மாயம் 23


மாயம் 23

 "தேவ் சார் வாங்க இவங்க தான் நீங்க சொன்ன பெண்ணா..! இதோ இந்த பேஸிக்  டீடெயில்ஸ் மட்டும் சொல்லுங்கள் மா... உங்கள் பெயர்... உங்கள் வயது... நீங்கள் திருமணம் ஆனவரா..?" என்று அந்த விடுதி வார்டன் கேள்விக் கேட்டார்.


"மேடம் நானே சொல்றேன் இவங்க பெயர் யமுனா சங்கர்... வயது இருபத்தி இரண்டு... இன்னும் கல்யாணம் ஆகவில்லை" என்று யமுனாவை அழுத்தமாகப் பார்த்துக்கொண்டுக் கூறினான் தேவ். 


யமுனா சங்கரிலிருந்து யமுனா சத்யதேவ்வாக மாறியபொழுது அவளால் அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது அவனே திருமணம் ஆகாதவள் யமுனா சங்கர் என்று சொல்லும் போது மனதில் வலித்தது. கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீராய் அது பிரதிபலித்தது. யமுனாவின் அறையைக் காட்டிவிட்டு அவளிடம் சாவியைக் கொடுத்துவிட்டுச் சென்றார் அந்த வார்டன் அம்மா சரோஜா. தன் மடிக்கணினிப் பேகில் இருந்து மூன்று பத்திரங்களை எடுத்தவன், "இது உன்னுடைய பூர்வீக சொத்து இதனையும் உன் அத்தை அடமானம் வைத்தார்கள். இது உன் கணவனிடம் இருக்க வேண்டியது அதனால் இனி என்னிடம் இருக்கக் கூடாது" என்று அந்த அறையின் கட்டிலில் வைத்தான்.


அடுத்த இரண்டு பத்திரங்களை எடுத்த தேவ் யமுனாவிடம் நீட்டி, "இது என்னுடைய பேரிலிருந்த மருத்துவமனை மற்றும் கல்லூரி உன் பேரில் மாற்றியாயிற்று இவ்வளவு நாள் ஆதிராவை நன்றாகப் பார்த்ததுக்காகக் கூலி" என்று அவள் முகத்தில் விட்டு எறிந்தான்.


“இந்த இரண்டு பத்திரமும் எனக்குத் தேவை இல்லை சார் மத்தவங்க பணம் எனக்கு வேண்டாம் சார், ப்ளீஸ் இதை நீங்களே வெச்சிக்கோங்க ஆதிராவை அவள் மேல் இருந்த பாசத்திற்காக தான் பார்த்தேன் சார் இந்த சொத்து சுகத்திற்காகப் பார்க்கவில்லை" என்று அவன் கையில் திணித்தாள்.


அதற்குப் பிறகு தேவ் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை. "உன்னுடைய ரெஸ்யூமை ஜாப்ஸ் வலைத்தளத்தில் போட்டாச்சு உன் அலைபேசி எண்ணும் கொடுத்தாச்சு. இனி உனக்கு நிறைய கால்ஸ் வரும் என்னால் தான் உன் வேலை போச்சு. அதனால் தான் வேற எதுவும் இல்லை இந்த விடுதிக்கு முன்பணம் பத்து ஆயிரம் நான் கொடுத்துவிட்டேன் ஒரு வருட வாடகையும் கொடுத்துவிட்டேன் இதில் ஐந்து லட்சங்கள் இருக்கிறது" என்று கட்டிலில் போட்டான்.


இம்முறை கடுப்பான யமுனா,

"சார் நான் தான் சொன்னேன் இல்லையா? ஆதிராவை பாசத்தோடு தான் பார்த்தேன் என்று" என்று சலிப்பாகக் கூறியவளிடம் தன் புருவத்தைச் சுருக்கி, "இது ஆதிராவைப் பார்த்ததுக்காக இல்லை இந்த மூன்று மாதங்கள் எனக்கு நீ முழுதாக கம்பெனி கொடுக்கவில்லை என்றாலும் கால் வாசி கம்பெனி கொடுத்தாய் அல்லவா அதற்கான கூலி... என்ன யமுனா இதையும் பணத்திற்காக பார்க்கவில்லை உங்களின் மேல் இருந்த அன்பினால் தான் நீங்கள் நெருங்கிய போது அதற்கு ஈடு கொடுத்தேன் என்று சொல்லப் போறியா?" என்று பயங்கரமாகச் சிரித்தான்.


தன்னிடம் பணம் கொடுத்து அசிங்கப்படுத்தியவனை இனி பார்க்கக் கூடக் கூடாது என்று அந்த பணத்தை வாங்கியவள், அவனைப் பார்க்கப் பிடிக்காமல், "இனிமேல் தயவு செய்து என்னை வாழ விடுங்கள் அதுக்கு நீங்க ஒரு காரியம் செய்தால் போதும் இனி நீங்களும் நானும் சாகும்வரை சந்திக்கக் கூடாது" என்று அவனை வெளியில் செல்லுமாறு கையை வெளியே காட்டினாள்.


"நீ சொல்லி நான் கிளம்பவில்லை உன்னை மாதிரி கல்யாணம் ஆனவனைக் கணவனாக ஏற்காமல் விவாகரத்து வாங்கி இன்னொரு ஆம்பளை வேண்டும் என்று நினைக்கும் ஈனப்பிறவியிடம் பேசினால் எனக்குத் தான் அசிங்கம்" என்று அவளைக் குத்தினான்.


"ஓ அப்படிப் பார்த்தால் உங்களிடம் தான் அந்த ஈனப்பிறவியின் குணத்தைக் கற்றுக் கொண்டேன் சார், உங்களுக்கு நான் இரண்டாவது தாரம் என்பது மறந்து போச்சா என்ன?" என்று பதிலடிக் கொடுத்தாள் யமுனா.


தேவ்விற்கு வந்த ஆத்திரத்தில் அவளின் வாயை மூடியவன் அவளை நேராக சுவரோடு தள்ளியவன், "இன்னொரு வார்த்தை பேசின உன்னைக் கொலை செய்து விட்டுத் தான் இந்த ஊரை விட்டுக் கிளம்புவேன். பிரனிதாவும் நானும் ஒன்று அல்ல அவளின் மேல் என் விரல் நுனி கூடப் படவில்லை அவள் இன்னொருவனுடன் தொடர்பிலிருந்தாள் ஆனால் நான் உன்னை உயிருக்கு உயிராகக் காதலித்தேன்" என்று தேவ் சொல்லும் போதே யமுனாவின் கண்களில் கண்ணீர் வந்தது.


"ஆனால் நீ இன்னொருவன் தான் வேண்டும் என்று என்னிடமே கூறியவள் உன்னை எவ்வளவு விரும்பினேனோ இப்போது அவ்வளவு வெறுக்கிறேன்" என்று அவளின் வாயை மூடியிருந்த தன் கைகளை எடுத்தவன் அவளை விடுவிட்டு கோபமாக வெளியேச் சென்றுவிட்டான்.


அவன் சென்ற பின் யமுனா அந்த சுவற்றிலேயே சாய்ந்து கீழே அமர்ந்தவள் விசும்பி அழ ஆரம்பித்தாள். 


தேவ்வின் பாதையும் யமுனாவின் பாதையும் வெவ்வேறாகப் பிரிந்தன. இரண்டாகப் பிரிந்த பாதை ஒன்றாகச் சேருமா? இல்லை தனிப்பாதையாகவே தொடருமா? என்பதை இனி பார்ப்போம்….

***

அன்று மனிஷாவிற்கு லண்டனில் இருக்கும், 'கான்வென்ட் கார்டனில்' காலை அழகாக விடிந்தது. “அப்பாடி நல்லவேளை ஹிட்லர் கிட்ட இரண்டு நாட்களாக திட்டு வாங்காமல் இருக்கோம் கடவுளே! எப்படியாவது இந்த ஹிட்லர் மனதில் இடம் பிடிக்கணும், அதுக்கு நீ தான் பொறுப்பு பெருமாளே! என்று காலை எழுந்தவுடன் கடவுளை வேண்டினாள்.

“ஹேய் மனிஷா என்ன வேண்டிட்டு இருக்க? என்று ஒரு குரல் அவளின் வேண்டுதலில் குறுக்கிட்டது.

“ஐய்யோ அண்ணா ஏன் இப்படி பண்ற? நானே தேவ் என்னை விரும்ப வேண்டும் என்று பெருமாளைக் கும்பிட்டுக்கொண்டு இருந்தேன், நீங்க வேற ஏன் அண்ணா இப்படி பண்றீங்க? என்று முகத்தைத் திருப்பினாள்.

அவளின் பக்கத்தில் வந்து அமர்ந்த அவளுடைய அண்ணன் விக்ரம், மனிஷாவின் தலையை வருடிக்கொண்டே, “இங்க பாருடா, நம்ம சின்ன வயசுலயே அப்பா, அம்மா இல்லாமல் வளர்ந்தோம். அதனால் நான் என்னுடைய மகளைப் போல உனக்கு நிறைய செல்லம் கொடுத்து தான் வளர்த்தேன். நீ எதைக் கேட்டாலும் அதை வாங்கிக் கொடுக்க, என்னிடம் வசதி இருக்கிறது.

நீ இந்த உலகத்தில் யாரை மணக்கக் கேட்டாலும், என்னால் எப்படியாவது அவன் கையில் காலில் விழுந்தாவது, உன்னை கரம் பிடிக்க செய்வேன். ஆனால் நீ கேட்பது சத்யதேவ்! அவன் ஒரு எட்டா கனிம்மா, உன்னை தன் மகளுக்கு கேர் டேக்கராக நியமித்ததற்குக் காரணமே, அவனுடைய நெருங்கிய நண்பனின் தங்கை நீ என்பதால் தான்.

தேவ் இங்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. அவன் என்னிடம் வந்த புதிதில் சொன்ன வார்த்தை, ‘நீ என்னுடைய நெருங்கிய நண்பன். அதனால் உனக்கு நம்பிக்கையானவர்கள் இருந்தால் ஆதிராவுக்கு கேர் டேக்கராக நியமிக்க தேர்வு செய்வேன் என்றபோது தான் நீயாக விருப்பப்பட்டு, தேவ்வின் மகளை கேர் டேக்கராக பார்க்கிறேன் என்று முன்வந்தாய். 

நமக்கு இருக்கிற வசதிக்கு எதற்கு? என்று கேட்ட போது, ‘கல்லூரி முடிச்சிட்டு சும்மா தான இருக்கேன். அதனால் டைம் நல்லா போகும்னு சொன்னாய். ஆனால் எனக்கு இப்போ தான் புரியுது. நீ தேவ்விற்காக தான் இதெல்லாம் செய்தாய் என்று என்று கவலையாக எழுந்தான். 

“அண்ணா நான் பிறந்து இருபத்தி ஐந்து வருடங்கள் லண்டனில் தான் இருந்தேன். இங்குமே நிறைய இந்தியர்களைத் தாண்டி தான் வந்தேன். ஆனால் தேவ்வின் மீது தான் எனக்கு அந்த ஈர்ப்பு வந்திருக்கிறது. அவரைப் பார்த்தால் முப்பத்தி ஒரு வயது ஆடவன் என்று சொல்ல முடியாது. என்ன ஒரு அழகு, ஆண்மைத்தனம், கம்பீரம், நல்லவேளை நீயும் அவரும் லண்டனில் மீட் பண்ணி நண்பர்கள் ஆனீங்க என்றாள். 

“நாங்கள் இரண்டு பேர் இல்லை மனிஷா, மூன்று பேர், கிஷோரை விட்டுட்டியே... நானும் தேவும் கிஷோரும் கடந்த ஐந்து வருடங்களாக நண்பர்களாக இருக்கோம். எங்களுடைய நட்பு ரொம்ப புனிதமானது. ஒரு தடவை, ‘தி யங் பிசினஸ் டைகூன்ஸ் என்று உலகில் ஐம்பது பேரை அழைத்து லண்டனில் சிறப்பித்தனர். அதில் தான் தேவ்வையும் கிஷோரையும் நான் முதலில் பார்த்தேன். அவர்களைப் பார்த்தவுடன் இந்தியர்கள் என்று அறிந்து கொண்ட நான் முதலில் பேசினேன்… 

நீ சொன்னால் நம்பமாட்ட மனிஷா, தேவ் நம்பர் ஒன் டைகூன் இன் இந்தியானா, கிஷோர் நம்பர் சிக்ஸ். ஆனால் இருவருமே இருவரையும் தொழில் ரீதி எதிரிகளாகப் பார்க்காமல், நார்மலாகவே பேசினர். அப்போது ஆரம்பித்த எங்களுடைய நட்பு, ஆண்டுகள் ஆனாலும் வலுவாகவே இருக்கிறது என்றான்.

“இந்த கதையெல்லாம் எனக்குத் தெரியும் அண்ணா, இப்போ எதற்கு மறுபடியும் சொல்றீங்க? என்று சந்தேகமாகக் கேட்டாள் மனிஷா.

“அப்படிப்பட்ட எங்களுடைய நட்பில் மண்ணை அள்ளி கொட்டிறாதே மனி, இதைச் சொல்லத்தான் அந்தக் கதையை மறுபடியும் எடுத்தேன் என்று பெருமூச்சு விட்டான்.

“நான் தேவ்வை காதலிக்கிறது தப்பா அண்ணா? அவரைத் திருமணம் செய்ய நினைப்பது தப்பா அண்ணா? உங்களின் தேவை இல்லாத பயம் எனக்குப் புரியவில்லை என்றால் தங்கை கடுப்பாக.

“உனக்கு தேவ்வின் கடந்த கால வாழ்க்கை தெரியும் தானே, இரண்டு கல்யாணம்! இரண்டிலுமே தோல்வி தான். இனி அவன் வாழ்வில் கல்யாணத்திற்கு இடம் இல்லை என்று கூறியவன், எப்படி உன்னை கரம் பிடிப்பான்? தேவ்வைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நீ உன்னுடைய ஆசைகளை வளர்க்காதே என்று உறுதியாகக் கூறினான் விக்ரம்.

தன் அண்ணனிடம் இதைப்பற்றி இனி பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்தவள், கடிகாரத்தைப் பார்த்தாள். மணி காலை ஒன்பதைக் காட்டியது. “ஐய்யயோ! டைம் ஆயிடுச்சே, சீக்கிரம் கிளம்பணுமே. இல்லை தேவ் நம்மளை வெச்சு செஞ்சிடுவாரு என்று மடமடவென குளித்தவள், இரண்டு பிரட் மற்றும் ஒரு முட்டையைச் சாப்பிட்டு, தேவ்வின் வீட்டிற்குத் தன் காரில் கிளம்பினாள். 

'செவன் டைல்ஸில்' இருக்கும் தேவ்வின் வீட்டிற்கு தன் காரில் சென்றடைந்த மனிஷா, வீட்டை அடைந்ததும் உள்ளே செல்ல பயந்தாள்.

 ‘கடவுளே, ஹிட்லர் என்ன சொல்லப் போறாரோ? என்று பயந்து உள்ளே சென்றவளிடம், “மனிஷா நில்லு. நேரம் என்ன ஆச்சு? உன்னுடைய டியூட்டி டைம் காலை ஒன்பது முப்பதிற்கு ஆரம்பிக்கும் என்று தெரியும் தானே, நீ இப்படி வருவது முதல் தடவை இல்லை. உனக்கு வேலைக்கு வருவதற்கு விருப்பம் இல்லை என்றால் நேரடியாக சொல்லிவிடு என்றான் சத்யதேவ் கோபமாக.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 2

மாயம் 8