மாயம் 12

 மாயம் 12



இதனைக் கண்ட பிரியாவிற்கு குற்ற உணர்ச்சி பயங்கரமாக வந்தது. 'தன்னுடைய வாழ்க்கைக்காக இவள் வாழ்க்கை அழிந்து விட்டதே' என்று அவளும் அழ ஆரம்பித்தாள்.




"ஐய்யோ இரண்டு பேரும் அழுகையை நிறுத்துங்க ப்ளீஸ்... திவ்யா இனி தயவுசெஞ்சு நீ சந்தோஷமா இருக்கணும் என்னால் உன் கிட்ட பழைய மாதிரி நெருக்கமா இருக்க முடியாது... ஆனா அதுக்காக உன் கிட்ட பேசாமல் முகத்தை தூக்கி வெச்சிட்டுலாம் இருக்க மாட்டேன்... உனக்கு உறுதுணையாய் இருப்பேன் இப்போ இரண்டு பேரும் கொஞ்சம் அழுகையை நிறுத்துங்க" என்று அவள் சொல்லும் போதே சீதாலட்சுமி உள்ளே வந்தார்.




"என்ன யமுனா நீ இன்னும் மேக்கப் லாம் பண்ணாம இருக்க இன்னும் அரை மணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துருவாங்க அந்த மேக்கப் பண்ற பெண்ணை தேவ்வுடைய பெங்களூர் அத்தையும் அத்தை மகள்களும் மேக்கப் போட அந்தப் பெண்ணைப் பிடிச்சு வெச்சிட்டாங்க... நான் போய் அந்தப் பெண்ணை அழைச்சிட்டு வரேன் யமுனா நீ உட்காரு மா, மேக்கப் பண்ண தயார் ஆகு இப்போ கூட்டிக்கொண்டு வரேன்" என்று வேகமாகச் சென்றார்.




ஒருவழியாக யமுனாவும் தயார் ஆகி வரும்போது நிச்சயம் ஆரம்பித்தது. ஒரு மஞ்சள் நிற பார்மல் சட்டை மற்றும் நீலம் நிறம் ஜீன்ஸ் அணிந்து பார்க்க கம்பீரமாக ஆண்மையாக இருந்த தேவ் யமுனாவை முறைத்துக் கொண்டிருந்தான். "என்ன" என்பது போல யமுனா தேவ்விடம் கேட்டாள்.




அவளிடம் கையை நீட்டி ஒரு விரலை காட்டி, "இங்கே வா" என்றான்.




'இவன் என்ன நம்மள நிச்சயதார்த்தம் நடக்குதுன்னு கூட பார்க்காம இப்படி கூப்பிடுறான் ஒருவேளை எல்லார் முன்னாடியும் நம்மள அவமானம் படுத்த போறானோ?' என்று யோசித்தே அவன் பக்கம் சென்றாள்.




"இங்க கல்யாண பொண்ணுங்க கூட சீக்கிரம் தயார் ஆயிட்டாங்க ஆனா நீ மேக்கப் பண்ணிட்டு வர இவ்வளவு நேரமா? நிச்சயம் ஆரம்பிச்சாச்சு உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா யமுனா? நீ இந்த வீட்டு மூத்த மருமகள் ஒவ்வொரு தடவையும் என்னால சொல்லிட்டு இருக்க முடியாது" என்று அவளிடம் அமைதியாக திட்டினான்.




தேவ்வின் பக்கத்தில் அவனை உரசிக் கொண்டு நின்றிருந்த மாயா யமுனா திட்டு வாங்குவதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.




அவள் யார் என்று யமுனா யோசிக்கும் போதே, "யமுனா இங்கே வாம்மா பிரியா திவ்யா கழுத்துல மாலை போடு" என்று அழைத்தார் சீதாலட்சுமி.இதான் சாக்கு என்று அவனிடம் இருந்து விலகினாள் யமுனா. திவாகரின் முகத்தில் சிரிப்பே இல்லை பிரியாவை கல்யாணம் செய்வதைத் தவிர அவனுக்கு வேற வழி இல்லை. குணாவும் திவ்யாவும் சந்தோஷமாக இருந்தனர்.


தேவ் குடும்பமும் திவாகர் குடும்பமும் மற்றும் தேவ்வுடைய அத்தை குடும்பம் மட்டும் தான் நிச்சயத்திற்கு இருந்தனர். பிரியாவிற்கு ஜெயக்குமார் மற்றும் சீதாலட்சுமி பெண் வீட்டு சார்பாக தட்டை வாங்கினர். திவ்யாவிற்காக ஜெயக்குமார் தன் தங்கை மற்றும் தங்கை மாப்பிள்ளை பனிமலர் மற்றும் கோவிந்தனிடம் தட்டு வாங்க சொன்னார்.




கோவிந்தன் சரி என்று சிரித்தாலும் பனிமலருக்கு முகமே இல்லை. "எப்படி அண்ணா நான் ஒரு அனாதை பெண்ணிற்காக தட்டை மாத்துறது என் மகள் மாயா

தேவ்வை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா... ஆனா நீங்க இன்னொரு அனாதை பொண்ணை தேவ்விற்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்கீங்க எங்களுக்கு ரொம்ப வருத்தம் அண்ணா" என்று போலியாக அழுகிற பாவனை செய்தார்.




"வேணும்னா உங்க அண்ணன் மகன் தேவ்விற்கும் உங்கள் மாயாவிற்கும் மூன்றாவது கல்யாணம் பண்ணி வைங்க அதுக்காக தேவை இல்லாமல் அனாதை அது இதுனு பேசாதீங்க... நாங்க அனாதை தான் ஆனா பொதுஅறிவு உள்ளவங்க இப்படி நல்ல காரியம் நடக்கும் போது கல்யாண பெண்ணை காயப்படுத்துற மாதிரி பேசவும் மாட்டோம் அழவும் மாட்டோம்" என்றாள் யமுனா திமிராக.




யமுனாவின் குணம் தெரிந்ததால் சேகர் குடும்பத்திற்கு இது ஆச்சர்யமாக இல்லை ஆனால் ஜெயக்குமார் குடும்பத்திற்கு இது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.




"அய்யோ அண்ணா நல்ல மருமகளை தான் கல்யாணம் பண்ணிருக்கான் தேவ் எவ்வளவு வாயாடுறாள்" என்று பனிமலர் சொல்லும் போதே யமுனா திருப்பி பதில் பேச வாய் எடுக்கும் போதே அவளைக் கவனித்த சேகர், "யமுனா ம்மா வேண்டாம்... நாங்க

திவ்யாக்காக தட்டை மாத்துறோம்" என்று விஜயலட்சுமியை அழைத்தார். பணம் உள்ள இடத்தில் விஜயலட்சுமி தன் சப்த நாடியையும் அடக்கி அமைதியாக இருப்பார். எனவே திவ்யாவின் வீட்டு சார்பாக தட்டை மாத்தினர். நிச்சயம் இனிதே முடிந்தது ஆனால் யமுனாவிற்கு தான் கெட்ட நேரம் ஆரம்பித்தது.




யமுனா தங்களை அவமானம் படுத்தும் படியாக பேசியதால் வாயை அடக்காமல் பேசிவிட்டாள் ஆனால் தேவ் என்னும் ஒருவனையே மறந்துவிட்டாள். அதன் பின் இரவு வரை தேவ்வை யமுனா பார்க்கவில்லை என்பதை விட அவனின் முகத்தை இவள் பார்க்காமல் இருந்தாள் என்பதே உண்மை அவனின் பக்கமே செல்லாமல் இரவு வரை நழுவிக்கொண்டே இருந்தாள். தேவ்வினால் திவாகர் யமுனாவிடம் பேசுவதற்கே பயந்தான். பனிமலரின் இரண்டாவது மகள் சாயா ஆதிராவை வைத்துக்கொண்டே இருந்தாள். இந்த ஆண்டு கல்லூரி படிப்பை முடிக்க போறவள் யமுனாவிடம் நன்றாக பேசினாள்.




சீதாலட்சுமி மற்றும் ஜெயக்குமாரிற்கு யமுனா மீது வருத்தம் இருந்தது.

யமுனா அப்படி எதுவும் உணரவில்லை ஆனால் சீதாலட்சுமிக்கு பனிமலர் அவ்வாறு செய்தது சுத்தமாக பிடிக்கவில்லை. அதற்காக யமுனாவும் பெரியவர்களை அப்படி பேசிருக்க கூடாது என்று நினைத்தார். ஆனால் ஜெயக்குமாரும் சரி சீதாலட்சுமியும் சரி யமுனாவிடம் நன்றாக தான் பேசினார்கள்.




நிச்சயதார்த்தம் நல்ல படியாக முடிந்த பின் சேகர் குடும்பம் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றனர். ஒரு விருந்தினர் அறையில் பனிமலர் குடும்பம் இருந்தனர். பிரியாவின் அறையில் திவ்யா படுத்துக் கொண்டாள். ஆதிராவும்

பிரியாவின் அறையிலேயே உறங்கிவிட்டாள்.




யமுனா சேலையை மாற்றி விட்டு ஒரு சல்வாரை அணிந்துக் கொண்டு முகத்தை கழுவி விட்டு படுத்துக் கொண்டே செல்லைப் பார்த்துக்கொண்டிருந்தாள். 'நல்ல வேளை நம்ம பேசுன பேச்சுக்கு தேவ் எதுவும் கத்தவில்லை' என்று யோசித்தவள் அப்படியே மாயாவை நினைத்தாள்.




'தேவ்வை உரசிட்டு நின்னாளே அவள் தான் மாயாவா கருமம் கல்யாணம் ஆனவன் கூட எப்படி இவ்வளவு நெருக்கமா நிக்குறா? பேசாம இவளே இவரை கல்யாணம் பண்ணிருக்கலாம் நம்மளாவது நிம்மதியா இருந்திருக்கலாம் ஆனா சாயா நல்ல பொண்ணு அழகா பேசுனா' என்று அன்றைய நிகழ்ச்சியை அசைப்போட்டாள்.




அங்கே தன் அறையில், "எவ்வளவு திமிர் டி உனக்கு? நான் அவ்வளவு தடவை வார்னிங் கொடுத்தும் அங்கு எல்லார் முன்னாடியும் எனக்கும் மாயாவுக்கும் மூன்றாவது கல்யாணம் பற்றி பேசிருப்ப இப்போ அங்க இருந்த எல்லாரும் என்ன நினைச்சிருப்பாங்க

யமுனாவிற்கு தேவ் இன்னொரு திருமணம் செய்தால் கூட பரவாயில்லை என்று... அதுமட்டுமில்லாமல் பெரியவர்கள் முன்னாடி திமிரா பேசிருக்க நானும் கெட்டவன் ஆகக் கூடாதுனு யோசிட்டே இருக்கேன். ஆனால் உன் திமிரை அடக்க நான் உனக்கு இனிமேல் கெட்டவனா மட்டும் தான் இருக்க போறேன் யமுனா விவாகரத்தா கேட்கிற உன்னை காலம் முழுசும் என் காலடியில் விழுற மாதிரி ஆக்குவேன் டி" என்று தன் அறையில் நடந்துக்கொண்டிருந்தவன் தன் செல்லை கோபத்தில் வீசினான்.




அடுத்த ஒரு வாரம் வேகமாகச் சென்றது. தேவ் யமுனாவிடம் ஒரு வார்த்தை பேசவில்லை மாயா முடிந்த அளவு தேவ் வீட்டில் எங்குச் சென்றாலும் அவன் பின்னாடியேச் சென்று வழிந்துக் கொண்டிருப்பாள். யமுனாவிற்கு தான் அதைப் பார்க்க சசிக்கவில்லை.




'இந்த பொண்ணு தேவ் கிட்ட இப்படி வழிஞ்சிட்டு இருக்கு வீட்டில் அனைவரும் இதைப் பார்த்துட்டு சும்மா இருக்காங்க எது எப்படியோ தேவ் நம்ம கிட்ட பேசுறது இல்லை' என்று நினைத்துக்

கொண்டிருக்கையில் குணா யமுனாவிடம் பேச வந்தான்.




"யமுனா அண்ணி அது வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று தயங்கினான்.




"பேசுங்க குணா ஆனா என்னை எப்பயும் போல யமுனா ன்னே கூப்பிடலாமே" என்றாள்.




"இல்ல அண்ணி வேண்டாம் தேவ் அண்ணாக்கு இது தெரிஞ்சா கத்துவாரு... உங்க கிட்ட முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும்" என்றான்




"சொல்லுங்க" என்றாள் யமுனா.




"நீங்க ஒரு வாரம் முன்பு நிச்சயதார்த்ததில உங்களுக்காகவும்

திவ்யாகாகவும் பேசுனீங்க... ஆனா நீங்க கொஞ்சம் யோசிச்சி பாத்தீங்களா தேவ் அண்ணா அதைப் பத்தி உங்க கிட்ட ஒரு வார்த்தையும் பேசவில்லை இப்போ கூட உங்க கிட்ட பேசுற மாதிரி எனக்கு தெரியவில்லை" என்றான்.




"ஆமா நானும் இப்போ தான் யோசிச்சு பார்க்கிறேன் அவர் அந்த சம்பவத்துல இருந்து என்கிட்ட ஆதிராவுக்காக கூட பேசல" என்றாள் சாதாரணமாக.




"அப்படினா இது உங்களுக்கு ஒரு அபாய ஒலி யமுனா அண்ணி, நான் ஏன் உங்ககிட்ட மெனக்கிட்டு வந்து சொல்றேன்னா அதுக்கு காரணம் என் அண்ணா மேல இருக்கிற பயம் அவரும் பிரனிதாவும் விரும்பி கல்யாணம் பண்ணாங்க பிரிஞ்சிட்டாங்கனு தான் திவ்யா கிட்ட பொய் சொல்லிருக்கேன். இப்போ கூட உங்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்னு அம்மா சொன்னாங்க. அதான் பேச வந்திருக்கேன். தேவ் அண்ணா எப்போதுமே அவருக்குனு தனி வரைமுறைகள் வெச்சிருப்பாரு. அதுல முதல் விஷயம் எல்லாரையும் அவருடைய கன்ட்ரோலுல வெச்சிருப்பாரு இரண்டாவது விஷயம் அவருடைய சொந்த விஷயம் யாருக்கும் தெரியகூடாதுனு நினைப்பார்."




"ஆனா நீங்க இரண்டிலுமே அவர்க்கு எதிர்மறையா இருக்கீங்க... நேற்று எங்க அத்தை அப்படி புலம்புனாங்கனா நீங்க அண்ணாவும் மாயாவும் வேண்டும்னா மூன்றாவது கல்யாணம் பண்ணிக்கட்டும்னு கூலா சொல்லிட்டீங்க... ஆனா அப்போ நீங்க அவரின் முகத்தை கவனிக்கவில்லை ஆனா நான் பார்த்தேன் அதுல ஒரு வெறி இருந்தது. அதுவும் நேற்று

எங்களோட நிச்சயதார்த்தம்னு தான் அமைதியா இருந்தாரு இல்லன்னா நேற்றே உங்களை அழ வெச்சிருப்பாரு என்னால அண்ணாவ மீறி ஒன்னுமே பண்ண முடியாது. இதுவரைக்கும் அப்படி தான் இனிமேலும் அப்படி தான்... ப்ளீஸ் இந்த வாழ்க்கையில் நீங்க வலுக்கட்டாயமா தள்ளப்பட்டு இருக்கீங்க... எனக்கு அது நல்லா தெரியும் ஆனா தேவ் அண்ணா ஒரு நெருப்பு மாதிரி அவர் கிட்ட நீங்க இப்படி இருந்தா உங்களுக்கு தான் பிரச்சனை. அதனால நீங்க இனிமேல் ரொம்ப பொறுமையா இருக்கணும்" என்று முடித்தான்.




"என்ன குணா பயத்தை உண்டாக்குறீங்களா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.




"இல்லை அண்ணி உங்களை எச்சரிக்கிறேன் அப்புறம் உங்க இஷ்டம்" என்று கிளம்பினான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2