மாயம் 19
அன்று இரவு தேவ்வுடன் சேர்ந்து மாயாவும் வந்தாள். தேவ் வந்தவுடன் தேவ்வை வந்து அணைத்துக் கொண்டாள் பிரியா. தேவ்வை பார்த்த உடன் பிரியா கண்களில் அழுகை வர ஆரம்பித்தது.
"என்ன ஆச்சு பிரியா? எப்படி இருக்க? ஏன் அழுகுற? எதாவது பிரச்சனையா?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டான் தேவ்.
"அதெல்லாம் இல்லை அண்ணா உங்களைப் பார்த்த ஆனந்தக் கண்ணீர் தான் வேற எதுவும் இல்லை நான் சந்தோஷமாக இருக்கேன் அண்ணா... ஆதிரா யமுனா அண்ணி கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டாளே" என்றாள்.
"ம்ம், சரி" என்று யமுனாவை ஒரு முறை பார்த்தவன் தன் அறைக்குச் சென்று விட்டான்.
"என்ன பிரியா ஆடி மாசம்னு உன்னையும் உன் புருஷனையும் பிரிச்சு வெச்சிட்டாங்க போல" என்று கண்ணடித்து கிண்டல் செய்தாள் மாயா. இவள் எப்போதும் இப்படி தான் விவகாரமாகக் கிண்டல் செய்வாள் என்று போலியாகச் சிரித்தாள் பிரியா. தேவ் எப்போது வருவான் என்று காத்துக்கொண்டிருந்த யமுனா அவன் மேலே சென்ற பின்னர் இவளும் அவனின் அறைக்குச் சென்றாள்.
"என்ன வேணும் யமுனா?" என்று கேட்டான் தேவ்.
"நியாயம் வேணும்" என்றாள் யமுனா கோபமாக.
"என்ன உளர்ற?" என்றான் தேவ் கடுப்பாய்.
"காலையில் மாயாவோடு வெளியே போனீங்க... ஆனா என்கிட்ட நீங்க ஒரு வார்த்தை கூட சொல்லலை என்னைப் பார்த்தால் உங்களுக்கு லூசு மாதிரி இருக்கா? அப்படி என்ன உங்களுக்கு உங்க சீனா கிளைன்டை விட மாயா கூட வெளியே போறது தான் முக்கியமா? இல்லன்னா என்னை வேண்டும் என்றே வெறுப்பேத்த தான் இப்படி செய்றீங்கனா ஒன்னு தெரிஞ்சிக்கோங்க நான் ஒண்ணும் வெறுப்பாகலை" என்று பொரிந்து தள்ளினாள்.
இவை அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த தேவ், "உன் வேலை ஆதிராவைக் கவனிப்பது தான் யமுனா என்னை கவனிப்பதோ இல்லை வேவு பார்ப்பதோ இல்லை" என்று குளிக்கச் சென்று விட்டான். யமுனாவிற்கு தான் இப்போது மூக்கு உடைந்து விட்டது போல் ஆனது.
'இனிமேல் நம்ம தேவ்வின் விஷயத்தில் தலையிடக் கூடாது அப்படி என்ன அவருக்கு திமிரு நம்ம இனி அவரை பார்க்கக் கூட கூடாது' என் தன் மனதிடம் சபதம் எடுத்தாள் யமுனா. குளித்துக்கொண்டிருந்த தேவ் தன் ஷவரை ஒபன் செய்து விட்டு யமுனாவைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான்.
'நான் உன்னை ரொம்ப விரும்புறேன் யமுனா உன்னைப் பார்த்த போதே உனக்குள் இருந்த அந்த தைரியம், திமிர் பேச்சு, சுறுசுறுப்பு அனைத்தும் பிடித்தது ஆனால் அப்போதும் கூட பிரியா மற்றும்
ஆதிராக்காகத் தான் உன்னை கட்டாயப்படுத்தி கரம் பிடித்தேன். ஆனால் உன்னை என்னுடைய மனைவியாய் என் வீட்டில் என் பக்கத்தில் இருந்து பார்க்கும் பொழுது என்னால் உன்னை நெருங்காமல் இருக்க முடியவில்லை... உன்னை கட்டாயப்படுத்தி நான் அடைய ஒரு நிமிடம் தான் ஆகும் ஆனால் எனக்கு தேவை உன் சம்மதம் உன் காதல் அது இல்லாமல் உன்னை அடைவது உன்னை கொல்வதற்கு சமம்' என்று நீண்ட நேரம் ஷவரில் இருந்தவன் தன் தவிப்பு தீரும் வரை அந்த குளிர்ந்த தண்ணீரில் நீராடினான்.
கிட்டத்தட்ட அரை மணி நேரமாக ஷவரில் இருந்த தேவ் குளித்து முடித்து வெளியில் வரும் போது மணி இரவு ஒன்பது ஆனது. எப்போதுமே இரவு குளிக்கும் தேவ் வெண்ணீரில் தான் குளிப்பான். ஆனால் இன்று யமுனா பேசிவிட்டுச சென்ற பின் தன்னிலையில் இல்லாதவன் குளிர்ந்த நீரிலேயே குளித்தது அவனுக்கு உடம்புக்கு பிடிக்காமல் போனது. மணி இரவு பத்து ஆகியும் தேவ் சாப்பிட கீழே வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த யமுனா சற்று முன் எடுத்த தன் சபதத்தை மறந்தாள். எப்போதும் தேவ் சாப்பிட வரவில்லை என்றால் அவனை அழைத்து வரச் செல்லும் அவனுடைய தாய் இன்று சீக்கிரமே சாப்பிட்டு தூங்கி விட்டார்.
மேலேச் சென்ற யமுனா கண்டது தூங்கிக்கொண்டிருந்த
தேவ்வை தான். 'இவர் ஏன் சாப்பிடாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார்?' என்று நினைத்தவள் கீழே சென்று ஒரு தட்டில் மூன்று தோசை மற்றும் அதற்கு தேவையான சட்டினியையும் தட்டில் போட்டுக்கொண்டு அவன் அறைக்கு எடுத்துச் சென்றாள்.
தூங்கிக்கொண்டிருந்த அவனை எழுப்ப சங்கடப்பட்ட யமுனா, "தேவ் தேவ்" என்று அழைத்தாள். ஆனாலும் அவன் இந்த சத்தத்திற்கும் முழித்த பாடில்லை என்று வேற வழி இல்லாமல் அவனின் கையைத் தொட்டு, "தேவ் எழுந்திருங்க" என்று அவள் எழுப்பும் போது தான் தேவ்வின் உடல் அனலாய் கொதித்தது. இதை உணர்ந்து பதறிய யமுனா தேவ்வை மறுபடியும் எழுப்பினாள். இம்முறை எழுந்த தேவ் என்ன என்பது போல் பார்த்தான்.
"உங்க உடம்பு பயங்கரமாக கொதிக்கிறது தேவ் முதலில் சாப்பாடு சாப்பிட்டு மாத்திரை போடுங்க" என்று கூறினாள்.
"எனக்கு ஒண்ணும் வேண்டாம் யமுனா நீ உன் அறைக்குப் போ" என்ற தேவ் மறுபடியும் படுக்கச் சென்றான். இவனை இப்படியே விட்டால் சரிபட்டு வராது என்று நினைத்த யமுனா அவனுக்கு தோசையை எடுத்து ஊட்டிவிட ஆரம்பித்தாள். தூக்க கலக்கத்திலும் காய்ச்சலின் சோர்விலும் இருந்த தேவ்விற்கு பசியும் இருந்ததால் யமுனா தோசையை அவனுக்கு ஊட்டி விட முயன்ற போது அவனையும் அறியாமல் அவன் வாய் திறந்தது. சாப்பாடு கொடுத்து விட்ட பின் கையோடு மாத்திரையையும் தண்ணீரையும் கொடுத்து விட்டு தேவ் தூங்கிய பின் தான் யமுனா தன் அறைக்குத் தூங்கச் சென்றாள்.
காலையில் தேவ் எழுந்த போது தான் அவனுக்கு நேற்று நடந்தது ஞாபகம் வந்தது. 'ச்ச நம்ம எதுக்கு அவள் ஊட்டி விட்டத சாப்பிட்டோம்?' என்று தன்னையே நொந்தவன் காலையில் தன்னுடைய ஒர்க் அவுட்ஸை முடித்துக்கொண்டு அவன் அறைக்குள் வரும் போதே யமுனா அங்கு காத்துக்கொண்டிருந்தாள்.
"உங்களுடைய உடம்பு பரவாயில்லையா? நேற்று இரவு பயங்கரமாக கொதித்தது" என்று அக்கறையாகக் கேட்டாள்.
"லுக் யமுனா, எனக்கு இந்த அக்கறை எல்லாம் வேண்டாம் எப்படி இருந்தாலும் நீ இன்னும் கொஞ்ச நாளில் எனக்கு டைவர்ஸ் கொடுத்திட்டு இன்னொருத்தனை மணக்க போகிறவள் அதனால் அந்த அக்கறை கரிசனம் எல்லாம் அங்கே வைத்துக் கொள்" என்று கோபமாகக் கூறிவிட்டு குளிக்கச் சென்று விட்டான். யமுனாவிற்கு தான் இம்முறை மூஞ்சில் அடித்த மாதிரி ஆனது.
அன்று மாயாவிற்குப் பிறந்தநாள் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேவ் வீட்டிலேயே இருந்தான். மாயா எப்போதும் தன் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட ஆசைப்படுபவள். இன்றும் தன் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாட வேண்டும் என்று நினைத்து தேவ்விடம் சென்றாள். அப்போது தான் கார்டனில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தான் தேவ்.
"அத்தான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்" என்று தயங்கினாள் மாயா.
"அத்தான் உங்களுக்கே தெரியும் இன்று என் பிறந்தநாள்னு இன்னிக்கு வீட்ல எல்லாரும் கேக் வெட்டி கொண்டாடுனா சந்தோஷமா இருக்கும் எங்க வீட்டில் எல்லா வருடமும் எனக்கு கேக் வெட்டுவாங்க" என்றாள் மாயா.
"ம்ம், ஒகே மாயா வெட்டிடலாம் நான் கேக் ஆர்டர் செய்கிறேன்" என்று மறுபடியும் பேப்பர் படிக்க ஆரம்பித்தான். அங்கே யமுனா துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளைத் தேடி வந்த திவ்யா, "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா யமுனா? அந்த மாயாவிற்கு இன்னிக்கு பிறந்தநாளாம்... அன்னிக்குக் கூட தேவ் அத்தான் கூட ஷாப்பிங் தான் போயிருக்கா உடை வாங்க... இன்னிக்கு கேக் வெட்டி கொண்டாடணுமாம் விட்டா இங்கேயே டேரா போட்டுவிடுவாள் போல" என்று எரிச்சலாகக் கூறினாள் திவ்யா.
தேவ் சொன்ன வார்த்தைகளில் அவன் மீது இருந்த கடுப்பில்,
"யார் என்னவோ பண்ணிக்கட்டும் எனக்கென்ன?" என்றாள் யமுனா வேண்டாம் வெறுப்பாக.
"என்ன பேசுற யமுனா? நீ அந்த மாயாவோட நேற்றைய இரவு உடையை பார்த்தியா? வாந்தி வருது அந்த அளவுக்கு மோசமா போட்டுருக்கா" என்றாள் திவ்யா.
"அவளை இவ்வளவு
ஆழ்ந்து எல்லாம் நான் கவனிக்ல திவ்யா அவள் ஒரு டம்மி பீஸ் அவளால் இங்கே ஒன்றும் செய்ய முடியாது எனக்கு தேவ் மேல் நம்பிக்கை இருக்கிறது அவர் அவளோடு ஷாப்பிங் இல்லை சிங்கப்பூர் சென்றாலுமே அவருடைய விரல் கூட அவள் மேல் படாது" என்றாள் தீர்மானமாக. இதைக் கேட்ட திவ்யாவிற்கு சந்தோஷமாக இருந்தது.
"ஏய் யமுனா, நான் அந்த மாதிரி சொல்லவில்லை ஆம்பளைங்க நல்லவங்களா இருந்தாலுமே இந்த மாயா மாதிரி பொண்ணுங்க சும்மா இருக்க மாட்டாங்க அதைத்தான் சொல்ல வந்தேன்" என்றாள் திவ்யா.
முடிந்தவரை தேவ்வைப் பார்க்கக் கூடாது என்று யமுனா அவனைத் தவிர்த்தாள்.
ஆதிராவோடு பொழுதைக் கழிப்பது பிரியாவோடு பேசுவது என்று தன் பொழுதைக் கழிக்கத் தொடங்கினாள். அன்று மாலை மாயாவிற்கு கேக் வெட்டினர் இதில் தேவ் கலந்து கொள்ளவில்லை அது என்னவோ யமுனாவிற்கு மனது நிம்மதியாக இருந்தது. ஆனால் மாயாவிற்கு கடுப்பானது இனி இந்த தேவ்வை நம்பி அவள் காத்திருப்பது பிரோயஜனம் இல்லை நாம் இனி நம் வழியைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தாள்.
அன்று காலை பிரியாவின் மொபைலிற்கு அழைப்பு வந்தது. "ஹாய் பாயல் எப்படி இருக்க..? என்ன ரொம்ப நாள் கழிச்சு கால் பண்ணிருக்க?" என்றாள் பிரியா.
"ம்ம்... ஆமா பிரியா எனக்கு வர ஞாயிற்றுக்கிழமை அந்த ஹாலில் பஞ்சாபி முறைப்படி திருமணம் நீ கண்டிப்பா வந்திரு" என்று அவளை ஹிந்தியில் அழைத்து கால்லை வைத்துவிட்டாள்.
திவ்யாவிற்கு லேசாக மேடான வயிறு தெரிய ஆரம்பித்தது.
"என்ன திவ்யா ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்டான் குணா.
"இல்லை குணா, யமுனாவும் சந்தோஷமா இல்லை உங்க தங்கை பிரியாவும் சந்தோஷமா இல்லை நம்ம மட்டும் சந்தோஷமா இருக்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு" என்றாள் கவலையாக.
"திவ்யா, நீ இப்போ ஒரு உயிர் இல்லை இரண்டு உயிராக இருக்க இப்படி அடிக்கடி நீ சோகமா ஆயிட்டனா அது குழந்தையை பாதிச்சிடும்" என்றான்.
"ம்ம்" என்று சொன்னவள் படுத்துக்கொண்டாள்.
அன்று மாலை ஆதிராவைக் குளிப்பாட்டி விட்டு பிரியாவுடன் கோவிலுக்குச் சென்றாள் யமுனா.
"அண்ணி நான் கேக்குறேனு தப்பா எடுத்துக்காதீங்க... உங்களுக்கு உண்மையாவே தேவ் அண்ணாவை இப்போ கூட பிடிக்க வில்லையா?" என்று கேட்டாள். இதுவே முன்னாடி என்றால் யமுனா பிடிக்கவில்லை என்று சட்டென்று சொல்லி இருப்பாள் ஆனால் இப்போது அதனின் பதில் அவளுக்கே தெரியவில்லை.
Super next ud potuga please akka
பதிலளிநீக்குNext ud please
பதிலளிநீக்கு