மாயம் 11
அதுவும் அவனுடைய தேவ் ரெசார்ட்டில் தான் நிறுத்தினான். அவனைப் பார்த்து ஹோட்டலில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். அதை எதையும் கண்டு கொள்ளாமல் ஒரு காட்டேஜிற்கு யமுனாவை இழுத்துச் சென்று கதவைச் சாற்றினான். யமுனாவிற்கு இதயம் பட படவென துடிக்க ஆரம்பித்தது திக்கு திக்கென்று இருந்தது. ஆனால் அவள் கூறியதில் ஏதும் தப்பு இருந்ததாய் அவளுக்கு தோணவில்லை ஒரு பெண்ணாய் தன் கற்பின் மேல் உள்ள பயத்தில் தான் கேட்டாள்.
"என்ன டி சொன்ன..? என் கூட ஒரே அறையில் இருக்க உனக்கு பயம் அப்படி தான நான் உன்னை எதாவது பண்ணிடுவேன் அப்படிதான" என்றவனின் குரலில் அழுத்தம் இருந்தது.
"நான் நினைச்சிருந்தேன்னா உன்னை என்னோட மனைவி ஆக்காமல் அன்னிக்கே உன்னை பார்த்த அன்னிக்கே என்னால உன்னை அடைஞ்சிருக்க முடியும்... ஆனா நான் அப்படி பட்டவன் இல்லை நான் கல்யாணம் தாலி இதுக்கெல்லாம் மதிப்பு கொடுக்கிறவன். இப்போ உன்னை எதுக்கு கூட்டிட்டு வந்தேன்னா பயம் உன்னோட பயம் எப்படி இருக்குனு பார்க்கத் தான் இங்க கூட்டிட்டு வந்தேன்... அவ்வளவு பயம் என் மேல இருக்கு ஆனாலும் திமிரு அடங்கலைல வேண்டாம் யமுனா இது உனக்கு நான் கொடுக்கிற கடைசி வார்னிங் என்கிட்ட இனிமேல் வார்த்தைய அளந்து பேசு..."
"இதுவரைக்கும் உனக்கு நான் பதில் சொன்ன விதம் வேற... இனி நான் உனக்கு பதில் சொல்ற விதம் வேற மாதிரி இருக்கும்... அதுல கடைசியா சேதாரம் உனக்கு தான்" என்று பயங்கரமாக மிரட்டியவன்,
"ஆதிரா என் குழந்தை தான் நான் அவளை நல்ல படியா வளர்ப்பேன் அவளுடைய உண்மை யாருக்கும் ஏன் அவளுக்குமே தெரிய கூடாது" என்றான்.
தேவ் மிரட்டிய விதத்தில் தன்னிலை மறந்து அதிர்ந்து நின்ற யமுனா ஆதிரா பற்றி அவன் கூறியது காதில் விழுந்தது ஆனால் பதில் சொல்வதற்கு தெம்பு இல்லாமல் சிலையாய் நின்றாள்.
"உன்கிட்ட தான் கேட்கிறேன் டேம் இட்" என்று அவளை உலுக்கினான்.
அதில் பயந்தவள், "புரிஞ்சிது புரிஞ்சிது" என்று அவள் பதற்றமாய் சொல்லும் போதே தன் கூலர்ஸைப் போட்டுக் கொண்டு அந்த காட்டேஜின் வெளியே வந்தான். யமுனாவும் அவன் பின்னாடியே சென்று காரில் ஏறி அமர்ந்தாள்.
'இவன் ரொம்ப ஆபத்தானவன் இனிமேல் இவன் கிட்ட நிறைய பொய் சொல்லணும் இரண்டு மூன்று தடவை நல்லா யோசிச்சிட்டு தான் பேசணும்' என்று மனதில் தேவ்விடமிருந்து சீக்கிரமே தப்பிக்க மும்முரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
'ஒரு வருஷத்தில் விவாகரத்து தருகிறேன்னு சொல்லிருக்கான் ஆனா வாக்க மீறுகிறது தான இவன் குணமே எப்படி இவன் கூட ஒரே ரூம்ல இருக்குறது இவன் கூடப் பக்கத்துல இருந்தா மூச்சு கூட விட முடியல... ஆனா போன ஜென்மத்துல ஏதோ பெருசா பாவம் செஞ்சிருக்கேன் போல... நான் இப்படியொரு வாழ்க்கையை எதிர்பார்க்க வில்லை முருகா எப்படியாவது என்னை இந்த அசுரன் கிட்ட இருந்து காப்பாத்து!' என்று கடவுளை மனதுக்குள்ளேயே வேண்டிக்கொண்டிருந்தாள்.
வீடு வரும் வரை ஏதும் பேசவில்லை வீட்டிற்கு வந்தபின் தேவ் யமுனாவிடம் பேசவில்லை அவன் பேசாமல் இருந்தாலே ரொம்ப நல்லது என்று யமுனா அமைதியாக அவள் அறையினுள் சென்றாள்.
"யமுனா வந்துட்டியா மா, சரி சாப்பிட்டு ரெடி ஆகு நிச்சயம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்கிடும்... ஆதிரா தூங்கிட்டு இருக்கா. நீயும் சாப்பிட்டு கொஞ்ச நேரம் தூங்கு மா" என்றார் சீதாலட்சுமி. யமுனாவிற்குமே இப்போது சாப்பிட்டு தூங்கினால் கொஞ்சம் நிம்மதி என்று தோன்றியது. யமுனா தூங்கி எழுந்திருக்கும் போது மணி மாலை ஐந்தானது அவள் எழுந்திருக்கும் போது வீடே கலகலப்பாக இருந்தது.
தன் அறையிலிருந்து வெளியே வந்து பார்த்த யமுனாவின் முன் வீடே அலங்காரமாக இருந்தது. பிரியாவிற்கும் திவ்யாவிற்கும் உள்ளே அலங்காரம் நடந்துக் கொண்டிருந்தது. ஆதிராவிற்கு அழகாகப் பட்டுப் பாவாடை போட்டு விட்டு அவளுக்கு அலங்காரம் பண்ணினாள் யமுனா.
வீட்டிற்கு வந்த பின் யமுனா
தேவ்வைப் பார்க்கவில்லை அதனால் அவள் மனது நிம்மதியாக இருந்தது.
"யமுனா நீயும் மேல் அறைக்குப் போய்த் தயார் ஆகு மா, முதல்ல பட்டுச் சேலை கட்டிட்டு மேல போ அங்கே மேலறையில் மேக் அப் பண்றவங்க இருக்காங்க உன்னையும் தயார் பண்ண தான் காத்திருக்காங்க" என்றார் சீதாலட்சுமி.
தேவ்வுடைய வீட்டில் மொத்தம் எட்டு அறைகள் உள்ளன. அதில் ஒன்று ஜெயக்குமார் மற்றும் சீதாலட்சுமியின் அறை இரண்டாவது தேவ்வின் அலுவலக அறை அந்த அறையில் தேவ்வுடைய அலுவலக டாக்குமென்ட்ஸ் மற்றும் அவனுடைய அனைத்து தொழில் சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்ஸ் இருக்கும். அந்த அறைக்கு தேவ்வைத் தவிர யாரும் செல்லமாட்டார்கள்
தேவ்வின் அனுமதி இல்லாமல் யாரும் அதில் நுழையக் கூடாது. மூன்றாவது குணாவின் அறை நான்காவது பிரியாவின் அறை ஐந்தாவது சமையல்காரர்களுடைய அறை அங்குத் தான் கமலாம்மாள் தூங்குவார்.
அவர் இந்த வீட்டின் ஒரு அங்கமாய் இருப்பதாலும் அவருக்குக் குடும்பம் என்றும் யாரும் இல்லை சிறிய வயதிலேயே கணவனை இழந்ததால் அவரின் வாழ்க்கையை தனியாகவே வாழ்ந்தார் அவருக்காக அந்த அறை. ஆறாவது அறை
ஆதிராவுடையது அவளுடைய விளையாட்டுச் சாமான்கள் அவளுடைய குட்டி சைக்கிள் அவளுடைய பொம்மைகள் என அனைத்தும் இருக்கும் ஏழாவது மற்றும் எட்டாவது அறையில் தான் விருந்தினர்கள் எப்போதுமே தங்குவார்கள்.
தேவ்வுடைய அறை எப்போதும் மேலே தான் இருக்கும். அதனை ஒட்டி இருக்கும் விருந்தினர் அறையில் தான் யமுனா இவ்வளவு நாள் இருந்தாள். இப்போது ஒரு அறையில் மேக் அப் வேலை நடப்பதால் இன்னொரு அறைக்குச் செல்லலாம் என்று அதனுள்ளே சென்று கதவைச் சாற்றி உடை மாற்ற ஆரம்பித்தாள்.
அங்கு தேவ் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்ததை கவனிக்காத யமுனா அவள் சேலையை மாற்ற ஆரம்பித்தாள். தேவ் கதவைத் திறக்கும் முன் நல்ல வேளை சேலையை மாற்றினாள். பாத்ரூம் கதவைத் திறந்துக் கொண்டு இடுப்பில் துண்டோடு வந்த தேவ்வை அங்கு எதிர்பார்க்காத யமுனா கத்தினாள். அவள் கத்தியவுடன் அவளை எரிக்கும் பார்வையோடு பார்த்த தேவ் அதே வேகத்தோடு அவள் வாயை மூடி அவளின் கையைப் பிடித்து அவளைத் திருப்பியவன் அவளை இறுக்கமாகப் பிடித்தான்.
அவனிடமிருந்து விடுபட யமுனா முயற்சி செய்தாள். ஆனால் அவனின் பலத்திற்கு அவளால் ஈடு கொடுத்து விடுபட முடியவில்லை. அவளின் காது பக்கத்தில், "இப்போ எதுக்கு இப்படி கத்துற வெளியில் இருக்குறவங்கலாம் என்ன நினைப்பாங்க நான் என்னவோ உன்னை விருப்பம் இல்லாம ஏதோ பண்ற மாதிரி நினைப்பாங்க ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் பண்ற யமுனா உனக்கு அறிவு இல்லையா?" என்று காதின் பக்கத்தில் அமைதியாக அழுத்தமாகக் கூறினான்.
தலையை மட்டும் ஆட்டிக்கொண்டே இருந்த யமுனாவை ஒருவாறு விடுவித்தான்.
"நீங்க எப்படி இந்த அறையில இருக்கீங்க? நான் இங்க ஆடை மாத்திட்டு இருந்தேன் நல்ல வேளை நீங்க..." என்று தன் வாயை மூடினாள்.
'யமுனா உனக்குக் கண்டிப்பா வாயில தான் சனி இப்போ இவன் கிட்ட இப்படி வாயை விட்டுட்டியே' என்று யோசிக்கும் போதே தன் தலையை முடி உலர்த்தி(hair dryer)யில் போட்டவன், "என்ன சொன்ன நீ இப்போ?" என்று அதிகாரமாகக் கேட்டான்.
'இவன் காதுல விழலைப் போல ஏதோ சொல்லி சமாளிப்போம்' என்று யோசித்தவள், "அது வந்து நல்ல வேளை நீங்க இப்போ வெளியே வந்தீங்க இல்லன்னா தெரியாம கதவைச் சாத்திட்டு போயிருப்பேன்" என்று போலியாகச் சிரித்தவள் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேச் சென்றாள்.
'மனுஷனா இவன்? ஆடையே போடாம வெறும் துண்டைக் கட்டிட்டு எப்படி வெக்கமே இல்லாம நிக்குறான் எனக்குத் தான் அதை பார்க்க குமட்டுது' என்று பிரியாவும் திவ்யாவும் இருக்கும் அறைக்குச் சென்றாள்.
யமுனா அங்கு வந்தவுடன், "அண்ணி உங்க கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும்னு நினைச்சேன் எங்க அப்பாவோட தங்கச்சியும் அவங்க பொண்ணுங்களும் பெங்களூரில் இருந்து வந்திருக்காங்க... கொஞ்சம் அவங்க கிட்ட உஷாரா இருங்க அவங்க ரொம்ப ஆபத்தானவங்க பாவம் திவ்யா அண்ணியை அழ வெச்சிட்டாங்க" என்றாள்.
அப்போது தான் திவ்யாவை கவனித்த யமுனா அலங்காரம் பண்ணின முகத்தோடு அழுதுக் கொண்டிருந்தாள்.
"நீ எதுக்கு இப்போ அழுதுட்டு இருக்க? முதல்ல எனக்குச் சொல்லு நீ ஏன் எப்போ பார்த்தாலும் அழுதுக் கொண்டே இருக்க? உனக்குப் பிடிச்ச வாழ்க்கை கிடைக்க போகுது நியாயப்படி பார்த்தா நான் தான் இப்படியொரு வாழ்க்கையில் மாட்டிட்டு முழிக்குறதுக்கு அழுதுட்டே இருக்கணும்" என்றவள் பிரியா அங்கு இருப்பதை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
யமுனாவின் பழக்கமே நேரடியாகப் பேசுவது தான்... அவளுக்கு மூடி மறைத்து எல்லாம் பேசத் தெரியாது அப்படி தான் அன்று சீதாலட்சுமியிடமும் பேசினாள். இன்று பிரியா இருப்பதையும் பொருட்படுத்தாமல் பேசினாள். ஆனால் பிரியாவின் காதில் விழுந்த விஷயம் தேவ்விற்கு தெரியும்போது என்ன பாடு படப்போகிறாளோ அந்த முருகன் தான் அவளைக் காப்பாற்ற வேண்டும்.
"அது வந்து யமுனா அவங்க அத்தை என்னை ரொம்ப கேவலமா பேசுனாங்க... அனாதை பொண்ணு பிளான் பண்ணி உடம்பை காட்டி குணாவை இப்படி..." என்று அழுதுக்கொண்டே இருந்தாள் திவ்யா.
"உன் வாயில என்ன டி கொழுக்கட்டையா வெச்சிட்டு இருந்த? நீ திருப்பிச் சொல்லிருக்கணும்... இதைப் போய் உங்க வீட்டுப் பையன் குணா கிட்ட கேளுங்கனு இதுக்கெல்லாம் அழுவியா நீ?" என்ற யமுனா பிரியாவிடம் திரும்பி,
"ஏன் பிரியா இவள் குழந்தை உண்டாகி இருக்கிறது உனக்குத் தெரியும் தான? ஒரு கர்ப்பிணி பொண்ணு கிட்ட உங்க அத்தை இப்படி தான் பேசுவாங்களா? அப்படி பேசுனாலும் நீ அவங்களை நல்லா நாலு வார்த்தை கேட்டிருக்க வேண்டும்" என்றாள் ஆதங்கத்தோடு.
"அது வந்து மன்னிச்சிருங்க அண்ணி, எனக்கு யாரையும் எடுத்து எறிந்து பேசிப் பழக்கம் இல்லை அது மட்டுமில்லாமல் எங்க அத்தை எங்க குடும்பத்தின் பெரிய அங்கம் என் அப்பாவுடைய தங்கை அவங்க கிட்ட அப்படி பேசிருந்தால் அப்பா என்னைத் திட்டிருப்பாரு அதனால் தான் அண்ணி என்னால எதுவும் பேச முடியலை" என்று தயங்கினாள்.
"ம்ம்ம்... என்னவோ நம்ம கண் முன்னாடி ஒருத்தரை இழிவான சொல் பேசுனா என்னால் அதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாது நானும் திவ்யாவை காயப்படுத்திருக்கேன் ஏனா என்னோட இந்த நிலைமைக்கு அவளும் ஒரு காரணம்" என்று சொல்லும் போதே யமுனாவின் கண்களில் கண்ணீர் வந்தது.
"ஆனா இப்போ அவள் குழந்தையைச் சுமந்திட்டு நிக்குறா என் கோபம் எல்லாம் போகல... ஆனாலும் அவ கிட்ட நான் இனிமேல் என் கோபத்தை காட்ட மாட்டேன் எப்படி இருந்தாலும் என் தலை எழுத்து இப்படி தான் இருக்கு போல" என்று யமுனா ஆதங்கத்தில் தொடங்கி அழுகையில் முடிக்கும் போதே திவ்யா ஓடி வந்து யமுனாவை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள்.
"என்ன மன்னிச்சிரு யமுனா எனக்குத் தினமும் சாப்பாடு தண்ணீர் கூட இறங்கல... உனக்கு நடந்த கொடுமைக்கு நானும் முக்கியமான காரணம் ஆனா எனக்கு வேற வழி தெரியல" என்று தேம்பி தேம்பி அழுதாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக