மாயம் 13

மாயம் 13




யமுனாவிற்கு குழப்பமாக இருந்தது. 'ஒருவேளை புலி பாய்வதற்காகத் தான் பதுங்குகிறதோ' என்று நினைத்தவள் மனதில் பயம் உண்டானது. 'இல்லை யமுனா நீ தைரியமா இருக்கணும் மிஞ்சிப் போனா அடிப்பான் ஆனா அவன் அடிச்சா நம்ம தாங்குவோமா' என்று குழம்பியவள், 'சரி யோசிச்சா நமக்கு இரவு தூக்கம் கூட வராது' என்று தூங்கச் சென்றாள்.




சாயாவுடன் ஆதிரா விளையாடிக் கொண்டிருந்தாள். ஆதிராவிற்கு சாப்பாடு கொடுக்க வந்தாள் யமுனா.




"யமுனா அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மாயா அக்கா மாதிரி லிப்ஸ்டிக் அதெல்லாம் போடாமலே அழகா இருக்கீங்க" என்றாள்.




"நானும் அதெல்லாம் போடுவேன் சாயா ஆனா இப்போலாம் போட விருப்பம் இல்லை" என்றாள் யமுனா சோகமாக.




"அக்கா நீங்க ரொம்ப க்யூட்டா பேசுறீங்க...நேற்று என்

அம்மாக்கு நல்ல பதிலடி கொடுத்தீங்கக்கா அவங்க உங்களை அப்படி பேசிருக்கக் கூடாது... மாயா அக்கா கல்லூரி முடிச்சிட்டு இங்க தான் தேவ் அத்தானுடைய ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கப் போறாங்க. இனிமேல் அவங்க இங்க தான் தங்குவாங்க" என்றாள் சாயா.




'மாயா எதுக்கு இங்க தங்கணும்?' என்று யோசித்தாள் யமுனா... ஏனோ மாயா இங்கு இனிமேல் இங்கே தங்கப் போகிறாள் என்பது யமுனாவிற்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தாள்.




பனிமலரும் மாயாவும் யமுனா வரும் போதெல்லாம் வேண்டும் என்றே எதாவது குதர்க்கமாக பேசுவர். ஆனால் சீதாலட்சுமியின் வேண்டுகோளின் படி யமுனா அமைதியாக இருந்தாள். ஜெயக்குமாரிற்கு அவருடைய தங்கை பனிமலர் என்றால் உயிர் அதனாலேயே சீதாலட்சுமி எதுவும் சொல்ல விட மாட்டார். தேவ்விற்கு தன் அத்தையும் மாயாவும் யமுனாவை வம்பிழுப்பது தெரியும் ஆனால் யமுனாவிற்கு சாதகமாக இருக்க கூடாது என்றே அமைதியாக இருந்தான் அதனால்

மாயாவிற்கு சந்தோஷம் ஆனது.




இப்படியே ஒரு வாரம் சென்றது கல்யாண நாளும் வந்தது. டெல்லியில் இருக்கும் அந்தப் பிரம்மாண்ட மஹாலில் மூன்று ஜோடிகளுக்குக் கல்யாணம் நடந்தது. யமுனாவிற்குத் தான் எரிச்சலாக இருந்தது பிடிக்காதவனை எவ்வளவு தடவை தான் மணம் புரிவது என்று. ஆனால் அவளால் நினைக்க மட்டுமே முடியும். அடர்பச்சை நிறத்தில் காஞ்சிப் பட்டை உடுத்திய பெண் அவள் பார்க்க பூலோகத்தின் பேரழகி போல காட்சியளித்தாள். ஆனால் அவளை ரசிக்காமல் அவளை எப்படியாவது அடக்க வேண்டும் என்று மனதில் நினைத்த தேவ் ஐயர் கூறிய மந்திரத்தை கூறுவதில் கவனத்தை செலுத்தினான்.




பெரிய அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் கல்யாணத்தில் கலந்துக் கொண்டனர். பிரியா மஞ்சள் நிறத்தில் பட்டும் திவ்யா ஊதா நிறத்தில் பட்டும் அணிந்து பெண்களுக்கே உரித்தான வெட்கத்துடன் சந்தோஷமாக இருந்தனர்.




வரவேற்பும் முடிந்து விட்ட பின் பிரியா மற்றும் திவாகருக்காக தேவ் வாங்கிய புதிய வீட்டின் சாவியைக் கொடுத்தான்.




"அண்ணா உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்று அவனை அழைத்துச் சென்றாள்.




"சொல்லு பிரியா" என்றான் தேவ்.




"அண்ணா அது வந்து... யமுனா அண்ணி ரொம்ப பாவம் அன்னிக்கு நிச்சயதார்த்தம் நடக்குறதுக்கு முன்னாடி அழுதுட்டாங்க அவங்க வாழ்க்கையே போய்டுச்சுனு என்னால தான் அவங்க வாழ்க்கை இப்படி ஆச்சு அண்ணா என்னால முடியல ரொம்ப மனசு சங்கடமா இருக்கு" என்றாள்.




'மறுபடியும் மறுபடியும் தப்பு பண்ணிட்டே இருக்க யமுனா உனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவே இல்லைனாலும் அதை எல்லார் கிட்டயும் சொல்லிட்டு இருக்க... இதுக்கு எல்லாம் அனுபவிக்க போற என்கிட்ட' என்று மனதில் நினைத்தான் கொடூரமாக.




அன்று இரவு முதல் இரவிற்காக திவ்யா மற்றும் யமுனாவை தயார் செய்துக் கொண்டிருந்தார் சீதாலட்சுமி. பிரியா மற்றும் திவாகர் அந்த புது பங்களாவிற்குச் சென்றனர். அங்கு சென்றபின் தான் விஜயலட்சுமிக்கு மூச்சே வந்தது.




"அம்மாடி பிரியா, அப்படியே உங்க அண்ணா கிட்ட சொல்லி அந்தப் பத்திரங்களையும் வாங்கி கொடு மா இப்போ அவசரம் இல்லைம்மா கொஞ்ச நாள் கழிச்சு சொல்லு" என்று வழிந்தாள். தேவ் இரண்டு வேலைக்காரர்களை ஏற்கனவே அங்கு நியமித்திருந்தான் அவர்கள் முதலிரவு அறையை அலங்கரித்தனர்.




பிரியாவை தயார் செய்த விஜயலட்சுமி திவாகரின் அறைக்குள் அனுப்பினார். வெட்கத்துடன் உள்ளேச் சென்ற பிரியா மது அருந்திக் கொண்டிருந்த திவாகரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.




"திவாகர் என்ன பண்றீங்க? நீங்க குடிப்பீங்களா?" என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.




"உன்னை கல்யாணம் பண்ணிட்டேன்ல இனிமேல் இப்படி தான் இருப்பேன். என் முன்னாடி நிக்காம வெளியே போ இல்லன்னா அமைதியா படு" என்று குடித்துக் கொண்டிருந்தான்.




திவ்யா குணாவின் அறைக்குள் சென்றாள். அங்கு காதலுடன் இவளுக்காக காத்திருந்தான் குணா. திவ்யா வந்ததும் அவளை அணைத்து முத்தமிட்டவன், "இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணுமா?" என்ற குணாவிடம் "ஆம்" என்பது போல் தலையை ஆட்டினாள்.




"யமுனா உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை தான் ஆனாலும் வேற வழி இல்லைம்மா இந்த வாழ்க்கையை நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும். மாயா இனிமேல் இங்க தான் இருக்க போறாளாம் தேவ்விடம் எப்போ நெருங்கலாம்னு காத்துட்டு இருக்கா இனி உன் கையில் தான் இருக்கு" என்றார்.




'இவங்க என்ன என்னவோ பேசுறாங்க எப்படி இருந்தாலும் அவன் என் கிட்ட நெருங்க மாட்டான் எனக்கு நல்ல வேளை அந்த மாதிரி பிரச்சனை இல்லை' என்று நினைத்தவள்,




"பேசாம மாயாவை அவருக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கலாம்" என்றாள்.




"அது வந்து மா தேவ்க்கு..." என்று ஆரம்பித்தவர் அமைதி ஆகி விட்டார்.




"சரி யமுனா ஆதிரா என் கூட தூங்கட்டும் நீ உள்ளே போ" என்றார்.




"ஆதிரா எதுக்கு அத்தை அங்க எங்க கூடவே இருக்கட்டும்" என்றாள் யமுனா.




'இந்த பொண்ணு புரிஞ்சு பேசுதா இல்லை புரியாமல் பேசுதா?' என்று மனதில் குழம்பினார் சீதாலட்சுமி.




"ஆதிராவை குடுங்க அத்தை" என்று அவரிடம் வாங்கிக்கொண்டு முதல் இரவு அலங்காரத்துடன் ஆதிராவை தூக்கிக்கொண்டு உள்ளேச் சென்றாள் யமுனா.




அங்கு கம்பீரமாக நின்றுக்கொண்டு இருந்த தேவ் யமுனா ஆதிராவை தூக்கிக்கொண்டு வந்ததைக் கண்டவுடன் "அம்மா" என்று சத்தமாக அழைத்தான்.




'இவனுக்கு என்ன ஆச்சு?' என்று யமுனா யோசிக்கும் போதே யமுனாவிடம் இருந்து ஆதிராவை வாங்கியவன், சீதாலட்சுமியிடம் கொடுத்து விட்டு கதவை சாற்றினான். யமுனாவிற்கு ஒன்றும் புரியவில்லை.




"வெல்கம் மிஸஸ் யமுனா சத்யதேவ் அலங்காரம் எல்லாம் பயங்கரமா இருக்கு... எனக்கு பிடிக்கலை பிடிக்கலைனு குடும்பம் முழுசா பரப்பிட்டு இங்க மல்லிகைப்பூ கண் மை இதெல்லாம் வெச்சிட்டு வந்திருக்க... என்னை பிடிக்கலைன்னா எதுக்கு இப்படி அலங்காரம் பண்ணிட்டு வந்திருக்க சொல்லு டி" என்று அதட்டினான்.




இவனின் பேச்சு வேறு விதமாக இருப்பதை உணர்ந்த யமுனா பேசத் தடுமாறினாள்.




"முதல் விஷயம் நீ எனக்கு அடங்கணும் அதுவும் முழுசா... என் மேல பயம் இல்லாம தான அவ்வளவு திமிரா மூன்றாவது கல்யாணம் பத்தி பேசுன... இரண்டாவது விஷயம் இந்த தேவ்வுடைய சொந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது ஆனா நீ எல்லார் கிட்டயும் நேரம் பார்த்து என் வாழ்க்கை நல்லா இல்லைனு சொல்ற... என் கிட்ட திட்டும் வாங்கிட்ட அடியும் வாங்கிட்ட ஆனாலும் உன் திமிர் அடங்கவே மாட்டீங்குது உன்னை இனிமேல் எப்படி அடக்கணும்னு எனக்கு தெரியும்" என்று அவளை நெருங்கியவன்,




"நான் உன்கிட்ட நிறைய தடவை சொல்லிட்டேன் என்ன கோப படுத்திட்டே இருந்தா சேதாரம் உனக்கு தான்னு" என்று அவளை அவன் நெருங்கும் போது யமுனாவிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை தான் இவனிடம் தோற்கக்கூடாது என்று தன் முழுபலத்தை வைத்து தன்னை காக்க முயன்றாள்.




"உனக்கு நான் இரண்டு வழி சொல்றேன்... ஒன்று நீயா என்கிட்ட வரணும் இல்லன்னா நான் உன்கிட்ட என் உரிமையை எடுத்துக்குவேன்..." என்றான் திமிராக.




"ஒரு வருஷத்தில விவாகரத்து தருகிறேன்னு சொன்னீங்க ஆனா இப்போ இப்படி பேசுறீங்க" என்று அழுதுக்கொண்டே கூறினாள் யமுனா.




"லுக் யமுனா நீ என்னுடைய மனைவி ஆதிராக்கு அம்மாவா இருக்க மட்டும் தான் உன்னை மனைவியா வெச்சிக்க நினைச்சேன்... ஆனா நீ என் பொறுமையை தூண்டிட்ட அதனால் இனிமேல் நீ ஆதிராவின் அம்மாவா மட்டும் இல்லாமல் தேவ்வின் மனைவி ஆகணும்" என்று அவளின் இரண்டு கைகளையும் பிடித்தவன், "உன் அழகுல மயங்கி ஒண்ணும் நான் உன்னை தொடல... நான் உன்ன தொட்ட பின் எப்படி விவாகரத்து வாங்கி இன்னொருத்தன கல்யாணம் பண்ணுவ இனி காலம் முழுதும் உன் கணவனா இந்த தேவ் மட்டும் தான் இருக்கணும்" என்று யமுனாவை இறுக்கி அணைத்தவன் அவளின் அழகிய இதழில் தன் இதழை வைத்து சுவை கண்டான்.




யமுனாவின் கண்களில் கண்ணீர் வந்தது அவனிடம் இருந்து விடுபட முயற்சிக்கையில் தன் கைகளை வைத்து அவனைத் தள்ள முற்பட்டதில் அவளின் கண்ணாடி வளையல்கள் உடைந்தது. ஆனால் தேவ் அவனின் பிடியை இம்முறை தளர்த்தி அவளை தள்ளி விட்டவன், "நீ உன் விருப்பத்துடன் எனக்கு வேணும் யமுனா... நீயே இந்த வாழ்க்கையை பிடிச்சு என்கிட்ட வரணும்" என்று கடுப்பானவன் தன் மெத்தையில் படுத்துவிட்டான்.




தேவ் செய்த காரியத்தால் யமுனா சிலை போல் நின்றாள். தேவ் அவளிடம் இப்படி நடப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை... அப்படியே கீழே உட்கார்ந்தவள் தன் வாயை மூடிக்கொண்டு தேவ்விற்கு முன்னால் தான் தோல்வியடைந்து நிலை குலைந்து இருப்பது தெரிய கூடாது என சத்தமில்லாமல் அழுதாள்.




கீழேயே உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்த யமுனா எவ்வளவு நேரம் அழுதாள் என்று அவளுக்கே தெரியாமல் அப்படியே கீழே உறங்கி விட்டாள். காலையில் ஆறு மணிக்கு எழுந்த தேவ்... யமுனா கீழே உறங்குவதைப் பார்த்து அவளைத் தூக்கி மெத்தையில் படுக்க வைத்தான். பின் தன் காலை உடற்பயிற்சியை ஆரம்பித்தான்.


யமுனா எழுந்திருக்க எட்டு மணி ஆனது. அவள் எழுந்தவுடன் குளித்து முடித்த தேவ்

ஆதிராவுடன் விளையாடுவதை தான் கண்டாள்.




"ஆதிரா குட்டி அம்மா வெரி பேட் கேர்ள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்காம தூங்குறாங்க பாரு" என்றான் சாதாரணமாக.




"சாரி நாளையில இருந்து சீக்கிரம் எழுந்திருச்சிடுறேன்" என்று தேவ்வின் முகத்தைக் கூட பார்க்காமல் வெளியேச் சென்ற யமுனா அவள் முன்னாடி இருந்த அறையில் ஒரு சீனா சில்க் சேலையை எடுத்து குளித்து விட்டு உடுத்தியவள் அமைதியாக கட்டிலில் அமர்ந்தாள். நேற்று அவளிடம் தேவ் நடந்துக் கொண்ட விதம் அவளுக்கு எரிச்சல் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 2

மாயம் 8