மாயம் 21

மாயம் 21


 "ஹலோ சீனியர் சென்னையில் இருந்து எப்போ வந்தீங்க?" என்று அவனிடம் திரும்பியவள் அவள் பக்கத்தில் அவளை முறைத்து நின்றுக்கொண்டிருந்த திவாகரைப் புரியாமல் பார்த்தாள்.


"ஹே பிரியா நான் உன் கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும். நீயும் தமிழ் நானும் தமிழ் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று மனீஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, "ஸ்டாப் இட் மனீஷ் பிரியா என்னுடைய மனைவி எங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி ஒரு மாதம் ஆகப் போகிறது. என்ன பிரியா அமைதியாய் இருக்க நீ சொல்லு என்னுடைய மனைவி என்று" என்று அவளை அழுத்தமாகப் பார்த்தான்.


"ஆமாம் சீனியர் நாங்க இரண்டு பேரும் கணவன் மனைவி" என்று மனீஷிடம் கூறினாள் பிரியா.


"ஹேய் பிரியா, சாரி எனக்கு தெரியாது யூ கைய்ஸ் கேரி ஆன்" என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான் மனீஷ்.


பிரியாவும் வேறு எங்காவது போலாம் என்று நகர நினைக்கும் போது, "என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் உங்க வீட்டுக்கு போய்ட்ட... இந்த ஆடி மாசம் முடிஞ்ச அப்புறம் நானே உன்னை அழைத்துக்கொண்டு வருகிறேன். இவ்வளவு நாள் நான் பண்ணது மிகப் பெரிய தப்பு பிரியா என்னை மன்னிச்சிரு... எனக்கு வேலை கிடைச்சிடுச்சு மாசம் ஒரு லட்சம் சம்பளம் நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பிரியா என்னுடைய வாழ்க்கை துணை எனக்கு ரொம்ப பொருத்தம் ஆனவள்... உன்னை நான் நிறைய காயப்படுத்திருக்கேன் என்னை மன்னிச்சுரு உன்னுடைய கணவனாக என்னை ஏத்துப்பியா?" என்று கேட்டான் திவாகர்.


திவாகர் பேசியதைக் கேட்டு இது கனவா நினவா என்பது போல் கண்ணை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா.


"எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு திவாகர், நீங்க என்னை உங்க மனைவியா ஏத்துக்கிட்டது ரொம்ப சந்தோஷம் இதை விட இந்த உலகத்தில் எனக்கு கிடைத்த பெரிய பரிசு வேற எதுவும் இல்லை" என்றவளுக்கு ஆனந்தக் கண்ணீரே வந்தது.


பின் இருவரும் திருமணத்தில் அனைவரோடும் பேசி மகிழ்ந்து பொழுதைக் கழித்தனர். அன்று மாலை பிரியா வீட்டிற்கு வர தாமதம் ஆனது. அவளுடைய மொபைலும் அணைந்து கிடந்தது. முதலில் பயந்த சீதாலட்சுமி தன் கணவனிடம் கூறினார்.


"அவளை ஏன் தனியா அனுப்பின? நாடு வேற கெட்டு கிடக்குது" என்று அவரும் பதறினார். இதனைக் கேட்ட யமுனா அவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு வெளியே வாசல் வரைச் சென்று எட்டிப் பார்த்தாள். அங்கே பிரியா தன் காரில் வந்துக்கொண்டிருந்தைப் பார்த்து நிம்மதி அடைந்தவள் உள்ளே சென்று தன் மாமனார் மாமியாரிடம் பிரியா வந்துவிட்டதாய்க் கூறினாள்.


பிரியா உள்ளே வந்தவுடன் அவளை தடுத்து நிறுத்திய அவளின் தந்தை கத்த ஆரம்பித்தார். 


"பிரியா மத்தியானம் வந்துவிடுவேன் என்று கூறிவிட்டு இப்போ மணி ஏழு ஆகுது உன் மொபைலும் அணைக்கப் பட்டிருந்தது தேவ் வேற ஊரில் இல்லை நாங்க பயந்தே போய்ட்டோம்" என்றார்.


"அப்பா என்னை மன்னிச்சிருங்க பா, அது வந்து அவர் கூட வெளியே போயிருந்தேன் அதான் வர தாமதம் ஆகிடுச்சு சாரி அம்மா" என்று கூறினாள்.


"அட மாப்பிள்ளை கூடவா போயிருந்த? ஒரு ஃபோன் பண்ணி சொல்லிருக்கலாம்ல மா, இல்லன்னா மாப்பிள்ளை மொபைலில் ஆவது ஒரு கால் பண்ணிருக்கலாமே மா சரியான விளையாட்டு பிள்ளைகள்" என்று தன் மூக்குக் கண்ணாடியைப் போட்டு தன் அறைக்குள் சென்று விட்டார் தந்தை.


சீதாலட்சுமியும் தன் மகளும் மருமகனும் சந்தோஷமாக இருக்கின்றனர் என்பதை நினைத்து மகிழ்ந்தவர் அவரின் அறைக்கு உள்ளே சென்றார். அவர்கள் சென்ற பின் பிரியாவிடம் திரும்பிய யமுனா,

"பிரியா உண்மையாகவா சொல்றீங்க? என்னால் நம்பவே முடியவில்லை" என்று ஆச்சரியம் அடைந்தாள் யமுனா.


"ஆமாம் யமுனா அவர் என்னை அவருடைய மனைவியாக ஏத்துக்கிட்டாரு" என்று வெட்கத்துடன் கூறினாள்.


இந்த சந்தோஷமான விஷயத்தை திவ்யாவிடம் பகிர்ந்தாள் யமுனா.


"வாவ் பிரியா வாழ்த்துக்கள் உங்கள் அண்ணாக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப் படுவார்" என்று அலுவலத்தில் இருந்த

குணாவிற்கு கால் செய்து விஷயத்தைச் சொன்னாள். குணாவிற்கு தெரிந்த விஷயம் லண்டனில் இருக்கும்

தேவ்விற்கும் பறந்தது.


அடுத்த இரண்டு நாட்கள் வீடே கலகலப்பாக சென்றது. திவாகர் அலுவலகத்தை முடித்து விட்டு தேவ்வின் வீட்டிற்கு வந்து விடுவான். குணாவும் முடிந்த அளவு சீக்கிரமே வந்து

திவ்யாவுடன் நேரம் கழித்தான். இவர்கள் நால்வரும் சந்தோஷமாக இருந்ததைப் பார்த்து யமுனாவிற்கு தன் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கிறதே என்று மனதிற்குள் ஒரு வெறுமை ஏற்பட்டது.


யமுனாவின் முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த திவ்யா அவளிடம் வந்து நேரடியாகவே கேட்டாள்.


"ஏன் யமுனா ஒரு மாதிரி இருக்க இரண்டு நாள்களாக உன்னை கவனிக்கிறேன் ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்க" என்று கேட்டாள்.


"தெரியல திவ்யா என்னமோ மனசே வெறுமையாக இருக்கு" என்று ஆதிரா விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென்று திவ்யாவிடம் திரும்பி, "இப்போலாம் தேவ் முன்னாடி மாதிரி இல்லை நான் ஒருத்தி வீட்டில் இருக்கேன் என்று கூட அவர் கண்ணுக்கு தெரியவில்லை லண்டன் போய் ஒரு வாரம் மேல ஆச்சு. என்கிட்ட ஒரு வார்த்தை பேசல ஏன் இப்படி பண்ணனும்? அவர் என்னை விரும்புறேன்னு பிரியா கிட்ட சொல்லிருக்காரு விரும்புற பொண்ணு கிட்ட இப்படி தான் நடந்துப்பாரா?" என்று ஆதங்கமாகக் கேட்டாள்.


"அவர் உன்னை விரும்புறாரு இது இருக்கட்டும். ஆனா உன் மனசுல அவர் இல்லையே அப்போ அவர் எப்படி இருந்தா உனக்கென்ன?" என்று கேட்டாள் திவ்யா.


"திவ்யா அது வந்து எனக்கு

தேவ்வை முன்னாடி சுத்தமா பிடிக்காது. ஆனா அவருடைய திமிரு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு ஆதிரா மேல் வைத்திருக்கும் அன்பு இதெல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றாள் யமுனா.


"உன் மனசுல அவர் மேல காதல் இல்லை என்றால் நீ எதை பற்றியும் யோசிக்காத யமுனா உனக்கு சீக்கிரம் நல்லது நடக்கும்" என்று அந்த இடத்தை விட்டு விலகி விட்டாள் திவ்யா.


"அண்ணி... திவ்யா அண்ணி சொன்னாங்க ஏதோ சோகமா இருக்கீங்கன்னு ஏன் அண்ணி நாங்க பண்றது உங்களுக்கு எதாவது பிடிக்கலையா?" என்று கவலையாகக் கேட்டாள் பிரியா.


"ஐய்யோ பிரியா அப்படியெல்லாம் இல்லை நான் ரொம்ப சந்தோஷமாக தான் இருக்கேன் நீங்க ஏதும் கவலைப்படாதீங்க." என்றாள்.


யமுனாவிற்கு அன்று இரவு நீண்ட நேரமாக தூக்கமே வரவில்லை. அவளுடைய  மனது ஒரு மாதிரி பாரமாகவே இருந்தது. அவள் அன்று தூங்குவதற்கு மணி இரண்டு ஆனது. அதனால் அவள் எழுந்திருக்க மணி காலை பத்தானது.


அவள் எழுந்திருக்கும் பொழுதே ஆதிரா,  "அப்பா வந்தாச்சு வந்தாச்சு" என்று யமுனாவின் முன் குதித்துக்கொண்டிருந்தாள்.


"என்னது தேவ் வந்துட்டாரா!" என்று அதிர்ந்த யமுனா வேகமாக குளியலயறைக்குச் சென்றாள். எப்போதும் தேவ்வின் முன் அழகாக இருக்கவேண்டும் என்று நினைக்காத யமுனா இன்று தேவ்வை பார்த்து பத்து நாட்கள் ஆனதால் அவனது வருகையை எண்ணி துடித்த யமுனா தன்னை அழகு படுத்திக்கொண்டாள். அடர்பச்சை சேலையை அணிந்த யமுனா ஓபன் ஹேரை விட்டு அழகிய கல் ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டவள் தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து மெலிதாக சிரித்தாள்.


யமுனா கீழேச் செல்லும் போது அங்கு தேவ் இல்லை திவாகரும் இரண்டு நாட்களாய் இங்கு தான் தங்குகிறான். யமுனா கீழே செல்லும் போதே அனைவரும் யமுனாவைத் தான் பார்த்தனர். இவ்வளவு நாள் தேவ் இல்லாமல் வாடிய அவள் மனது அவளின் உடைகளிலும் பிரதிபலித்தது. இந்த பத்து நாள் நல்ல உடை அணியாமல் தன்னை மெனக்கிடாமல் சுமாராக உடை அணிந்தவள் தேவ் வந்த பின் அவளது ஆடையையும் அலங்காரத்தையும் பார்த்த வீட்டினர் அனைவருக்குமே தெளிவாக புரிந்தது யமுனாவின் மனதில் தேவ் இருக்கிறான் என்று. 


தேவ் இல்லாமல் ஏமாற்றம் அடைந்த யமுனாவை முதலில் அழைத்தது சீதாலட்சுமி தான்... "யமுனா சாப்பிட வாம்மா" என்று அவளை அமரச் சொன்னார். அங்கு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த யமுனா சீதாலட்சுமியிடம், "அத்தை அவர் எப்போ வந்தாரு?" என்று தயங்கிக் கேட்டாள்.


"இன்று அதிகாலை மூன்று மணிக்கு வந்தான்மா கிளம்புனதே தெரியலை தீடிரென்று எனக்கு கால் செய்து கதவை திறக்கச் சொன்னான். நான் கூட கேட்டேன் ஏன்பா யமுனாக்கு கால் பண்ணி ஒரு வார்த்தை சொல்லிருந்தா அவள் கதவைத் திறந்திருப்பாளே என்று சொன்னேன்மா அவன் எதுவும் பேசாமல் தூங்க போய்ட்டான்மா, இப்போ தான் எழுந்திருச்சு வந்து எல்லார் கிட்டயும் பேசிட்டு போனான்" என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போது யமுனா சாப்பாடு சாப்பிடுவதை நிறுத்திவிட்டாள்.


"யமுனா கையை காய விடாதேம்மா சாப்பிடு" என்று கூறினார் சீதாலட்சுமி. அவர் கூறியதற்காக கடமைக்கே சாப்பிட்டவள் தேவ்வைக் காணாமல் அவள் அறைக்குள்ளேயே சென்றாள். 


'ஏன் அவர் வந்த பிறகு கதவைத் திறந்து விட எனக்கு கால் செய்யவில்லை? அதற்குப் பிறகும் கீழேச் சென்று பேசியவர் ஏன் என்னிடம் வந்து பேசவில்லை?' என்று வருந்தினாள்.


பிரியாவும் திவாகரும் அவர்கள் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த தேவ் திவாகரைப் பார்த்து மெலிதாக புன்னகை செய்துவிட்டு தன் கையில் இருந்த இரண்டு பத்திரங்களைக் கொடுத்தான்.


"திவாகர் இது உன் வீட்டு பத்திரங்கள் இதில் ஒன்று யமுனாவுடையது அவளிடம் இந்த பத்திரத்தை கொடுத்திடு" என்றான் தேவ். 


"தேவ் எனக்கு இந்த பத்திரம் வேண்டாம் நான் நல்லா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன் அதனால் என் பணத்தில் நான் அந்த வீட்டை மீட்பேன்" என்ற திவாகரிடம், "இது பிரியாக்காக நான் கொடுத்த பரிசு இது உன்னிடம் தான் இனி இருக்க வேண்டும்" என்று அவன் கையில் வைத்தான் தேவ்.


"யமுனாவுடைய வீட்டு பத்திரம் அவளுடைய கணவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தான் என் அப்பா சொல்லுவார் அப்போ நீங்க தான இதை வைத்திருக்க வேண்டும்" என்று கூறினான் திவாகர். 


"இதை யமுனாகிட்ட கொடுத்திடு திவாகர்" என்று அழுத்தமாகக் கூறிய பின் அந்த அறையை விட்டு வெளியேச் சென்றுவிட்டான் தேவ்.


"ஏன் பிரியா தேவ்வுக்கும் யமுனாக்கும் இடையில் ஏதோ பிரச்சனை இருக்குனு நினைக்கிறேன் ஆனால் இரண்டு பேருக்கும் காதல் இருக்கிறது" என்றான் திவாகர். 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 2

மாயம் 8