மாயம் 15
அவளை விடுவித்தவன், "எப்படி இருந்தாலும் அவள் நம்ம வீட்டு விருந்தினர் யமுனா, நீ லூசுனு சொன்னது தப்பு தான் இனி அப்படி பேசாத" என்று அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் குளிக்கச் சென்று விட்டான்.
'தன் அத்தை பெண்ணை லூசுனு சொல்லிட்டேனாம் சொன்னவுடன் பொண்டாட்டி மேலயே இவருக்கு கோபம் வருது' என்று நினைத்த யமுனா, 'ச்ச என்ன இது நம்ம இப்படி லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்... ச்சே அவன் யாருக்கு சப்போர்ட் பண்ணா நமக்கென்ன? நம்ம எப்படியோ டைவர்ஸ் தானே வாங்க போறோம்' என்று தன் மனதை அவளே சமாதானப்படுத்திவிட்டு சமையலறைக்குச் சென்றாள். கமலாம்மாள் காலை சாப்பாடு செய்துக் கொண்டிருந்தார். யமுனா வந்தவுடன் அவளுக்கு காஃபி போட்டு கொடுத்தார்.
"யமுனாம்மா வந்துட்டியா! இன்னிக்கு பிரியாவையும் மாப்பிள்ளையையும் விருந்துக்கு அழைச்சிருக்கோம். அதனால் பாயசம் பண்ணனும் நீ இன்னிக்கு பருப்பு பாயசம் செஞ்சிடு மா, கமலா சாம்பார் ரசம் அவியல் காய் லாம் பண்ணிடுவா" என்றார் சீதாலட்சுமி.
"சரிங்க அத்தை" என்ற யமுனா தேவ்விற்கு காஃபி கொடுக்க மாடிக்குச் சென்றாள். "காஃபி" என்று அவனிடம் நீட்டினாள்.
"இன்னிக்கு பிரியாவும் திவாகரும் வராங்க உன்னை நம்பலாம் தான அவன் கிட்ட பேசாம அமைதியா இரு இல்லன்னா நான் வீட்டுல உங்கள வேவு பார்க்க இருக்கணுமா?" என்று ஏளனமாகத் திமிராகக் கேட்டான்.
யமுனாவிற்கு எப்போதும் தேவ் இந்த மாதிரி பேசினால் கோபம் வரும் ஆனால் இம்முறை ஏனோ அவளுக்கு அழுகை வந்தது.
"என் மேல நம்பிக்கை இல்லாமல் அப்போ எதுக்கு குடும்பம் மட்டும் நடத்த நினைக்குறீங்க?" என்று கேட்டாள். அவள் கேட்ட விதம் தேவ்விற்கு கடும் கோபம் ஏற்படுத்தியது.
அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவன், "ஆமா உன்மேல் நம்பிக்கை இல்லை டி, ஆனா பார்க்க அழகா தான இருக்க உன்னை என் பக்கத்தில் வெச்சிட்டு சும்மா இருக்க நான் ஒன்னும் இன்னொருத்தன் இல்லை" என்றவன் அவளின் கழுத்தில் இருந்த தாலியைக் கையில் எடுத்தவன், "நான் உன்னோட புருஷன் டி அது ஞாபகத்தில் இருக்கட்டும்" என்று கோபமாக சொல்லிவிட்டு வெளியில் செல்லுகையில்,
"விருப்பம் இல்லாம ஒரு பொண்ணுக்கு தாலி கட்டுனவங்க எல்லாம் புருஷன் ஆகிட முடியாது" என்று யமுனா பதிலடி கொடுத்தாள்.
இதைக் கேட்ட தேவ் யமுனாவை கோபத்தில் நெருங்கினான். அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த ஆதிரா, "அம்மா" என்று ஓடி வந்து யமுனாவை கட்டிக்கொண்டாள். குழந்தை முன் எதுவும் செய்யாமல் அறையை விட்டு வெளியேச் சென்றான்.
'இவனை கல்யாணம்
பண்ணதுக்கு பேசாம நம்ம செத்தே போயிருக்கலாம்' என்று நினைத்தாள்.
தேவ் கோபத்தில் சாப்பிடாமலே ஆபிஸிற்குச் சென்று விட்டான். யமுனாவை நினைத்த மனது கோபமாகவும் அவளை அடித்ததற்கு வருத்தமாகவும் இருந்தது. ஆனால் அவனால் எதையும் வெளிக்காட்ட முடியவில்லை.
பிரியா தன் வீட்டில் விருந்திற்கு ரெடி ஆகிக் கொண்டிருந்தாள். திவாகர் கிளம்பாமல் தன்னுடைய லாப்டாப்பில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்த பிரியா, "திவாகர் வந்து... இன்னிக்கு நம்ம எங்க வீட்டுக்கு விருந்துக்கு போகணும்... அம்மா அப்பா உங்ககிட்ட பேசுனாங்களே நீங்க கூட சரினு சொன்னீங்களே..." என்று இழுத்தாள்.
"போ" என்று அவளைப் பார்க்காமலே லாப்டாப்பில் இருந்து கண் எடுக்காமல் இருந்தான்.
"நேற்று நீங்க இன்டர்வியூ போனது செலக்ட் ஆகலைனு அத்தை சொன்னாங்க... கவலைப்படாதீங்க உங்களோட திறமைக்கு சீக்கிரமே வேலை கிடைச்சிடும் நான் வேணும்னா தேவ் அண்ணன் கிட்ட சொல்லி உங்களுக்கு ஓரு நல்ல வேலை" என்று அவள் சொல்லும் போதே அவளின் கன்னம் பழுத்தது.
"என்னை ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லாதவன்னு நினைச்சிட்டு இருக்கியா? உன் முகத்தை போய் கண்ணாடியில் பாத்துருக்கியா நீ? எனக்கு லாம் நீ தகுதியானவளே இல்லை உன் அண்ணன் ஒரு படிச்ச ரௌடி எங்க எல்லாரையும் மிரட்டி உன்னை கல்யாணம் பண்ண வெச்சு எப்படி டி உன் கூட லாம் குடும்பம் நடத்த தோணும்..? எங்க வீட்டு பொண்ணு யமுனாவை மிரட்டி கல்யாணம் பண்ணி அவளோட வாழ்க்கையும் இப்போ போச்சு... ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறவன் ச்சே... அந்த பொண்ணு சின்ன வயசுல இருந்தே அப்பா அம்மா இல்லாம கஷ்டப்பட்ட பொண்ணு டி உனக்கு லாம் அது எங்க புரிய போகுது. நீயெல்லாம் பணத்தால புருஷனையே விலைக்கு வாங்குனவள் தான அப்புறம் உன் அண்ணன் அவனோட திமிரால என்னை உனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டான்... ஆனால் என்னை மிரட்டி உன் கூட குடும்பம் நடத்த வைக்க முடியாது" என்று அசிங்கமாகப் பேசினான் திவாகர்.
"ஏய் விஜி, உன் மகன் அந்த பெண்ணை கொடுமை படுத்துறான் நீ போய் கேளு... உன் மகன் கிட்ட என்னால முன்னாடி மாதிரி பேச மனசுலயும் தெம்பு இல்லை உடம்புலயும் இல்லை" என்றார் சேகர்.
"அட போங்க நானே பத்திரம் வரலைன்னு கவலையில் இருக்கேன்... நீங்க வேற புருஷன் பொண்டாட்டி இன்னிக்கு அடிச்சிப்பாங்க நாளைக்கு சேர்ந்துப்பாங்க" என்றார் விஜயலட்சுமி சாதாரணமாக.
தன் பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை பத்த வைத்த திவாகர் பிரியாவிடம், "எனக்கு யமுனா மேல இதுக்கு அப்புறமும் விருப்பம் இல்லை நான் அவ்வளவு கேவலமானவன் இல்லை ஆனா நீ" என்று அவள் முன் கையை நீட்டியவன், "உன்னை ஒரு காலமும் நான் மனைவியா ஏத்துக்க மாட்டேன் மனைவி கூட சந்தோஷமா இருக்க முடியலைன்னா நான் சந்தோஷப் பட எனக்கு ஆயிரம் வழி இருக்கு" என்று திமிராகச் சிரித்தான் திவாகர்.
"திவாகர் ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் உங்களை காதல் செய்ததற்கு காரணமே நீங்க பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப கண்ணியமா இருந்தீங்கனு தான்" என்று அழுதாள் பிரியா.
"ஓ அப்போ இனிமேல் அந்த திவாகரை நீ பார்க்க முடியாது அப்படியாவது என்னை விவாகரத்து பண்ணிட்டு கிளம்பு" என்று அவளை கீழே தள்ளிவிட்டு வெளியேச் சென்றான்.
"யமுனா மணி இரண்டு ஆகப் போகுது இன்னும் பிரியா வரலை நான் கால் செய்தாலும் எடுக்க மாட்டுறாள் மா, நீ உன் மாமா கிட்ட பேசிப் பார்க்குறியா?" என்று கேட்டார் சீதாலட்சுமி.
சற்று தயங்கிய யமுனா பின் தன் மாமாவுக்கு கால் செய்தாள். "மாமா நான் யமுனா பேசுறேன் பிரியா, திவாகர் அத்தான் கிளம்பிட்டாங்களா? " என்று கேட்டாள். இதற்கு என்ன பதில் சொல்லுவது என்று சேகருக்கு தெரியவில்லை.
"ஒரு நிமிஷம் மா, பிரியா கிட்ட தரேன்" என்று பிரியாவிடம் யமுனா பேசுவதாய் கொடுத்தார்.
தன் கண்களை துடைத்துவிட்டு செல்லை வாங்கிய பிரியா எதுவும் நடக்காதது போல்,
"அண்ணி சொல்லுங்க எப்படி இருக்கீங்க?" என்று கேட்டாள்.
"நான் இருக்கேன் பிரியா நீங்க இன்னும் விருந்துக்கு வரலை இங்க அத்தை உங்க செல்லிற்கு கால் செய்தாங்க நீங்க எடுக்கலை..." என்று இழுத்தாள்.
"அது வந்து... அண்ணி அவருக்கு வேலை அதிகம் அதனால அவர் வெளியே போயிருக்காரு... நாங்க இன்னொரு நாள் வரோம் அம்மா கிட்ட சொல்லிடுங்க" என்று கால்லை கட் செய்தாள்.
பிரியாவின் பேச்சில் ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்த யமுனா தன் அத்தையிடம் என்ன சொல்வது என்பதில் குழப்பமாய் இருந்தாள்.
"யமுனா... பிரியா என்ன சொன்னாமா? ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்டார்.
"அது வந்து அத்தை திவாகர் அத்தானுக்கு ஏதோ வேலை இருக்காம் வெளியே போயிருக்காராம்... அதனால இன்னொரு நாள் வராங்களாம்" என்று கூறினாள். அதில் ஏமாற்றம் அடைந்த சீதாலட்சுமி தன் கணவனிடம் இதைக் கூறச் சென்றார்.
'என்ன பிரச்சனையா இருக்கும்? நமக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு இதுல மத்தவங்க பிரச்சனை பத்தி யோசிச்சு இன்னும் தலைவலி எதுக்கு?' என்று அமைதியாக இருந்தாள் யமுனா. அன்று மாலை கார்டனில் அமர்ந்த யமுனா ஆதிரா விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனதில் நிம்மதி இல்லாமல் ஏதோ கடமைக்கே என்று ஒரு வாழ்க்கையை கொடுத்து கடவுள் தன்னை தண்டிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்த யமுனாவிடம்,
"உன் முகத்தில சிரிப்பே இல்லையே யமுனா... என்னை உன்னோட தோழியா ஏத்துக்க வேணா அட்லீஸ்ட் ஒரு ஓரகத்தியா நினைச்சிச் சொல்லு நான் கேட்கிறேனு தப்பா எடுத்துக்காத... இப்போ இந்த இரண்டு நாளா தேவ் அத்தான் அறையில தான் தூங்குற அவர் எதாவது உன்னை அந்த மாதிரி டார்ச்சர் பண்றாரா?" என்று தயங்கிக் கேட்டாள் திவ்யா.
யமுனாவிற்கு யாரிடமாவது கதறி அழ வேண்டும் என்றே தோன்றியது.
"அதைப் பற்றி என்னால் சொல்ல முடியாது திவ்யா... ஆனாலும் நான் இங்க நானா இல்லை என்னால இந்த வாழ்க்கையை ஏத்துக்க முடியல... அந்த தேவ் அவன் முகத்தை பார்த்தாலே எனக்கு பத்திகிட்டு வருது ஆள் பார்க்க மட்டும் அழகா இருந்தா போதுமா? அவன் சரியான மிருகம் இராட்சசன்..." என்று அவள் சொல்லும் போதே திவ்யா அவளின் கையைப் பிடித்து சமாதானம் படுத்தினாள்.
"கொஞ்ச நாள் இந்த விஷயத்தை ஒதுக்கி உனக்கு பிடிச்சதைப் பண்ணு யமுனா, டிவி பாரு பாட்டு கேளு உன்னோட மனசை நிம்மதியா வெச்சிக்கோ" என்றாள் திவ்யா.
“ம்ம்... எனக்கு இப்போ இருக்கிற ஒரே சந்தோஷம் ஆதிரா தான் அந்த குழந்தை என் மேல அவ்வளவு பாசமா இருக்கு அவள் மட்டும் தான் என்னோட ஆறுதல்" என்றாள் யமுனா.
பின் இருவரும் ஆதிராவை அழைத்துக்கொண்டு உள்ளேச் சென்றனர். அன்று மாலை வீட்டுற்கு வந்த தேவ் நேராக தன் தாய் தந்தையின் அறைக்குச் சென்றான். அப்போது யமுனா தேவ்வின் அறையில் ஆதிரா விளையாடிவிட்டு சிதறிய பொருள்களைச் சரி செய்துக் கொண்டிருந்தாள்.
"ஏன் அம்மா பிரியா இன்னிக்கு வரல?" என்று சந்தேகமாக கேட்டான் தேவ்.
"அது வந்து மாப்பிள்ளைக்கு ஏதோ வேலை இருக்காம்" என்றார் சீதாலட்சுமி.
"வேலை இல்லாம சுத்திட்டு இருக்குறவன்க்கு என்ன வேலை? ஏதோ சந்தேகமாக இருக்கும்மா பிரியா எப்படி பேசுனா?" என்று இம்முறை கடுப்பாகக் கேட்டான்.
"அது அவள் என்கிட்ட பேசலைப்பா யமுனா கிட்ட தான் பேசுனா" என்றாள் அன்னை.
"சரி" என்று ஹாலில் யமுனா இல்லாததைக் கண்டு வேகமாக தன் அறைக்குச் சென்றான். ஆதிரா திவ்யாவுடன் விளையாடிக்கொண்டு இருந்ததால் யமுனா அறையில் தனியாக தான் இருந்தாள்.
அப்போது அறைக் கதவை வேகமாக தள்ளிவிட்டு தேவ் உள்ளே வந்து கதவைச் சாற்றினான்.
கருத்துகள்
கருத்துரையிடுக