மாயம் 16
மாயம் 16
"யமுனா உன் மாமன் மகன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்?" என்று தன் சட்டையை கழட்டியவன் யமுனாவிடம் திரும்பி, "பிரியா உன் கிட்ட எப்படி பேசுனா?" என்று அதட்டிக் கேட்டான்.
"என்கிட்ட அவங்க பேசுனது எப்படினு தெரியல ஆனால் அவங்க சந்தோஷமா பேசல" என்றவள் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
தேவ் அவளிடம் எதுவும் கூறாமல் குளிக்கச் சென்றான். யமுனா பொருள்களை சீர்படுத்திவிட்டு கீழேச் சென்று காஃபி போட்டு எடுத்துக்கொண்டு தேவ்விடம் வந்தாள். அவன் காஃபியை வாங்கிய பின் யமுனா கீழேச் சென்றாள். அதன்பின் அவள் தேவ்வின் அறைக்கு வரவில்லை. மாயா யமுனாவை முறைத்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் யமுனா அவளைக் கண்டுகொள்ளவில்லை. கீழே சாப்பிட வந்த தேவ் தன் தாய் தந்தையிடம், "நாளைக்கு நீங்களும் அப்பாவும் பிரியாவை பார்த்துட்டு வாங்க" என்றான். அவர்களும், "சரி" என்றனர்.
பின் இரவு யமுனா இம்முறை அறைக்குள் செல்லும் போது ஆதிரா தூங்கிக் கொண்டு இருந்தாள். தேவ் பால்கனியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். யமுனா சத்தமே இல்லாமல் அமைதியாக வந்து படுத்துக் கொண்டாள். தேவ்விற்கு மனது வெறுப்பாக இருந்தால் தான் அவன் சிகரெட்டைக் கையில் எடுப்பான். அவனின் மனது ஓட்டத்தில் ஒரு குழப்பம் இருந்தது. பிரியாவிற்காக தான் இந்த கல்யாணத்தை முடித்தான் தேவ்... ஆனால் அவளால் சந்தோஷமாக இருக்க முடியவில்லையே என்று யோசித்தவன் இனிமேல் திவாகரை விட்டு தான் பிடிக்க வேண்டும் என்று நினைத்தான்.
பின் படுக்கைக்கு வந்து தூங்கலாம் என்று நினைக்கும் போது யமுனா ஏற்கனவே தூங்கிக்கொண்டிருந்தாள். 'இன்னும் எத்தனை நாள் என் கிட்ட இருந்து ஓடி ஒளியப்போற யமுனா?' என்று துயிலில் இருந்தவளைப் பார்த்து விஷமமாகச் சிரித்தவன் பின் படுக்கச் சென்றான்.
அடுத்த நாள் காலை சீதாலட்சுமி சமையலறையில் இருக்கும் போது யமுனா வந்தாள்.
"யமுனா இன்னியில் இருந்து ஆடி மாசம் ஆரம்பிக்குது மா, நீ இனிமேல் என் அறையில் இருந்துக்கோ... இதை நான் தேவ்விடம் சொல்ல முடியாது நீ சொல்லிடு... ஆமா தேவ் எங்கே? அவனை காலையில் இருந்து நான் பார்க்கவே இல்லையே?" என்றார்.
"அத்தை அவர் இன்னும் எழுந்திருக்கல... இன்னிக்கு நீங்களும் மாமாவும் பிரியாவைப் பார்க்கப் போறீங்களா?" என்று கேட்ட யமுனாவிடம்,
"ஆமாம் யமுனா மனசு என்னமோ படபடப்பாகவே இருக்கு மா, ஒரு தடவை அவளை பார்த்து விட்டு வந்தால் எனக்கு நிம்மதியா இருக்கும் மா" என்றவரின் மனதில் கவலை இருந்தது.
"சரிங்க அத்தை நான் அப்போ என்னோட பொருள்களை வேற அறைக்கு மாத்திடவா?" என்று இதான் சாக்கு என தேவ்விடம் தப்பிக்க முயற்சித்தாள் யமுனா.
"ஐய்யோ அதெல்லாம் வேண்டாம் மா, நீ அந்த அறைக்குலாம் போகலாம் உன் பொருள் எல்லாம் அங்கேயே இருக்கட்டும் ஆனா தேவ்வும் நீயும் எல்லை மீறாமல் இருந்தால் போதும்" என்றார் சீதாலட்சுமி.
'இந்த அத்தைக்கு கொழுப்பைப் பாரு... இவங்க மகன் கூட ஒரே அறையில் இருக்குறதே பெரிய விஷயம் இதுல எங்களுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருக்கும்னு வேற நினைப்பு ச்ச' என்று மனதில் கடுப்பானவள் வெளிக்காட்டாமல் இருந்தாள்.
தேவ் எழுந்திருக்க மணி எட்டானது இரவு லேட்டாக படுத்ததால் காலை எழ நேரம் ஆனது. எழுந்தவுடன் குளித்துவிட்டு தன் அலுவலக பையுடன் கீழே வந்தான்.
"என்னப்பா தேவ் காஃபி குடிக்காமலே கீழே வந்துட்ட?" என்றார் ஜெயக்குமார்.
"இன்னிக்கு நம்ம மருத்துவமனைக்கு இன்ஸ்பெக்ஷன் போறேன் அப்பா சீக்கிரம் கிளம்பணும்... நான் சாப்பிடுறேன் காஃபி வேண்டாம் சாப்பிட்டு கிளம்புறேன் அம்மா யமுனா எங்கே?" என்று கேட்டான்.
"யமுனா பூஜை அறையில் இருக்காப்பா நான் சாப்பாடு வைக்கிறேன்" என்று சீதாலட்சுமி பரிமாற ஆரம்பித்தார்.
தேவ் சாப்பிட்டு முடிக்கும் வரை யமுனா பூஜை அறை விட்டு வேண்டும் என்றே வெளியே வரவில்லை. சாப்பிட்டு முடித்தவுடன் தேவ் கிளம்பி விட்டதை உணர்ந்து யமுனா வெளியே வந்தாள். தேவ் சென்ற பின் நிம்மதியாக அவளுடைய அன்றாட வேலையைப் பார்த்தாள்.
அன்று காலை விஜயலட்சுமி சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தார். பிரியா ஒரு கதை புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்.
"என்ன மகாராணி மாதிரி உட்கார்ந்திட்டு இருக்க? போய் சமையல் பண்ணு" என்று திவாகர் பிரியாவிடம் கத்தினான்.
"ஏய் திவாகர் அந்த பொண்ணு அவ்வளவு பெரிய பணக்கார பொண்ணு அந்த பொண்ணை போய் வேலை செய்ய சொல்ற நான் பாத்துக்குறேன் உனக்கு இன்னிக்கு இன்டர்வியூ இல்லையா?" என்று கேட்டார் விஜயலட்சுமி.
"இவளோட அண்ணன் னால என்னோட ரெஸ்யூம் அடி வாங்கிருச்சு... ஒருத்தனும் வேலை குடுக்க மாட்டுறாங்க" என்று பிரியாவை கை காட்டி திட்டினான்.
பிரியா சமையல் அறைச் சென்று சமைக்க ஆரம்பித்தாள்.
"எனக்கு சமைக்க தெரியும்ங்க ஆனா நீங்களே என்ன உரிமையா சமைக்க சொல்லணும்னு தான் நான் காத்துட்டு இருந்தேன். இப்போ எனக்கு சந்தோஷமா இருக்கு" என்று மென்மையாக சிரித்தாள் பிரியா.
"ச்சே உன்னை அவமானம் படுத்துனாலும் இப்படி சூடு சுரணை இல்லாமல் இருக்க" என்று தன் அறைக்குள் சென்று விட்டான் திவாகர்.
"அடடே வாங்க சம்பந்தி... அம்மாடி பிரியா உன் அப்பா அம்மா வந்திருக்காங்க வாம்மா" என்று சமையல் அறையில் இருக்கும் பிரியாவை அழைத்தார் சேகர்.
"அம்மா அப்பா வாங்க" என்று சந்தோஷமாக வரவேற்றாள் பிரியா. விஜயலட்சுமி அவர்களை அமர வைத்து குடிக்க பழச்சாறு கொண்டு வந்தார்.
தங்கள் அறையினுள் சென்ற பிரியா திவாகரின் பக்கத்தில் சென்று, "உங்களுக்கு என்னை பிடிக்காது நான் உங்க பக்கத்தில் கூட வர மாட்டேன். ஆனா என்னோட அப்பா அம்மா இங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க... உங்களை கெஞ்சி கேட்கிறேன் அவங்க முன்னாடி நம்ம பிரச்சனை தெரிய வேண்டாம்... ப்ளீஸ் அவங்களை வாங்கனு மட்டும் கேட்டுட்டு நீங்க உள்ளே வந்திருங்க" என்றாள் பிரியா.
"சரி" என்று ஒப்புதலாய் ஹாலிற்கு வந்த திவாகர் அவர்களை வரவேற்று ஓர் இரண்டு வார்த்தை பேசினான். ஜெயக்குமாரிற்கும்
சீதாலட்சுமிக்கும் மகள் நிம்மதியாக தான் இருக்கிறாள் என்று பொய்யான நம்பிக்கை தரும் அளவுக்கு திவாகர் நடித்தான்.
பின் விஜயலட்சுமியிடம், "நாங்கள் விருந்துக்கு அழைக்க தான் வந்தோம் மதினி ஆனா ஆடி மாசம் வந்திருச்சு இல்லையா? அதனால் நாளானிக்கு நல்ல நாளா இருக்கு அன்னிக்கு பிரியாவை அங்க கூட்டிட்டுப் போறோம். அதுவரைக்கும் பிள்ளைகளை சேர விடாம பாத்துக்கோங்க" என்று ரகசியம் சொல்வது போல் கூறினார் சீதாலட்சுமி.
'ஐய்யோ பாவம் இவங்க... அந்த சீனே இங்க இல்லையே தெரிஞ்சா எப்படி வருத்தப்படுவாங்க' என்று உண்மையாக வருத்தப்பட்டார் விஜயலட்சுமி.
பின் பிரியாவிடம் விடைபெற்று இருவரும் சென்றனர். அவர்கள் சென்றவுடன் விஜயலட்சுமி எல்லாரும் சாப்பிடும் பொழுது "நாளானிக்கு மதினியும் அண்ணாவும் வந்து பிரியாவை கூட்டிட்டு போறாங்களாம். ஆடி மாசம் ஆரம்பிச்சிருச்சுல அதனால் ஒரு மாசம் அங்க தான் பிரியா இருக்கணும் பா திவாகர்" என்று அவர் சொல்லும் போதே, 'தொல்லை விட்டுச்சு ஒரு மாசம் ஆனால் இவள் அட்டை மாதிரி என்கிட்ட ஒட்டிட்டு இருப்பாளே' என்று திவாகர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
"சரிங்க அத்தை நான் என்னுடைய பொருள்களைப் பேக் செய்கிறேன்" என்று வேகமாக தங்கள் அறையினுள் சென்றான். அவளே செல்கிறேன் என்று சொன்னது திவாகருக்கு மனது ஓரத்தில் ஏமாற்றமாக இருந்தது.
வீட்டிற்கு வந்த பின் தேவ்விற்கு கால் செய்த ஜெயக்குமார் பிரியா நலமாய் இருப்பதாய்க் கூறினார். ஆனால் தேவ்விற்கு இதில் நம்பிக்கை இல்லை. இப்போதைக்கு தாம் அவர்கள் வாழ்க்கையில் நுழைய வேண்டாம் என்று அமைதியாக நடப்பதைக் கவனித்தான்.
அன்று மாலை யமுனா திவ்யாவுடன் கோவிலுக்குச் செல்ல தயாரானாள். ஆதிராவையும் அழைத்துக் கொண்டுச் சென்றனர். டெல்லியில் இருக்கும் அந்த பிரசித்திப் பெற்ற துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்றனர். திவ்யா ரொம்ப நேரம் அம்மனை வேண்டிக்கொண்ட பின் விளக்கை ஏற்றினாள்.
"ஏன் டி இவ்வளவு நேரம் அப்படி என்ன வேண்டுன?" என்று சாதாரணமாகக் கேட்டாள்.
"அது வந்து... குணா நல்லா இருக்கணும்னு வேண்டினேன் டி ஒரு பெண்ணுடைய கணவன் ஆரோக்கியமா இருக்கணும்னா துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்ற வேண்டும்" என்றாள் திவ்யா.
"சரி டி கிளம்பலாம்" என்று யமுனா திவ்யாவைக் கிளப்பினாள்.
அவர்கள் டிரைவரோடு வரும்போதே தேவ்வின் கார் வீட்டில் நின்றது.அவர்கள் உள்ளேச் செல்லும் போதே தேவ் ஹாலில் உட்கார்ந்து நியூஸ் பார்த்துக்கொண்டே காஃபி குடித்துக்கொண்டிருந்தான்.
அனைவருக்கும் விபூதியைக் கொடுத்த யமுனா தன்னுடைய சேலையை மாற்றி சல்வார் போட்டுவிடலாம் என்று நினைத்து அறைக்குள் சென்றாள்.
அவள் பின்னாடியே சென்ற தேவ் அவள் கதவை சாத்தும் முன்னரே உள்ளே வந்தான். 'ஐய்யோ வந்துட்டானே எப்படி தப்பிக்கிறது?' என்று யோசித்த யமுனாவிடம், "எவ்வளவு நாள் இன்னும் இந்த கண்ணாம்பூச்சி விளையாட்டு?" என்று தன் இரு கைகளைக் கட்டிக்கொண்டு கேட்டான்.
"அது வந்து ஆடி மாசம் முழுசா நான் தனியா தான் தூங்கணும்னு அத்தை சொன்னாங்க" என்று பயத்தில் உளறினாள்.
இதற்கு விஷமமாக சிரித்த தேவ், "அப்போ ஆவணி மாசம்னா என் கூட சேர்ந்து தூங்குவியா?" என்று கேட்டான். அவன் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரியாமல் "ஆம்" என்று தலையாட்டிய யமுனா பின்,
"இல்லை இல்லை" என்று அவசரமாக மறுத்தாள்.
"ம்ம்ம்... ஆதிராக்கு இன்னிக்கு இரண்டு தடவை முத்தம் கொடுத்தியாம் ஆதிராவுக்கே இரண்டுன்னா அப்போ ஆதிரா வோட அப்பாக்கு" என்று அவள் பக்கத்தில் வந்தான்.
"அது... ஆதிரா வந்து அழகா வரைந்தாள் அதான் கொடுத்தேன்" என்று தடுமாறியவள் பின்னாடியே சென்றுக்கொண்டு கட்டிலில் விழுந்தாள்.
கட்டிலின் அருகில் முட்டிப்போட்டு அமர்ந்த தேவ் யமுனாவின் முகத்தை தன் இரு கைகளில் ஏந்தினான்.
"இங்க பாரு யமுனா நான் இப்போ உன்கிட்ட சொல்லப் போற விஷயம் நீ நம்புறியோ இல்லையோ அதான் உண்மை... நீ என்னுடைய மனைவி உன் மேல் எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது அந்த உரிமையை நீயே எனக்கு கொடுத்திட்டா எல்லாம் நல்ல படியா போகும்... ஆனா நானா உன்கிட்ட இருந்து எடுத்துக்கிட்டா உனக்கு தான் சேதாரம் இந்த ஒரு மாசம் உனக்கு டைம் இருக்கு... அதுக்கு அப்பறம் நீ இங்க வரும் போது இந்த தேவ்வின் யமுனாவாக தான் வரணும்" என்று தீர்மானமாக கூறியவன் அவளின் கண்களை ஊடுருவினான்.
கருத்துகள்
கருத்துரையிடுக