மாயம் 22

மாயம் 22

 "அம்மா... அம்மா வாங்க அப்பா வந்திட்டாங்க" என்று யமுனாவை இழுத்தாள் ஆதிரா. அப்போது அந்த அறைக்கு திவ்யா மற்றும் பிரியா வந்தனர். அவர்களைக் கண்டதும் ஆதிரா அவர்களிடம் திரும்பி, "அம்மா அப்பா பார்க்கணும்" என்று அடம்பிடித்தாள்.


"பிரியா ப்ளீஸ் ஆதிராவை நீங்க தூக்கிட்டுப் போங்க என் மனசு சரி இல்லை" என்று கடுப்பாகக் கூறினாள் யமுனா. திவ்யாவிடம் கண் அசைவில் செய்கை காட்டிய பிரியா ஆதிராவை வெளியே தூக்கிக்கொண்டுச் சென்றாள்.


யமுனாவிடம் திரும்பிய திவ்யா,

"யமுனா காலையில் கீழே இறங்கி வந்தபோது நல்லா தான இருந்த அப்போ ஏன் இப்போ இப்படி சோகமா இருக்க உனக்கும் தேவ் அத்தானுக்கும் எதாவது பிரச்சனையா?" என்று கேட்டாள்.


தேவ்வின் மேல் இருந்த கோபத்தில், "ஆமாம்... என் பிரச்சனையே தேவ் தான்" என்று அவள் கடுப்பில் கூறும் போது அந்த அறைக்குள் சரியாக தேவ் வந்தான். தேவ் அப்போது அங்கு வருவான் என்று எதிர்பார்க்காத யமுனா மற்றும் திவ்யா அதிர்ந்து அமர்ந்திருந்தவர்கள் தானாக நின்றனர்.


இதைக் கேட்ட தேவ்வின் முகத்தில் கடுமை நிலவியது. "திவ்யா, நான் யமுனா கிட்ட பேசணும்" என்று தேவ் சொல்லி முடிக்கும் போது திவ்யா அந்த அறையை விட்டு நகர்ந்தாள்.


"சோ மிஸ் யமுனா திவாகரும் என் தங்கையும் சேர்ந்துட்டாங்க. ஆதிராவை எப்படி இனி வளர்ப்பது என்பது என்னுடைய பிரச்சனை அதானே உன் கருத்து... ஓகே லெட் மீ கம் டு த பாயிண்ட் இந்தா இது உனக்கான விவாகரத்து இனி எவனை கல்யாணம் பண்ணி கூத்தடிக்கணுமோ பண்ணிக்கோ. இனி உனக்கு இந்த வாழ்க்கையில் இருந்து விடுதலை இன்னிக்கே நீ இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்" என்று அந்த விவாகரத்து காகிதத்தை அவள் முகத்தில் விட்டு எறிந்தான்.


யமுனாவிற்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. 'மனிதனா இவன் இப்படி வாய் கூசாமல் பேசுகிறானே' என்று நினைத்தவள்,


தேவ்விடம், "ஆமாம் நான் இன்னொருவனைக் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியாகத் தான் இருக்க போகிறேன் போதுமா?" என்றவள் அந்த விவாகரத்து காகிதத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு அவனின் கையில் கொடுக்க பிடிக்காமல் அங்கிருந்த மேஜையில் வைத்தாள்.


"இனி எதற்கு உன்னுடைய கழுத்தில் நான் கட்டிய தாலி இருக்கிறது அதை கொடுத்திட்டு கிளம்பு" என்றான் கோபமாக. தேவ்வின் மீது இருந்த கோபத்தில் யமுனா யோசிக்காமலே அவன் கட்டிய மாங்கல்யத்தை கழற்றியவள் அதையும் சேர்த்து மேஜையில் வைத்தாள். அப்போது அவளின் கையைப் பிடித்த தேவ் அவளை வேகமாக இழுத்துக்கொண்டு கீழேச் சென்றான். அங்கு மொத்த குடும்பமே சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தனர். தேவ் யமுனாவை இழுத்துக்கொண்டு வரும் விதத்தைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.


"தேவ் என்ன பண்ற? யமுனாவை ஏன் இப்படி பண்ற?" என்று கேட்ட ஜெயக்குமாரிடம் திரும்பிய தேவ், "இனி யமுனாவிற்கும் இந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்பா... சொல்லு யமுனா என்கிட்ட என்ன சொன்ன நல்லவள் மாதிரி நடித்தது போதும் டெல் தெம் வாட் யு செட்" என்று கர்ஜித்தான்.


"அண்ணா எதுவா இருந்தாலும் பேசி தீர்த்து கிட்டா சரி ஆகிவிடும் ப்ளிஸ் அண்ணா யமுனாவிற்கும் உங்களைப் பிடிக்கும்" என்றாள் பிரியா.


"ஆமாம் அத்தான் யமுனாவிற்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்" என்ற திவ்யாவைத் தடுத்த யமுனாவின் ஈகோ, "எல்லாரும் நிறுத்துங்கள் தேவ் ஒரு சுயநலவாதி இவர் மனிதனே இல்லை மிருகம் இவரைக் கண்டாலே எனக்கு எரிச்சல் தான் வருகிறது. எனக்கு இவரைச் சுத்தமா பிடிக்காது ஆமா நான் தேவ் கிட்ட விவாகரத்து கேட்டேன் இப்போது இரண்டு பேர் சம்மதத்துடன் கையெழுத்து போட்டாச்சு இனிமேல் நான் இங்கே இருக்க முடியாது" என்றவள் தேவ்வை அழுத்தமாகப் பார்த்தாள்.


யமுனாவை ஒரு பொருட்டாக மதிக்காமலிருந்த தேவ் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஒரு கூல் டிரிங்க்ஸை எடுத்துக்கொண்டு குடிக்க ஆரம்பித்தவன் யமுனாவிடம் திரும்பி, "கால் மீ சார் நோ தேவ் ஃபார் யூ எனிமோர்"



அந்நேரம் ஆதிரா தூங்கிக்கொண்டு இருந்ததால் நடந்த விஷயங்கள் எதுவும் தெரியவில்லை. "தேவ் என்னப்பா இது இப்போது தான் எல்லாரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கோம்னு நினைத்தோம் அதுக்குள்ள இப்படியா?" என்று அழுதார் சீதாலட்சுமி.


"எனக்கும் கல்யாணத்திற்கும் ராசி இல்லை போல அம்மா யமுனாவை நான் தான் சென்னையிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தேன் அதே போல் அவளைச் சென்னையில் விடுவது என் பொறுப்பு அதற்குப் பின் அவள் யாரோ நான் யாரோ" என்றவன் அனைவரும் சமாதானப்படுத்தியும் சமாதானம் ஆகவில்லை. தேவ்வின் மீது இருந்த அதீத கோபத்தில் யமுனா அவள் பொருள்களைப் பெட்டியில் எடுத்து வைத்து விட்டு கீழே இறங்கி வந்தாள்.


யமுனாவையும் அனைவரும் சமாதானப்படுத்தினர். ஆனால் யமுனா கேட்கவில்லை அவனுக்கே அவ்வளவு திமிர் இருக்கும் போது தான் ஒரு தப்பும் செய்யாதவள் தனக்கு எவ்வளவு திமிர் இருக்கும் என்று யமுனாவும் அசரவில்லை. டெல்லி டூ சென்னைக்கு இரண்டு ஏர் டிக்கெட்ஸ்ஸை புக் செய்த தேவ் யமுனாவிடம் திரும்பி, "கிளம்பு" என்று சொல்லிட்டு தன் கார் கீயை எடுத்துக் கொண்டு வெளியேச் சென்றான். யாரையாவது பார்த்தால் நம்மிடம் பேசியே சமாதானம் செய்துவிடுவார்கள் என்று ஒருவரிடமும் திரும்பாமல் தன் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேச் சென்றாள் யமுனா.


தேவ்வின் காரில் யமுனா அமர்ந்தவுடன் அவனின் கார் வேகமாக டெல்லி விமானநிலையத்திற்குக் கிளம்பியது.யமுனாவிற்கு தேவ்வின் மேல் அவ்வளவு ஆத்திரம் இருந்தது.


'நான் எவ்வளவு ஆர்வமாய் இருந்தேன் இவன் வருகிறான்  என்று ஆனால் இவனுக்கு என் மேல் சிறிதளவு கூட அன்பு இல்லை நம்பிக்கை இல்லை பிரியாவிடம் என்னை விரும்புகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறான் வாயைத் திறந்தால் பொய் தான் வரும் போல அப்படிக் கூறி அவனை நல்லவன் என்று அனைவரிடமும் பதித்துக் கொண்டான் எந்த ஊரில் காதலிக்கும் பெண்ணை இப்படி கொடுமைப்படுத்துவாங்க இப்போது அத்தை மாமா எல்லாரும் என்னைத் தான் தப்பா நினைச்சிருப்பாங்க ச்ச' என்று மனதில் நினைத்தவள் தேவ்வைப் பார்த்தாள்.


அவனின் முகத்தில் இறுக்கத்தைத் தவிர வேறு எதுவும் யமுனாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.


தேவ்வின் மனதில் என்ன இருக்கிறது என்பது தேவ்விற்கு மட்டும் தான் தெரியும். டெல்லி விமானநிலையத்திற்கு வந்தபின் தேவ் யமுனாவிடம் எதுவும் பேசாமல் செக் இன் செய்வதில் கவனம் செலுத்தினான்.அன்று மாலை நான்கு மணியளவில் விமானம் புறப்பட்டது. சென்னை வரும் வரை தேவ் யமுனாவிடம் எதுவும் பேசவில்லை அவள் பக்கமும் திரும்பவில்லை. யமுனாவும் ஊர் போய் சேர்ந்தால் போதும் என்றே அப்போது நினைத்தாள்.


சென்னை வந்தபின் ஒருவனுக்கு கால் செய்து ஒரு காரை வரவழைத்த தேவ் யமுனாவிடம் ஏறச்சொல்லி தானும் ஏறினான். பின் தன் அலைப்பேசியை எடுத்து நோண்டிக்கொண்டே வந்தான்.


யமுனாவும் தேவ்விடம் எதுவும் கேட்கவில்லை ஆனால் பசி உயிர் போக ஆரம்பித்தது. 'காலையில் சாப்பிட்டது அதன்பின் விமானத்தில் சாப்பிட்டது. அதுவுமே அவள் வயிற்றுக்குப் போதவில்லை இவன் ஆனால் திடமாக வருகிறான். எனக்கு தான் இங்குப் பசியில் வயிறே வலிக்க ஆரம்பிச்சிடுச்சு' என்று மனதில் புலம்பியவளுக்கு அல்வா மாதிரி ஒரு பெரிய உயர்தரம் வாய்ந்த சைவ உணவகத்தில் கார் நின்றது.


அப்பாடி எதோ உணவகத்தில் நிறுத்திவிட்டான் இந்த ஓட்டுநர் என்று மடமடவென இறங்கிச் சாப்பிடும் இருக்கையில் சென்று அமர்ந்தாள். ஆனால் தேவ் அங்கு அவளோடு அமரவில்லை. பசியில் தேவ்வைப் பற்றி நினைக்காமல் நன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் யமுனா. சாப்பிட்டு முடித்தவுடன் தான் தேவ்வைத் தேடிய யமுனா அங்கு அவன் இல்லை என்று பதறினாள். அச்சமயத்தில் அந்த உணவகத்திலேயே குளிர்சாதன வசதி உள்ள அறையினுள் தேவ் சாப்பிட்டு முடித்த பின் வெளியே வருவதைக் கண்டாள்.


ஒரு கர்டஸிக்கு யமுனா தேவ்விடம், "சார் நீங்கள் சாப்பிட்டீங்களா?" ஏனெனில் பில் கட்டுவது என்னவோ அவன் அல்லவா அதனால் கேட்டாள்.


"நான் எங்களுடைய தகுதிக்குக் குளிர்சாதன அறையில் சாப்பிட்டேன். நீ உன்னுடைய தகுதிக்கு இங்கே சாப்பிட்டாய் முதலிலிருந்தே உன்னை உன் தகுதியில் வைத்திருந்தால் நீ இந்த அளவுக்கு ஆடியிருக்க மாட்டா" என்று வேண்டும் என்றே யமுனாவைக் காயப்படுத்தி விட்டு திமிராகக் கூறினான். 


'என்னை எவ்வளவு கீழ்த் தரமாய் மனதில் வைத்திருக்கிறான் இவனால் கண்டிப்பாக என்னைக் காதலித்து இருக்கவே முடியாது' என்று மனதில் கடுப்பானவள், "ஆமாம் தே... சார் நாங்கள் மிடில் கிளாஸ் தான் எங்களுடைய தரம் இதுதான் ஆனால் நாங்கள் மானம் உள்ளவர்கள் உங்களை மாதிரி சுயநலவாதிகள் இல்லை" என்று கடுப்பாகச் சொன்னாள்.


அவளிடம் திரும்பியவன், "உன் திமிரு மட்டும் அடங்கவே அடங்காது" என்று ஏளனமாகக் கூறினான்.


"உங்களை மாதிரி திமிராகப் பேசுபவரிடம் இப்படி தான் இருக்க வேண்டும் சார் இல்லை என்றால் எங்க தலையில் மிளகாய் அரைச்சிடுவீங்க" என்று பதிலடிக் கொடுத்தாள் யமுனா.


தேவ் அவளிடம் எந்த பதிலும் கூறாமல் காரில் ஏறிக்கொண்டான். யமுனாவும் பின்னாடியே காரில் ஏறினாள். ஒட்டுநர் காரை எடுத்துவிட்ட பின், "சார் எங்கே போகணும் இப்போ?" என்று கேட்டான்.


"கே கே நகரில் இருக்கும் அந்த பிரபல லேடிஸ் விடுதிக்குச் செல்ல வேண்டும்" என்றான்.


"நான் முன்னாடி இருந்த விடுதிக்கே செல்லலாம்" என்றாள் யமுனா.


"முன்னாடி இருக்கும் விடுதி என்றால் உன்னைப் பற்றித் தெரியும். புதிய விடுதி என்றால் உனக்குப் பிரச்சனை ஏதும் வராது" என்று தன் அலைப்பேசியைப் பார்த்தவாறே கூறினான். யமுனாவிற்கும் அதுவே சரி என்றுத் தோன்றியது.


"ஆதிராவை நல்லாப் பாரத்துக்கோங்க தே... சார்" என்றாள்.


"இனிமேல் அவளைப் பற்றிக் கேட்கும் உரிமை உனக்கு இல்லை யமுனா சோ ஸ்டாப் யுவர் நான்சென்ஸ்" என்றான் கடுப்பாக.


'ஒருவேளை தேவ்விற்கு நான் செல்வதில் வருத்தம் ஏதும் இல்லையோ அதான் இப்படிப் பேசுகிறானோ' என்று குழம்பியது யமுனாவின் மனம்.வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஏதோ மாதிரி இருக்கும் நிலைமையில் இப்படி தன்னந்தனியாக விட்டுச் செல்கிறானே என்று யமுனாவிற்கு தேவ்வின் மேல் ஆத்திரம் எழுந்தது.


கார் கே கே நகரில் அந்த பிரபல லேடிஸ் ஹாஸ்டலில் நின்றது. இவ்வளவு நேரம் தேவ்வின் மீது இருந்த கோபம் கண்ணை மறைத்தது. ஆனால் இப்போது  விடுதியை நெருங்கியதும் யமுனாவிற்கு ஏனோ தனியாக இருப்பது போன்ற உணர்வு வந்துக்கொண்டிருந்து. யமுனாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற தேவ்வை வரவேற்றார்.

ஒரு ஐம்பது வயதிற்குரிய பெண்மணி...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2