென்னைக்குப் புறப்பட்டனர்.

*** 

அடுத்த நாள் காலை விக்ரம் தேவ்வைத் தேடி, அவனுடைய வீட்டிற்கு வந்தான். “என்ன விக்ரம், ஞாயிற்றுக்கிழமை அதுவுமா வீட்டிற்கு வந்திருக்க? எனிதிங் இம்பார்ட்டெண்ட்? என்று தன் திரெட் மில்லில் ஓடிக்கொண்டே கேட்டான். 

“அது வந்து… இன்னிக்கு மார்னிங் கிஷோருடைய அப்பா குல்தீப் கால் பண்ணாரு என்றான். 

“அதற்கு என்ன? என்று தன் பயிற்சியில் இருந்து கொண்டே கேட்டவனிடம், “கொஞ்சம் விஷயம் சீரியஸ் தேவ். கிஷோரின் அப்பா, மனிஷாவை கிஷோருக்குத் திருமணம் செய்து வைக்க கேட்கிறார் என்று பெருமூச்சு விட்டான்.

“அதுக்கு என்ன விக்ரம், கிஷோர் நல்ல சாய்ஸ் உன் தங்கச்சிக்கு. அதற்கு ஏன் தயங்குற? ஓ மனிஷா கல்யாணம் பண்ணிட்டு போயிட்டா, நான் கேர் டேக்கருக்கு என்ன பண்ணுவேன்னு யோசிச்சியா? ஆக்சுவலி, நானே இந்தியா கிளம்பாலம்னு தான் இருக்கேன் என்று திரெட்மில்லை நிறுத்திய பின், வியர்வையைத் துடைத்தான்

“என்னது டெல்லி போறியா? என்று ஆச்சரியமாகக் கேட்டான் விக்ரம்.

“ஹா ஹா டெல்லி இல்லை சென்னை என்று மனதில் ஏதோ நினைத்தவன் போல், விக்ரமிடம் திரும்பினான்.

“அம்மாவிற்கு இனி டெல்லி செட் ஆகாது, அப்பாவுடைய நினைவுகள் அவர்களை வாட்டி வதைக்கும். அதனால் சென்னையிலேயே செட்டில் ஆயிடலாம்னு இருக்கேன் என்றான் தீர்மானமாக. 

“நானும் மனிஷாவும் உன்னோடு சென்னை வருகிறோம் தேவ். எங்களுக்கு ஒரு வீடு மட்டும் அரேஞ்ச் பண்ணு என்றான் விக்ரம். 

அவனைக் கேள்வியாகப் பார்த்த தேவ்விற்குப் பதில் கொடுப்பதாய், “மனிஷா உன்னை விரும்புகிறாள் தேவ், அவளின் ஆசை அது, நடக்காது என்று எனக்குத் தெரியும். ஆனால் இப்போது மனிஷாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கைத் தேடி வந்திருக்கிறது என்றான் விக்ரம்.

“உன் தங்கை என்னை விரும்புகிறாளா? மை காட்! அவளுக்குப் புத்தி சொல்லி கிஷோரைக் கல்யாணம் பண்ணி வை விக்ரம், கிஷோர் இஸ் அ நைஸ் பெர்ஸன் என்றான் தேவ்.

“தேவ் அது அவ்வளவு ஈஸி இல்லை. ஏன்னா, உன்னை மனிஷா உயிருக்கு உயிராக விரும்புகிறாள். அதுவும் இல்லாமல் கிஷோருடைய தந்தையும் இதில் சம்மதம்னா உடனே இந்தியா வரச் சொன்னாரு. எனக்குத் தெரிஞ்சு இந்த விஷயம் கிஷோருக்கு இன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன். ஆனால், குல்தீப் அங்கிள், அவர் பேச்சை கிஷோர் மீற மாட்டான். அதனால் இந்தியா வரச் சொன்னாரு. 

இப்போதைக்கு மனிஷாக்கு இந்த விஷயமெல்லாம் தெரிய வேண்டாம் தேவ். அவளை இந்தியாவுக்கு முதலில் கூட்டிட்டு போயிட்டு, அப்புறம் கிஷோரை மீட் பண்ணா ஏதாவது மாற்றம் கிடைக்கும். உன் அளவுக்கு கிஷோர் ஸ்மார்ட் இல்லன்னாலும், அவனும் ஸ்மார்ட்டா தான் இருக்கான். அதனால் நம்ம எல்லாருமே சென்னை கிளம்பலாம் என்றான் விக்ரம்.

“ஓகே, பட் வாட் எவர் ஹேப்பென்ஸ் விக்ரம், நான் மனிஷாவை திருமணம் செய்ய மாட்டேன். அதை நீ தெளிவா புரிஞ்சிக்கோ என்று முடிவாகச் சொன்னான்.

“கண்டிப்பா தேவ் என்ற விக்ரமிடம், “உன் பிசினஸ் இங்கே தான இருக்கு, அப்புறம் இந்தியா வந்தா என்ன பண்ணுவ? என்று கேட்டான் தேவ். 

“இங்க இந்த கம்பெனி இன்னொருவருக்கு விற்க போறேன். எங்க நேடிவ் நார்த் இந்தியானாலும் எங்களுக்குத் தமிழ் நல்லா தெரியும். சோ அங்க வந்து ஏதாவது பிசினஸ் டேக் ஓவர் பண்ணிடுவேன் என்றான் விக்ரம். 

“ம்ம் நாட் அ பேட் ஐடியா, சோ கிஷோரும் நார்த் இந்தியன் தான். அதனால் உங்களுக்குள்ள கம்யூனிகேஷன் கேப் கூட இருக்காது என்றான் தேவ்.

“ஆமாம் தேவ், சரி நான் வீட்டிற்கு போய் மனிஷா கிட்ட இதைப்பற்றி சொல்றேன் என்று கிளம்பினான் விக்ரம்.

*** 

யமுனா அன்று காலை ஆபிஸிற்கு நுழையும் போதே வர்தினி அவளிடம், “ஏய் யமுனா, கேசியோட அப்பாக்கு உடம்பு சரியில்லையாமே, உனக்கு தெரியாதா? என்று கேட்டாள். 

“ஓ எனக்கு தெரியாது, என்ன ஆச்சு அவருக்கு? என்று புரியாமல் கேட்டாள்.

“அடிப்பாவி, கேசியோட லவ்வ‍ரா இருந்துட்டு இப்படி சொல்றியே என்று வியப்பாகக் கேட்டாள் வர்தினி. 

“ஷட் அப் வர்தினி, இப்படி தான் ஒரு பெண்ணைப் பற்றித் தெரியாமல் அவதூறாக பேசுவீங்களா? என்று கடுப்பாகக் கேட்டாள்.

“ம்ம் நீ என் வாயை அடைச்சிடலாம். ஆனால் இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கிற ஆயிரம் பேருக்கும் கேசியோட காதலி நீதான்னு தெரியும். அவர்கள் வாயை எப்படி அடைக்கப் போகிறாய்? என்று கிண்டலாகக் கேட்டுவிட்டுச் சென்றாள் வர்தினி.

அவளை அழைத்த யமுனா, “இப்போ கேசி சார் எங்க? என்று கேட்டாள்.

“அவர் அவருடைய வீட்டில் இருக்கிறார், அலுவலகம் வருவதற்கு ஒரு வாரம் ஆகுமாம் என்று சென்றுவிட்டாள்.

யமுனாவிற்குத் தான் கடுப்பாக இருந்தது. ‘கேசி எப்படி இப்படி செய்யலாம்? இதற்குப் பிறகும் இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கக் கூடாது. கேசி வந்தபின் தன்னுடைய ரெசிக்னேஷன் லெட்டரைக் கொடுத்து விட்டு, வேறு வேலையைத் தேட வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

சீதாலட்சுமியிடம் தேவ், “சென்னையில் தான் இனி இருக்கப் போகிறோம். இரண்டு நாளில் பிளைட் என்று சொன்னவுடன், அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. 

தன்னுடைய மருமகள் யமுனா இருக்கும் இடத்திற்கே செல்லப் போகிறோம் என்று ஆனந்தமானவர், பிரியா மற்றும் திவ்யாவிடம் கூறி சந்தோஷம் அடைந்தார். அப்போது தான் தன்னுடைய மாமனார், மாமியாரும் சென்னை சென்றுவிட்டனர் யமுனாவிற்காக என்று, தன் அன்னையிடம் கூறினாள். 

ஒருவேளை, தேவ்வும் யமுனாவும் சந்திக்கும் நேரம் நெருங்கிவிட்டதோ? என்று நினைத்த சீதாலட்சுமி, அவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்று கடவுளை வேண்டினார்.

***

யமுனா ஆதிராவை விட்டுச் சென்ற கொஞ்ச நாட்களில், மிகவும் துடித்துப் போனாள். அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது தான், மனிஷா கேர் டேக்கராக வந்தாள். முதலில் மனிஷாவிடம் சரியாக பழகாத ஆதிரா, நாளடைவில் யமுனா என்னும் கதாபாத்திரத்தை மறந்துவிட்டாள். 

மனிஷாவின் அன்பினால் சந்தோஷமாக இருந்த ஆதிராவுக்கு, இப்போது வயது நான்கு ஆனதால் கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்தது. இந்தியா செல்கிறோம் என்பதை தெரிந்த பின், மனிஷாவை பிரியப் போகிறோம் என்ற பரிதவிப்பில் இருந்தாள் அந்தக் குழந்தை. 

அன்று இரவு தன் தந்தையிடம், “மனிஷா ஆன்டியை விட்டு நாம் இந்தியா போறோமா அப்பா? என்று அழுதாள். 

“ஆதிரா குட்டி, மனிஷா ஆன்ட்டியும் நம்மளோடு இந்தியா வராங்க. ஆனால் இனி அவங்களுடைய வீட்டில் தான் இருப்பாங்க என்றான் தேவ்.

“அப்பா ப்ளீஸ்ப்பா, மனிஷா ஆன்ட்டி இல்லாமல் என்னால் இருக்க முடியாது அப்பா. நம்ம சென்னை போன அப்புறமும் மனிஷா ஆன்ட்டி நம்மளோடு தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடித்தாள் ஆதிரா.

அந்த நொடி அவளை கட்டுப்படுத்துவதற்காக, “சரி, மனிஷா ஆன்ட்டி நம்மளோடு தான் இருப்பார்கள் என்று சொன்னான் தேவ். ஆதிராவை தூங்க வைத்துவிட்டு தன் தாயைப் பார்க்கச் சென்றான். 

ராமாயணம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த அன்னையை, அறையின் வெளியில் நின்று அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் தேவ். அம்மாவை தொந்தரவு செய்யக்கூடாது என்று எவ்வளவு நேரம் அங்கேயே நிற்பாய் என்று, தன் மூக்குக் கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டு புத்தகத்தை மேஜையில் வைத்தபின், “உள்ளே வாப்பா என்று பாசமாக அழைத்தார்.

“அம்மா, நம்ம நாளைக்கு இந்தியா கிளம்புறோம். உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். மனிஷா என்னை விரும்புகிறாள். ஆதிராவிற்கு மனிஷா உடைய ஆதரவு தேவைப்படுகிறது. இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால், என்ன நடந்தாலும் மனிஷாவை நான் திருமணம் செய்ய வேண்டும் என்று நீங்கள் என்னிடம் சொல்லக்கூடாது. 

ஆதிராவை மனிஷாவிடமிருந்து திசை திருப்புவது என் பொறுப்பு. குணாவை, திவ்யா, நித்தினை அழைத்துக் கொண்டு சென்னை வரச் சொல்லுங்க. அப்போதுதான் ஆதிரா மனிஷாவை மறப்பாள் என்றான் தேவ் தீர்மானமாக. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2