மாயம் 10

 மாயம் 10


"நான் வினய் கூடவே போய்டுறேன்... எங்க அப்பா அம்மாக்கும் இது தெரியும் இந்தக் குழந்தைக்கும் உங்களுக்கும் சம்மந்தம் இல்லை... சோ அதை நான் எடுத்திட்டு போய் ஒரு அனாதை ஆசிரமத்தில போட்டுட்டு போய்டுறேன்" என்று அவள் சொல்லி முடிக்கும் போதே தேவ் தன் சட்டையின் பெல்ட்டை எடுத்து அவளை அடி வெளுத்தான். அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பியவன், 'எனக்கு தெரிஞ்சே ஒரு குழந்தை அனாதை ஆகக் கூடாது ஆவளுக்கு நான் இருக்கேன் இனி தந்தையாய்...' என்று முடிவெடுத்து அவளை வெளியே அனுப்பினான்.

 

"டைவர்ஸ் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுது ஒரு தடவை கூட அந்தப் பிரனிதா இந்தக் குழந்தையைப் பார்க்க வரலை அதற்குப் பின் தேவ்வுடைய கட்டளை ஆதிரா வளர்ந்தாலும் தன் பிறப்பைப் பற்றித் தெரிய கூடாது என்று. தேவ்விற்கு தன்னுடைய பெர்ஸ்னல் விஷயத்தை யாரிடமும் பகிரப் பிடிக்காது பாதி பேருக்கு அவனுக்குக் கல்யாணம் நடந்தது கூடத் தெரியாது" என்று தேவ் கதையைக் கூறி முடித்த சீதாலட்சுமியின் கண்ணில் அழுகை இருந்தது. 


இதை எல்லாம் கேட்ட

யமுனாவிற்கு இன்னும் கடுப்பாக இருந்தது. நம்ம பெரிய சிக்கலில் மாட்டிகிட்டோம் என்றே அவளுக்கு தோன்றியது.

தேவ்விடம் இருந்து தப்புவது அவ்வளவு எளிதல்ல அவன் சொன்ன வார்த்தையை மீறாத ரகம் என்றால் பரவாயில்லை... ஆனால் அவன் சுயநலத்திற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்று தீவிரமாக யோசித்தாள்.


அப்போது குணா திவ்யாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்த சீதாலட்சுமி அவனின் கன்னத்தில் அறைந்தார்.


"தேவ்வை மாதிரி ஒரு மகனை பெத்ததுக்கு பெருமை படுறேன் உன்னை மாதிரி ஒரு ஒழுக்கம் இல்லாதவனை பெத்ததுக்கு வருத்தப்படுறேன்" என்றவர் திவ்யாவிடம் திரும்பி, "நீ வாயும் வயிறா இருக்கிறதுனால என்னால உன்கிட்ட கொடிய வார்த்தை பேச முடியாது அவளை உள்ளே கூட்டிட்டுப் போ... யமுனா நீ இருக்கும் அறையில அவளையும் தங்க வை மா" என்றார் சீதாலட்சுமி.


'என்ன இவங்க! நம்மளை கோர்த்துவிட்டுட்டாங்க எல்லாம் என் நேரம் என்னை சுத்தி பிடிக்காதவங்களா இருந்தா நான் என்ன தான் பண்றது?' என்று மனதில் சலித்தவள், "வாங்க" என்று மொட்டையாக திவ்யாவை அழைத்துக்கொண்டு தற்போது யமுனா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.


"ஐ அம் வெரி சாரி யமுனா என்னால தான் உன் வாழ்க்கையில நிறைய பிரச்சனை நான் உனக்கு அதுக்கு அப்புறம் நிறைய தடவை கால் பண்ணினேன் மெசேஜ் பண்ணினேன் ஆனா நீ எல்லாத்துலயும் என்னை பிளாக் பண்ணிட்ட" என்று அழ ஆரம்பித்தாள் திவ்யா.


"தயவு செஞ்சு உன் வாட்டர் ஃபால்ஸ கொஞ்சம் நிறுத்து எனக்கு ஏற்கனவே ரொம்ப வெறுப்பாக இருக்கு இதுல நீ வேற எரிச்சலை கிளப்பாத... குழந்தை உண்டாகி இருக்க இப்படி அழுது அழுது உடம்பை கெடுத்துக்காத" என்று அவள் சொல்லும்போதே ஆதிரா யமுனாவைத் தேடி ஓடி வந்தாள்.



அத்தியாயம் -10



தேவ்வின் கதையைக் கேட்ட பின் யமுனாவிற்கு ஒரே ஒரு மாற்றம் இருந்தது. அது ஆதிராவின் மீது உள்ள பாசம்... ஆதிராவின் பிறப்பில் இவ்வளவு இருந்தும் தேவ்வும் அந்த குடும்பத்தில் இருந்த அனைவரும் ஏற்றுக்கொண்டது யமுனாவிற்குப் பெரிதாக தெரியவில்லை ஆனால் ஆதிராவின் மேல் பரிதாபம் கூடியது. அதனால் எப்போதுமே அவள் அம்மா என்று கூறும் போது காதை மூடுபவள் தற்போது அவள் அம்மா என்று ஓடி வரும் போது அவளை ஏற்றுக்கொண்டாள்.


"அம்மா இவங்க யாரு?" என்று திவ்யாவை கை காட்டிக் கேட்டாள்.


"இவங்க குணா சித்தப்பாவோட மனைவியாக போறாங்க திவ்யா சித்தி" என்று குழந்தைக்கு அறிமுகப்படுத்தினாள்.


"ம்ம்ம், நீங்க யமுனா அம்மா அளவிற்கு அழகா இல்லைனாலும் அழகா இருக்கீங்க..." என்று அவளின் அழுத கண்களை துடைத்து விட்டாள். ஆதிராவின் செயலில் மனம் நெகிழ்ந்த திவ்யா அவளை கட்டி அணைத்து முத்தமிட்டாள்.


திவாகர் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்ட பின் சேகரும் விஜயலட்சுமியும் நிம்மதியாக இருந்தனர். அடுத்த வாரம் கல்யாணம் என்ற நிலையில் அன்று இரவு தேவ்வுடைய வீட்டில் நிச்சயம் நடப்பதாய் இருந்தது. நிச்சயத்திற்காக பட்டு சேலை எடுக்க சீதாலட்சுமி பிரியா மற்றும் திவ்யா கடைக்கு செல்ல தயாராகினர். ஆனால் யமுனாவிற்குச் செல்ல மனம் இல்லை. மதியம் சாப்பிடுவதற்காக தேவ் வீட்டிற்கு வந்த போது யமுனா கிளம்பாமல் இருந்ததைப் பார்த்து என்ன என்று விசாரித்தான்.


"அது வந்து நிச்சயம் பிரியா மற்றும் திவ்யாவிற்கு தான நமக்கு இல்லைல அதான் நான் போகலை" என்றாள் யமுனா.


"உன்கிட்ட காலைல பணம் கொடுத்துட்டு போனதே நிச்சயத்திற்கும் சேர்த்து தான் அதனால கிளம்பு" என்றான்.


இதற்கு மேலும் மறுக்க முடியாது மறுத்தாலும் அவன் விட மாட்டான் என்று அமைதியாக கிளம்பினாள் யமுனா. 'இவங்க எல்லாருக்கும் வாழ்க்கை நல்லா இருக்கு அதனால உடை எடுக்க போறாங்க நமக்கு மட்டும் ஏன் இப்படி?' என்று நினைத்தவள் ஆதிராவைக் கிளப்பி தானும் கிளம்பினாள்.


அந்த பிரபல துணிக்கடையில் நின்றது பிரியாவின் கார். மத்திய டெல்லியில் இருக்கும் அந்தப் பிரபலக் கடையில் வட இந்தியர்களின் உடைகளில் இருந்து காஞ்சிபுரம் பட்டு வரை அனைத்தும் இருக்கும். பின்னாடியே தேவ்வும் குணாவும் அவனுடைய காரில் வந்தனர். அவர்களும் யமுனா சென்ற கடைக்குள் சென்றனர். நிச்சயப் பட்டு எடுக்கும் போதே முகூர்த்தப் பட்டும் எடுத்து விடலாம் என்று முடிவு செய்தார் சீதாலட்சுமி. அதனால் திவாகர் குடும்பமும் அங்கு வந்திருந்தனர். 


அங்கு ஒரு சின்ன குழந்தையைக் கண்ட சேகர் குடும்பத்தினர் பிரியாவை அழைத்து யார் என்று கேட்டனர். அது தேவ்வின் குழந்தை எனவும் அவனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது எனவும் அவர்களுக்கு அப்போது தான் தெரியும்.இதைக் கேட்ட சேகரின் கண்ணில் அழுகை வந்தது. அவருக்கு யமுனாவின் கல்யாணம் ஏதோ ஒரு மர்மமாகவே இருந்தாலும்

தேவ்விற்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு என்பதை கேட்டதில் இருந்து யமுனாவைப் பார்க்க சங்கடப்பட்டார். தன்னால் தான் ஒருவேளை யமுனா இந்த திருமண பந்தத்தில் மாட்டிக் கொண்டாளோ என்று நினைக்க ஆரம்பித்தார்.


திவாகருக்கும் எங்கோ இடித்தது. இது ஒரு கட்டாயத் திருமணமாய் இருக்கலாம் என்பதை யூகித்தவன் தன்னால் இப்போது எதுவும் பண்ண முடியாது என்பதை உணர்ந்து ஆடைகளை தேர்ந்தெடுத்தான். அனைவரும் தங்களுக்கான உடைகளை எடுத்தனர். ஆனால் யமுனா மட்டும் எதிலுமே நாட்டம் இல்லாமல் இருந்தாள். அப்போது தனக்கென உடைகளை தேர்ந்தெடுத்த தேவ் யமுனா எடுக்காததை உணர்ந்து மற்றவர்களிடம் கிளம்ப சொல்லி யமுனாவை மட்டும் இருக்க வைத்தான்.


ஆதிரா யமுனாவை விட்டு வர மாட்டேன் என்று அழுதாள். ஆனால் தேவ் பிரியாவிடம் செய்கை காட்டி அவளை அழைத்துச் செல்ல வைத்தான். திவாகர் குடும்பமும் முகூர்த்தம் உடைகள் நிச்சயம் உடைகள் வாங்கி முடித்து யமுனாவிடம் விடைபெற்றுச் சென்றனர்.

தேவ்வின் பிடியில் யமுனா சிக்கி தவிப்பது இப்போது சேகருக்கு நன்றாக புரிந்தது. ஆனால்

தேவ்வை எதிர்த்து யமுனாவிடம் பேச கூட முடியாது என்பதை உணர்ந்தவர் அமைதியாக சென்று விட்டார்.


யமுனாவிற்கு நிச்சயப்பட்டு எடுத்தவன் பின் அவனே முகூர்த்தத்திற்கு ஒரு பட்டுச் சேலை எடுத்து ரெடிமேட் ஆரி வொர்க் பிளவுஸ் மட்டும் அவளை தேர்ந்து எடுக்கச் சொன்னவன் வரவேற்பிற்கு ஒரு பச்சை வண்ண லெஹன்காவும் எடுத்தான். பின் யமுனாவிற்கு பத்து அழகிய சல்வார் செட்டும் பத்து சீனா சில்க் சேலையும் எடுத்தான்.


'இப்படி இவனே எல்லாம் எடுக்குறதுக்கு ஏன் என்னை வேற இங்க நிக்க வச்சிருக்கான் பேசாம அவங்க கூட வீட்டுக்கே  போயிருப்பேன்' என்று மனதில் கடுப்பானாள். பில்ஸ்ஸை கட்டிவிட்டு தன் காரை எடுத்தவன் நேராகச் சென்றது ஒரு ரெஸ்டாரென்ட்டிற்கு.


'இவன் ஏன் நம்மளை இங்க கூட்டிட்டு வந்திருக்கான்' என்று அமைதியாக யோசித்தவள் அவன் பின்னாடியேச் சென்றாள். குளிர்சாதன வசதி கொண்ட அந்த ரெஸ்டாரென்ட்டில் தேவ் முதலில் அமர்ந்த பின் யமுனாவை அமரச் சொன்னான்.


'எதற்கு இங்கே அழைத்து வந்திருக்கிறான்? எதாவது விஷயம் இருக்கும்?' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே தேவ் ஆர்டர் செய்த இரண்டு சூப்புகள் அங்கு வந்தது. அதை சாப்பிட்டுக்கொண்டே, "சோ யமுனா... திவாகர் பிரியா கல்யாணம் நடந்த பிறகு திவாகர் இங்கே தான் இருக்கப் போறான். நீ அவன்கிட்ட தேவை இல்லாம பேசக் கூடாது. எனக்கு தெரியாம இரண்டு பேரும் எதாவது பிளான் பண்ண நினைச்சீங்கனா உன்னை கொன்னுடுவேன் யமுனா" என்றான் அமர்த்தலாக.


"நான் தேவை இல்லாம யார் கூடவும் பேசமாட்டேன்" என்று திமிராகச் சொன்னாள்.


"நான் ஒன்னு கேட்டா பணிவா பதில் சொல்லணும் யமுனா நான் எப்போதும் உன்கிட்ட இப்படி பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்" என்றான்.


'இவன் நம்ம கிட்ட என்னிக்கு பொறுமையா பேசுனான் இன்னிக்கு இப்படி சொல்றான் ஆனா இவன் ஏதோ பேசணும்னு தான் இங்க கூட்டிட்டு வந்திருக்கான்' என்று மனதில் யோசித்தவள் சூப்பை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.


"நீ இப்போ இந்த வீட்டு மூத்த மருமகள் சத்யதேவ்வுடைய மனைவி அந்த நினைப்பு உன்கிட்ட எப்பயும் இருக்கணும் அடுத்த வாரம் கல்யாணம் நடந்து முடிந்த அப்புறம் நீ என் அறையில் தான் இருக்கணும் என்னுடைய அறையில் தான் இரவும் இருக்கணும்... இந்த தேவ்வின் வாழ்க்கையைப் பற்றி யாரும் விமர்சிக்கக் கூடாது" என்று அதிகாரமாகக் கூறினான்.


"உங்க கூட நான் எப்படி ஒரே அறையில..." என்று அவள் சொல்லும் போது, "கல்யாணம் ஆகி இரண்டரை வருடங்கள் என் முதல் மனைவி பிரனிதாவின் மேல் என் விரல் கூட படலை அம்மா இன்னிக்கு உன் கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்னு சொன்னாங்க" என்று தொடர்ந்தவன், "எனக்கு பிடிக்கலைன்னா இந்த பூலோகத்தில் பேரழகியே வந்தாலும் நான் ஒழுக்கம் தவற மாட்டேன்" என்றான் கர்வமாக.


"அவங்க ஏற்கனவே சீரழிஞ்சு சின்னா பின்னமா போனவங்க ஒழுக்கம் கெட்டவங்க இப்படி சொல்லிட்டே போலாம்... அதனால நீங்க உங்க பிரம்மச்சாரி விரதத்தை கடைப்பிடிச்சீங்க... ஆனா நான் புதுசா பூத்த பூ மாதிரி இதுவரைக்கும் ஆண்கள் கூட அளவுக்கு அதிகமாக பழகாத பெண் என்கிட்டயும் நீங்க உத்தமரா இருப்பீங்கனு என்ன நிச்சயம்?" என்று கடுப்பாகிக் கேட்டாள் யமுனா... ஏனெனில் அவனோடு ஒரே அறையில் இருக்க அவளுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.


இதைக் கேட்ட தேவ் அந்த சாப்பாட்டு டேபிளில் தன் கையை வைத்து வேகமாக அடித்தவன், யமுனாவின் கையை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் பில் பணம் செட்டில் பண்ணியவன், அவளைப் பிடித்த கையை இறுக்கி தன் காரில் அவளை தள்ளிவிட்டு கதவைச் சாற்றி வேகமாக காரை எடுத்துக் கொண்டு ஒரு ரெசார்ட்டில் நிறுத்தினான்.


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாயம் 1

மாயம் 8

மாயம் 2