மாயம் 14
'அவனுக்கு எப்படி என்னை அப்படி செய்ய தோன்றியது இதுவரைக்கும் யாரையும் நான் என்கிட்ட நெருங்க விடாமல் இருந்தேன். ஆனா இவனோட பலத்திற்கு முன்னால் என்னை காத்துக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் நேற்று அவன் எல்லை மீறாமல் நான் இந்த வாழ்க்கையை பிடிச்சு அவனை தேடி போகணுமாம்... ச்ச என்னலாம் பேசுறான் நமக்கு சொல்லி அழுறதுக்கு கூட இந்த வீட்டில் யாரும் இல்லை' என்று நினைத்தவள், 'என்ன நடந்தாலும் இனிமேல் வாயேத் திறக்க கூடாது அப்படி இருந்து தான் ஆகணும் வேற வழி இல்லை' என்று கீழேச் சென்றாள்.
அங்கு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
"என்ன அண்ணி உங்க மருமகள் எழுந்திருக்கிற நேரத்தைப் பார்த்தீங்களா?" என்று ஏளனமாகக் கேட்டார் பனிமலர்.
"என் மனைவி எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாள்னு பார்க்க எனக்கு தெரியும் அத்தை நீங்க விருந்தினரா வந்தீங்கனா அந்த மாதிரியே நடந்துக்கோங்க" என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த தேவ் அதிகாரமாக சொல்லிவிட்டான்.
யமுனாவை சாப்பிட அழைத்தார் சீதாலட்சுமி. சாப்பிட மனமே இல்லை என்றாலும் அனைவரும் அங்கு உட்கார்ந்து சாப்பிடுவதால் இவளும் வேறு வழியின்றி சாப்பிட்டாள்.
"ஏன் அண்ணா தேவ் என்னை இப்படி சொல்றான் நீங்களும் அதை கேட்டுட்டு அமைதியா இருக்கீங்க" என்று வருத்தமாகக் கூறினார் பனிமலர்.
"இந்த வீட்டில் தேவ்வை மீறி என்னால் எதுவும் பேச முடியாது பனிமலர்... அவன் கூறினால் அது சரியா தான் இருக்கும் அப்புறம் தேவ் இன்னிக்கே மாயாவை கம்பெனியில் சேரச் சொன்னான்" என்று சாப்பிட்டவர் எழுந்துச் சென்றார்.
"இங்கப் பாரு மாயா நான் உன்னை தங்க வைக்குறதுக்கு முக்கியமான காரணம்
தேவ்வை மயக்கி கல்யாணம் பண்ணிட்டனா நீ தான் இந்த வீட்டுக்கும் சொத்துக்கும் அதிபதி" என்று அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அறையில் பேசிக்கொண்டிருந்தார் பனிமலர். எதேச்சையாக அந்த பக்கம் நடந்துச் சென்ற
யமுனாவிற்கு இவர்கள் பேசுவது காதில் நன்றாக விழுந்தது.
தனக்கென்ன என்று அவளால் செல்ல முடியவில்லை நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள். "அந்த அனாதை பொண்ணுக்கு நம்ம தேவ் கேட்குதா? அவளுக்கே தேவ் உன்னை கல்யாணம் பண்ணா நிம்மதி என்று நினைக்கிறாள் அதனால் உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எப்படியாவது
தேவ்வுடைய மனசில் இடம் பிடிச்சிடு" என்றார்.
"அம்மா, தேவ் கிட்ட நான் அவ்வளவு கெஞ்சினேன் என்னை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஆனால் என்னை அவர் ஒரு பொருட்டாக கூட மதிக்கல... அந்த யமுனாவை அவள் விருப்பமே இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு... எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு எப்படி இருந்தாலும் தேவ்வை அடைந்தே தீருவேன்" என்றாள் மாயா.
இனிமேல் தேவ்வின் அறையில் தான் யமுனா இருக்க வேண்டும் என்பதால் எல்லா பொருள்களையும் கொண்டு வந்து தேவ்வின் அறையில் உள்ள மர அலமாரியில் வைத்துக்கொண்டிருந்தாள் யமுனா. அப்போது தேவ்வுடைய போட்டோ ஃபிரேம் அங்கே இருந்தது அதை எதேச்சையாக பார்த்தவளுக்கு நேற்று அவன் செய்தது ஞாபகம் வந்தது உடனே முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அன்று மாயா தேவ்வின் சொல்படி வேலையில் சேர்ந்தாள். வேலைக்குச் சென்ற முதல் நாளே தேவ் அவளை அவனுடைய அறைக்கு அழைத்தான்.
"மாயா நீ என்னுடைய அத்தை பொண்ணு அது இது ன்னு இங்க என் அறைக்கு வரக் கூடாது என் அப்பா ரொம்ப வேண்டி கேட்டதுனால தான் உன்னை வேலைக்கு சேர்த்துருக்கேன். பிராஜெக்ட் கிடைக்கிற வரைக்கும் பென்ச் இல் இரு ஒரு மூன்று மாசத்துக்குள்ள பிராஜெக்ட் கிடைக்கலைனா யூ வில் பி ஃபையர்ட்" என்றான் தேவ். அவன் சொன்ன அனைத்தையும் கேட்டு மாயா வெளியேச் சென்றாள்.
அன்று காலை எழுந்த பிரியா திவாகர் அறையில் இல்லாததைக் கண்டாள். வெளியே ஹாலிற்கு சென்றுப் பார்த்தாள். அங்கு விஜயலட்சுமி மற்றும் சேகர் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.
"பிரியா வந்துட்டியா மா வா சாப்பிடலாம்" என்றார் விஜயலட்சுமி.
"ஆ... வரேன் அத்தை அவர் எங்கே?" என்று கேட்டாள்.
"திவாகர் ஒரு இன்டர்வியூ போய்ருக்கான் மா நீ சாப்பிட வா" என்றார்.
"இதோ குளிச்சிட்டு வந்திடறேன் அத்தை" என்று உள்ளேச் சென்றாள்.
யமுனாவிற்கு ரொம்ப நேரமா அவளுடைய வாய் எரிந்துக்கொண்டே இருந்தது. என்ன என்று கண்ணாடியில் பார்த்த போது தான் நேற்று தேவ் செய்த காரியத்தால் வந்த வீரியம் இது என்று அருவருப்பாகக் கருதினாள். மாலை ஆறு மணி ஆன உடனே யமுனாவை பூ வைக்கச் சொல்லி விளக்கேற்ற சொன்னார் சீதாலட்சுமி. திவ்யா கருவுற்று இருப்பதால் அவளை பெருசாக எதுவும் சொல்ல மாட்டார்.
"சரி அண்ணா இனி மாயா உங்க பொறுப்பு நாங்க கிளம்புறோம்" என்றார் பனிமலர்.
"கவலைப்படாத மா நாங்க பார்த்துக்கிறோம்" என்றார் ஜெயக்குமார்.
"யமுனா அக்கா உங்க செல் நம்பர் கொடுங்க" என்ற சாயா அவளின் நம்பரை வாங்கிக்கொண்டு கோவிந்தன் மற்றும் பனிமலரோடு விடைபெற்றாள்.
அன்று இரவு தேவ் மாயாவோடு சேர்ந்து தான் வீட்டிற்கு வந்தான். வந்ததும் அவன் அறைக்குச் சென்றவன் கீழே இருந்த யமுனாவை அவன் அறைக்கு வரச் சொன்னான்.
'எதுக்கு கூப்பிடுறான்? எப்படி அவனால் என்கிட்ட இப்படி நடந்துட்டு ஒரு குற்ற உணர்ச்சியே இல்லாமல் நார்மலாக இருக்க முடியுது அவன் என்ன பண்ணாலும் நீ அமைதியா இரு யமுனா இல்லை பிரச்சனை உனக்கு தான்' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு மேலேச் சென்றாள்.
அங்கு அறைக்கு உள்ளேச் செல்ல படபடப்பாக இருக்க யமுனா தன் கையை பிசைந்துக் கொண்டே இருந்தாள்.
"சரி உள்ளே போலாம் வேற வழி இல்லை" என்று சென்றாள். அங்கு தேவ் குளித்து விட்டு தன் இரவு உடையை அணிந்துக் கொண்டு ஒரு ஆங்கில புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்.
"நான் கூப்பிட்டு பத்து நிமிஷம் ஆகுது... ஏன் லேட்டு?" என்று எழுந்து நின்றவன் தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அதிகாரமாகக் கேட்டான்.
"அது வந்து ஆதிரா கூட விளையாடிட்டு இருந்தேன்" என்று பொய் சொன்னாள்.
"ஆதிரா கூட தான் காலையில இருந்து விளையாடுற இப்போ என் கூட விளையாடு" என்று அவளருகில் வந்தான்.
"அது வந்து என்னை அத்தை தேடுவாங்க..." என்று வேகமாக அறையை விட்டு வெளியை போக முற்பட்டாள். ஆனால் தேவ் அவளின் கையை பிடித்து இழுத்தவன் அவளை திருப்பி அவள் தோளில் அவன் முகத்தை வைத்தவன் அவள் காது பக்கத்தில் சென்று, "என்கிட்ட இருந்து தப்பிச்சிடலாம்னு நினைக்காத யமுனா... நீ ஆதிராவை சந்தோஷமா பாத்துக்கிற அதே மாதிரி என்னையும் சந்தோஷமா பாத்துக்கணும் அது உன் கடமை" என்று அவள் காதருகில் முத்தம் இட்டான்.
'ஐய்யோ இவன் கிட்ட வாய் பேசுனாலும் நம்ம கிட்ட நெருங்குறான் பேசாட்டியும் நெருங்குறான் முருகா என்ன எப்படியாவது காப்பாத்துங்க' என்று மனதில் அழுதுக்கொண்டிருந்தாள்.
பின் அவளின் கழுத்தில் முத்தம் இட்டான் யமுனாவிற்கு கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. அதை கண்டுகொள்ளாமல் அவளைத் தன் புறம் திருப்பி அவளுடைய கன்னத்தில் முத்தம் கொடுத்த தேவ் அவளின் அழுகை அதிகம் ஆவதை உணர்ந்து அவளை விடுவித்தான்.
"எனக்கு காஃபி எடுத்திட்டு வா... நில்லு யமுனா நான் உன் கணவன் அந்த உரிமையை சீக்கிரம் நீ எனக்கு கொடுக்கலைனா நானே உன்கிட்ட இருந்து எடுத்துப்பேன்" என்று அதிகாரமாகச் சொன்னவனின் குரலின் தோரணையே
யமுனாவிற்கு பயத்தை உண்டு பண்ணியது. அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடன் தான் யமுனாவிற்கு மூச்சே விட முடிந்தது.
"இதைப்பற்றி யோசிக்காமல் இருந்தால் தான் நல்லது இல்லன்னா தலையே வெடிச்சிடும் போல" என்று
தேவ்விற்கு காஃபி கலந்து விட்டு கமலாம்மாளிடம் கொடுத்து மேலே அனுப்பினாள். அன்று இரவு யமுனா ஆதிராவையும் மெத்தையில் படுக்க வைத்து அவளும் தேவ் வருவதற்கு முன்பே சீக்கிரம் தூங்கி விட்டாள். தன் தந்தையிடம் அலுவலக விஷயம் பற்றி பேசிவிட்டு தன் அறைக்கு வந்த தேவ் பார்த்தது தூங்கிக்கொண்டிருந்த யமுனாவைப் தான். யமுனா வேண்டும் என்றே இப்படி செய்கிறாள் என்று தேவ்விற்கு தெரிந்தது... ஆனாலும் முகத்தில் சிறு ஏளன சிரிப்புடன் அவனும் சிரித்துக் கொண்டு படுத்து விட்டான்.
அடுத்த நாள் காலை தேவ்வின் அறைக்கு காலையிலேயே வந்தாள் மாயா. அப்போது தான் யமுனா விழித்துக்கொண்டு ஆதிராவின் டையப்பரை மாத்தி விட்டு குளிக்கச் செல்ல தயாராகிக் கொண்டு இருந்தாள்.
"தேவ் அத்தான் தேவ் அத்தான்" என்று அறையில் வந்து கத்திக்கொண்டிருந்தாள் மாயா.
"ஏய் மாயா, குழந்தை தூங்குறாள் இப்படி கத்திட்டு இருக்க தேவ் இங்க இல்லை" என்றாள் யமுனா கோபத்தடன்.
"அவர் எங்க? நான் அவர் கிட்ட பேசணும்" என்றாள் ஆவேசத்துடன்.
"நீ என்ன லூசா அவர் இங்க இல்லை... அவர் எங்க இருக்கார்னு என்ன விட உனக்கு தான தெரியும்" என்று குளிக்கச் சென்று விட்டாள் யமுனா.
யமுனா குளிக்கச் சென்ற பின் தன் உடற்பயிற்சி செய்யும் அறையிலிருந்து வந்தான் தேவ். "தேவ் அத்தான் ஏன் இப்படி பண்ணீங்க..? எனக்கு எதுக்கு இப்போ புது ஸ்கூட்டி?" என்று அவன் வாங்கி கொடுத்ததின் பின்னணி அறிந்து கேட்டாள்.
"நீ என் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் அதனால் உனக்கு தனியா ஸ்கூட்டி ஆர்டர் பண்ணிருக்கேன். இனிமேல் அதையே யூஸ் பண்ணிக்கலாம் என்னுடைய காரில் ஏற வேண்டாம்" என்றான் தேவ் கட்டளையாக.
'யப்பா எவ்வளவு நெஞ்சு அழுத்தம் இவருக்கு' என்று மனதில் நினைத்தவள், "உங்களை தேடி உங்க அறைக்கு வந்தா உங்க பொண்டாட்டி என்னை லூசுன்னு சொல்றா" என்று பொய்யாக அழுதாள் மாயா.
"சரி அழாத நான் அவள் கிட்ட பேசிக்கிறேன்" என்று அவளை அவன் அறையை விட்டு வெளியே போக சொன்னான். யமுனா குளித்து விட்டு ஒரு சல்வாரை அணிந்துக் கொண்டு வந்தாள்.
"யமுனா நீ எதுக்கு மாயாவை லூசுன்னு சொன்ன? உன் வாய் கொழுப்பு இன்னும் அடங்கலை" என்று வேகமாக அவள் கையை பிடித்து இழுத்தவன், "உனக்கு எவ்வளவு வார்னிங் கொடுத்தாலும் நீ அடங்க மாட்டீங்குற" என்று அவளின் கையை முறுக்கி அவளை தன் முன் நிறுத்தியவன், "இனி இப்படி பண்ணுவியா?" என்று கேட்டான்.
யமுனாவின் கை வலித்தாலும் இம்முறை அவள் மேல் தப்பில்லை என்பதால்
தேவ்விற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தவள்,
"உங்க மாயாவை ஒரு வார்த்தை சொன்னதும் உங்களுக்கு அப்படி கோபம் வருது... அவளை நான் லூசுன்னு சொன்னது மட்டும் தான் சொல்லிருக்கா நான் எதுக்கு அப்படி சொன்னேன்னு சொல்லலை... ஆதிரா தூங்கிட்டு இருந்தா இவள் லூசு மாதிரி தேவ் அத்தான் பார்க்கணும்னு கத்திட்டே இருந்தா அதான் லூசுன்னு சொன்னேன்" என்றாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக