மாயம் 17


மாயம் 17

 தேவ்வின் கைகளை தன் முகத்தில் இருந்து எடுக்க யமுனா முயற்சி செய்தாள். இதனை அறிந்த தேவ் அவளின் முகத்தின் பக்கம் தன் முகத்தினை எடுத்துச் சென்று அவளின் இதழ்களில் தேனைப் பருகினான்.  யமுனா இந்த முறை அவனை தடுக்கவில்லை அழவில்லை அதையே ஒப்புதலாக எடுத்துக்கொண்ட தேவ் யமுனாவிடம் உரிமையை நிலை நாட்ட முயற்சி செய்தான். அந்த நீண்ட இதழொற்றல் பின் யமுனாவின் வெற்று இடையில் தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தான். அவளை இறுக்கமாகக் அணைத்தவன் அவளின் சேலை முந்தானையைப் பிடித்து கழட்ட தொடங்கினான்.


அதுவரை ஏதோ கனவுலகத்தில் இருந்த யமுனா திடீரென்று முழிப்பு வந்தவளாய் தேவ்வை தள்ளிவிட்டு அவனின் கன்னத்தில் அறைந்தாள். தன்னை மீறி கோபமும் அழுகையும் மாறி மாறி வந்தது யமுனாவிற்கு ஏதோ வேகத்தில் தேவ்வை அடித்துவிட்டாள். யமுனா அவனை அடித்த அடுத்த நிமிடம் தேவ்வும் அவளின் கன்னத்தில் அறைந்தான்.


பின் அவளுடைய கையை மடக்கி திருப்பியவன், "என் கூட சந்தோஷமா தான இருந்த இவ்வளவு நேரம்... இப்போ மட்டும் உனக்கு ஏன் டி கசக்குது? எவ்வளவு திமிரு இருந்தா என்னை அடிச்சிருப்ப?" என்று அவளைத் திருப்பி சுவரோடு சேர்த்தான்.


"உங்களுக்கு இந்த சந்தோஷம் வேணும்னா அதை குடுக்க ஆயிரம் பெண்கள் இருக்காங்க என் வாழ்க்கையை சீரழிச்சிராதீங்க" என்று அழுதுக் கெஞ்சினாள். 


இதைக் கேட்ட தேவ் யமுனாவை விடுவித்து சிகரெட்டை பற்ற வைத்தான். பின் ஒரு நிமிடம் கழித்து, "அதுக்கு ஆயிரம் பெண்கள் இருக்காங்கனா அப்போ எதுக்கு டி நீ? டேம் இட்" என்று அவளிடம் கத்தினான்.


"என் கண் முன்னாடி நிக்காத வெளியே போ" என்று சொன்னவன் டிரைவருக்கு கால் செய்து யமுனாவை அவளுடைய மாமா வீட்டில் விடச் சொன்னான். 


"நான் எங்கேயும் போக மாட்டேன் இந்த வீட்டில் தான் இருப்பேன் என்னை அதிசயமா திவாகர் அத்தான் வீட்டிற்கு போக சொல்றீங்க... என் மேல் நம்பிக்கை வந்திருச்சா என்ன?" என்ற யமுனாவிடம்,


"நான் உன்னை தொட்ட பிறகும் உன்னை நம்பாமல் இருக்க நான் ஒன்னும் முட்டாள் இல்லை யமுனா... எனக்கு மனைவியா இருக்க முடியாதவளுக்கு எதற்கு என் வீட்டில் இடம் கேக்குது" என்று திமிராகக் கேட்டான் தேவ்.


"நான் ஆதிராவுக்காக தான் சொல்றேன் அவள் நான் இல்லன்னா துடிச்சு போய்டுவா" என்றாள் யமுனா.


தேவ்விற்கு ஏனோ மனது உறுத்தியது. 'அவன் யமுனாவை கல்யாணம் செய்ததற்கு முக்கியமான காரணம் ஆதிராவைப் பார்த்துக் கொள்வது ஆனால் ஒரு நிமிஷத்தில் அதை எல்லாம் மறந்து இவளை வெளியே போக சொன்னது தப்பு' என்று நினைத்தவன் எதுவும் கூறாமல் வெளியேச் சென்றுவிட்டான்.


'ஏன் எனக்கு இந்த வீட்டை விட்டு வெளியே போக தோண மாட்டிங்குது. என் அத்தை மற்றும் திவாகரின் மேல் பிடிப்பு இல்லை ஆனாலும் தேவ்விடம் இருப்பதற்கு அங்கே இருந்தால் அவள் தேவ்வின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கலாமே ஆனால் ஏன் நான் அங்கே போகல? ஆதிராவை விட்டு என்னால் பிரிய முடியவில்லை என்றாலும் ஒரு நாள் நான் டைவர்ஸ் வாங்கிய பின் ஆதிராவுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லாமல் போய்விடுமே கடவுளே! என்ன இது எப்படி எப்படியோ யோசிக்க ஆரம்பித்து விட்டேன். ஒரு மாதத்திற்கு முன் சென்னையில் நான் இருந்த போது இவர்கள் இல்லாமல் சந்தோஷமாக தானே இருந்தேன்... தேவ் என்னும் ஒருவன் என் வாழ்வில் வந்த பின் எனது சந்தோஷமே போய்விட்டது... ஆனாலும் என்னால் ஏன் இந்த வீட்டை விட்டு போக முடியவில்லை?' என்று மனதில் குழம்பியவள் அப்படியே கட்டிலில் படுத்து தூங்கி விட்டாள்.


தன் வீட்டின் மாடிக்கு வந்த தேவ் சிகரெட்டைப் பிடிக்க ஆரம்பித்தான்.


'ஏன் நான் யமுனாவிடம் அதிகமாக எதிர்பார்க்கிறேன் அவள் ஆதிராவை நன்றாக பார்த்துக் கொள்கிறாள் அதுக்காக அவள் என்னோடு மனைவியாய் வாழ வேண்டும் என்பது தப்பு தானே' என்று நினைத்த தேவ் இனிமேல் அவளிடம் பேச்சை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவன் கீழே தன் அறைக்குச் சென்றான். அங்கே தன்னை மடக்கி உறங்கிக் கொண்டிருந்த யமுனாவைக் கண்ட தேவ்வின் மனம் வலித்தது.


அவளை தூக்கிக்கொண்டு அவள் முதலில் இருந்த அறைக்குச் தூக்கிச் சென்றவன் அவளை அங்கே படுக்க வைத்தான். பின் ஆதிராவிடம் விளையாடினால் தன்னுடைய மனநிலை மாறும் என்ற நம்பிக்கையில் அவளோடு விளையாடினான்.


அப்போது தூங்கிய யமுனா காலையில் தான் விழித்தாள். அவள் பக்கத்தில் ஆதிரா தூங்கிக்கொண்டு இருந்தாள். 'நாம் எங்கே இருக்கோம்?' என்று யோசித்த யமுனா நேற்று நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள். அவள் எழுந்த பின் அந்த அசைவில் எழுந்தாள் ஆதிரா.


"யமுனாம்மா உங்களை தேடினேன். அப்பறம் அப்பா தான் என்னை தூங்க வெச்சிட்டு போய்ட்டாங்க" என்று தன் மழலை மொழியில் கூறினாள். அவளை தன்னோடு அணைத்த யமுனா ஆதிராவை அழைத்துக்கொண்டு கீழேச் சென்றாள்.


அவளைக் கண்ட திவ்யா, "என்ன மேடம்க்கு இப்போ தான் விடிஞ்சிதா?" என்று கிண்டலாகக் கேட்டாள்.


"ஐய்யோ மணி பத்தா? இவ்வளவு நேரம் தூங்கி இருக்கேனா தேவ் எங்கே?" என்று கேட்டாள்.


"அவர் காலையிலேயே ஆபிஸ் கிளம்பி போய்ட்டாரு" என்றாள் திவ்யா.


"ஓ சரி" என்று தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.


அன்று மாலை திவ்யாவை டாக்டர் செக்கப்பிற்கு அழைத்துச் செல்ல குணா வருவதாய் சொன்னான். ஆனால் ஒரு திடீர் மீட்டிங்கில் இருந்ததால் அவனால் வர முடியவில்லை. அதனால் யமுனாவை அழைத்துக் கொண்டுச் சென்றாள் திவ்யா.


டாக்டருக்காக காத்திருந்த திவ்யாவிடம் வந்த நர்ஸ், "மேடம் நீங்க சத்யதேவ் சாருடைய குடும்பமா?" என்று கேட்டாள்.


"ஆமாம் மேடம் என்ன ஆச்சு?" என்று கேட்ட திவ்யாவிடம், "இது சாரோட மருத்துவமனை தான் மேடம்... கொஞ்ச நேரம் முன்னாடி குணா சார் கால் பண்ணி நீங்க வருவீங்கனு சொன்னாரு" என்றாள்.


இதை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த யமுனா, 'இவர் பண்ணாத தொழிலே இல்லைப் போல!' என்று நினைத்தாள்.


"இதோ இவங்க தான் சாருடைய மனைவி" என்று யமுனாவை அறிமுகப்படுத்தி வைத்தாள் திவ்யா.


"ஓ நீங்க தான் சாருடைய மனைவியா? பார்க்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்... சார் கூட இப்போ இங்க மருத்துவமனையில் தான் இருக்காரு" என்றாள் அந்த செவிலியர்.


"ஓ அப்படியா எதுக்கு?" என்று கேட்ட யமுனாவிடம்,


"சார் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருக்கார் மேடம்" என்றாள். 


'அவர் எங்கே போறாரு வராருனு கூட நமக்கு தெரியல ஏன் சொல்லிட்டு போனா வாயில இருந்து முத்தா உதிர்ந்திடும்' என்று நினைத்த யமுனா, 'நம்ம ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறோம்? அவர் எங்க போய்ட்டு வந்தா எனக்கென்ன?' என்று நினைத்தாள்.


பின் இருவரும் டாக்டரை பார்த்து விட்டுச் சென்றனர். 


அன்று இரவு தேவ் வீட்டிற்கு வரவே பத்து மணிக்கு மேல் ஆனது. அதற்குள் ஆதிரா தேவ்வின் அறையில் தூங்கி விட்டதால் யமுனாவும் அவளின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். தேவ் நேராக தன் அறைக்கு வந்தவன் அங்கு யமுனா இருப்பதைக் கண்டும் காணாமல் தன் வேலையைப் பார்த்தான்.


யமுனாவே தேவ்விடம் வந்து, "சாப்பிடுறீங்களா?" என்று கேட்டாள்.


"ம்ம்" என்ற பதில் மட்டும் வந்தது. சாப்பிடும் போது கூட தேவ் யமுனாவிடம் எதுவும் பேசவில்லை. எப்போதும் ஆதிராவைப் பற்றி விசாரிப்பான். ஆனால் இன்று எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டு விட்டு தன் அறையில் இருக்கும் ஆதிராவைத் தூக்கி யமுனாவின் அறையில் படுக்க வைத்து விட்டு தன் அறைக்குச் சென்று கதவைச் சாற்றினான்.


யமுனாவிற்கு தேவ்வின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. ஆனால் அவளும் அதுவே நல்லது என்று அமைதியாக இருந்தாள். அடுத்த நாள் பிரியாவை அழைப்பதற்காக தேவ்வின் பெற்றோர்கள் பிரியாவின் வீட்டிற்குச் சென்றனர்.


அன்று காலை எழுந்த திவ்யா பார்க்கவே சோர்வாக இருந்தாள். அவளைக் கண்ட குணா, "ஏய் திவ்யா என்ன ஆச்சு? உடம்பு ஒரு மாதிரி பண்ணுதா?" என்று அவளின் பக்கத்தில் அமர்ந்துக் கேட்டான்.


"மனசும் சோர்வாக இருக்கு குணா என்னால அத்தை மாமா கூட சகஜமா பழக முடியவில்லை அவங்களும் என்கிட்ட சகஜமா பேச மாட்டுறாங்க... எனக்கு புரியுது தப்பு நம்ம இரண்டு பேர் பண்ணதும் தான்... நாம் செய்தது பெரிய தப்பு அதற்காக நான் நிறைய நாள் அழுதுருக்கேன் நிறைய நாள் தூங்காம இருந்திருக்கேன் ஆனா என்னால இதுக்கு மேல முடியல" என்று அழ ஆரம்பித்த திவ்யா,



"என்னோட சின்ன வயசு ரொம்ப கொடுமையானது என் அப்பா அம்மா என்னைப் பற்றி யோசிக்காமல் இரண்டு பேரும் வெவ்வேறு வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கிட்டாங்க... என்னை ஒரு ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு மாசா மாசம் பணம் அனுப்புனாங்க... எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு... நான் யார் கூடவும் பேச மாட்டேன் அப்போ தான் எனக்கு யமுனா அறிமுகம் ஆனாள்... அவள் வந்து என்னை சந்தோஷமாக மாற்றினாள். அவளால் தான் வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்தேன்... அப்போ தான் நீங்களும் என் வாழ்க்கையில் வந்தீங்க. நம்ம காதலிச்சோம் தவறு செய்தோம் இரண்டு பேருமே ஆனால் உங்க அப்பா அம்மாவிற்கு உங்கள் மேல் வருத்தம் இருந்தாலும் உங்களை அவர்கள் வெறுக்கவில்லை. ஆனால் நான் அப்படி இல்லை என்னிடம் பேசவே அவர்களுக்கு சங்கடமாக இருக்கிறது" என்று அழுதாள்.


"ம்ம்... உன்னோட உணர்வுகள் எல்லாமே எனக்கு புரியுது ஆனா இப்போ நானுமே உன்னை மாதிரி ஒரு குற்றவாளியா தான் கூண்டில் நிக்கிறேன்" என்றான் குணா.


"குட் மார்னிங்" என்று உள்ளே சிரித்த முகத்துடன் வந்தாள் யமுனா.


"நீங்கள் பேசினது எல்லாமே என் காதுல விழுந்தது சாரி திவ்யா என் வாழ்க்கை பிரச்சனையினால் உன் வாழ்க்கையில் என்ன நடக்குதுனு நான் கவனிக்கவில்லை எல்லாத்துக்குமே ஹீலிங் டைம் எடுக்கும் திவ்யா... உண்மையா அத்தை மாமா ரொம்ப நல்லவங்க... இன்ஃபாக்ட் நீ குழந்தை உண்டாகி இருக்கனு உன்னை எந்த வேலையும் செய்ய விட வேண்டாம்னு என்கிட்ட சொன்னாங்க... எல்லாரும் எல்லா நேரத்துலயும் அவங்க உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டாங்க... அதற்கு தகுந்த நேரம் வரும் போது தான் வெளிப்படுத்துவாங்க" என்றாள் யமுனா.


"தாங்க் யூ சோ மச் யமுனா, இப்போ தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கு மனசு" என்று அவளைக் கட்டிக் கொண்டாள் திவ்யா.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2